திங்கள், மார்ச் 05, 2012

வெண் குஷ்டம் என்னும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து -அவல்குஜாதி லேபம்-Avalgujadhi Lepam


வெண் குஷ்டம் என்னும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து -அவல்குஜாதி லேபம்-Avalgujadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கார்போக அரிசி அவல்குஜா                     50 கிராம்
2.            சரக்கொன்னை இலை (உலர்ந்தது) ஆரக்வத பத்ர  50          
3.            மஞ்சள் ஹரித்ரா                                    25          

இவைகளை நன்கு பொடித்துச் சலித்து அத்துடன் ஓடு நீக்கி விழுதாக அரைத்த நீரடிமுத்துப் பருப்பு (துவரகபீஜ) 50 கிராம் சேர்த்துக் கலந்து பின்னர் தனியே பொடித்த பிண்டதாளகம் (ஹரிதாள) 25 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.

உபயோகிக்கும் விதம்:     

 பசுவின் மூத்திரம், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கார்போக அரிசி கஷாயம் இவைகளுடன் கலந்து மேலே பூசவும்.

பயன்படுத்தும் முறை:      
  
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  


வெண்குஷ்டம் (ஸ்வித்ர), உடல் நிறம் மங்கல் (அ) மாற்றம் (வர்ணவிக்ருதி), சொறி (கண்டு), படை (விஸர்ச்சிகா), தோல் வெடிப்பு (விபாடிகா), புண்கள் (வ்ரண).
                நல்லெண்ணெய்யுடன் கலந்து பூச சொறி, நமைச்சல் தீரும், தேங்காயெண்ணெய்யுடன் கலந்து பூச தோல் வெடிப்பில் நலம் பயக்கும். புரசம்பூ (பலாஸ) கஷாயத்துடன் இதனைக் கலந்து பூச படைகள் ஒழியும். வெண்குட்டம் போன்ற நிலைகளில் கார்போக அரிசிக் (பாகுசி) கஷாயத்துடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. புண்கள் விரைவில் ஆறவும் உதவுகிறது.

குறிப்பு:    

 சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாமல் தோல் எரிச்சல் உண்டாகி தோல் வெடிப்பும் நேரலாம். அந்த நேரங்களில் இதனைத் தவிர்த்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் நெய்யினைத் தடவி வரலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. எல்லா வகையான வெண் புள்ளிகள் மற்றும் -வெள்ளையாகும் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து இதை விட வேறு இல்லை
  2. வெண் புள்ளிகளுக்கு -உள் மருந்தாக ஆயுர்வேதத்தில் சித்ரக லேஹியம் ,சித்ரகாசவம் போன்ற மருந்துகளும் சித்த மருத்துவத்தில் கார்போகி மாத்திரை ,சிவனார் வேம்பு சூர்ணம் ,சிவனார் வேம்பு குழி தைலம் ,அன்ன பேதி செந்தூரம் ,அய காந்த செந்தூரம் ,ஹோமியோ மருந்தில் ஆர்ஸ் அல்ப், ஆர்ஸ் சல்ப் ப்லேவஸ் (ASF) பெரைட்டா மூர் ,பெரைடா கார்ப் போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்

Post Comment

3 comments:

sakthi சொன்னது…

வணக்கம் நண்பரே ,
வெண் குஷ்டத்துக்கு பயன்பெறும் அற்புத மருந்து நன்றி .கூடவே ஹோமியோ மருந்துகளும் எழுதுவது மேலும் சிறப்பு ஹோமியோ மருந்துகளும் அறிந்துகொள்ளும் அற்புத வாய்ப்பு .
மிக்க நன்றி

நட்புடன் ,
கோவை சக்தி

Anwer சொன்னது…

Venkustam ithatku unkalid irunthu marunthu pera mudiuma plz

பெயரில்லா சொன்னது…

மேல் கூறி உள்ள கார்போகி மாத்திரையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும், ஒரு நாளில்
எத்தனை முறை உட்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக