ஞாயிறு, மார்ச் 14, 2010

பட்டை

பட்டை 


தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்

பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்

ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற

ஓட்டுமில வங்கத் துரி

சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சி யுண்டாக்கும்

இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்

உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்

கந்தமிகு பூங்குழலே! காண்

- அகத்தியர் குணபாடம்


  1. நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.
  2. வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.
  3. செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.
  4.  இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.
  5. இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.
  6. வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.
  7. கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வர உதவிடும் 
  8. இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.


குணமாகும் நோய்கள் வாந்தி, பசியின்மை, சளி, ஆஸ்துமா
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/lavangam-ayurvedic-herbs.html

Post Comment

0 comments:

கருத்துரையிடுக