செவ்வாய், ஜனவரி 12, 2010

அருசி ரோகத்திற்கு( பசியின்மைக்கு ) சிகிச்சைகள்


அருசிரோக சிகிச்சை

தாளிசாதி சூரணம் :- தாளிசப்பத்திரி 1-தோலா, சுக்கு 2- தோலா, மிளகு 3-தோலா, திப்பிலி 4-தோலா, மூங்கிலுப்பு 5--தோலா, ஏலக்காய் 6--தோலா, கிராம்பு 7--தோலா, இவைகளைமைப்போல் அரைத்து அதில் வங்கபற்பம், தாம்பிரபற்பம், இவைகள் வகைகு 1-தோலா, சர்க்கரை 10-பலம் கலந்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1/2 வராசனெடை வீதம் தினமிரு வேளையாகச்சாப்பிட்டால் அருசி, அஜீரணம், காசங்கள், சுவாசங்கள், சுரம், வாந்தி, அதிசாரம், கோழை, பிலீகை, கிராணி, பாண்டுரோகம் இவைகள் போம்.

காண்டவ சூரணம் :- தாளிசப்பத்திரி, செவ்வியம், மிளகு,இந்துப்பு இவைகள் வகைக்கு 1-பாகம், சிறுநாகப்பூ, திப்பிலி, திப்பிலிமூலம், சீரகம், புளியிலை, சித்திரமூலம் இவைகள் வகைக்கு  2-பாகம், இலவங்கப்பட்டை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு, ஓமம், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு 3-பாகம், இவைகளை வராகனெடை கணக்கில் எடுத்துமைப்போல் சூரணித்து அதில் 4-பலம் சர்க்கரை, மாதுளம்பழரசம் 3-தோலா கலந்து அனுபானயுக்தமாக சாப்பிட்டால் அதிசாரம், வாந்தி, அருசி, அஜீரணம், குன்மம், அக்கினிமந்தம், முகரோகம், உதரரோகம், களரோகம், குதரோகம், சுவாசம், காசம் இவைகள்யாவும் நிவர்த்தியாகும்.

யவானீகாண்டவ சூரணம் :- ஓமம், மாதுளம்பழத் தோல், சுக்கு, புளித்தோல், நெல்லிவற்றல், மிளகு, புளித்த இலந்தை இவைகள் யாவும் வகைக்கு 3/4-பலம், திப்பிலி 1-பலம், இலவங்கப்பட்டை, சவ்வர்ச்சலவணம், கொத்தமல்லி, சீரகம் இவைகள் வகைக்கு 1/4-பலம், இவைகளைச் சூரணித்து 8-பலம் சர்க்கரை கலந்து சாப்பிடடால் பாண்டுரோகம், ஹிருதயரோகம், கிறாணி, சுரம், வாந்தி, க்ஷய
ரோகம், அதிசாரம், பிலீகை, அநாஹரோகம், மலபந்தம், அருசி, சூலை, மந்தாக்கினி, மூலரோகம், ஜிம்மரோகம், களரோகம் இவயாவும் நிவர்த்தியாகும்.

ஆமலகாதி சூரணம் :- நெல்லிக்காய்த்தோல் 1-பலம், சித்திர மூலம் 2-பலம், கடுக்காய் 3-பலம், திப்பிலி 4-பலம், இந்துப்பு 5-பலம், இவைகளை எல்லாம் இடித்து சூரணித்து கொடுத்தால் சகல சுரங்கள், சிலேஷ்மங்கள் இவைகள் நிவர்த்தியாகும். பேதி, ருசி, தீபனம் இவைகளை உண்டாக்கும்.

கற்பூராதி சூரணம் :- பச்சைக்கற்பூரம், இலவங்கப்பட்டை, வால்மிளகு, ஜாதிக்காய், இலவங்கப்பத்திரி இவைகள் வகைக்கு 1-தோலா, கிறாம்பு 2-தோலா, சிறுநாகப்பூ 8-தோலா, மிளகு 4-தோலா, திப்பிலி 5-தோலா, சுக்கு 6-தோலா, இவைகளைமை போல் சூரணித்து இதற்கு சமஎடை சர்க்கரை கலந்து அளவாய் சாப்பிட்டு வந்தால் அருஷி, கஷயங்கள் காசங்கள் தொண்டைகம்மல், சுவாசம், குன்மம், மூலவியாதி, வாந்தி, கண்டரோகம் இவைகள் நிவர்த்தியாகும். இதற்கு இச்சாபத்தியம்.

சவ்வியாதிசூரணம் :- செவ்வியம், நெல்லிவற்றல், சுக்கு மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, சீரகம், மூங்கிலுப்பு, சித்திரமூலம் இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகளை  சம எடையாகச் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் சுரபேதம், பீனசம், கபம், அரிசி இவைகளை நீக்கும்.

