ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

காரணமில்லாத நாள்பட்ட காய்ச்சலை ஓட ஓட விரட்டும் -மஹாஜ்வராங்குச ரஸம் (Maha Jwarankusa Ras)

காரணமில்லாத நாள்பட்ட காய்ச்சலை ஓட ஓட விரட்டும் -மஹாஜ்வராங்குச ரஸம் (Maha Jwarankusa Ras)
                                                                                                
(ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்3.            சுத்தி செய்த நாபி ஷோதித நாபி      10 கிராம்
4.            சுத்தி செய்த ஊமத்தன் விதை ஷோதித
தத்தூரபீஜ  30           “

                இவைகளைத் தனித்தனியே சிறிது எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) அல்லது இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்துப் பின்

5.            திரிகடு சூர்ணம் த்ரிகடு சூர்ண 120 கிராம் கலந்து 

எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்டுள்ள இரு வகைச் சாறுகள் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்துப் பதத்தில் 50 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகள் இஞ்சிச்சாறு அல்லது தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 
நாட்பட்ட சுரங்கள் (புராண ஜ்வர), விட்டுவிட்டு வரும் சுரங்கள், டைபாய்டு போன்ற விஷசுரங்கள், போன்ற பலவித காய்ச்சல்கள், ஜன்னி ,பொதுவாக இதனை தசமூலாரிஷ்டம், கஸ்தூரியுடன் கலந்து கொடுப்பது வழக்கம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

  1. பெயர் தெரியாத நாள்பட்ட காய்ச்சலை இந்த மருந்து அற்புதமாக நீக்கும் 
  2. இதனுடன் லிங்க சிந்தூரம் அம்ருதாரிஷ்டம் உடன் -காய்ச்சல் விதிகளுடன் இந்த மருந்தை தரும் போது எல்லா மர்ம காய்ச்சலும் மாயமாகிடும் 
  3. சரியான்  அளவில் நோயாளிக்கு கொடுத்தால் ஆண்டிபயாடிக் போல வேலை வேலை செய்யும் 
  4. டைபாய்ட் காய்ச்சலுக்கு இந்த மருந்து மிக நன்றாக வேலை செய்யும் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக