திங்கள், பிப்ரவரி 28, 2011

நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்-Aswagandha choornam


நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்-Aswagandha choornam
  (ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

சீமை அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா (போதிய அளவு)


செய்முறை:   

நன்கு தேறிய சீமை அமுக்கிராக் கிழங்கை கல், மண் நீக்கி சுத்தம் செய்து நுண்ணிய தூளாக்கவும். பின்னர் அதைச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:   

 2 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு முன்.


அனுமானம்:   

  பால், தண்ணீர், சர்க்கரை


தீரும் நோய்கள்: பலவீனம் (தௌர்பல்ய (அ) அசக்த), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), தூக்கமின்மை (அநித்ர), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக),   சிறுநீருடன் விந்து வெளிப்படல், தானே விந்து நழுவுதல் (சுக்ரமேஹ), வாத நோய்கள் (வாதவிகார). 

க்ஷயரோகத்தில் இது 600 மி.கி. திரிகடுகுச் சூரணம், 600 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூசி சத்வ), 1500 மி.கி. கற்கண்டுடன் தரப்படுகிறது.

 க்ஷீணரோகங்களிலும் (வலுவிழக்கச் செய்யும் நோய்கள்), உடல்பலமிழந்த நிலைகளிலும் இது 200 மி.கி. மூங்கிலுப்பு (வம்ஸலோசன), 200 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூச்சி சத்வ), 125 மி.கி. திப்பிலி (பிப்பலீ), 200 மி.கி. லவங்கம் மற்றும் 30 -60 மி.கி. மகரத்வஜத்துடன் கலந்து தரப்படுகிறது. 

தூக்கமின்மை மற்றும் எலும்பு முறிவு (அஸ்திபங்க) நிலைகளில் இது சூடான பாலுடன் தரப்படுகிறது.


  பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயங்களில் இது 125 மி.கி. தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடி (ஸதாவரீ சூர்ண), 125 மி.கி. பால் முதுக்கன் கிழங்கு, 125 மி.கி. அதிமதுரப் பொடி (யஷ்டீமது) சேர்த்து கற்கண்டு கலந்த சூடான ஆட்டுப்பாலுடன் தரப்படுகிறது.


மேலும் அஸ்வகந்தா என்ற மூலிகை பற்றி தெரிந்து கொள்ள -இந்த லிங்கை பயன் படுத்துங்கள் http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-7.html

Post Comment

சனி, பிப்ரவரி 26, 2011

இதய அடைப்பு நீங்கிட நல்ல மூலிகை"கொடுவேலி -இரத்தைத்தை சீக்கிரம் உறைய விடாது ,அடைப்பை நீக்கும்" -சரியான அளவில் -சுத்தம் செய்து முறைப்படி மருந்தாக உபயோக்கிக்க ஹார்ட் அடைப்பு நீங்குவது நான் கண்கூடாக பார்த்த உண்மை ..இதய அடைப்பு நீங்க -வெண்தாமரை ,கொடுவேலி ,மருதம் பட்டை ,செம்பருத்தி பூ ,திரிபலா ,சடாமஞ்சில் -இன்னும் பிற மூலிகைகளை கலந்து மருந்து தருவதுண்டு -நல்ல பலன் தரும்

இந்த விசயத்தை எழுத தூண்டிய -நேற்றைய இடுகையில் பின்னூட்டம்("
வானவன் யோகி சொன்னது…
பச்சையாய் எடுக்கும் கொடிவேலி சற்று விடத்தன்மை கொண்டதால் அதை சுண்ணாம்புக்கற்களுக்கு நடுவே வைத்து தண்ணீர் ஊற்றினால் வெந்து ஆட்டை அறுத்ததுபோல் இரத்தநிறமாகும். பிறகு அலம்பி முன் அஷ்டசூர்ணத்தில் கலந்து கொடுத்தாலே தமரகச்சூலை எனப்படும் நெஞ்சுவலி உண்டாக்கும் வாயு களையப்படும். தங்கள் சேவை சிறக்க இறைப்பேராற்றலை இறைஞ்சுகிறேன்)
எழுதிய வானுவன் யோகிக்கு நன்றி -

