செவ்வாய், மார்ச் 30, 2010

விஷ்ணு கிராந்தி -விஷ்ணு கிரந்தி • சங்க  புஸ்பியின் வேறு வகையாக இது கருதப்படுகிறது 
 • ஆயுர்வேதத்திலும் இந்த மூலிகை விஷ்ணு கிரந்தை என்றே அழைக்கபடுகறது.
 • வந்த்யா எனப்படும் குழந்தையின்மைக்கான சிகிச்சையில் விஷ்ணு க்ராந்தை மிக பெரிய அளவில் உதவுகிறது  
சித்த மருத்துவத்தில் 
 • செய்கை -வியர்வை பெருக்கி,உரமாக்கி,உடல் தேற்றி ,வெப்பகற்றி,புழுகொல்லி,தாபமஅகற்றி ,கோழை அகற்றி .
 • விஷ்ணு கிரந்திக்கு கொடிய சுரத்தால் பிறந்த பயம் ,உட்சூடு ,கோழை,இருமல் ,வாதத்தால் பிறந்த பிணிகள் நீங்கும் 
செய்யமா லின்கிரந்தி தீராத வல்லரசுத் 
தைய மறுக்கும் அனல்தணிக்கும்-வெய்ய கப 
காச இருமலியுங் கட்டறுக்கும் வாதத்தால் 
ஊசலா டும்பிணிபோக்கும் (அகத்தியர் குணபாடம்)
 • குடிநீரிட்டு விஷ்ணு கிரந்தியை சாப்பிட மேல் கண்ட நோய்கள் போகும் 
மாலாகச் சூர்ண மழையுட னுண்டிடச்
சூலக மாதர்க்குச் சூட்சிய தாக்குமே (தேரையர் ..)
 • விஷ்ணு கிரந்தியை பொடி செய்து இளம் வெந்நீருடன் சேர்த்து குடித்துவர பிள்ளை பேறு உண்டாகும் 
 • இதனை சீரகத்துடன் சேர்த்து அரைத்து பாலில் கலக்கி உட்கொள்ள நரம்பு தளர்ச்சி மாறும்,சுரம் நீங்கும் 
 • இதனை துளசியுடன் குடிநீராக்கி குடிக்க செரியாமை ,கழிச்சல் மாறும் 
 • இதனை ஓரிதழ் தாமரையுடன் சேர்த்து சாப்பிட குழந்தை பேறு -மலடு நீங்கி பிறக்கும் 
 • இதனை கண்டங்கத்தரி வேருடன் சாப்பிட கரு முட்டை வளர்ச்சி உண்டாகும் 
 • இதனை வீழி நெய்யுடன் மாத விலக்கின் போது மூன்று நாட்கள் சாப்பிட கருக்குழாய் அடைப்பு நீங்கும் குணமாகும் நோய்கள்- கிருமி, புண்கள், உடல் இளைப்பு நீக்கும், தலைமுடிக்கு நல்லது

http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-4-high-resolution-herbal-pictures.html

Post Comment

4 comments:

கருத்துரையிடுக