அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham
(ref-பைஷஜ்யரத்னாவளி - சூலாதிகார)
தேவையான
மருந்துகள்:
1. நெல்லிக்காய்ச் சூரணம் – ஆமலகீ (தாத்ரீ சூர்ண) 8 பங்கு
2. அதிமதுரச் சூரணம் – யஷ்டீ மதுரச் சூர்ண 2 “
3. அயபற்பம் – லோஹபஸ்ம 4 “
செய்முறை:
இவைகளைப் போதுமான அளவு சீந்தில்கொடி கஷாயம்
(குடூசிகஷாய) கொண்டு ஏழு நாட்கள் ஏழு முறை பாவனை செய்து ரவியில் (சூரிய ஒளியில்)
வைத்து உலர்த்திப் பொடித்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும்
அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு
மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
சூலைநோய் (சூலரோக), பரிணாம சூலை எனப்படும் குடற்புண்கள், இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல்
(அம்லபித்த), பசிக்குறைவு
(அக்னிமாந்த்ய), மார்பு எரிச்சல்
(ஹ்ருத்தாஹ), மலச்சிக்கல்
(மலபந்த).
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
- வயிறு புண் ,வயிற்று வலி நோயாளிக்கு பொதுவாக எந்த இரும்பு சத்து மாத்திரையும் கொடுக்க இயலாது ...அனால் இந்த மருந்தை வயிறு புண் ஆறவும் இரத்த சோகை தீரவும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ?
- பொதுவாக இரத்த சோகைக்கு பயன்படும் மருந்து இரத்த சோகை உண்டாக்கும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று ...ஆனால் ஆயுர்வேத மருந்துகளில் அப்படி இல்லை என்பதற்கு இந்த மருந்தை உதாரணம் தரலாம் ..இரத்த சோகை நீக்கும் மருந்து மலமிளக்கியாகவும் பயன்படும் ..
0 comments:
கருத்துரையிடுக