நாளை தொடரும்
 

Post Comment

வியாழன், பிப்ரவரி 24, 2011

நெஞ்சு வலி போன்ற கேஸ் ட்ரபுளுக்கு-அக்னிமுக சூர்ணம்-Agni muka choornam


      நெஞ்சு வலி போன்ற கேஸ் ட்ரபுளுக்கு-அக்னிமுக சூர்ணம்-Agni muka choornam
 (ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்ய சிகித்ஸா)


தேவையான மருந்துகள்:
1.            பெருங்காயம் (பொரித்தது) ஹிங்கு     - 10 கிராம்
2.            வசம்பு வச்சா                         - 20       “
3.            திப்பிலி பிப்பலீ                       - 30       “
4.            சுக்கு சுந்தீ                           - 40       “
5.            ஓமம் அஜமோதா                     - 50       “
6.            கடுக்காய்த்தோல் ஹரீதகீபலத்வக்     - 60       “

7.            கொடிவேலி சித்ரக                  - 70       “

8.            கோஷ்டம் கோஷ்டம்                - 80       “


செய்முறை:    

இந்த சரக்குகளை முறைப்படி பொடித்துச்சலித்து ஒன்றுகலந்து பதப்படுத்தவும்.


அளவு:    

1 முதல் 2 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு முன்
அனுபானம்:     மோர், தயிர், வெந்நீர்.


தீரும் நோய்கள்: 

 பசியின்மை (அக்னிமாந்த்ய), செரியாமை (அஜீர்ண), சூலை (சூல), குன்மம் (குல்ம), மலமும் மூத்திரமும் வெளியேறாமல் பந்தனமாவதால் ஏற்படும் வாந்தி, குமட்டல் மற்றும் நெஞ்சு வலியுடன் கூடியநிலை (உதாவர்த்த), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ).

Post Comment

புதன், பிப்ரவரி 23, 2011

வாயுவுக்கு -சிறந்த மருந்து -அஷ்டசூர்ணம்-Ashta choornam


வாயுவுக்கு -சிறந்த மருந்து -அஷ்டசூர்ணம-Ashta choornam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் குல்ம சிகித்ஸா)

சாதாரண வாயு தொல்லை மற்றும் மிக மோசமான கேஸ் ட்ரபுள் என்னும் வயிறு பிரச்னைக்கு மிக சிறந்த மருந்து ..
நாம் இந்த மருந்தை எளிதாக வீட்டிலே தயாரித்து கொள்ளலாம் ..

அஷ்ட சூர்ணம் -எட்டு பொடிகள் -இது பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம் போன்று -எளிதாக செய்ய முடியக்கூடிய வயிறு பிரச்சனைக்கு ஏற்ற மருந்து ..

தேவையான மருந்துகள்:
1.            சுக்கு சுந்தீ                           - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச                        - 10       “
3.            திப்பிலி பிப்பலீ                       - 10       “
4.            ஓமம் அஜமோதா                    - 10       “
5.            இந்துப்பு ஸைந்தவலணை            - 10       “
6.            சீரகம் ஜீரக                          - 10       “
7.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக            - 10       “
8.            பெருங்காயம் ஹிங்கு               - 10       “

செய்முறை:    

பெருங்காயத்தைத் தனியே பொரித்துப் பொடித்துச் சலித்து மற்ற சரக்குகளின் சலித்த சூர்ணத்துடன் கலந்து பத்திரப்படுத்தவும், திப்பிலியையும், இந்துப்பையும் பொடிக்கும் முன் சிறிது வறுக்கவும்.

அளவு:     

  1 முதல் 3 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்போ பின்போ

அனுபானம்:   

  நெய், மோர், தண்ணீர்.

தீரும் நோய்கள்: 

 செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அருசி), வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), வாத குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அசீரணம் (ஆமாதிஸார).

 நிறைய சாப்பிட்டு விட்டு -ஏப்பம் வராமல் தவிப்பவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும் (கண்ட கண்ட -சாப்ட் ட்ரிங்க்ஸ் சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய மருந்து )
குறிப்பு:

(1)    இதற்கு ஹிங்வாட்ஸக சூர்ணஎன்றொரு பெயருமுண்டு.
(2)          இதனை நெய் சேர்த்துச் சாதத்துடன் முதல் கவளமாக உட்கொள்ளப் பசியை அதிகரிக்கச் செய்கிறது. வாத குன்மத்தை அகற்றுகிறது.

Post Comment

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் - அர்க்கலவணம்-Arka lavanam

வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் -
அர்க்கலவணம்-Arka lavanam
 (பைஷஜ்யரத்னாவளி அக்கினிமாந்த்யாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            எருக்கன் இலை அர்க்கபத்ர (ஒரு பங்கு)
2.            இந்துப்பு ஸைந்தவலவண    (ஒரு பங்கு)

செய்முறை:   

  பொடித்த இந்துப்பையும், எருக்கன் இலையையும் ஒரு மட்பானையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுத்தடுத்து அடுக்கு அடுக்காக அமைத்துப் பானையின் வாயை அகலிலிட்டுச் சீலை மண் பூசி பானையின் அடிபாகம் நெருப்புப் போல சிவந்து இலைகள் கருகும் வரை எரிக்கவும். தானாகவே ஆறிய பின்னர் அவைகளைப் பிரித்தெடுத்து நுண்ணியதாகப் பொடித்துத் தனித்தெடுத்து முன்போலப் பானையிலிட்டு எரித்தும் தயாரிக்கலாம்.


அளவும் அனுபானமும்:     

 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை தயிர்த் தெளிவுடன் இரு வேளைகள் உணவுக்கு முன்.


 தீரும் நோய்கள்: 

 குன்மம் (குல்ம), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), முக்கியமாக மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), பலவித வயிறு மற்றும் குடற்கோளாறுகள் (உதரரோக).


  குறிப்பு:    இது க்ஷார வகையைச் சேர்ந்ததாயினும், சூர்ணப் பிரிவில் மருத்துவ நூல்களில் காணப்படுகின்றது.

Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

க்வாத சூர்ணம்-குடிநீர்-Kwatha Choornam


க்வாத சூர்ணம்-குடிநீர்-Kwatha Choornam

ஆயுர்வேத மருந்துகளில் -பெரும்பான்மையான வைத்தியர்கள் ,மருத்துவர்கள் -இந்த க்வாத சூர்ணம் அல்லது கஷாயாத்தை பயன்படுத்துவதை தவறுவதே இல்லை ..

ஆயுர்வேத க்வாத சூர்ணம் என்பது -கஷாயம் தயாரிக்க பயன்படும் -மூலிகைகளின் பார்முலா அடங்கிய -ஒரு நல்ல குடிநீர் (டீ தூள் டிக்காக்ஷன் மாதிரி
இப்போது கஷாயங்கள் -ரெடிமேடாக -பாட்டில்களில் செறிவூட்டபட்டு -டானிக் போன்று எளிமையாக சாப்பிடும் வகைகளிலும் கிடைக்கிறது ..(கஷாய பாட்டில்கள் )

இதற்கும் ஒரு படி மேலே  போய் -கஷாயத்தை சாப்பிடும் முறைகளில் உள்ள நடை முறை சிக்கல்கள் ,கசப்புத்தன்மை ,மருந்தை எடுத்து செல்வதில் உள்ள சிரமம் ஆகியற்றை கருத்தில் கொண்டு -இப்போது கஷாயம் -கஷாய மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது உ

எது எப்படி இருந்தாலும் அதாவது -க்வாத சூரணமாக இருந்தாலும் ,கஷாயம் பாட்டில்களில் கிடைப்பதாக இருந்தாலும் ,கசாய மாத்திரைகளாக இருந்தாலும் -ஒரே விதமான பெயரில் கிடைக்கும் -பார்முலாக்களில் மாற்றம் செய்யபடுவதில்லை என்பதை நாம்  மனதில் வைத்து கொள்வது நல்லது ,
                கஷாயமாக்கி உட்கொள்ளவும், கொப்பளித்தல், ரணங்களைக் கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகத்திற்கும் மருந்துச் சரக்குகள் ஒன்றிடிரண்டாகத் தூளாக்கப்பட்டு (ஜவ்குத்) உபயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் இவைகள் க்வாத சூர்ணம்என்று வழங்கப்படும்.

                சுத்தமான மருந்துச் சரக்குகளை நன்கு உலர்ந்தபின் ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்து இவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் ஸ்ர்தா, நிர்யூக, கஷாய என்றும் வழங்கப்படுகின்றன. க்வாத சூர்ணங்களைக் கொண்டு கஷாயம், ஹிம கஷாயம், பாண்ட கஷாயம் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகளைக் காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

                                                                                                கஷாயம் செய்யும் முறை
                பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூர்ணத்திற்கு பதினாறு பங்கு தண்ணீர் சேர்த்து சிறு தீயிட்டு எரித்து அல்லது நீராவிக் கலங்களை உபயோகித்து எட்டிலொன்றாகக் குறுக்கி வடிகட்டிக் கஷாயம் சேகரிக்கப்படுகிறது.

                தேன், நெய், சூரணம், சுத்தி செய்த குக்கலு போன்ற சில குறிப்பிட்ட துணை மருந்துகளுடன் கஷாயத்தைப் பருகுவது உண்டு. இக்கஷாயங்களை சில மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் உபயோகிக்கப்படுகின்றன.

      அளவு:     30 – 60 மில்லி லிட்டர் காலை, மாலை இரு வேளைகள்.

க்வாத சூர்ண-வகைகளை பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்
 

Post Comment

சனி, பிப்ரவரி 19, 2011

சூர்ணம் -மூலிகை பொடிகள்-Choornam


 நண்பர்களே ..நாம் இன்னும் பார்க்கவேண்டிய அரிஷ்டங்கள்,ஆசவங்கள் பல இருந்தாலும் -அவற்றை இடை இடையே எழுதலாம் என்று எண்ணி அடுத்த ஆயுர்வேத மருந்துகளில் பெரும்பாலும் தயாரிப்பான -சூரணங்கள் என்னும் பொடி வகைகள் தயாரிப்பை பற்றி இன்று முதல் பார்க்கலாம் ..அதற்க்கு முன் சூரணங்கள் எப்படி தயாரிக்கபடுகிறது ?

உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகபடுத்தும் என்று நம்பியவனாக தொடர்கிறேன்
----------------------------------
சூர்ணம்


                இவைகள் உட்கொள்ளவும், மேற்பூச்சாகவும், மூச்சுப் பொடி போலும் பயன்படுகின்றன.
                மருந்து செய்முறையில் குறிப்பிட்டுள்ள சரக்குகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்த பின் உரல் அல்லது உலக்கை கொண்டோ அல்லது இயந்திரத்தின் உதவியாலோ அவைகள் நுண்ணிய தூளாக்கப்படுகின்றன. நுண்ணிய அத்தூள் பெரும்பாலும் சல்லடை வழியே சலிக்கப்படுகிறது. துணியின் வழியே சலித்தும் சூர்ணம் தயார் செய்வதுண்டு. சிக்கனமான முறையில் பெருமளவில் சூர்ணங்களைத் துணியில் சலித்துத் தயார் செய்வது மிகவும் கடினம். மேலும் துணியின் தரத்திற்கொப்ப உலோகச் சல்லடைவலைகள் தயாராகக் கிடைப்பதால் அவைகளைப் பயன்படுத்தி அதிகச் சிரமம் இல்லாமல் மேற்கூறிய சூர்ணங்களைத் தயார் செய்வதும் எளிதாகிறது. அஷ்ட சூர்ணம் போன்ற எண்ணெய்ப்பசை உள்ளவற்றிற்கு 40 அல்லது 50 ஆம்.நெ. வலையும், மற்றவைகளுக்கு 80 அல்லது 100  ஆம். நெ.வலையும் உபயோகிக்க உடனடியாக கிடைக்கின்றன. அவைகளைக் கொண்டு சல்லடை தயாரித்து உபயோகித்தல் நன்று.
                மருந்து செய்முறையில் பல சரக்குகளைச் சேர்க்கும்படி கூறுமிடத்து அவைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே இடித்துச் சலித்துக் குறிப்பிட்ட அளவில் அவைகளைச் சூரணமாக்கி மொத்தமாக ஒன்று சேர்த்துத் தயாரிக்க வேண்டுமென்று சிலர் கூறுவர். ஆயினும் நடைமுறையில் பெரும்பாலானோர் மொத்த சரக்குகளையும் அப்படியே குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சூர்ணங்களைத் தயார் செய்கின்றனர்.

                இரண்டு மாதங்களுக்கு மேல் தங்காத அளவில் சூர்ணங்களைத் தயாரித்தல் வேண்டும்.

                சர்க்கரை, கற்கண்டு, கற்பூரம், காவிக்கல், ஹைஸ்ரவேதி, மூசாம்பரம், திராக்ஷை, பேரீச்சங்காய், பெருங்காயம், வெங்காரம், படிகாரம், உப்புவகைகள் இவைகளை எல்லாச் சரக்குகளடனும் சேர்த்துப் பொடித்தல் கூடாது. 
                அவைகளைத் தனித்தனியே இடித்துப் பொடித்துச் சலித்துக் கடைசியில் சேர்க்க வேண்டும்.
                மூசாம்பரம், திராக்ஷை, பேச்சரீங்காய் இவைகளைச் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச்சலித்துச் சேர்க்க வேண்டும்.
                பெருங்காயம், வெங்காரம், படிகாரம், உப்புவகைகள் இவைகளைப் பொரித்துப் பொடித்துச் சலித்துச் சேர்க்க வேண்டும். சதாவரீ, குடூச்சி போன்றவற்றை பசை போன்று அரைத்து உலர்த்திப் பொடித்துச் சேர்க்க வேண்டும். திப்பிலியைச் சற்றுவறுத்துச் சேர்ப்பது நலம் பயக்கும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்று படக்கலந்து பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் பத்திரப்படுத்தவும். கசிவு ஏற்படும்படிகாகிதத்திலோ, தகரத்திலோ வைத்தல்கூடாது.

குறிப்பு -நாம் எளிதாக -வீட்டில் மிக்சியில்(காபி கொட்டை அரைக்க பயன் பயன்படுத்தும் கப் கொண்டு ) கூட சூரணங்கள் என்னும் பொடிகளை தயாரிக்கலாம்

Post Comment

வியாழன், பிப்ரவரி 17, 2011

நாளை முதல் தினமும் அப்டடேட் செய்யப்படும்

Post Comment

வியாழன், பிப்ரவரி 10, 2011

சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்-Karjura arishtam

சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.-Karjura arishtam
(சஹஸ்ர யோகம் )

சேரும் பொருட்கள் ..

 1. பேரிச்சம் பழம்
 2. கோரை  கிழங்கு
 3. நெல்லிக்காய்
 4. கொன்றை பட்டை
 5. உலர்ந்த திராக்ஷை
 6. கடுக்காய் தோல்
 7. கொட்டப்பாக்கு
 8. பாட கிழங்கு
 9. கண்டு பாரங்கி
 10. பூலான் கிழங்கு
 11. கொட்டம்
 12. இருவேலி
 13. ஓமம்
 14. காட்டுதிப்பிலி வேர்
 15. நெருஞ்சில்
 16. சாரணை வேர்
 17. காய பலம்
 18. ஞாழல் பூ
 19. மஞ்சள்
 20. கருஞ்சீரகம்
 21. ஆசாளி விதை
 22. கொட்டக்கரந்தை
 23. சிவதை
 24. கீழா நெல்லி
 25. தொட்டால் சுருங்கி
 26. செம்மரபட்டை
 27. புங்கை வேர் -                        இவைகள் யாவும் நான்கு பலம் (200 கிராம்  வீதம் )
 28. சடாமஞ்சில்
 29. ஏலம்
 30. இலவங்கம்
 31. பச்சிலை
 32. சிறுநாகப்பூ
 33. திப்பிலி
 34. கிராம்பு 
 35. ஜாதிக்காய் 
 36. சந்தனம்
 37. அய பஸ்மம் (சுத்தம் செய்தது )     - இவைகள் யாவும் இரண்டு பலம் ( 100  கிராம் வீதம் )
 38. காட்டத்திபூ    -  ஏழு பலம் (350  கிராம் )
 39. வெல்லம்  - 21  பலம் (1 .050 கிராம் )
மேற்கூறிய அனைத்தும் பொடித்து 108  பிரஸ்தம் (86  லிட்டர் ) தண்ணீர் சேர்த்து மண்பானைக்குள் ஐந்து நாட்கள் வைக்கவும் .அதன் பின் பூமியிலிருந்து எடுத்து 300  பேராமுட்டி இலையும் ,200  தாமரைப்பூவும் சேர்த்து பாத்திரத்தின் வாயை மூடி அர்க்க விதிப்படி அர்க்கமாக தயாரிக்கவும்


அளவு -15 மிலி முதல் 20  மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து

தீரும் நோய்கள் -


விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய் ,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள் ),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை  போன்றவை தீரும் .அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )

குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..

Post Comment

திங்கள், பிப்ரவரி 07, 2011

இன்று என்னால் எழுத  இயலவில்லை

Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்-Ahiphenaasavam

பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்-Ahiphenaasavam

(சஹஸ்ர  யோகம் -ஆஸவ அதிகாரம் )


 1. இலுப்பை பூ                              - 100பலம் (ஐந்து கிலோ )
 2. அபின்                                          -4பலம்  (200கிராம் )
 3. கோரை கிழங்கு                     -1 பலம் (50 கிராம் )
 4. ஜாதிக்காய்                               -1 பலம் (50 கிராம் )
 5. வெட்பாலை அரிசி               -1 பலம் (50 கிராம் )
 6. ஏலம் -பலம்                             -1 பலம் (50 கிராம் )
சேர்த்து ஆசவ தயாரிப்பு முறையில் ஒரு மாதம் கழித்து முறைப்படி -முறையாக மருத்துவ ஆயுர்வேத படிப்பு படித்த மருத்துவரின் மேற்பார்வையில் சாப்பிடவும்

உபயோகபடுத்தும் அளவு

ஐந்து முதல் பத்து மிலி வரை தேவை கருதி -மருத்துவரின் ஆலோசனை படி

குணமாகும்  நோய்கள் -

கடுமையான அதிசாரம் (பேதி ),விசூசிகா (வாந்தி +பேதி ) சரியாகும் -
அந்த காலத்தில் நாம் இப்போது காலரா எனப்படும் நோய்க்கு இந்த மருந்தை கொண்டு தான் சரி செய்திருக்கிறார்கள் ..

குளிகை சேர்த்து கொடுக்கும் முறையில் -அச்டக்ஷீறி அல்லது வில்வாதி குளிகை உடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்

குறிப்பு

-எல்லா மருத்துவராலும் ,மருந்து கம்பெனியாலும் இதை தயாரிக்க முடியாது ..
அபினை வாங்குவதில் பல சட்ட சிக்கல்களும் ,கொடுக்கும் போது கவனமும் தேவை படுவதால் -இந்த மருந்து செய்வது ,கொடுப்பது ,கிடைப்பது அரிது -எனவே குடஜா அரிஷ்டம் ,மதூகாசவம் போன்ற இதே போல் குணமுள்ள மருந்துகளை தேர்ந்தெடுப்பது நல்லது -எளிது

Post Comment

சனி, பிப்ரவரி 05, 2011

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு -லவங்காஸவம்-Lavangaasavam


கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு -லவங்காஸவம்-Lavangaasavam
(ref-ஆஸவாரிஷ்ட ஸங்கிரஹ)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல       - 32 லிட்டர்
2.            சர்க்கரை ஸர்க்கர                         - 30 கி.கிராம்
3.            தேன் மது                                - 4  கி.கிராம்
4.            கோமூத்திர - சிலாஜத்து (சுத்தி செய்தது)      - 140 கிராம்

இவைகளை நன்கு கலந்து அத்துடன்
1.            இலவங்கம் லவங்க                       - 140 கிராம்
2.            திப்பிலி பிப்பலீ                           - 140    “
3.            மிளகு மரீச்ச                             - 140    “
4.            சிற்றேலம் ஏலா                           - 140    “
5.            ஞாழல் பூ ப்ரியாங்கு                      - 140    “
6.            கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                    - 140    “
7.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர              - 140    “
8.            வாலுளுவை அரிசி ஜ்யோதிஸ்மதி            - 140    “
9.            கௌலா கௌலா                          - 140    “
10.          சிறுநாகப்பூ நாககேஸர                     - 140    “
11.          மருக்கொழுந்து மரு                       - 140    “
12.          வாயுவிடங்கம் விடங்க                    - 140    “


இவைகளை ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து

1.            அயபற்பம் லோஹ பஸ்ம                      - 30 கிராம்
2.            பொன்னிமிளை பற்பம் ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம   - 30       “
3.            மண்டூர பற்பம் மண்டூர பஸ்ம                  - 30       “


ஆகியவற்றையும் இவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:  

   10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 


 கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ரித்ப்லீஹவ்ருத்தி), மஞ்சட்காமாலை (காமால), குன்மம் (குல்ம), ரத்த சோகை (பாண்டு), வீக்கம் (ஸோத), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஸஸ்), ரத்தபேதி (ரக்தாதிசார), மற்றும் இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ) மார்புநோய், மார்புவலி, ஈஸினோபீலியா.

Post Comment

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்-Vasarishtam


இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்-Vasarishtam
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகாரம்)தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            ஆடாதோடைவேர் வாஸாமூல        - 10.000 கி.கி.
2.            தண்ணீர் ஜல                       - 25.600 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக வடிகட்டி வெல்லம் – (குட) 5.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்


1.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 50 கிராம்
2.            ஏலக்காய் ஏலா                        - 50       “
3.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         - 50       “
4.            சிறுநாகப்பூ நாககேஸர               - 50       “
5.            தக்கோலம் தக்கோல                 - 50       “
6.            சுக்கு சுந்தீ                           - 50       “
7.            மிளகு மரீச்ச                        - 50       “
8.            திப்பிலி பிப்பலீ                      - 50       “
9.            குருவேர் ஹ்ரீவேர                   - 50       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


  அளவும் அனுபானமும்: 

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்

இருமல் (காஸ), இரைப்பு அல்லது இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் எனும் ஆஸ்த்மா (ஸ்வாஸகாஸ), க்ஷயரோகம் (க்ஷய), வீக்கம் (ஸோத), மூச்சு மண்டலம், உணவுப்பாதை போன்ற உள்ளுறுப்புகளிலேற்படும் குருதிப் போக்கின் பலவிதநிலைகள் (ரத்த பித்த)


                இருமல், இரைப்பு போன்ற நிலைகளில் பவளபற்பம், சுவாஸானந்த குடிகா ஆகியவற்றுடனும், ரத்தம் துப்புதல் (ரத்த நிஷ்தீவன), க்ஷயரோகம் போன்ற நிலைகளில் லாக்ஷா சூர்ணம் மற்றும் ஸ்வர்ணமாலினி வஸந்த ரஸத்துடனும் இது கலந்து தரப்படுகிறது. இருமல், இரைப்பு, ஆஸ்த்மா போன்ற மூச்சு மண்டல நோய்களைப் போக்குவதில் ஆடாதோடை பெரும் பங்கு வகிக்கிறது.


                குறிப்பு:-    இதனை வாஸகாஸவ, வாஸகாரிஷ்டம் என்றும் அழைப்பதுண்டு.

Post Comment

வியாழன், பிப்ரவரி 03, 2011

பித்தம் குறைய ,இரத்த பித்தம்,சூடு மாறிட -உசீராஸவம்-Usheeraasavam


பித்தம் குறைய ,இரத்த பித்தம்,சூடு மாறிட -உசீராஸவம்-Usheeraasavam
 (refபைஷஜ்ய ரத்னாவளி - ரக்தபித்தாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் ஜல - 25.600 லிட்டர்
2.            சர்க்கரை ஸர்க்கர                    - 5.000 கிலோகிராம்
3.            தேன் மது                            - 2.500                 “


இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து 


1.            விளாமிச்சவேர் உசீர               - 50 கிராம்
2.            குருவேர் ஹ்ரிவேர                   - 50       “
3.            செந்தாமரைக் கிழங்கு பத்மமூல      - 50       “
4.            குமிழ்வேர் காஷ்மரீ                  - 50       “
5.            நீல ஆம்பல்கிழங்கு நீலோத்பல கந்த  - 50       “
6.            ஞாழல் பூ ப்ரியாங்கு                 - 50       “
7.            பதிமுகம் பத்மக                     - 50       “
8.            பாச்சோத்திப்பட்டை லோத்ரா          - 50       “
9.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                - 50       “
10.          சிறுகாஞ்சூரிவேர் துராலபா            - 50       “
11.          பாடக்கிழங்கு பாத்தா                - 50       “
12.          நிலவேம்பு பூநிம்ப                    - 50       “
13.          ஆலம்பட்டை நியக்ரோத              - 50       “
14.          அத்திப்பட்டை உதும்பரத்வக்          - 50       “
15.          கிச்சிலிக் கிழங்கு ஸ்ட்டீ              - 50       “
16.          பர்பாடகம் பர்பாடக                   - 50       “
17.          வெள்ளைத்தாமரைக் கிழங்கு ஸ்வேதகமல  - 50       “
18.          பேய்ப்புடல் பட்டோல                - 50       “
19.          மந்தாரைப்பட்டை காஞ்சனாரத்வக்          - 50       “
20.          நாவல்பட்டை ஜம்புத்வக்              - 50       “
21.          இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ       - 50       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


 அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்


 பித்த எரிச்சல் (பித்த தாஹ), ரத்தமும் பித்தமும் சீர்கேடடைந்து அதனாலேற்படும் மூச்சு மண்டலம், உணவுப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவித ரத்தப் போக்குகள் (ரத்தபித்த), நீர்க்கோவை (ஸோத), ரத்த மூலத்தில் (ரக்தார்ஷ) ரத்தப் போக்கைத் தடுத்து நிறுத்தத் தரப்படுகிறது.

Post Comment