ஞாயிறு, அக்டோபர் 06, 2013

தைராய்ட் நோயை குணப்படுத்தும் –சீதாப்பழ இலை குடிநீர் ..

தைராய்ட் நோயை குணப்படுத்தும் –சீதாப்பழ இலை குடிநீர் ..

சித்த மருத்துவத்தை உலகறிய செய்யும் ..சித்த மருத்துவ துளிர் என்ற அமைப்பு ஆற்றும் தொண்டு அளப்பரியது ...இந்த அமைப்பில் உள்ள மருத்துவ குழு பல வருட ஆராய்ச்சிக்கு பின் தைராய்ட் நோயில் அதிக தைராய்ட் சுரப்பான ஹைப்பர் தைராரய்டிசம் நோய இந்த சீதாபழ இலை குடிநீர் நன்றாக வேலை செய்து ..முற்றிலுமாக வேலை செய்கிறது என்பது அதிசய உண்மை ...இந்த விஷயத்தை ஆணித்தரமாக சொல்லும் அகதீஸ்வரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் ஸ்ரீராம் அவர்களுக்கும் ,அறிஞர் அண்ணா மருத்துவமனையில் வர்ம மருத்துவ பிரிவில் டாக்டர் சித்திக் அலி அவர்களுக்கும் ,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்களுக்கும் நன்றி தனை சொல்ல கடமை பட்டுள்ளேன் ..


தொடர்ந்து பத்து முதல் பதினைந்து சீதப்பழ இலையை நான்கு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு கிளாசாக வற்ற வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் பருக நல்ல பலன் கிடைக்கும் ...இந்த குடிநீர் நாற்பத்து எட்டு நாட்கள் பருகுதலே குணமளிக்கும் ..


குறிப்பு –முறைப்படி BSMS,BAMS  மருத்துவ படிப்பை படித்த மருத்துவரின் ஆலோசனை படி –இந்த குடிநீரை பயன் படுத்துவது நல்லது ..தேவை எனில் அவர்கள் மற்ற துணை மருந்துகளையும் பரிந்துரைப்பார் ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக