சனி, பிப்ரவரி 19, 2011

சூர்ணம் -மூலிகை பொடிகள்-Choornam


 நண்பர்களே ..நாம் இன்னும் பார்க்கவேண்டிய அரிஷ்டங்கள்,ஆசவங்கள் பல இருந்தாலும் -அவற்றை இடை இடையே எழுதலாம் என்று எண்ணி அடுத்த ஆயுர்வேத மருந்துகளில் பெரும்பாலும் தயாரிப்பான -சூரணங்கள் என்னும் பொடி வகைகள் தயாரிப்பை பற்றி இன்று முதல் பார்க்கலாம் ..அதற்க்கு முன் சூரணங்கள் எப்படி தயாரிக்கபடுகிறது ?

உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகபடுத்தும் என்று நம்பியவனாக தொடர்கிறேன்
----------------------------------
சூர்ணம்


                இவைகள் உட்கொள்ளவும், மேற்பூச்சாகவும், மூச்சுப் பொடி போலும் பயன்படுகின்றன.
                மருந்து செய்முறையில் குறிப்பிட்டுள்ள சரக்குகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்த பின் உரல் அல்லது உலக்கை கொண்டோ அல்லது இயந்திரத்தின் உதவியாலோ அவைகள் நுண்ணிய தூளாக்கப்படுகின்றன. நுண்ணிய அத்தூள் பெரும்பாலும் சல்லடை வழியே சலிக்கப்படுகிறது. துணியின் வழியே சலித்தும் சூர்ணம் தயார் செய்வதுண்டு. சிக்கனமான முறையில் பெருமளவில் சூர்ணங்களைத் துணியில் சலித்துத் தயார் செய்வது மிகவும் கடினம். மேலும் துணியின் தரத்திற்கொப்ப உலோகச் சல்லடைவலைகள் தயாராகக் கிடைப்பதால் அவைகளைப் பயன்படுத்தி அதிகச் சிரமம் இல்லாமல் மேற்கூறிய சூர்ணங்களைத் தயார் செய்வதும் எளிதாகிறது. அஷ்ட சூர்ணம் போன்ற எண்ணெய்ப்பசை உள்ளவற்றிற்கு 40 அல்லது 50 ஆம்.நெ. வலையும், மற்றவைகளுக்கு 80 அல்லது 100  ஆம். நெ.வலையும் உபயோகிக்க உடனடியாக கிடைக்கின்றன. அவைகளைக் கொண்டு சல்லடை தயாரித்து உபயோகித்தல் நன்று.
                மருந்து செய்முறையில் பல சரக்குகளைச் சேர்க்கும்படி கூறுமிடத்து அவைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே இடித்துச் சலித்துக் குறிப்பிட்ட அளவில் அவைகளைச் சூரணமாக்கி மொத்தமாக ஒன்று சேர்த்துத் தயாரிக்க வேண்டுமென்று சிலர் கூறுவர். ஆயினும் நடைமுறையில் பெரும்பாலானோர் மொத்த சரக்குகளையும் அப்படியே குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சூர்ணங்களைத் தயார் செய்கின்றனர்.

                இரண்டு மாதங்களுக்கு மேல் தங்காத அளவில் சூர்ணங்களைத் தயாரித்தல் வேண்டும்.

                சர்க்கரை, கற்கண்டு, கற்பூரம், காவிக்கல், ஹைஸ்ரவேதி, மூசாம்பரம், திராக்ஷை, பேரீச்சங்காய், பெருங்காயம், வெங்காரம், படிகாரம், உப்புவகைகள் இவைகளை எல்லாச் சரக்குகளடனும் சேர்த்துப் பொடித்தல் கூடாது. 
                அவைகளைத் தனித்தனியே இடித்துப் பொடித்துச் சலித்துக் கடைசியில் சேர்க்க வேண்டும்.
                மூசாம்பரம், திராக்ஷை, பேச்சரீங்காய் இவைகளைச் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச்சலித்துச் சேர்க்க வேண்டும்.
                பெருங்காயம், வெங்காரம், படிகாரம், உப்புவகைகள் இவைகளைப் பொரித்துப் பொடித்துச் சலித்துச் சேர்க்க வேண்டும். சதாவரீ, குடூச்சி போன்றவற்றை பசை போன்று அரைத்து உலர்த்திப் பொடித்துச் சேர்க்க வேண்டும். திப்பிலியைச் சற்றுவறுத்துச் சேர்ப்பது நலம் பயக்கும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்று படக்கலந்து பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் பத்திரப்படுத்தவும். கசிவு ஏற்படும்படிகாகிதத்திலோ, தகரத்திலோ வைத்தல்கூடாது.

குறிப்பு -நாம் எளிதாக -வீட்டில் மிக்சியில்(காபி கொட்டை அரைக்க பயன் பயன்படுத்தும் கப் கொண்டு ) கூட சூரணங்கள் என்னும் பொடிகளை தயாரிக்கலாம்

Post Comment

3 comments:

suneel krishnan சொன்னது…

எளிமையான அறிமுகம் டாக்டர் ,தொடருங்கள் :)

மச்சவல்லவன் சொன்னது…

தொடந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்சார்.

curesure Mohamad சொன்னது…

@dr suneel krishnanபாராட்டுக்களுக்கு நன்றி ..டாக்டர் நமது போரத்தில் உங்கள் கட்டுரைகளை எதிர்பார்கிறேன்

கருத்துரையிடுக