ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

க்வாத சூர்ணம்-குடிநீர்-Kwatha Choornam


க்வாத சூர்ணம்-குடிநீர்-Kwatha Choornam





ஆயுர்வேத மருந்துகளில் -பெரும்பான்மையான வைத்தியர்கள் ,மருத்துவர்கள் -இந்த க்வாத சூர்ணம் அல்லது கஷாயாத்தை பயன்படுத்துவதை தவறுவதே இல்லை ..

ஆயுர்வேத க்வாத சூர்ணம் என்பது -கஷாயம் தயாரிக்க பயன்படும் -மூலிகைகளின் பார்முலா அடங்கிய -ஒரு நல்ல குடிநீர் (டீ தூள் டிக்காக்ஷன் மாதிரி
இப்போது கஷாயங்கள் -ரெடிமேடாக -பாட்டில்களில் செறிவூட்டபட்டு -டானிக் போன்று எளிமையாக சாப்பிடும் வகைகளிலும் கிடைக்கிறது ..(கஷாய பாட்டில்கள் )

இதற்கும் ஒரு படி மேலே  போய் -கஷாயத்தை சாப்பிடும் முறைகளில் உள்ள நடை முறை சிக்கல்கள் ,கசப்புத்தன்மை ,மருந்தை எடுத்து செல்வதில் உள்ள சிரமம் ஆகியற்றை கருத்தில் கொண்டு -இப்போது கஷாயம் -கஷாய மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது உ

எது எப்படி இருந்தாலும் அதாவது -க்வாத சூரணமாக இருந்தாலும் ,கஷாயம் பாட்டில்களில் கிடைப்பதாக இருந்தாலும் ,கசாய மாத்திரைகளாக இருந்தாலும் -ஒரே விதமான பெயரில் கிடைக்கும் -பார்முலாக்களில் மாற்றம் செய்யபடுவதில்லை என்பதை நாம்  மனதில் வைத்து கொள்வது நல்லது ,
                கஷாயமாக்கி உட்கொள்ளவும், கொப்பளித்தல், ரணங்களைக் கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகத்திற்கும் மருந்துச் சரக்குகள் ஒன்றிடிரண்டாகத் தூளாக்கப்பட்டு (ஜவ்குத்) உபயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் இவைகள் க்வாத சூர்ணம்என்று வழங்கப்படும்.

                சுத்தமான மருந்துச் சரக்குகளை நன்கு உலர்ந்தபின் ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்து இவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் ஸ்ர்தா, நிர்யூக, கஷாய என்றும் வழங்கப்படுகின்றன. க்வாத சூர்ணங்களைக் கொண்டு கஷாயம், ஹிம கஷாயம், பாண்ட கஷாயம் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகளைக் காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

                                                                                                கஷாயம் செய்யும் முறை
                பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூர்ணத்திற்கு பதினாறு பங்கு தண்ணீர் சேர்த்து சிறு தீயிட்டு எரித்து அல்லது நீராவிக் கலங்களை உபயோகித்து எட்டிலொன்றாகக் குறுக்கி வடிகட்டிக் கஷாயம் சேகரிக்கப்படுகிறது.

                தேன், நெய், சூரணம், சுத்தி செய்த குக்கலு போன்ற சில குறிப்பிட்ட துணை மருந்துகளுடன் கஷாயத்தைப் பருகுவது உண்டு. இக்கஷாயங்களை சில மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் உபயோகிக்கப்படுகின்றன.

      அளவு:     30 – 60 மில்லி லிட்டர் காலை, மாலை இரு வேளைகள்.

க்வாத சூர்ண-வகைகளை பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்
 

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நல்ல தகவல்கள் ,
நன்றி
கோவை சக்தி

கருத்துரையிடுக