பிரமேகம்
எக்காலமும் மாதரின் புணர்ச்சி, மோகத்துடன் பட்டினியாயிருத்தல், தம்பனச்சூடு, காரம், உப்பு, துவர்ப்பு இவைகளை அதிகமாகப் புசித்தல், மனக்கிலேசம் என்னும் இச் செய்கைகளினால் பிரமேகம் பிறந்துமுதல்முதல் முதுகந்தண்டெலும்புகளை வரிசையாகபபற்றி அதன்பின் நாபியைச் சுற்றிக்கொண்டு குய்யஸ்தானமாகிய
மூலாதாரத்தைப்பற்றி நரம்பையும் எலும்பையும் சூழ்ந்து சோணி தத்தில் கலந்து அடிவயிற்றில் இசிவை உண்டாக்கி வேதனையைக்கொடுக்கும்.
இது 20-வகைப்படும்.
1. வாதப் பிரமேகம் :- இது கோமூத்திரம்போல் நீரிறங்கல், கோசத்தின் அடியில் வலித்தல், வெளுத்து கட்டியாக சீழ்வடிதல், பீசத்தில் கனத்தலுடன் நோய், அடிவயிற்றின் பக்கத்தில் பரபரத்த வேதனை, கனகனப்பு, வயிற்றில் இசிவு, சரீரவாட்டம் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.
2. பித்த பிரமேகம் :- சரீரவாட்டம், தயக்கம், சகல கீல்களிலும் கால்களிலும்நோய், தேகத்தில் கருமைநிறம், எரிச்சல், குதத்திலும் குய்யத்திலுங் கடுப்பு, மஞ்சள் நிறமான சீழ்வடிதல், அருசி,
கைகால் ஓய்ச்சல், கோசத்தில் விம்மலோடுநோய் என்னும் குணங்களை உண்டாக்கும்.
3. சிலேஷ்ம பிரமேகம் :- கோசத்தில் நோயுடன் கடுப்பு, அடிக்கடி வெண்மையாக நீர் இறங்கல், தேகத்தில் வெளுத்த நிறம், உஷ்ணம், வாய், கண், நகம் இவைகளில் ரத்தம் இன்மை என்னும் குணங்களை உண்டாக்கும்.
4. வாதபித்த பிரமேகம் :- சர்வாங்கத்திலும் நோய், கோசத் தில் சலாக்கை சொருகினதுபோல் இருத்தல், அதிலிருந்து மாவைக்கரைத்ததுப்போல் சுருக்குடன் நீரிறங்கல், வயிற்றில் கட்டி எழும்பு வதுப்போல் இருத்தல், மலமிறுகல் என்னுங் குணங்களை உண்
டாக்கும்.

5. பித்த சிலேஷ்மப் பிரமேகம் :- வாய் கசத்தல், அடிவயிற்றில் பொருமலுடன் இசிவு, கோசம் சுருங்குதல், மஞ்சளாயும் வெண்மையாயும் நீரிறங்கல், கீல்களிலே வலி, பகல் நித்திரை, பசிஇன்மை, சரீரம் ஊதல் என்னுங் குணங்களுண்டாகும்.
6. தொந்தப் பிரமேகம் :- சரீரத்தில் தினவு, புழுக்கள்
ஊருதல்போல் ஊருதல், அடிவயிறு சுரத்தல், கோசத்தில் கருமை நிறம், அடிக்கடி கடுத்து நீரிறங்கல், அதைப் பிடித்துப் பார்க்கில் அடியில் பலநிறமாகத் தோய்ந்திருத்தல் என்னும் குணங்களை
உண்டாக்கும்.
7. கட்டிப் பிரமேகம் :- சரீரம் முழுதும் சகிக்கக்கூடாத
நோயுடன் கட்டிகள் எழும்புதல், கோசத்தில் சொறியுடன் தினவு, பருக்கைப்போல் சீழ் வடிதல், பீசத்தில் நீர் கசிதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
8. சலப் பிரமேகம் :- சர்வாங்க வேதனை, வாய்கசத்தல், வாந்தி, மயக்கம், மூத்திரகசிவிலும் வெளுத்த நீரிறங்குதல். அடி வயிற்றில் வலி, மலத்தில் சீதம் விழுதல் அரையாப்புக்கட்டி என்னும்
குணங்களை உண்டாக்கும்.
9. தந்திப் பிரமேகம் :- அடிவயிற்றில் புண்போல் கோதல், வீணாந்தண்டினது அடியில் விருவிருப்பு விம்மல், நீர் இறங்கியவுடன் தந்திபோல் மேகந்தொங்குதல், வெள்ளைக்காணல் இதனால்
அடிக்கடி சீலை நனைதல் கையால் எறிவு என்னும் குணங்களை உண்டாக்கும்.
10. ரத்த பிரமேகம் :- சரீரம் பஞ்சைப்ப்போல் மெதுவுறல், முயல் ரத்தமென சிவந்த சுருக்குடன் அடிக்கடி வேதனையை தரவதாய் நீர் இறங்குதல், பேய்போல் அலைதல் என்னும் குணங்களை
உண்டாக்கும்.
11. கீழ்ப்பிரமேகம் :- கோசத்தின் துவாரத்தில் கடுப்புடன் சீழைப்போல் வெள்ளைக்காணல், அரையாப்பு பகந்தரம், நாபியில் விரணம் கணுக்காலில் குடைச்சல், அடிக்கடி நீர் இறங்குதல், அதிக குளிரோடு சுரம், மயக்கம், வேதனை சர்வாங்க நோய் என்னும்
குணங்களை உண்டாக்கும்.
12. ஒழுக்கு பிரமேகம் :- இது கோசத்தின் துவார
வழியிலிருந்து சீழ்ரத்தம் சலம் ஆகிய இவைகளைப்போல் மேகம் ஒழுகுதல் சரீரம் முழுதுங் கருமையுள்ள முளைக்கட்டிகள் எழும்பல்,
கனத்த விரணம், குடைச்சல், எரிச்சல் , வெகு நோயோடு புரளல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
13. அரித்திராப்பிரமேகம் :- மஞ்சள் நிறமான வெள்ளை காணல், சூடாக நீர் இறங்க, அந்த இடத்தில் நெருப்பைக்கொளுத்தினது போல் எரிச்சலுடன் கூடிய கடுப்பு, விருவிருப்புஅதிக உஷ்ணம், முகத்தில் மஞ்சள் நிறம், நாவில் கசப்பு, மனது திடுக்கிடல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
14. மூத்திரக் கிரிச்சரப் பிரமேகம் :- குத்தலுடன் மஞ்சள் நிறமான நீர் இறங்கல், துர்ப்பலம், நீர்க்கட்டு, நித்திரைப்பங்கம், அன்னத்துவேஷம், மனோசஞ்சலம், சர்வாங்கத்திலும் உளைச்சல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
15. கரப்பான் பிரமேகம் :- வயிற்றில் உளைச்சல், சீதம், விழல், நீரானது உஷ்ணமாகவும், கடுப்பாகவும் இறங்குதல், ஒரு வேளை அத்துவாரத்தைப் புண்ணாக்கிச் சுண்ணாம்புக்கல்லைக்கரைத்த
சலம்போல் குத்தலுடன் இறங்கல், அழலையாய் வாட்டத்துடன் கைகால் ஓய்தல், உடம்பெல்லாம் நெருங்கிய பெருஞ்சொறி என்னும் குணங்களை உண்டாக்கும்.
16. கல்லுப் பிரமேகம் :- கோசத்தில் கள்ளைப்போல்
மேக நீர் கசிதல், தேகத்தில் கற்றாழை நாற்றம் வீசுதல். வயிற்றில் கல்லைப்போல் மூத்திரஞ்சிக்கிகொண்டு விம்மி விருவிருப்புடன் நாபியைப்பற்றி உப்பிசமாகி பசியை அடக்கி கனத்தல் என்னும்குணங்களை உண்டாக்கும்.
17. தந்துப்பிரமேகம் :- கோசத்தில் நோயுடன் சிலந்தி
நூலைப்போலத் தொங்குதல், வெளுத்த உதிரம் காணல், அக்கோசம் விம்மும் போது வலித்தல்., மடிப்பில் கிருமி சேரல், விலாவில் குத்தல், மூத்திரந் துளி துளியாக விழுதல் என்னும்குணங்களை

18. நீர்ச்சுப்பிரமேகம் :- கள்ளை ஒத்த நீர் இறங்குதல்
வெளுத்த சீழ் வடிதல், கோசம் விம்மும்போது நோய், குத்தல், விருவிருப்பு, நரம்பு சுருங்குதல், அடிவயிற்றிர் சூலை, குளிர் என்னும் குணங்களை உண்டாக்கும்.
19. மலினப்பிரமேகம் :- குய்யஸ்தானம், குதஸ்தானம்
ஆகிய இவ்விடத்து நரம்புகளில் குத்தலுடன் அடிக்கடி நோய், மயக்கம், நாவு கைத்தல், புறங்காலில் திமிர், வெள்ளை காணுதல் வீணாத்தண்டின் முனையில் துர்மாமிசம் சுருண்டிருத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
20. மதுப்பிரமேகம் :- ஆண்குறியில் நோயுடன் தேன் போல் நீரிறங்கல், அந்த நீரில் எறும்பு மொய்த்தல், நாளத்திற்குள் விரணம் உடம்பில் ஒரு வித நாற்றம், அருசி, நாக்கு வரட்சி, மயக்கம் என்னும் குணங்களை உண்டாக்கும்.

0 comments:
கருத்துரையிடுக