வியாழன், ஜனவரி 14, 2010

மசூரிக ரோக ( அம்மை நோய் ) சிகிச்சைகள்

மசூரிகை ரோக சிகிச்சை


வாத மசூரிகா ரோகத்திற்கு கியாழம் :- பேய்ப்புடல், நன்னாரி, கோரைக்கிழங்கு, வட்டத்திருப்பி, கடுகுரோகணி, கருங்காலி, வேப்பன், சிற்றாமுட்டி, நெல்லிவற்றல், ஏலம் இவைகள் சமஎடை யாக கியாழம்வைத்து குடித்தால் வாத மசூரிகா ரோகம் நிவர்த்தி யாகும்.

தசமூலங்கள், சித்தரத்தை, கீழாநெல்லி, வெட்டிவேர், பூனை காஞ்சொரி, சீந்தில்கொடி, கொத்தமல்லி, கோரைக்கிழங்கு இவைகளை கியாழம்வைத்து குடித்தால் வாத மசூரிகை நிவர்த்தியாகும்.

பித்த மசூரிகாரோகத்திற்கு கியாழம் :- வேப்பன், பற்பாடகம், வட்டத்திருப்பி, பேய்ப்புடல், சந்தனம், ரத்தசந்தனம், ஆடா தோடை, பூனைகாஞ்சொரி, வெட்டிவேர், கீழாநெல்லி, கடுகுரோகணி, இவைகள் சமஎடையாக கியாழம்வைத்து இத்துடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பித்தமசூரிகை, ரக்தாதிமசூரிகை இவைகள் நிவர்த்தியாகும்.

திரா¨க்ஷ, பூசினி, கர்ஜீரம், பேய்ப்புடல், வேப்பன், ஆடாதோடை, பொரி, நெல்லிவற்றல், பூனைகாஞ்சொரி, இவைகளை சமஎடையாக கியாழம்வைத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பித்தமசூரிகை, ரத்தமசூரிகை இவைகள் நிவர்த்தியாகும்.

கபமசூரிகா ரோகத்திற்கு கியாழம் :- கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, ஈரிலை தாமரை, மூன்றிலைத்தாமரை, நெரிஞ்சில், ஆடா தோடை இவைகளை கியாழம்வைத்து குடித்தால் கபமசூரிகா ரோகம் நிவர்த்தியாகும்.

பூனைகாஞ்சொரி, பேய்ப்புடல், பற்பாடகம், கடுகுரோகணிஇவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டால் கபமசூரிகாரோகம் நிவர்த்தியாகும்.

வாதபித்த மசூரிகா ரோகத்திற்கு குடூச்யாதி கியாழம்:-
சீந்தில்கொடி, பூனைகாஞ்சொரி, பற்பாடகம், கடுகுரோகணி இவைகளை கியாழம்வைத்து குடித்தால், வாதபித்த மசூரிகா ரோகம் நீங்கும்.

வாதசிலேஷ்மத்திற்கு நாகராதி கியாழம் :- சுக்கு, கோரைக்கிழங்கு, சீந்தில்கொடி, கொத்தமல்லி, கண்டுபாரங்கி, ஆடாதோடை இவைகளை கியாழம்வைத்து குடித்தால் வாதசிலேஷ்ம மசூரிகாரோகம் நிவர்த்தியாகும்.

சகலமசூரிகா ரோகத்திற்கும் கியாழம் :- மஞ்சள், மரமஞ்சள், வெட்டிவேர், காட்டுவாழை, கோரைக்கிழங்கு, லோத்திரம், சந்தனம், சிறுநாகப்பூ, பேய்ப்புடல், புஷ்க்கரமூலம், குறுவேர் இவைகளை சூரணித்து கலந்து சாப்பிட்டால் மசூரி, விஸ்போடகம், விசர்ப்பி,புழுவெட்டு, சுரம், இவைகள் நிவர்த்தியாகும்.

வேப்பன், பற்பாடகம், வட்டத்திருப்பி, பேய்ப்புடல், கடுகுரோகணி, ஆடாதோடை, பூனைகாஞ்சொரி, கீழாநெல்லி, வெட்டிவேர், சந்தனம், ரத்தசந்தனம் இவைகளை கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் சகலமசூரிகா ரோகங்கள், சுரம், விசர்ப்பம் இவைகள் நிவர்த்தியாகும்.

பேய்ப்புடல், சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு, ஆடாதோடை, பூனைகாஞ்சொரி, சீமைநிலவேம்பு, வேப்பன், கடுகுரோகணி, பற்பாடகம், இவைகளை கியாழம்வைத்து குடித்தால் மசூரிகா ரோகம் யாவும் நிவர்த்தியாகும்.

அசீரணம் நீங்கி பக்குவாசயத்திற்கு வரும். இந்தகியாழம் தேக அனல், சுரம், விசர்ப்பம், விரணம், பித்தாதிக்கம் இவைகளை சமனிக்கச் செய்யும்.

மசூரிகா சிகிச்சை:- மசூரிகா ரோகத்திற்கு குஷ்டரோகத்திற்கு சொல்லிய லேபனாதிகளை செய்தால் நன்மையாயிருக்கும். பித்தசிலேத்தும விசர்ப்ப ரோகத்திற்கு சொல்லிய கிரியைகளும் இதற்கு ஹிதகரமாக யிருக்கும்.

