ஞாயிறு, ஜனவரி 04, 2015

சென்னையில் முதன் முறையாக, சொரியாசிஸ் சிகிச்சையில் லிம்கா மற்றும் உலக சாதனை நடத்திய மும்பை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம் ( 08/01.2015)சென்னையில் முதன் முறையாக, சொரியாசிஸ் சிகிச்சையில் லிம்கா மற்றும் உலக சாதனை நடத்திய மும்பை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம் ( 08/01.2015)

 மும்பை மற்றும் இந்தியா முழுவதும் சொரியாசிஸ் நோய்க்கு சிகிச்சை செய்துவரும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் மற்றும் பெங்களுரு இந்தியன் சொரியாசிஸ் பவுண்டேஷன் இணைந்து  சென்னையில் ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் (தொடர்புக்கு  90 4333 6444 ) வருகிற 08/01.2014 வியாழன் கிழமை காலை பதினொரு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை சொரியாசிஸ்  நோய்க்கு பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை முகாம் நடத்த உள்ளது .இந்த நிறுவனம் 2007,2008 & 2009  களில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே சொரியாசிஸ் நோய்க்கு முதல் சூப்பர் ஸபெஷாலிட்டி சொரியாஸிஸ் மருத்துவமனை இதுவே ஆகும் . ISO 9001: 2008 சான்றிதழ் மற்றும் உள் & பன்னாட்டு விருதுகளை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது .பல்லாயிர கணக்கான சொரியாசிஸ் நோயாளிகளை பரி பூரணமாக குணமாக்கி சாதனை படைத்துள்ளது.

சொரியாசிஸ் நோயும் போலி வைத்தியர்களும்.

ஆங்கில மருத்துவர்களுக்கு சவாலாக அமைகிற இந்த சொரியாசிஸ் நோய்க்கு பலர் எந்த மருத்துவ படிப்பும் இல்லாத போலி மருத்துவர்களிடம் ஏமாறுகிறார்கள் .ஸ்டீராய்ட் ,மீததாட்ராக்சேட் மருந்துகளை தங்களது பொடியில் கலந்து ஏமாற்றி பிழைக்கிறார்கள். எந்த ஒரு லேபிளும் அவர்களது மருந்தில் இருக்காது .அதனால் மக்கள் எந்த மருத்துவரிடம் காண்பிப்பது என்று குழம்பிய நிலையில் உள்ளார்கள்.பக்கம் பக்கமாக விளம்பரம் தருபவர்கள் மருந்துக்கு பத்தாயிரம் ,இருபதாயிரம் என்று சொரியாசிஸ் நோயாளிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள் .

சொரியாசிஸ் நோய்க்கு ஆளாகும் பிரபல்யங்கள் .
சொரியாசிஸ் நோய் பொதுவாக  பல பிரபலங்கள் ,மருத்துவர்கள் ,உயர் அதிகாரிகள் ,பெரிய பதவியில் உள்ளவர்கள் ,சினிமா துறயில் உள்ளவர்கள் பாதிக்கபடுகிறார்கள்.

ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தின் சிறப்பு என்ன ?
MD (SIDDHA).,BAMS,BHMS,MD  படித்த மருத்துவ குழு இந்த நிலையத்தில் சொரியாசிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் ,மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் இணைந்து பணியாற்றுகிறது .

சொரியாஸிஸ் 

      சொரியாசிஸ் நோய் பெரிய நகரங்களில் 10 %  மக்கள் தொகையில் பாதித்துள்ளதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன .இந்நோய் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பாதிக்கின்றது .காளஞ்சகப்படை, தடிப்பு தோல் அழற்சி நோய்,செதில் உதிர்நோய், வெண்பருச்செதில் நோய், பன்றிக்தோல் குட்டம், யானைத்தோல் குட்டம், கிடீப குட்டம் என்ற பெயர்களில் சித்த ஆயுர்வேத மருத்துவர்களாலும், சொரியாஸிஸ்Psoriasis) என அலோபதி மருத்துவர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நோய் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் சிறுபுள்ளி போல ஆரம்பித்து நாளடைவில் வட்ட வடிவ திட்டுக்கள் போல் உடல் முழுவதும் காணப்படும். நோய் நாட்படின் நகங்கள் அழுகுதல், மூட்டுகளில் வலி, வீக்கம் காணப்படும். 15- 40 வயதினரை அதிகம் பாதிக்கின்றது.

          சொரியாஸிஸ் உயிர்க்கொல்லி வியாதியல்ல. இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

சொரியாசிஸ் வகைகள்
         Psoriasis vulgaris, pustular psoriasis, Guttate psoriasis, Inverse psoriasis, Psoriatic Erythroderma ,பொடுகு போல் தோன்றும் தலையில் மட்டும் பாதிக்கும் ஸ்கேல்ப் சொரியாசிஸ் ,பித்த வெடிப்பு போல் தோன்றும் பிளாண்டார் சொரியாசிஸ் ,நக சொத்தை போல் தோன்றும் நெயில் சொரியாசிஸ் என சொரியாசிஸ் பல வகைப்படும்

சொரியாஸிஸ் வர காரணம்

        உடலின் நோய் எதிர்பு சக்தி குறைவதால்,நீண்ட காலம் ஏதேனும் நோயினால் பாதிக்கப்படுவதால், ஏதேனும் நோய்க்காக நீண்ட காலம் சாப்பிடும் மாத்திரைகளின் பக்க விளைவுகளால், திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளாலும், காயங்களாலும்அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் பின்விளைவுகளால், அதிக மனக்கவலை, நீண்டகாலமாக அதிக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சொரியாசிஸ் நோய் வரலாம் என நம்பப்படுகிறது.
                   மேலும் இது ஒரு தொற்று வியதியல்ல. ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு தொற்றாது. நோயாளி பயன்படுத்திய உடை, சீப்பு, டவல் மற்றவர் பயன்படுத்தினால் இந்நோய் வருமோ என்று பயம் கொள்ள தேவை இல்லை. சிலருக்கு சொரியாஸிஸ் மரபியல் காரணமாக வரும். மரபியல் ரீதியாக வரும் சொரியாசிஸ் கடுமையானதாகவும், திரும்ப திரும்ப வரும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

சொரியாஸிஸ் அறிகுறிகள்:

    உடலின் பல்வேறு இடங்களான  முழங்கை, முழங்கால், காதின் பின் புறம், தலை இவற்றில்  வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள், அதிலிருந்து வெண்ணிற பொடுகு உதிர்தல், அரிப்பு, சொரிந்தால் ரத்தக்கசிவு, அக்குளில் அல்லது மார்பகங்களுக்குக் கீழே அல்லது இடுப்பில் அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற படை, தோல் உரிதல், அரிப்பு  உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை காணப்படும். இவைகள் நாட்பட்டு காணப்படின் பின் நகச்சொத்தை, நகம் அழுகுதல் (Nail Atrophy),மூட்டுகளில் வலியும் வீக்கமும்(Psoriatic arthritis) ஏற்பட்டு மூட்டுகள் கோணலாகுவது, மூட்டுகளை மடக்க  இயலாமை  போன்றவை காணப்படும் .இதில் கூறப்பட்டுள்ள எல்லா அறிகுயர்களும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .சில அறிகுறிகள் மட்டும் இருந்தால் மட்டுமே போதும் அதுவும் சொரியாசிஸ் நோயாக இருக்கலாம் .

 08/01/2015 வியாழன் அன்று பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் இலவச விசிடி  வழங்கபடுகிறது

மும்பையிலிருந்து சொரியாசிஸ்  சிறப்பு மருத்துவர் வருகை தரும் சொரியாசிஸ் சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் வருகிற 08/01/2015 வியாழன் அன்று ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் ( முகவரி ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4,துரை சாமி முதல் தெரு ( near KFC) கீழ் கட்டளை சென்னை –செல்   90 4333 6444) நடைபெற உள்ளது .உங்களுக்கு தெரிந்த தோல் நோயாளிகள் ,சொரியாசிஸ் நோயாளிகளை வர சொல்லி பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம் .தொடர்பு மற்றும் முகாமில் பங்கு பெற அழைக்க வேண்டிய தொலை பேசி எண்  90 4333 6444.Post Comment

0 comments:

கருத்துரையிடுக