- ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வோம் .
- குணம் -கப வாத நோய்களை தீர்க்கும் ,விஷத்தை போக்கும் ,முடிக்கு நல்லது ,வயிற்று பூச்சிகளை கொல்லும்
- நோய்களில்- உதரம் என்னும் வயிறு வீக்கம் ,வாதரக்தம் ,ஆமவாதம் ,குன்மம் ,ஜ்வரம்,மண்ணீரல் நோய்களை நீக்கும் .
- சோஷம் என்னும் உடல் எடை குறைதலில் -அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருகவேண்டும் (கத நிக்ர ஹம்)
- பாம்பு கடியில் -அவுரி வேரை கழனி தண்ணீரில் இடித்து சாப்பிட எந்த விதமான பாம்பு கடியில் ஏற்படும் விஷமும் நீங்கி விடும் (ராஜ நிகண்டு )
- பல்லில் உள்ள கிருமிக்கு -நீலியின் வேரை கடித்து துப்ப தீரும் (கத நிக்ர ஹம்)
- கடைகளில் கிடைக்ககூடிய மருந்துகளில் -நீலி பிருங்காதி தைலம் ,நீலின்யாதி கிருதம் ,நீலிகாதி தைலம் ..
- இந்த அவரி சமூல சாறு -நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படும்
- தீப்புண்,தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன் படும்
- நாய்கடி விஷத்தால் ஏற்படும் -ஹைடிரோ போபியா க்கு நன்றாக வேலை செய்யும்
- சிறந்த சாயமேற்றியாக பயன்படுகிறது
- வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும்
அவுரி இலைகள் சாயம் மட்டும் தருவதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றது .
உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி ----- என்கிறது குண பாடம்
மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது.
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
இதன் குணங்கள் சோபாநாசினி , விஷநாசகாரி மலகாரி ,உற்ச்சாககாரி
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

- இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும் .தினம் ஒரு வேலையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்
- இதன் இல்லையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும் .இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும் .இது ஒரு பாதுகாப்பான வைத்தியம்
- அவுரிஇலை சாறு பல விஷங்களை நீக்கும் .சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம் அவுரி வேரைநன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேலை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதயவையின் விஷம் நீங்கும் .
- இதில் நெல்லிக்காய் அளவு என்றுசொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம் சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம். மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வன்றிர்க்கும் ஒவ்வெரு தனி முறை உள்ளது. ஆனால் அவைகள் தெரியாத நிலையில் அந்த மருத்துவ பொருளை நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் மருந்து சுத்தி ஆகும் . அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.
- அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம் .பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை ஆரமிப்பதர்க்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டுவந்த மருந்த்களின் வீரியத்தைக் குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது தான் வழக்கம் .இன்னும் கூட சில சிறந்த ரகசிய முறைகள் ஒவ்வரு வைத்தியரும் வைத்திருப்பார் இப்போதது ஆங்கில முறை மருத்துவத்தில் அத்தகைய கவனிப்பு ஒன்றும் இல்லை.உடலை ஒரு சோதனைக் கூடமாக கருதி வேறு வேறு மருந்துகளை தரும் பழக்கம் தான் உள்ளது . ஆனால் சித்தமருத்துவத்தில் முன்னர் கொடுத்த மருந்துகளை முரித்தபின்பே அடுத்தது கொடுக்க ஆரமிப்பார் உடலை மிகவும் நேசிப்பார் .
.
அவுரி-இண்டிகோ வின் வரலாறு -
பல நூற்றாண்டுகளாக, இந்தியாவிற்கே உரிய நீலச் சாயப்பொருளான இண்டிகோவைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், 1750களில் இங்கிலாந்து ஆலைகளில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவுகளில் தேவைப்பட்டது. அதுவரையில் இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்ட பின், இந்தியாவில் விளைவிப்பது அவசியமானது. வங்காள விவசாயிகள்தான் மீண்டும் கையில் சிக்கினர்.5
உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர்செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, அபினிக் கதையைப் போலவே விவசாயிகளின்மேல் பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டனர். 19ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்ற அளவுக்கு இந்தப் பயிர் பரவலாக்கப்பட்டது!
வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி. லதூர், 1848இல் இவ்வாறு கூறினார்: "இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது.... நீதிபதி என்ற தகுதியில் என்னிடம் அனுப்பப்படும் பல விவசாயிகளின் உடல்களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன; தோட்ட முதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... இவ்வாறு இண்டிகோ வர்த்தகத்தை மேற்கொள்வது, ரத்தம் சிந்தவைக்கும் கொடூரமான முறை என்றே கருதுகிறேன்."6
நிலைமை மிகவும் மோசமானதும் 1868ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. அதே சமயம், 1880இல், இரசாயன நீலச்சாயம் உற்பத்திசெய்யும் முறை கண்டறியப்பட்ட பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது; நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895-96இல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06இல் 5 லட்சம் ஏக்கராகவும் பின்னர் மேலும் சுருங்கியது.7 பல இண்டிகோ தோட்டத்தொழிலாளிகள் வறுமையில் வாடி மடிந்தனர்.

அவுரி -சாறு துணிகளுக்கு இயற்க்கை சாயமாகிறது
சித்த மருத்துவத்தில் -
எல்லா விடங்களுக்கும் ஏற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுர மூர்ச்சை பொங்கு வெட்டை-நில்லாப்
பவுரி தருங் குன்ம முதல் பண்ண யோழியும்
அவுரி தரும் வேருக் கறி
எல்லா விஷங்களையும் போக்கும்
மஞ்சள் காமாலை சரியாகும்
மாந்தம் கீல்வாதம் போகும்
உடல் பொன்னிறமாகும்
குணமாகும் நோய்கள் -வலிப்பு, நரம்பு நோய்கள், புண்கள், மூலம்,காமாலை, நீர்சுருக்கு நீக்கும்
0 comments:
கருத்துரையிடுக