நெஞ்சு வலி போன்ற கேஸ் ட்ரபுளுக்கு-அக்னிமுக சூர்ணம்-Agni muka choornam
(ref-பைஷஜ்யரத்னாவளி – அக்னிமாந்த்ய சிகித்ஸா)
தேவையான மருந்துகள்:
1. பெருங்காயம் (பொரித்தது) – ஹிங்கு - 10 கிராம்
2. வசம்பு – வச்சா - 20 “
3. திப்பிலி – பிப்பலீ - 30 “
4. சுக்கு – சுந்தீ - 40 “
5. ஓமம் – அஜமோதா - 50 “
6. கடுக்காய்த்தோல் – ஹரீதகீபலத்வக் - 60 “
7. கொடிவேலி – சித்ரக - 70 “
8. கோஷ்டம் – கோஷ்டம் - 80 “
செய்முறை:
இந்த சரக்குகளை முறைப்படி பொடித்துச்சலித்து ஒன்றுகலந்து பதப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு முன்
அனுபானம்: மோர், தயிர், வெந்நீர்.
தீரும் நோய்கள்:
பசியின்மை (அக்னிமாந்த்ய), செரியாமை (அஜீர்ண), சூலை (சூல), குன்மம் (குல்ம), மலமும் மூத்திரமும் வெளியேறாமல் பந்தனமாவதால் ஏற்படும் வாந்தி, குமட்டல் மற்றும் நெஞ்சு வலியுடன் கூடியநிலை (உதாவர்த்த), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ).
3 comments:
நல்ல பதிவுசார்.
வாழத்துக்கள்.
பச்சையாய் எடுக்கும் கொடிவேலி சற்று விடத்தன்மை கொண்டதால் அதை சுண்ணாம்புக்கற்களுக்கு நடுவே வைத்து தண்ணீர் ஊற்றினால் வெந்து ஆட்டை அறுத்ததுபோல் இரத்தநிறமாகும்.
பிறகு அலம்பி முன் அஷ்டசூர்ணத்தில் கலந்து கொடுத்தாலே தமரகச்சூலை எனப்படும் நெஞ்சுவலி உண்டாக்கும் வாயு களையப்படும்.
தங்கள் சேவை சிறக்க இறைப்பேராற்றலை இறைஞ்சுகிறேன்
@வானவன் யோகி
நண்பரே ..உங்கள் வருகை என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது
நீங்கள் சொன்ன விஷயம் -உண்மை -நல்ல விஷயம் -எனது ஆசான் இதை தான் சொன்னார் ..
"கொடுவேலி -இரத்தைத்தை சீக்கிரம் உறைய விடாது ,அடைப்பை நீக்கும்" -சரியான அளவில் -சுத்தம் செய்து முறைப்படி மருந்தாக உபயோக்கிக்க ஹார்ட் அடைப்பு நீங்குவது நான் கண்கூடாக பார்த்த உண்மை ..
நன்றி ..
கருத்துரையிடுக