வாதரத்த ரோகத்தில் உக்கிரமான குத்தல் உண்டானால் அட்டையை ஒட்டி ரத்தத்தை வெளிபடுத்தவேண்டியது.
நமை, குத்தல் நோயுடன் கலந்திருந்தால் ஊசிகள் அங்கு முதலியவைகளினால் ரத்தத்தை எடுக்கவேண்டியது.
அப்படி ரத்தத்தை வெளியில் எடுக்காமற்போனால் குப்தமாகிய நரம்பு துவாரங்களின் வழியாக இரத்தமானது அங்கங்கு உட்புறமாக திரிந்துகொண்டிருக்கும்.
பித்தாதி வாதரத்தத்தில் விரேசனங்கள் கொடுக்கவேண்டியது.
பாஹிய வாதரத்தத்தில் லேபனம், அப்பியங்கனம், தண்ணீர்வார்த்தல், பிடித்தல் இந்த உபராசங்கள் செய்யவேண்டியது.
கம்பீரவாதத்தில் விரேசனம், நிரூஹவஸ்தி, சிநேகஹபானம் இந்த உபசாரங்களை செய்ய்வேண்டியது.
வசாதிக்கியாழம் :- ஆடாதோடை ஈர்க்கு, சீந்தில்கொடி, சரக் கொன்றைப்புளி, இவைகளை கியாழம் வைத்து அதில் ஆமணக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சரீரத்தில் ரத்தவாதத்தினால் உண்டாகிய விகாரங்கள் யாவும் நீங்கும்.
மஞ்சிஷ்டாதிகியாழம் :- மஞ்சிஷ்டி, சீந்தில்கொடி, வெட்பாலை கோரைக்கிழங்கு, வசம்பு, சுக்கு, மஞ்சள், மரமஞ்சள், ஆடாதோடைஈர்க்கு, பற்பாடகம், நன்னாரிவேர், அதிவிடயம், பூனைக்காஞ்சொரி பாப்பரமுள்ளவேர், வெட்டிவேர், கண்டங்கத்திரி, வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல், கோஷ்டம், கடுகுரோகணி, கண்டுபாரங்கி, வாய்விளங்கம் சித்திரமூலம், பெருங்குரும்பை, தேவதாரு, வெட்பாலை, கர்சனாங்கண்ணி, கொத்துப்புங்கன், திப்பிலி, வட்டத்திரிப்பி, தண்ணீர்விட்டான்கிழங்கு, நெல்லிவற்றல், பெரியமரச்சக்கை, கொன்னை, கருஞ்சிவதை கார்போக அரிசி, சந்தனம், உலிமிடிப்பட்டை, புங்கன் இவைகளை சமஎடையாய் கியாழம் போட்டுக்குடித்தால் சருமத்தின் தோஷங்கள் பதினெட்டுவித குஷ்டரோகங்கள், வாதரத்தம், சுப்தவாதங்கள், விசர்ப்பி, வித்திரதிக்கட்டிகள், சகலமான ரத்ததோஷங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
லகுமஞ்சிஷ்டாதி கியாழம் :- மஞ்சிஷ்டி, கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, கடுகுரோகணி, வசம்பு, மரமஞ்சள், சீந்தில்கொடி, வேப்பன் ஈர்க்கு, இவை யாவையுஞ்சமஎடையாய் கியாழம்வைத்து குடித்தால் வாதரத்தம், சிரங்கு, கபாலகுஷ்டம், ரத்த மண்டலங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
படோலாதி கியாழம் :- பேய்ப்புடல், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கடுகுரோகணி, சீந்தில்கொடி, தண்ணீர்விட்டான் கிழங்கு இவை யாவையுஞ்சமஎடையாய்கியாழம் வைத்து குடித்தால் தாகத்துடன் கூடியவாதரத்தம் நிவர்த்தியாகும்.
குடூச்யாதி கியாழம் :- சீந்தில்கொடி, கொத்துப்புங்கன், தகரை வேப்பன் ஈர்க்கு, கடுக்காய், நெல்லிவற்றல்,ஆடாதோடை, தண்ணீர்விட்டான் கிழங்கு, வெட்டிவேர், நாகமுட்டி, அதிமதூரம், குருவேர் பேய்புடல், மஞ்சிஷ்டி, ரத்தசந்தனம், இவை யாவையுஞ்சமஎடையாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் வாதரத்தங்கள் சகலவாதவிகாரங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
ஆடாதோடை, சரக்கொன்றைப்புளி, சீந்தில்கொடி இவையாவையும் சமஎடையாய்க் கியாழம் வைத்து அதில் ஆமணக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சகல அவயவங்களில் வீக்கத்துடன்எரிவந்தம் கொடுக்கும். ரத்தவாதம் நிவர்த்தியாகும்.
லாங்கலியாதி சூரணம் :- திப்பிலி, தும்பராஷ்டம், திரிகடுகு, லவணம் இவை யாவையும் சமஎடையாய்ச் சூரணித்து பசும்நெய்யுடனாவது அல்லது தேனுடனாவது 1/4-தோலா எடை சூரணத்தைகலந்து சாப்பிட்டால் சகல ரத்தவிகாரங்கள் , பாததோஷங்கள், பாதப்பிளப்பு, சந்துகளில் நோய், துஷ்டவாதரத்தங்கள், குஷ்ட
ரோகம், இவை யாவும் நிவர்த்தியாகும்.
பஞ்சாமிருத ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி வகைக்கு 1-பலம், அப்பிரகபற்பம் 2-பலம், குங்கிலியம் 4-பலம், சீந்தில் சர்க்கரை 4-பலம் இவை யாவையும் கல்வத்திலிட்டு நொச்சிவேர், நெரிஞ்சல், சீந்திகொடி, இலந்தைவேர் இவைகளின் ரசங்களினால் தனித்தனி 7-நாள் அரைத்து 4-குன்றிஎடை ஔஷதத்தை இலந்தைவேர் ரசம்
அனுபானத்தில் கொடுத்தால் வாதரத்தம் நிவர்த்தியாகும்.
தாளகேசுர ரசம் :- சுத்திசெய்த தாளகம், சுத்திசெய்தஅப்பிரகம் இவைகளை சமஎடையாய்ச் சேர்த்து வெள்ளைச்சாரணை ரசத்தினால் ஒரு நாள் அரைத்து பில்லைசெய்து வெய்யிலில் உலர்த்திபிறகு வெள்ளைச்சாரணை சமூலம் சுட்டு அதின் க்ஷ¡ரத்தை யெடுத்து அதை மூசையின் கழுத்து வரைக்கும் நிரப்பி, அதின் மீது பில்லையை வைத்து மேல்மூடி சீலைமண்செய்து வெய்யிலில் உலர்த்தி அடுப்
பேற்றி மந்தாக்கினியால் இரவும் பகலும் விடாமல் 6-நாள் மணல் மறைவில் வாலுகாயந்திரத்தில் எரித்து ஆறியபிறகு எடுத்துக் கொள்ளவும். இதை தாளகேசுர ரசமென்பார்கள்.
இந்த மருந்தில் குன்றிஎடை சீந்தில்கொடி முதலியவைகளின்கியாழ அனுபானத்தினால் சாப்பிட்டால் நோயுடன்கூடிய வாதரத்தங்கள், 18-வித குஷ்டரோகங்கள், உபதம்சரோகங்கள், விசர்ப்பி, மண்டலங்கள், நமை, சிரங்கு, விஸ்போடகம், வாதரத்தத்தினால் உண்டாகிய இதர ரோகங்கள் இவை யாவும் கருடனைக்கண்ட சர்ப்
பங்களைப்போல் மறைந்துவிடும்.
இதைச் சாப்பிடும்போது உப்பு, புளிப்பு, காரம், நெருப்பு,அனல், வெய்யில் இவை ஆகாது. உப்பை விடுகிறதற்கு அசக்தனாயிருந்தால் இந்துப்பைக் கலந்து மதுரமான ஆகாரங்களைச் சாப்பிட வேண்டியது.
அர்க்கேசுர ரசம் :- சுத்திசெய்த ரசம் 4-தோலா, சுத்தகெந்தி12-பலம், கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பின்பு அத்துடன் ஒரு தோலா தாம்பிரரேக்குகளை சேர்த்து சிறிது அரைத்து அந்தரேக்கு
களை ஒரு மடக்கில்வைத்து மேல் ஒரு மடக்குமூடி. சீலைமண்செய்துஒரு பானையில் சாம்பலை நிரப்பி அதில் இந்தமடக்கை வைத்து அடுப்பிலேற்றி 2 ஜாமங்கள் எரித்து அறிய பிறகு எடுத்து பொடித்து எருக்கன் பாலினால் அரைத்து புடமிடவேண்டியது. பிறகு திரிபலை சித்திரமூலம் கடுக்காய்ப்பூகளின் ரசத்தினால் அரைத்து வைத்துக்கொள்ளவேண்டியது.
