புதன், பிப்ரவரி 23, 2011

வாயுவுக்கு -சிறந்த மருந்து -அஷ்டசூர்ணம்-Ashta choornam


வாயுவுக்கு -சிறந்த மருந்து -அஷ்டசூர்ணம-Ashta choornam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் குல்ம சிகித்ஸா)

சாதாரண வாயு தொல்லை மற்றும் மிக மோசமான கேஸ் ட்ரபுள் என்னும் வயிறு பிரச்னைக்கு மிக சிறந்த மருந்து ..
நாம் இந்த மருந்தை எளிதாக வீட்டிலே தயாரித்து கொள்ளலாம் ..

அஷ்ட சூர்ணம் -எட்டு பொடிகள் -இது பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம் போன்று -எளிதாக செய்ய முடியக்கூடிய வயிறு பிரச்சனைக்கு ஏற்ற மருந்து ..

தேவையான மருந்துகள்:
1.            சுக்கு சுந்தீ                           - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச                        - 10       “
3.            திப்பிலி பிப்பலீ                       - 10       “
4.            ஓமம் அஜமோதா                    - 10       “
5.            இந்துப்பு ஸைந்தவலணை            - 10       “
6.            சீரகம் ஜீரக                          - 10       “
7.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக            - 10       “
8.            பெருங்காயம் ஹிங்கு               - 10       “

செய்முறை:    

பெருங்காயத்தைத் தனியே பொரித்துப் பொடித்துச் சலித்து மற்ற சரக்குகளின் சலித்த சூர்ணத்துடன் கலந்து பத்திரப்படுத்தவும், திப்பிலியையும், இந்துப்பையும் பொடிக்கும் முன் சிறிது வறுக்கவும்.

அளவு:     

  1 முதல் 3 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்போ பின்போ

அனுபானம்:   

  நெய், மோர், தண்ணீர்.

தீரும் நோய்கள்: 

 செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அருசி), வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), வாத குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அசீரணம் (ஆமாதிஸார).

 நிறைய சாப்பிட்டு விட்டு -ஏப்பம் வராமல் தவிப்பவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும் (கண்ட கண்ட -சாப்ட் ட்ரிங்க்ஸ் சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய மருந்து )
குறிப்பு:

(1)    இதற்கு ஹிங்வாட்ஸக சூர்ணஎன்றொரு பெயருமுண்டு.
(2)          இதனை நெய் சேர்த்துச் சாதத்துடன் முதல் கவளமாக உட்கொள்ளப் பசியை அதிகரிக்கச் செய்கிறது. வாத குன்மத்தை அகற்றுகிறது.

Post Comment

8 comments:

sakthi சொன்னது…

அருமை நண்பரே ,
எல்லோருக்கும் அவசியம் தேவை படும் மருந்து .
நன்றி ,
நட்புடன் ,
கோவை சக்தி

Chitra சொன்னது…

எனது பாட்டியம்மா, இதை போல ஒரு பொடி செய்து சிறுவயதில் எங்களுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது. பயனுள்ள குறிப்புக்கு நன்றிங்க.

RAVINDRAN சொன்னது…

நன்றி

மச்சவல்லவன் சொன்னது…

நன்றி சார்.

curesure Mohamad சொன்னது…

நன்றி -சக்தி ,சித்ரா ,ரவீந்திரன் ,மச்ச வல்லவன் -நண்ர்களே

வானவன் யோகி சொன்னது…

இதே மருந்து சித்தமருத்துவத்திலும் கையாளப் பட்டிருப்பினும் பாரம்பரிய வைத்தியர்கள் முறை சற்று வித்தியாசமானதுடன் வீரியம் ஊட்டப்பெற்றது

படித்தவர் மற்றும் பாட்டியின் வைத்தியம் ஏறக்குறைய ஒன்று எனினும் பாட்டி வைத்தியமே சித்தவைத்தியம் எனக் கொள்ள முடியாது.

ஏடுகளின் மூலம் படித்தவர் மற்றும் பாட்டியின் கணநேர மருந்தை வைத்தியர்கள் சிறிது செறிவூட்டியுள்ளனர்.அனுபவ வாயிலாகச் செறிவூட்டியது குணமும் அதிகம் செயல்முறை இதோ,......

1.பெருங்காயத்தை பொறித்து,இந்துப்பை வறுத்து தனியே வைத்துக்கொண்டு

2.மற்ற சரக்குகள்,...சுக்கு,மிளகு,திப்பிலி. ஓமம்.சீரகம்,கருஞ்சீரகம் போன்றவற்றை தனித்தனியாக ஒரு வெள்ளைத்துணியில் போட்டு முடிந்து(அ)வெள்ளைத்துணியில் சிறிய பைகளைத் தைத்து அதனுள் போட்டுக்கட்டி சுண்ணாம்புக்
கற்களுக்கு நடுவே வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்றினால் அது வேகும்.

3.பிறகு.அவைகளை எடுத்து தண்ணீரில் அலம்பி,சுக்கைத் தோல் நீக்கிவிட்டு உலர்த்தி திப்பிலியை மட்டும் இளவறுப்பாக வறுத்து மற்றவைகளை பொடித்துச் சலித்துச் சேர்க்கவும்.

வாயுக் கோளாறு உள்ளவர்கள் இம்மருந்தை சாப்பாட்டின் முதல் கவளத்தில் வைத்துச் சிறிது நெய் விட்டு சாப்பிட நன்று.

மற்றவர்கள் வாய்த்தொந்தரவு வந்தாலும் நெஞ்சைப் பிடிப்பதுபோல் பிடித்தாலும் சுடுதண்ணீர்,மோர் போன்றவற்றில் திரிகடிப்பிரமாணம் மற்றும் அதற்குச் சிறிது அதிகம் கொள்ள வாயுப்பிடிப்பகன்று நலம் தரும்.

மற்றபடி தங்கள் தளம் மென்மேலும் பலகோடி நூறாயிரம் மக்களைச் சென்றடையவும்,தங்கள் இலட்சியம் வெல்ல உதவி செய்யும் நல் உள்ளங்களுக்காகவும் இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்

nanbenda சொன்னது…

வாயுக்கு மட்டுமல்ல சளி
மூட்டுவலி மலசிக்கல் தலை
சுற்றும் போகும்

nanbenda சொன்னது…

வாயுக்கு மட்டுமல்ல சளி
மூட்டுவலி மலசிக்கல் தலை
சுற்றும் போகும்

கருத்துரையிடுக