வியாழன், ஜனவரி 22, 2015

முப்பது ஆயிரம் இலவசமாக அருந்திய நில வேம்பு குடிநீர் முகாம் -கடையநல்லூரில்

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் ...


பல மர்ம காய்ச்சல்களை கடையநல்லூர் சந்தித்து வந்து இருக்கிறது ..
கடந்த வருடம் அணுக்களை குறைக்க கூடிய டெங்கு காய்ச்சல் இங்கு தான் முதன் முதலில் கண்டு அறியப்பட்ட்டது ..அதற்கு முன் சிக்கன் குனியாவும் இங்கே தான் முதன் முதலில் தொடங்கியது என்ற ஒரு வரலாறும் இங்கே இருக்கிறது ,,,

ஆனால் இந்த வருடம் ராஜ பாளையத்தில் மர்ம காய்ச்சல் துவங்கியுள்ளது ..

பெயர் தெரியாத காய்ச்சலை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவ மனை கடந்த நவம்பர் மாதம் முதலே பல இயக்கத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ,செங்கோட்டை ,சங்கரன்கோயில்  பகுதிகளில் பல இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாமை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்துள்ளது .இந்த முகாம்களில் பல ஆயிர கணக்கான மக்கள் பயன் பெற்றனர் ..

இதன் தொடர்ச்சியாக கடைய நல்லூர் நகராட்சியில் மக்களுக்கு இலவசமாக நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் துவங்க வேண்டும் என்று முயன்ற போது தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளை நமது அல் ஷிபா மருத்துவ மனையை நம்மை தொடர்பு கொண்டது ..நாம் அவர்களுக்கு இலவசமாக பல கிலோ கணக்கில் நில வேம்பு குடிநீரை வழங்கியது ..நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளையும் இணைந்து கடந்த எட்டு நாட்களாக கடையநல்லூரின் பல பகுதிகளில் அதிகாலையிலேயே பெரிய பிரியாணி ஆக்கும் சட்டிகளில் வைத்து சுட சுட மக்களுக்கு வழங்கியது. ஒரே நாளில் கடையநல்லூரின் பல  இடங்களிலும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது . மக்கள் தூக்கு சட்டிகளில் வாங்கி குடும்பமாக வீட்டிலும் பருகினர் .இந்த எட்டு நாட்களில் குறைந்தது முப்பதாயிரத்திற்கு மேல் மக்கள் நில வேம்பு குடிநீரை பருகி பயன் பெற்றனர் .
ஏக இறைவனின் துணை கொண்டு இந்த வருடம் மர்ம காய்ச்சல்கள் ,டெங்கு காய்ச்சல்  போன்றவை தடுக்கப்பட்டு விட்டன என்றே நாம் சொல்லலாம் .

இந்த சேவையில் நம்மோடு துணை ,நமது இலவச நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு சேர்த்ததில் தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளை மிக பெரிய பங்கு ஆற்றியது ..
சில புகைபடங்கள் உங்களுக்காக Post Comment

1 comments:

Karthikraja K சொன்னது…

Very Good Work.

கருத்துரையிடுக