வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்-Vasarishtam


இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்-Vasarishtam
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகாரம்)தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            ஆடாதோடைவேர் வாஸாமூல        - 10.000 கி.கி.
2.            தண்ணீர் ஜல                       - 25.600 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக வடிகட்டி வெல்லம் – (குட) 5.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்


1.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 50 கிராம்
2.            ஏலக்காய் ஏலா                        - 50       “
3.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         - 50       “
4.            சிறுநாகப்பூ நாககேஸர               - 50       “
5.            தக்கோலம் தக்கோல                 - 50       “
6.            சுக்கு சுந்தீ                           - 50       “
7.            மிளகு மரீச்ச                        - 50       “
8.            திப்பிலி பிப்பலீ                      - 50       “
9.            குருவேர் ஹ்ரீவேர                   - 50       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


  அளவும் அனுபானமும்: 

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்

இருமல் (காஸ), இரைப்பு அல்லது இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் எனும் ஆஸ்த்மா (ஸ்வாஸகாஸ), க்ஷயரோகம் (க்ஷய), வீக்கம் (ஸோத), மூச்சு மண்டலம், உணவுப்பாதை போன்ற உள்ளுறுப்புகளிலேற்படும் குருதிப் போக்கின் பலவிதநிலைகள் (ரத்த பித்த)


                இருமல், இரைப்பு போன்ற நிலைகளில் பவளபற்பம், சுவாஸானந்த குடிகா ஆகியவற்றுடனும், ரத்தம் துப்புதல் (ரத்த நிஷ்தீவன), க்ஷயரோகம் போன்ற நிலைகளில் லாக்ஷா சூர்ணம் மற்றும் ஸ்வர்ணமாலினி வஸந்த ரஸத்துடனும் இது கலந்து தரப்படுகிறது. இருமல், இரைப்பு, ஆஸ்த்மா போன்ற மூச்சு மண்டல நோய்களைப் போக்குவதில் ஆடாதோடை பெரும் பங்கு வகிக்கிறது.


                குறிப்பு:-    இதனை வாஸகாஸவ, வாஸகாரிஷ்டம் என்றும் அழைப்பதுண்டு.

Post Comment

4 comments:

கருத்துரையிடுக