இதில் 1,2 குன்றி எடை வீதம், அருந்திவர வாதரத்த மண்டலங்கள், இவைகள் நிவர்த்தியாகும். உப்பு, புளிப்பு முதலியவை கள் ஆகாது.
யோகசராமிருதரசம் :- தண்ணீர்விட்டான் கிழங்கு, நாகமுட்டி, குன்றிவேர், விருத்ததேவதாரு, வெள்ளைச்சாரணை, சீந்தில் கொடி, திப்பிலி, அமுக்கிறாக்கிழங்கு, நெரிஞ்சல், இவைகள் வகைக்கு 10 பலம், சேர்த்து மைபோல் சூரணித்து அந்தச்சூரணத்திற்குச் சமம் சர்க்கரை கலந்து அரைத்து பாண்டத்தில் வைத்து தேன் 32 பலம்நெய் 20 பலம் கலந்து அதில் ஏலக்காய், இலவங்கம், இலவங்கப் பத்திரி இவைகள் வகைக்கு 1 பலஞ்சூரணித்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
தை அனுபானத்துடன் சாப்பிட்டால் நஷ்டேந்திரியம், விகலேந்திரியம், வாதரத்தம், க்ஷயங்கள், குஷ்டங்கள், பித்தம், பித்த ரத்த பிரகோபமாகிய வாதரத்தங்கள், வாதபித்தகபத்தினால் உண்டாகும் இதரரோகங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.
சகலமானரோகங்களை நிவர்த்திசெய்து தேகத்திற்கு காந்திமேனி, முதலியது உண்டாக்கும்.
குடூச்சியாதி தைலம் :- 100 பலம் சீந்தில்கொடியை இடித்து 1024 பலம் ஜலத்தில்போட்டு அதில் நாலில் ஒரு பாகம் மீறும்படியாக சுண்டக்காய்ச்சி அதில் வடிகட்டி அதில் 256 பலம், பசும்பால் 64 பலம் எண்ணெய் கலந்து மந்தாக்கினியால் எரித்துக்கொண்டு அதில் மஞ்சிஷ்டி, கோஷ்டம், அதிமதூரம், ஜீவணியகணத்தில் சொல்லிய மூலிகைகள் ஏலக்காய், திரா¨க்ஷ, சடாமாஞ்சி, சதுரக்கள்ளி, நகமென்கிற வாசனைத் திரவியம், காட்டுமிளகு,
சிவகரந்தை, திரிகடுகு, கீழாநெல்லி, கடுக்காய்ப்பு, திப்பிலி, தண்ணீர் விட்டான்கிழங்கு, விஷ்ணுகிரந்தி, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பு வெட்டிவேர், இலவங்கப்ப்ட்டை, தாமரைத்தண்டு, அல்லித்தண்ண்டு
சந்தனம் இவைகளை வகைக்கு 1 பலம் வீதஞ்சூரணீத்துப்போட்டு மந்தாக்கினியால் தைலபக்குவமாக காய்ச்சி வைத்துக்கொள்ளவேண்டியது.
இதை பானங்களுக்கும், தலைக்குதேய்த்துக்கொண்டு குளிப்பதற்கும், உள்புறமாக சிலாக்குவத்தி, முதலியவைகள் பிரயோகிப்பதற்கும், உபயோகித்து வந்தால் வாதரத்தம், இரத்தகெடுதியினால் உண்டாகும் இதர நோய்கள், வாதபைத்தியங்கள், வியர்வை, நமை, குத்தல், தலைநடுக்கல், அருத்திதவாதம், விரணதோஷங்கள் இவை
கள் நிவர்த்தியாகும். மாதர்கள் இந்த தைலத்தை குடித்தால்குதக நோய் நீங்கி கர்ப்பவதிகளாவார்கள்.
நாகபலா தைலம் :- நாகமுட்டி 100-பலம் இடித்து 256-படி ஜலத்தில் கொட்டி, நாலில் ஒரு பாகம் மீறுபடியாய் கியாழம் சுண்டக்காய்ச்சி, அதற்கு சமமாக ஆட்டுப்பாலைசேர்த்து எரித்துக்கொண்டு அதில் வெட்டிவேர், அதிமதுரம் இவைகளின் கல்கத்தை 5-பலஞ் சேர்த்துக் காய்ச்சி தைலபக்குவமாக இறக்கிக்கொள்ள
வேண்டியது.
இந்த தைலத்தை குடித்தைலமாகவும், முடித்தைலமாகவும்வழங்கிவருவதுடன் வஸ்திபிரயோகமூஞ் செய்துவந்தால் வாதரத்தங்கள் நிவர்த்தியாகும்.
