ஞாயிறு, மார்ச் 21, 2010

எலுமிச்சை புல் ,இஞ்சி புல்

வேறு பெயர்கள் :வாசனை புல் ,எலுமிச்சை புல் ,இஞ்சி புல் 
ஆயுர்வேதத்தில் இதனை ரோஹிஷா என்போம் 
ஆச்சார்யர் சரகர் இதனை ஸ்தன்ய ஜனன வர்க்கத்தில் அதாவது தாய்பால் சுரக்க வைக்கும் வர்க்கத்தில் சேர்த்துள்ளார் 
பயன்களில் 
  1. துஷ்ட பீனசம் (கெட்ட பீனசம் )-வசம்பு ,இஞ்சிபுல்,சீரகம் ,சனகம் போன்ற பொருகளை நுகர சொல்கிறது 
  2. தேள் கடியில் -இந்த புல்லின் வேருடன் ச்லேஷ்மாந்தகத்தின் சாற்றையும் அரைத்து பூச சொல்கிறது 
  3. சாதரணமாக கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளான தான்வன்தரம் கிருதம் ,மஹா பஞ்ச கவ்ய கிருதம் போன்ற பொருட்களில் சேர்க்கிறது 
லெமன் கிராஸ் ஆயில் இதனிலிருந்து தயாரிக்கபடுகிறது -இந்த லெமன் கிராஸ் ஆயில் இந்த புல்லை பதங்கமாதல் முறையில் தயாரிக்கபடுகிறது 
லெமன் கிராஸ் ஆயில் -மன சோர்வுக்கு,புஞ்சை மற்றும் பாக்டீரியாகளை அழிக்க பயன்படும் விதத்தில் உள்ளதால் பல வகையில் உபயோகமாகிறது 
பல தோல் வியாதிகளிலும் ,தாய்ப்பால் சுரக்கவும் ,வலிகளை நீக்கவும் பயன்படுகிறது 

இந்தப்புல்லிலிருந்தும், தண்டுகளிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயில் டெர்பினைன் 0.50 சதம், பீட்டா டெர்பினியால் 0.40 சதம், அல்பா டெர்பினியால் 2.25 சதம், ட்ரைபினையல் அசிடேட் 0.90 சதம், போர்னியால் 1.90 சதம், ஜெரானியால் மற்றும் நெரால் 1.5 சதம், சிட்ரால் பி 27.7 சதம், சிடரால்-ஏ 46.6 சதம், பார்னிசோல் 12.8 சதம், பார்னிசால் 3.00 சதம் என்று பல வேதிப் பொருட்கள் உள்ளன. 

எண்ணயெ மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு, சிட்ரால் வைட்டமின் ‘ஏ’ போன்ற வேதிப் ரொருட்கள் எடுக்கப் பயன்படுகின்றன. கிருமி நாசினியாக பயன்படுகிறது. பூச்சிக்கொல்லியாகவும் பயன் படுகிறது. எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பட்டிகள் தயாரிக்கவும், எரிபொருளாகவும் பயன் படுகிறது. இந்தப் புல்லிருந்து சூப் செய்கிறார்கள், இறைச்சி, மீன் வகைகளில் உபயோகிக்கிரார்கள்.

 இதில் போடப்படும் டீயும் நன்றாக இருக்கும்.

புற்று நோயின் செல்களையும் அழிக்க உதவுவதாக ஆராச்சிகள் தெரிவிக்கிறது .
குணமாகும் நோய்கள்: கிருமி நாசினி, வாத நோய்,பசியின்மை, சளியை போக்கும்

Post Comment

4 comments:

கருத்துரையிடுக