ஜிக்வா என்னும் நாவில் ஏற்படும் பிணிகட்கு ஜிக்வாரோகம் என்று பெயர். இது ஆறு வகைப்படும்.
1. வாதஜிக்வா கண்டகம் :- நாக்கு முழுதும் வெடித்தல்,
அவ்வெடிப்புகளில் முள்தைத்தது போல் அருகுதல், மரத்தல், பழுத்த இலையைப்போலிருத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
2. பித்தஜிக்வா கண்டகம் :- நாக்கு முற்றிலும் காங்கையை கொண்டு சிவப்பாகி அதில் மாமிச நிறமான சிறு சிறு கொப்புளஙகளை உண்டாக்கும். அப்போது நாவில் மழுங்கிய முட்கள் நிறைந்த நாக்கு ஆகிய ஐந்து ஸ்தானங்களைப்பற்றி பிறக்கின்றதென்றும் அவ்
வவ் விடங்களைப் பற்றி இது ஐந்து வித பெயர் பெருமென்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதனை அட்சரம் என்றும் கூறுவர்.
3. சிலேஷ்மஜிக்வா கண்டகம் :- நாவெல்லாம் இலவமுட்களைப் போல் தடித்தும் வெளுத்தும் நெருங்கியும் நோயைத் தருகின்ற
கொப்புளங்களை உண்டாக்கும்.
4. ஜிக்வா வஜகம் :- சிலேஷ்மபித்தங்களை கொண்டு நாவின் கீழ் வீக்கத்தை யுண்டாக்கும். இதனால் நாமரத்து தடித்து உயரும். அவ்வீக்கம் பழுத்தால் புலால் நாற்றம் வீசுவதும் மாமிசம் கரைவது மாயிருக்கும்.
5. அதிஜிக்வம் :- அடிநாவின் கீழ் நுனிநாவைப்போல் தடித்த வீக்கத்தை உண்டாக்கும். இதனால் மரத்தல் அந்த இடத்தில் சிறு சிறு முளைகளைப்போல் கொப்புளம் எழும்புதல், தினவும் நோயும் அதிகரித்தல், வாயில் காங்கையான சொள்ளு சலம் வடிதல்
புசிக்கக்கூடாமை என்னும் குணங்களை உண்டாக்கும்.
6. உபஜிக்வம் :- உண்ணாக்கில் வீக்கத்தை உண்டாக்கும்.
அப்போது முன்பு சொல்லிய அதிஜிக்வா ரோக குணங்களும் இருமலும், அருகுதலும் உண்டாகும். இதனை உண்ணாக்கென்பர்.
0 comments:
கருத்துரையிடுக