ஞாயிறு, மார்ச் 04, 2012

லேபம் -களிம்பு -செய்வது எப்படி -Lepam Preperation


லேபம் -களிம்பு -செய்வது எப்படி -Lepam Preperation
  (சித்தாவில் - களிம்பு, வெண்ணெய், மெழுகு; யுனானியில் :- மர்ஹம்)

                களிம்பு அல்லது பசைவடிவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு லேபம்என்று பெயர். லேபங்கள் வெளிப்பூச்சு மருந்தாக மட்டுமே உபயோகப்படுகின்றன. பெரும்பாலும் இவைகள் எண்ணெய், தேன்மெழுகு இவைகளை உருக்கிக் கலந்து களிம்பு போல் செய்து கொண்டு அத்துடன் பொடித்துச் சலித்த களிம்பு போல் செய்து கொண்டு அத்துடன் பொடித்துச் சலித்த மருந்துச் சரக்குகளைச் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.

                சரக்குகளைப் பொடித்துச் சலித்து அப்பொடியை திரவங்களுடன் கலந்து லேபங்களாக உபயோகிப்பதும் உண்டு. தாளகம், மனோசிலை, போன்ற சரக்குகளைத் தனித்தனியே பொடித்துக் கொண்டு ஏற்கெனவே பொடித்துச் சலித்த சூரணத்துடன் சேர்க்க வேண்டும். ரஸம், கந்தகம் இவைகளைக் கஜ்ஜளி செய்து கொண்டு நன்கு பொடியாக்கி சலித்த சூரணத்துடன் சேர்க்க வேண்டும். 

                கற்பூரத்தை நன்கு பொடித்துக் கொண்டு எண்ணெய், தேன்மெழுகு இவைகளின் சூடான கலவையை வடிக்கட்டும் பாத்திரத்தில் போட்டு அந்த சூடு இருக்கும் போதே சேர்த்து நன்கு கலக்கிக் கரைத்துச் சேர்க்கவேண்டும்.

                எண்ணெய், தேன் மெழுகு இவைகளைக் கொண்டு லேபங்கள் தயாரிக்கையில் செய்முறையில் குறிப்பிட்டுள்ள மருந்துச் சரக்குகளைத் தனித்தனியே நன்கு பொடித்தோ அல்லது பொடித்துச் சலித்தோ நுன்ணியதாக்கி ஒன்று கலந்து வைக்கவேண்டும். பின்னர் சிறு, சிறு துண்டுகளாக்கிய தேன்மெழுகு கரையும் அளவிற்கு எண்ணெய்ச் சூடாக்க வேண்டும். அவ்விதம் சூடான பின் தேன் மெழுகுத் துண்டுகளை அவ்வெண்ணெய்யிலிட்டு அவைகள்  நன்கு கறைந்த பின்னர் அதே சூட்டுடன் வடிகட்டி களிம்பு போல் கெட்டியாகும் வரை வைக்கவும். கெட்டியான பின் நுண்ணியதாக்கிக் கலந்த சூரண வகைகளைச் சேர்த்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.  சில சமயங்களில் வடிகட்டியவுடன் சூரணங்களைக் கலந்து நன்கு கலக்கிக் கட்டவைப்பதும் உண்டு.




குறிப்பு -பலர் இப்போது பெட்ரோலியம் ஜெல்லி கலந்து எளிமையாக லேபம் தயாரித்து விடுகிறார்கள்
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக