ஞாயிறு, மார்ச் 21, 2010

கஸ்தூரி மஞ்சள்

இன்று மஞ்சளை தேய்த்து குளிக்கும் பெண்கள் உண்டா ?
ஏகப்பட்ட வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்களை தேடி பூசி ,முகத்தில் பொலிவு இழந்த பெண்களை நினைக்க மனம் வருத்துகிறது .
விளம்பரத்தில் காண்பது தான் உண்மை என்று கண்டதை எல்லாம் முகத்தில் பூசி முகம் முதிர்ச்சி அடைந்த பெண்கள் என்ன சொல்வது.
நான் சாவால் விட்டு சொல்கிறேன் -இந்த கஸ்தூரி மஞ்சளை நாற்பது நாட்கள் தேய்த்து குளித்து பாருங்கள் -நீங்கள் எவ்வளவு காலம் தேவை இல்லாமல் வீண் விரயங்கள் செய்துள்ளீர்கள் என்பது உங்களக்கு தெரியும் 



செய்கை -உரமுண்டக்கி ,வெப்பமுண்டாக்கி,அகட்டுவாய் அகற்றி 
குணம் -தனால் பெரும் புண்கள் ,கரப்பான்,நுண் புழுக்கள்,அக்கினி மாந்தம் இவை போகும்,ஆண்மையும் அறிவையும் வளர்க்கும் 

புண்ணுங் கரப்பானும் போக்கைக் கிருமிகளும் 
நன்னுமந் தாக்கினியும் நாசமாம் -வண்ணமலர்த்
தொத்தே றளகமின்னே சுக்கிலமும் புதிமாங் 
கத்தூரி மஞ்சளுக்குக் காண்.  ( அகத்தியர் குண பாடம் )
  1. இதை அரைத்து தேய்த்து குளிக்க கரப்பானும்,பெரும் புண் ,மந்தம் இவை தீரும் 
  2. என்னையிலிட்டு காய்ச்சி உடல்வலி முதலிய நோய்களுக்கும் அடிபட்ட நோய்களுக்கும் மேலுக்கு தேய்க்கலாம் 
  3. இந்த தூளை மிக சிறிய அளவில் ( ) உள்ளுக்கு கொடுத்து வர வயிற்று நோய்,குன்மம் இவை நீங்கும் 
  4. மணமூட்டி பொருள்களோடும் ,தைலவர்கங்களோடும் இதை சேர்ப்பது வழக்கம் 
  5. காம்பு நீக்கி சீத்தா இலை 10, 1 முட்டை வெள்ளைக்கரு, 1 அங்குல பச்சை மஞ்சள் மூன்றையும் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் கால்களை சுத்தமாக்கி பின் இக்களிம்பை தடவி வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு உறங்க வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு பாதங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் செய்ய பித்த வெடிப்பு குணமாகும்.
    ஆழமற்ற வடுக்கள் என்றால் மஞ்சள்பொடி, திருநீறு இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு பவுடர் போல் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் குணமாகும்.
  6. மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக்கட்ட அவைகள் எளிதில் பழுத்துடையும்
  7. மஞ்சளைக் சுட்டு முகர நீரேற்றம் நீங்கும். மஞ்சளுடன் ஆடாதோடா பாலை இலை சேர்த்து பசுவின் நீரை விட்டரைத்துப் பூச சொறி, சிரங்கு, நமைப்படைகள் ஒழியும். மஞ்சள் நீரை அருந்த காமாலை போகும். மஞ்சளை அரைத்து நீரிற்கலக்கி, வெண்சீலைக்குச் சாயமேற்றி அவ்வாடையை உடுப்பதால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், ஜுரம், மலக்கட்டு இவை நிங்கும்.
  8. மஞ்சளில் உடலின் நிறமியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. பல சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள் கிழங்குளின் சாறு ஓட்டயிர்க் கொல்லியாகப் பயன்படும். பெரியம்மை நோய்க்கு மஞ்சளை, நல்லெண்ணெய், வேப்பிலையுடன் அரைத்து தடவ வடுக்களை அகற்றி, கிருமிகளை அழித்து, உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்.
  9. பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களைத் தடுப்பதோடு அவற்றுக்கு சிகிச்சையாகவும் மஞ்சளின் நஞ்சடைத் தன்மைகள் பயன்படுகின்றன. பெண்களின் உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தகிறது.
  10. கதிர்வீச்சிலிருந்து தோலினைப் பாதுகாக்கும். சருமத்திலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கஸ்தூரி மஞ்சள் இலையின் சாறை தலைக்குத் தடவ, தலை சம்பந்தமான நோய்கள் தீரும்.
    கஸ்தூரி மஞ்சளுடன் கருந்துளசியைச் சேர்த்து அரைத்து உடலெங்கும் தேய்த்து வைத்திருந்து இளஞ்சூட்டில் குளித்து வந்தால் உடல் கவர்ச்சியுடனும், பளபளப்பாகவும் விளங்கும்.
  11. கஸ்தூரி உடலின் தாதுக்களுக்குத் தேவையான பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து, உடலில் ஏற்படும் பல்வேறுபட்ட நோய்களுக்கும், வலிப்பு, இழுப்பு, உடற்சோர்வு, இளைப்பு, பலவீனம் ஆகியவற்றை நீக்கி முகத்தில் பொலிவையும், அழகையும், முகத்திற்கு ஒருவித ஒளியையும் தரும்.
  12. சற்று பெரிய அளவில் காணப்படும் கஸ்தூரி வாசனைப்யூட்டக்கூடிய தயாரிப்புகளுக்கு பிரதானப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடிகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் மட்டுமல்லாது கண்பார்வையும் ஆரோக்கியமாக இருக்கும்.















குணமாகும் நோய்கள் :தோல் வியாதிகள், புண்கள், கிருமி, வீக்கம்போக்கும் முகப்பொலிவு அளிக்கும்

Post Comment

1 comments:

பெயரில்லா சொன்னது…

kasthuri manjal padathai poterukkalam

கருத்துரையிடுக