- சம்ஸ்க்ருதத்தில் இதனை -பிந்துக அல்லது பாதலி என்று சொல்வோம்
- செய்கை-தாது வெப்பகற்றி,பசிதூண்டி ,உரமாக்கி ,குடல் -உள்ளழல் ஆற்றி ,பித்த நீர் பெருக்கி ,துவர்ப்பி
- இது மேக சூடு ,சுர ரோகம் ,நீர்வேட்கை ஆகியவைகளை போக்கும் ,இளைப்பகற்றும்
வெட்சிப்பூ மேக வழல் விட்டோடும் வாசனையாம்
அடசி வழி யாயுயிர் கொள்ளா ரணங்கே -எச்சுஞ்
சுரமுடனே தாகந் தொலைக்கும் உலகில்
விரைவாய் இளைப்பகற்றும் விள (அகத்தியர் குண பாடம் )
பூவை -வெள்ளாட்டுபா லி ல் கொடுக்க வெள்ளை தீரும்
பூவை குடிநீராக்கி குடிக்க சுரம் தீரும்
பூவை நெய்விட்டு வதக்கி -சீரகம் ,சிறுநாகபூவுடன் உண்ண-நீர் வேட்கை போகும்
வேரை-திப்பிலயுடன் கொடுக்க -கழிச்சல் நிற்கும்
வேரை புண்ணில் போட புண் சீக்கிரம் ஆறும்
குணமாகும் நோய்கள் -புண்களை ஆற்றும் ,கண்களுக்கு நல்லது ,பசியினமைக்கும் நல்லது
0 comments:
கருத்துரையிடுக