கணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்
ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை ..
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆப்பிள்
நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட இந்த கணைய புற்று நோயால் ..எந்த வித மிக பெரிய சிகிச்சைக்கும்
பலன் தாராமல் இறந்து போனார் ...பணம் இந்த சிகிச்சைக்கு பலன் தராது
இன்று இறந்து போன கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் அவர்களுக்கும்
இந்த கணைய புற்று நோய் தான் இருந்தது.AIIMS போன்ற தரமான மருத்துவமும் கூட இந்த
நோய்க்கு தீர்வை தரவில்லை ..மிக பெரிய பதவியில் இருந்தாலும் ..சிறந்த சிகிச்சை
பலன் தரவில்லை என்பது இங்கே தெளிவாகிறது .
வெறும் அல்சர் தானே என்று அலட்சியம் செய்யும் நிலையில் உள்ள நமக்கு தெரிய
வாய்ப்பே இல்லை ...அது கணைய புற்று நோயாக கூட இருக்கும் என்று....சைலன்ட் கில்லர்
என்று அடை மொழியோடு நம்மை தாக்க காத்திருக்கும் ஒரு புற்று நோய் இதற்கு மட்டுமே
பொருந்தும். எளிதாக கண்டு பிடிக்கவே முடியாத கணைய புற்று நோய். கணைய புற்று நோய்
என்று கண்டு பிடிக்கப்பட்டால் எந்த வகை சிகிச்சை அளித்தாலும் இரண்டாவது ஆண்டில்
உயிர் பிழைக்க வாய்ப்பு 8 % சதவீதம் மட்டுமே..
இறப்பை இரக்கமற்று தரக்கூடிய புற்று நோயில் கணைய
புற்று உலகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதை நினைக்க பயங்கரமாக இருக்கிறது.
ஆண்களில் வரக்கூடிய புற்று நோயில் 11 வது இடமும்,பெண்களுக்கு 9 தாவது இடத்தில்
இருந்தாலும் வெகு வேகமாக முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறிக்கொண்டே இருக்கிறது இந்த
கணைய புற்று நோய் ..
இந்த நோயினால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு
பாதிப்பும் இல்லாமல் நான்கு ஆண்டுக்கு மேல் ஒரு நோயாளியை ஆயுர்வேத சிகிச்சை பெரிய
பொருட் செலவு இல்லாமல் காப்பாற்றி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கே
தெரிவித்து கொள்கிறேன் .கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தா மருத்துவ கல்லூரியில் நடை
பெற்ற புற்று நோய் கருத்தரங்கில் இந்த ஆய்வு கட்டுரையை பல்வேறு நிபுணர்களுக்கு
மத்தியில் சமர்பித்தேன். பல மருத்துவ வல்லுனர்களின் பாராட்டை பெற்ற இந்த ஆய்வு
கட்டுரையின் சான்றிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன் ...
கணைய புற்று நோய்க்கு ஆயுஷ் மருத்துவம் ஒரு சிறந்த
தீர்வை தரவல்லது.
0 comments:
கருத்துரையிடுக