சதாவரீ கிருதம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு கல்கம், பால், இதற்கு சமம் நெய், இவைகளுக்கு அதிகமாக நாலுபாகம் தண்ணீர் விட்டான்கிழங்கு ரசம் இவைகளை யொன்றாகக் கலந்து கிருதபக்குவமாகக் காய்ச்சி சாப்பிட்டால் வாதரத்தம் நிவர்த்தியாகும்.
அமிருதாதி கிருதம் :- சீந்தில்கொடி, அதிமதுரம், திரா¨க்ஷ, திரிபலை, சுக்கு, சிற்றாமுட்டி, ஆடாதோடை, கொன்னை, வெள்ளைச்சாரணை, தேவதாரு, நெரிஞ்சில், கடுகுரோகணி, திப்பிலி, நிலப்பூசினி, சிற்றரத்தை, ஆனைநெரிஞ்சில், ஆமணக்குவேர், மரமஞ்சள்,அல்லிகிழங்கு இவைகளை சமஎடையாய் இடித்துக் கல்கஞ்செய்து 20-பலம் நெய், நெல்லிக்காய் ரசம் 16-பலம், பால் 60-பலம் கலந்து நெய் பதமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ளவேண்டியது.
இந்த நெய்யை போஜனத்திலும், காய் கறிகுழம்பு முதலியவைகளிலுஞ் சேர்த்து உபயோகித்துக்கொண்டு வந்தால் மிகவும் நலம். வெகு தோஷங்களினால் பிறந்த வாதரத்தத்தினால் உண்டாகிய உத்தானவாயு, கம்பீரவாதம் பின்புறம் தொடை, புட்டம், கண்டசதை, முதலிய இடங்களிலுள்ள வாதங்கள், மஹாசூலை, ஆமவாதம், மூத்
திரகிர்ச்சிரம், பிரமேகங்கள், விஷசுரம், வாதபித்த கபத்தினால் உண்டான சகல ரோகங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும். சாதராணமாக இதை சாப்பிட்டுகொண்டிருந்தால் ஆயுசு, பலம், வீரியம், தேகபுஷ்டி இவைகள் உண்டாகுமென்பதற்கு சந்தேகமில்லை.
வாதரத்தத்திற்கு பத்தியங்கள் :- உத்தான வாதத்திற்கு,அப்பியங்கனம், ஒத்தடம், லேபனம் இவைகளை செய்யவேண்டியது.
கம்பீரவாதரத்தத்திற்கு பானம் வஸ்திகர்மம், விரேசனம்,ஊசிகள், அட்டைகள், அலகு முதலியவைகளினால் இரத்தத்தை வெளிப்படுத்தவேண்டியது.
நூறு தகுதி ஜலத்தில் கழுவிய நெய்யினால் அப்பியங்கனம் செய்தல், ஆட்டுப்பாலை அருந்தல், யவதானியம், பழையசம்பாஅருசி, கோதுமை, கடலை, துவரை, காட்டுப்பயறு, ஆடு, செம்மரியாடு எருமை இவைகளது பால், மணத்தக்காளிகீரை, பாகற்காய், சிறுகீரைபுடலங்காய், நெல்லிக்காய், இஞ்சி, கருணை, முருங்கை
சர்க்கரை, திரா¨க்ஷ, கலியாணபூசினிக்காய், நெய், காடை,கவுதாரி, ஊக்குருவி, கோழிஉள்ளான், நீர்க்கோழி, கிழி, வான்கோழி புறா முதலிய பஷிகளின் மாமிசங்கள், பச்சைக்கற்பூரம், அகருதேவதாரு, சரளதேவதாரு இவைகளின் சூரணத்தை தைலங்களில் கலந்து தேகத்திற்கு தடவுதல் இவைகள் யாவும் வதரத்தத்திற்கு
பத்தியங்களென்று அறியவேண்டியது.
அபத்தியங்கள் :- பகல்நித்திரை, அக்கினி, வெய்யில், புணர்ச்சி உளுந்து, கொள்ளு, மொச்சை, பட்டாணி, க்ஷ¡ரங்கள், இதரபஷிகளின் மாமிசங்கள், விருத்தமான போஜனம், தயிர், கரும்பு, முள்ளங்கிகள், சாராயம், எள்ளு, காரம், உஷ்ணம், கிண்ணியில் சாப்பிடுதல் குருத்துலம், பிசிபிசிப்பு, தித்திப்பு, இவைகளுள்ள பாதார்த்தங்கள்
மாவுபண்டங்கள் இவைகள் அபத்தியங்கள்.
0 comments:
கருத்துரையிடுக