சனி, மே 12, 2012

அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம்
வர்மத்தில் அகில உலக இரண்டாவது  கருத்தரங்கு

இன்று கோவையில் வேத சத்தி என்னும் அகில உலக வர்ம கான்பெரன்ஸ் இன்றும் நாளையும் நடைபெறுகிறது ..


 எனக்கு வர்மத்தை கற்றுத்தந்த ஆசான் சண்முகம் அவர்கள் நடத்துகிற இந்த International varmalogy conference 2012...என்ற பெரிய ஆராய்ச்சிகள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்களும் ,ஆயுர்வேத மருத்துவர்களும் ,ஹோமியோ மருத்துவர்களும் ,ஆங்கில பல துறை மருத்துவர்களும் ,பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள் ..

 • இது எனது வாழ்க்கையில் ஒன்றரை வருடங்களாக காத்திருந்த நிகழ்ச்சி இது ...
 • ஆசான் சண்முகம் அவர்களின் மாணவன் என்று கூறுவதில் நான் எப்போதும் பெரு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் ..

 • ஆசான் சண்முகம் அவர்கள் இந்த மருத்துவ வர்மாலாஜி கான்பெரன்சிலும் என்னையும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை சமர்பிக்க சொன்னார்கள் 

 • ஆசான் சண்முகம்அவர்கள் வழி நடத்த கடந்த ஒன்றரை வருடங்களாக முக்குற்றங்களும் வர்மமும் ஆயுர்வேத சித்தாந்தகளும் என்கிற தலைப்பில் எனக்கு வாய்ப்பு அளிக்கபட்டிருந்தது...

 • எல்லா வேலைகளும் முடிவுற்று ,இன்று அதனை ஆசான் முன்னிலையிலும் ,பல மருத்துவர்கள் முன்னிலையிலும் வெளிவிட்டிருக்க வேண்டிய இந்த வேளையில் ....

 மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க செல்ல இயலாத காரணங்கள்

 1. எனது பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ,டெங்கு காய்ச்சலால் சிலர் மரணித்த சம்பவங்களும் ,இரத்த தட்டுக்கள் குறையும் அணுக்கள் குறைகிற காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ..மக்களுக்கு சேவை பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் (கொள்ளை நோய்கள் பரவினால் ..அதை தடுக்க இந்த டெங்கு காய்ச்சலுக்கு நாங்கள் நில வேம்பு குடிநீர் ,ஆடாதோடை குடிநீர் ,விஷ ஜவர குடிநீர் போன்றவற்றையும் ,சீந்தில் அடங்கிய மாத்திரைகளையும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறோம் )உள்ளேன் ..கருத்தரங்கிற்கு செல்ல வேண்டிய வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன ...
 2. எனது விடுப்புக்கு செல்லும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் என்னால் ஒன்றுமே செய்ய இயலாத நிலை ..மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆய்வு கட்டுரையை சமர்பிக்க இயலாத நிலை ..பல நாள் தவம் இருந்தவன் ..வரம் கிடைக்கும் சற்று முன் ஏமாந்தது போல் ஆகி விட்டது ...
 3. வெளிப்படையாக சில விஷயங்களை என்னால் ஏன் மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கிற்கு செல்ல இயலவில்லை என்று சொல்ல இயலாத நிலை ...
 4. மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் கலந்து கொள்ளாதது ...இரண்டு கைகளும் வெட்டப்பட்டது போல் ,கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் உணர்கிறேன் ..
 5. எனது ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் கோவைக்கும் எனது ஊருக்கும் சென்று வந்த பல பயணங்கள் ,நான் உடலால் பட்ட கஷ்டங்களும் ,மனதால் பட்ட கஷ்டங்களும் வீணாகி போனதே என்று நினைக்க எனது நெடு நாள் கனவு வீணாகிபோனது ..
 6. மனதிற்குள் தாங்க இயலாத துக்கம் ..ஆற்ற முடியாத வருத்தம் ...
 7. மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க பட இயலவில்லையே என்று ஏங்கி தவிக்கிறேன் ... 
ஒன்றரை வருட கனவு இன்று கலந்து கொள்ள இயலாததால் கனவாகிபோனதே ...எனது எண்ணங்கள் எல்லாம் கருத்தரங்கிலே தான் உள்ளது ..
நான் கலந்து கொள்ள வில்லை என்றாலும் கூட ..எனது பெரு மதிப்பிற்குரிய ஆசான் சண்முகம் அவர்கள் நடத்தும் இந்த கருத்தரங்கை மிக மிக வெற்றிகரமாக  நடந்து வர்மம் உலங்கெங்கும் பரவிட ஆசான் சண்முகம் அவர்களின் மாணவன் என்ற முறையிலும் ..ஆசான் சண்முகம் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தியவனாக ...

வர்மம் இந்தியனுக்கு உரியது ...
வர்மம் தமிழனுக்கு உரியது ...
வர்மம் சித்த மருத்துவத்தின் கூறு ...
வர்மம் நோய் அழிக்கும் 

,வர்மத்துடன் இணைந்த ஆயுர்வேதமும் ,சித்த மருத்துவமும் சீக்கிரம் நோய் அகற்றும் என்று எனது கருத்தை கூறியனாக...மருத்தவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை ...பல ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நடுவே புத்தகமாக பிரசுரம் ஆனது என்ற மகிழ்ச்சியுடன் ...

ஆசான் சண்முகம் அவர்களுடன் எனது உறவு மென் மேலும் வளர பிரார்த்தியுங்கள் என்றவனாக ...

ஆசான் சண்முகம் அவர்களது சேவை பற்றி அறிய ..மேலும் விவரங்களுக்கு ..
  www.varmam.org

 

Post Comment

4 comments:

கருத்துரையிடுக