செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati


அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati
 (refபைஷஜ்யரத்னாவளி - சோதோரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்சநாபி                 10 கிராம்
2.            சுத்தி செய்த ஊமத்தன் விதை ஷோதித தத்தூரபீஜ     10          

செய்முறை:     

 இவற்றைத் தனித்தனியே சிறிது ஊமத்தன் இலைச் சாற்றில் ஊற வைத்து அறைத்து நுண்ணிய விழுதாக்கி ஊமத்தன் இலைச்சாறு கொண்டே கல்வத்தில் நன்கு அறைத்த சுத்தி செய்த இலிங்கம் (ஷோஷிதஹிங்குள) 10 கிராம் உடன் சேர்த்து எல்லாவற்றையும் ஊமத்தன் இலைச்சாறு (தத்தூர பத்ர ஸ்வரஸ) கொண்டே ஒன்று பட அரைத்துப் பதத்தில் 25 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பால் அல்லது தேனுடன் தினமும் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 பெருவயிறு (உதர), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்க நோய்கள் (ஸோத ரோக).




தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மேலே கூறிய எல்லா மருந்துகளையும் ஆயுர்வேத சாஸ்திரங்கள் சொன்ன படி சுத்தம் செய்து முக்கியம் ( சுத்தம் -சோதன முறைகள் பற்றி பின் தனி கட்டுரைகள் எழுதுகிறேன் )
  2. லிவர் சிர்ரோசிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் மற்றும் அதனால் வரும் அசைட்டீஸ் என்னும் வயிறு வீக்கத்திற்கும் இந்த மருந்தை தக்க கவனத்துடன் பயன் படுத்த நல்ல பலன் கிடைக்கும்
  3. பூனை மீசை ,விஷ நாராயணி போன்ற கிட்னி பெயிலியருக்கு பயன்படும் மருந்துகளின் சூரணங்கள் உடன் மிக மிக குறைந்த அளவு இந்த மருந்தை பயன்படுத்தி வீக்கத்தை குறைக்கலாம் ..கிட்னி பெயியரிலும் மிக மிக கவனத்துடன் கொடுக்கலாம் ..
  4. வீக்கங்களில் நல்ல பலன் அளிக்கும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக