வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் -
அர்க்கலவணம்-Arka lavanam
(பைஷஜ்யரத்னாவளி – அக்கினிமாந்த்யாதிகார)
தேவையான மருந்துகள்:
1. எருக்கன் இலை – அர்க்கபத்ர (ஒரு பங்கு)
2. இந்துப்பு – ஸைந்தவலவண (ஒரு பங்கு)
செய்முறை:
பொடித்த இந்துப்பையும், எருக்கன் இலையையும் ஒரு மட்பானையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுத்தடுத்து அடுக்கு அடுக்காக அமைத்துப் பானையின் வாயை அகலிலிட்டுச் சீலை மண் பூசி பானையின் அடிபாகம் நெருப்புப் போல சிவந்து இலைகள் கருகும் வரை எரிக்கவும். தானாகவே ஆறிய பின்னர் அவைகளைப் பிரித்தெடுத்து நுண்ணியதாகப் பொடித்துத் தனித்தெடுத்து முன்போலப் பானையிலிட்டு எரித்தும் தயாரிக்கலாம்.
அளவும் அனுபானமும்:
500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை தயிர்த் தெளிவுடன் இரு வேளைகள் உணவுக்கு முன்.
தீரும் நோய்கள்:
குன்மம் (குல்ம), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), முக்கியமாக மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), பலவித வயிறு மற்றும் குடற்கோளாறுகள் (உதரரோக).
குறிப்பு: இது க்ஷார வகையைச் சேர்ந்ததாயினும், சூர்ணப் பிரிவில் மருத்துவ நூல்களில் காணப்படுகின்றது.
3 comments:
நல்ல பயனுள்ள தகவல்கள் ,
நன்றி
கோவை சக்தி
சார் இந்த மருந்தை நோயின் அறிகுறி தெரியாதவர்கள் சாப்பிடலாமா,அப்படி சாப்பிட்டால் பக்கவிளைவு ஏற்படுமா சார்.
@மச்சவல்லவன்பக்க விளைவு ஏற்படாது ..இருந்தாலும் தகுந்த நோய் உள்ளவர்கள் இந்த மருந்தை தக்க துணை மருந்துகளோடு சாப்பிடுவது நலம் .
கருத்துரையிடுக