எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)
தேவையான
மருந்துகள்:
1. ஓமம் (குராஸானி) – பார்சீகயவனி 40 கிராம்
2. சீரகம் – ஜீரக 40 “
3. கொத்தமல்லி விதை – தான்யக 40 “
4. மிளகு – மரீச்ச 40 “
5. விஷ்ணுக் கரந்தை (உலர்ந்தது) – விஷ்ணுக்ரந்தி 40 “
6. ஓமம் – அஜமோதா 40 “
7. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 40 “
8. பெருங்காயம் (பொரித்தது) – ஹிங்கு 60 “
9. ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார 80 “
10. யவக்ஷாரம் – யவக்ஷார 80 “
11. இந்துப்பு – ஸைந்தவலவண 80 “
12. கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண 80 “
13. கரியுப்பு – பிடாலவண 80 “
14. சோற்றுப்பு – ஸமுத்ரலவண 80 “
15. வளையலுப்பு – காச்சலவண 80 “
16. கருஞ்சிவதை – த்ரிவ்ருத் 80 “
17. நாகதந்திவேர் (நேர்வாளவேர்) – தந்தீமூல 160 “
18. கிச்சிலிக் கிழங்கு – ஸட்டீ 160 “
19. புஷ்கரமூலம் – கோஷ்ட 160 “
20. வாயுவிடங்கம் – விடங்க 160 “
21. மாதுளை ஓடு – தாடிமத்வக் 160 “
22. கொடிவேலி வேர் – சித்ரக 160 “
23. சீமைக் கொடுக்காய்ப் புளி – அம்லவேதஸம் 160 “
24. சுக்கு – சுந்தீ 160 “
25. கடுக்காய்த் தோல் – ஹரீதகீ பலத்வக் 160 “
செய்முறை:
இவற்றை முறைப்படி நன்கு பொடித்துச் சலித்துக்
கல்வத்திலிட்டு போதுமான அளவு துருஞ்சிச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில்
ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள
மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை
நெய், பால், நீர் (அ) மோர் (மத்யம்) ஆகியவற்றுடன்.
தீரும் நோய்கள்:
மூலம் (அர்ஷ), குன்மம் (குல்ம), இதய நோய் (ஹ்ருத் ரோக), பெருங்கழிச்சல் (கிரஹணீ), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), சூலை (சூல), இரத்த பித்தம் (ரக்த பித்த), குடற்புண்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- ஆசன வாய் வெடிப்பிற்கு -சிர வில்வாதி கஷாயம் + திரிபலா குக்குலு + இந்த காங்கயன வடி = நூற்றுக்கு நூறு நல்ல பலன் தெரியும்
- உள் மூலம் - சிர வில்வாதி கஷாயம் அல்லது துராலபாதி கஷாயம் + அர்ஷகன
வடி + பஹுசால குட லேஹியம் அல்லது சூரனாதி லேஹ்யியம் + இந்த மருந்து நல்ல
பலன் தரும்
- இரத்த மூலம் இந்த மாத்திரை சேராங்கொட்டை சேர்ந்த மருந்துகளுடன் முன்னர் சொன்ன மருந்துகள் நல்ல பலன் தெரியும்
- பவுந்திரத்திர்க்கு இந்த மருந்து குப்பை மேனி உப்பு + இந்த மாத்திரை நல்ல பலன் தெரியும்
2 comments:
அன்புள்ள நண்பரே வணக்கம் ,
மூலத்திற்கு பயன்படும் அருமையான மருந்து கொடுத்து உள்ளீர் .
ஆசன வாய் வெடிப்பிற்கு ,உள் மூலம்,இரத்த மூலம்,,பவுந்திரத்திர்க்கு தனி தனியாக கொடுத்துள்ளது நல்ல விளக்கம்
நன்றி
நட்புடன்,
கோவை சக்தி
Nice Articles..Keep it up..Please start question - Answer Section apart from this..
- Mahesh
கருத்துரையிடுக