சகல மசூரிகா ரோகத்திலும் முதலில் வாந்திக்கு கொடுக்கவேண்டியது. பிறகு பேய்ப்புடல், வேப்பன், ஆடாதோடை, இவைகளை கியாழமாவது அல்லது வசம்பு, வெட்பாலை, அதிமதுரம் இவைகளை கற்கஞ்செய்து அதில் தேன் கலந்தாவது அல்லது வல்லாரைச் சாறு இவைகளுடன் தேன் கலந்தாவது சாப்பிட்டால் வாந்தியாகும்.

பிருஹதீமசூரி ரோம ரசம் :- மசூரிகா ரோகத்திற்கு காட்டு முட்டை பஸ்பத்தினால் தேகமுழுதும் தடவவேண்டியது. வேப்பன் கொத்துகளினால் ஈ எரும்பு முதலியவைகளை ஓட்டவேண்டியது. குளிர்ந்த ஜலத்தை குடிக்கக் கொடுக்கவேண்டியது.

இரக்ஷ பிரகாரம் :- மசூரிகா ரோகமுடையவனை ரம்மியமாயும தனியாயும் சுத்தியாயுமிருக்கும் இடத்தி வைக்கவேண்டியது. பரிசுத்தமில்லாதவர்கள் அருகில் போகக்கூடாது.

குடூச்சியாதி சூரணம் :- சீந்தில்கொடி, அதிமதுரம், திரா¨க்ஷ பெருங்கடம்பை, மாதுளம் இவைகளை சமஎடையாய்ச் சூரணித்து வெல்லத்தைக் கலந்து அம்மை வந்து ஏழுநாள் ஆனபிறகு பாக காலத்தை அறிந்து சாப்பிட்டால் மசூரிகாரோகம் சமனமாகும்.

சிஞ்சாபீஜ சூரணம் :- புளியாங்கொட்டை, மஞ்சள் இவைகளைச் சூரணித்து குளிர்ந்த ஜலத்தில் கலந்து சாப்பிட்டால் சீதள சம்பந்தமான விகாரங்கள் நிவர்த்தியாகும்.

நியாகுரோதாதி லேபனம் :- ஆல், அத்தி, இத்தி, மஞ்சிஷ்டி, காட்டிவாழை இவைகளின் பட்டைகளை அரைத்து நெய்யில் கலந்து தடவினால் வாதமசூரிகாரோகம் நிவர்த்தியாகும்.

காதிராதி லேபனம் :- கருங்காலி, வேப்பிலை, காட்டுவாழை, அத்தி இவைகளின் பட்டைகளை அரைத்து லேபனம் செய்தால் கப மசூரிகாரோகம் நிவர்த்தியாகும்.

ம்துகாதி லேபனம் :- அதிமதுரம், திரிபலை, பெருங்கடம்பை, மரமஞ்சள், இலவங்கப்பட்டை, கரும் அல்லி, வெட்டிவேர், லோத்திரம், மஞ்சிஷ்டி இவைகளை அரைத்து லேபனம் செய்தாலும் அல்லது
இவைகளை கியாழம் வைத்துக் கழுவினாலும் மசூரிகைக்கு ஹிதகரமாயிருக்கும்.

வாசாசுவ ரசம் :- ஆடாதோடை இலை சுரசத்தில் தேன்கலந்து குடித்தால் கபத்தினாலுண்டாகி கடினமாயிருக்கும் மசூரிகாரோகம் நிவர்த்தியாகும்.

மோசாரசாதி பானம் :- இலவம்பட்டை இரசம், சந்தனம்இவைகளையாவது ஆடாதோடை இலைரசம் அல்லது அதிமதுரமாவது சாப்பிட்டால் மசூரிகா அம்மைவிகாரம் நிவர்த்தியாகும்.

வேணுபத்திர தூபம் :- மூங்கில் இலை, துளசி, அரக்கு, பருத்தி விரை, சிறுகடலை, யவதானியம், அதிவிடயம், நெய், வசம்பு, வல்லாரை, சவ்வர்ச்சலவணம் இவைகளை தூபம் போட்டால் மசூரிகாரோகம் நிவர்த்தியாகும்.

மசூரிகாரோக பத்தியங்கள் :- பழைய சிகப்புநெல், சம்பாஅரிசி, கடலை, பச்சைபயறு, சிறுகடலை, யவதானியம், புறா, குருவி, வாங்கோழி, அதிமதுரம், வெள்ளரிக்காய், வாழைக்காய், முருங்கக்காய், பேய்ப்புடல், திரா¨க்ஷ, மாதுளம்பழம், புஷ்டிகரமான அன்ன பானங்கள், இலந்தை, ஐந்துமாமிசம், அரிசிசாதம், காய்கரிகள்,
நெய், புகை, கோமயபஸ்மலேபனம், விரணத்தை உலர்த்தும் சிகிச்சைகள், அம்மை அதிகமாய்ப் பூரித்து இருந்தாலும் மேற்கூறியவைகளைப் பத்தியமிட வேண்டியது.

அபத்தியங்கள் :- காற்று, வியர்வை, உஷ்ணம், தயிலம், குருத்துவமான அன்னம், கோபம், வெய்யில், காரம், புளிப்பு, மலமூத்திர நிரோதனம் இவைகளை மசூரிகா ரோகி விடவேண்டியது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக