வெள்ளி, மார்ச் 19, 2010

நிலப்பனை -நிலப்பனங்கிழங்கு


நிலப்பனை .





ஆயுர்வேதத்தில் இதனை -கிருஷ்ண முசலி (கருப்பு முசலி ),தாள மூளி என்போம் 


ஆச்சர்ய சரகர் இந்த மூலிகையை நுரையீரல் நோய்களுக்கான் சிகிச்சையில் கூறியுள்ளார் (சரக சம்ஹிதை -சி -18/74)
ஆச்சர்ய சுஸ்ருதர் இந்த மூலிகை யை சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையில்(சுஸ் சம்-சி 7/18) &நுரையீரல் நோய்களுக்கான சிகிச்சையிலும் கூறியுள்ளார்(சுஸ்உத்தர  சி-51/79 )
ஆச்சர்ய வாகபட்டர் முதலில் தோல் நிற மாற்றத்திற்கான வெளி பிரயோகத்தில் கூறியுள்ளார்( அஷ்டாங்க ஹ்ருதயம் -உத்தர ஸ்தானம்32/21 )
ஆச்சர்ய சாரங்கதரர் தான் முசலியை ஆண்மை பெருக்கும் மூலிகையில் (வ்ருஷ்ய கன) கூறியுள்ளார் (சாரங்கதர சம்ஹிதை ,மா -கா 4)

பயன்பாடுகளில் -ஆண்மை குறைவு ,மூலம் ,இருமல் ,கிராணி கழிச்சல் தீரும் .
  1. மூத்ரகாதம் என்னும் மூத்திர அடைப்பு மூத்திர தடை நோய்களில் -நிலப்பனை கசாயம் மிகவும் சிறந்தது (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி 11-)
  2. வாஜிகரணம் (ஆண்மை அதிகபடுத்தும் சிகிச்சையில் )-இந்த மூலிகையை நெய்யுடன் சாப்பிட ஆண்மை சிறக்கும் (வைத்ய வல்லபம் )
  3. ஆராய்ச்சிகளில் -விந்தணுவின் அமைப்பியல் ,நகரும் தன்மையை கூட்டுவதாக சொல்கிறது .. 

செய்கை -உரமாக்கி ,சிறுநீர் பெருக்கி ,துவர்ப்பி ,அகட்டுவாயகற்றி ,வறட்சியகற்றி .
குணம் : இதனால் நீரழிவு ,வெப்பம்,வெண்புள்ளிகள் ,கரும்புள்ளிகள் ,விலா குத்தல், ஒழுக்கு வெள்ளை கண் நோய்கள் போகும் ,ஆண்மையுண்டாகும்



“மேக அனல் தணியும் வெண்குட்டம் தான் விலகும்
போக மிகவுறும் பொற்கொடியே _ போகாத
சூலை மேகங்களொடு துன்னு கரும்புள்ளியும் போம்
சால நிலப்பனைக்குத்தான்.”

  1. இதன் கிழங்கின் மேல் தோலையும்,உள் நரம்பையும் போக்கி உலர்த்தி பொடித்து எட்டு கிராம் பொடியுடன் சர்க்கரை கூட்டிப் பாலுடன் கலந்த காலை மாலை உட்கொள்ள மேற்கூறிய நோய்கள் போகும் .
  2. நிலபனங் கிழங்கு ,சீந்தில் சர்க்கரை ,பூனைகாலி,நெருஞ்சில் இலவம்பிசின் ,நெல்லிவற்றல் ,சர்க்கரை ஓர் எடையாய் எடுத்து கலந்து,வேளைக்கு கால் பலம் வீதம் பாலுடன் உட்கொள்ள ஆண்மை பெருகும் 
  3. நிலநனஞ்சாறு,தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு,நெய் ஓர் அளவாகக் கூட்டி ,எரித்து வடித்து காலை மாலை பத்து கிராம் கொடுக்க எலும்புருக்கி நோய்,கணச்சூடு முதலிய நோய்கள் தீரும்  



















குணமாகும் நோய்கள் :தோல் வியாதிகள், நீர்சுருக்கு, மூலம், இளைப்பு, காமாலையில் பயன் தரும்.

இன்னுமொரு எனது லிங்க்  

http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/nilapanag-kilangu-ayurvedic-herbs.html

Post Comment

0 comments:

கருத்துரையிடுக