ஜாதி -மல்லி ..
- ஆசார்யர் சரகர் இதனை -தோல் நோய்கள் நீக்கும் வர்க்கத்தில் (குஷ்டக்ன கனத்தில்) சேர்த்துள்ளார் ..
- செய்கைகளில் -மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும் ,புண்களை ஆற்றும் ,புண்களை சுத்தம் செய்யும்
- நோய்களில் -புண் ,கண் நோய்களை குணமாக்கும் ,தலை சார்ந்த நோய்களை போக்கும் ,காதில் சீழ் வடிதலை நீக்கும் ,வாய்ப்புண்ணை சரிசெய்யும் -
- காதில் நீர் -சீழ் வடிதலை நிறுத்த -இந்த மூலிகையின் இலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை காதில் விட சரியாகும் -காதில் ஓட்டை இல்ல்லாமளிருந்தால் நல்லது (சக்ர தத்த )
- வாய்புண்ணை சரிசெய்ய -இந்த மூலிகையின் இலையை அரைத்து தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க மாறும் .
- கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -ஜாத்யாதி தைலம் (புண் ஆற்றும் -கால் வெடிப்பு சரியாகும் ),ஜாத்யாதி கிருதம்
- அதிகமான தாய்பாலை குறைக்க -மல்லியை அரைத்து மார்பில் பூச குணமுண்டாகும்.தாய்பாலை வற்ற செய்யும்
சித்த மருத்துவத்தில்
செய்கை -துவர்ப்பி,புழுகொல்லி,வீக்கமுறுக்கி,மூத்திரவர்தனி ,ருது உண்டாக்கி ..
குணம் -உடல் வெப்பம் நீங்கும் ,கண்படலம் நீங்கும் ,மனகலக்கதை போக்கும் ,கலவி இன்பத்தை பெருக்கும்
போகமிக உண்டாகும் பொங்குக பங் கட்பிரமை
ஆகஅவனால் சூனியமும் அண்டுமோ -பாகனை யாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டேன்றேவரும்
பன்னுமல்லி கைப்பூவர் பார் (அகத்தியர் குணபாடம்)
பூவினால் உடல் உறவில் மேன்மை உண்டாகும்
குணமாகும் நோய்கள் -கிருமி,ஆண்மை குறைவு ,மூலநோய்க்கும் நல்லது
0 comments:
கருத்துரையிடுக