தாடிம சூரணம் :- மாதுழம்பழத்தோல் 2 பலம், சர்க்கரை  8 பலம், திரிகடுகு 3 பலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகள் வகைக்கு 1 பலம், இவைகளை சூரணித்து சாப்பிட்டால் தீபனம், ருசி இவைகளை யுண்டாக்கும்.

பிப்ப்லயாதி சூரணம் :- திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, மிளகு, ஓமம், நெல்லிவற்றல், ஏலக்காய் இலவங்கம், ஜாதிக்காய், அக்ராகாரம், இவைகள் வகைக்கு 1 தோலா இவைகளைச் சூரணித்து ஒரு தோலா அக்கினிதீபனம், ருசிபலம், மேனி இவைகளை யுண்டாக்கும். பீலிகை, அரோசகம், மூலவியாதி,சுவாசம், சூலை, சுரம், இவைகளை நாசமாக்கும்.

சுண்டியாதி சூரணம் :- ஏலக்காய், இலவங்கப்பட்டை, சிறு நாகப்பு, கிறாம்பு, சுக்கு, மிளகு, இவைகள் சம எடை சூரணித்து இதற்கு சம எடை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் சுவாசம்,காசம் நீர்வடிதல், பாரிசசூலை, அருசி, களரோகம், முகபாகம் இவைகள் நிவர்த்தியாகும்.

கண்டார்த்திரகயோகம் :- இஞ்சி 74 தோலா, சர்க்கரை 64 தோலா, மிளகு 4 தோலா, திப்பிலி 3 தோலா, மோடி 3 தோலா, சுக்கு, ஜாதிக்காய், ஏலக்காய், சித்திரமூலம், மூங்கிலுப்பு இவைகள் வகைக்கு 1 1/2 தோலா, இவைகளை உலர்த்தி சூரணித்து இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி, 32 தோலா நெய்யினால் வருத்து மேல் சூரணத்
தையும், சர்க்கரையையும் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டால் மகர பித்தவியாதிகள், ஆமல பித்தங்கள் சகல்பித்த விகாரங்கள்யாவும் நிவர்த்தியாகும்.

ஆர்த்திரகமாலுங்காவ லேகியம் :
- இஞ்சிரசம் 64 தோலா, வெல்லம் 32 தோலா, கொடிமாதுழம்பழரசம் 16 தோலா, இவைகளை ஒன்றாகச் சேர்த்து மந்தாக்கினியில் சமைத்து பாகுபதம் வரும்போது அதில் இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், பூனைகாஞ்சொரிவேர், சித்திரமூலம், மோடி, கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம் இவைகல் வகைக்கு 1-தோலா சூரணித்து அதில் போட்டு லேகியபதமாய் செய்து சாப்பிட்டால் அருசி, க்ஷயங்கள், காமாலை, பாண்டுரோகம், வீக்கம், இருமல், சுவாசம், உதரரோகம், குன்மம், பிலீகை, சூலை இவையாவும் நாசமாகும். அக்கினிதீபனம்
உண்டாகும்.

சுருங்கபேராதி லேகியம் :- இஞ்சி ரசத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் அருசி, பசியின்மை, அஜீரணம், இருமல், ஜலுப்பு, கபம் இவைகள் நாசமாகும்.

கார்வ்யாதி மாத்திரைகள் :- பெரியசோம்பு, சீரகம், மிளகு, திரா¨க்ஷ, நெல்லிகாய், மாதுளம்பழம், சூரத்து கருப்புப்பு இவை யாவையும் சமஎடையாய்ச் சேர்த்து சூரணித்து தேன், வெல்லம் போட்டு அரைத்து இலந்தை அளவு மாத்திரைசெய்து வாயில் அடக்கிவைத்துக்கொண்டு சுவைத்துவர நீங்கும்.

ராஜிகாதி சிகரிணி :- பச்சைபயறு, சீரகம், கோஷ்டம், சுட்ட பெருங்காயம், சுக்கு, இந்துப்பு இவைகள் யாவையுஞ் சூரணித்து பசுந்தயிரில் கலந்து அதை வஸ்த்திரத்தில் வடிகட்டிகொடுத்தால் அருசி நிவர்த்தியாகும். அக்கினி தீபனம் உண்டாகும்.

தாம்பிர சிகரிணி :- பசும்பால், எருமை தயிர் இவைகள் சம எடை கலந்து துணியின்மீது சர்க்கரையை பரப்பி அதில் முன்கூறிய பாலும் தயிரும் கலந்ததைக் கொட்டி செவ்வையாய் தேய்த்து வடிகட்டி பாத்திரத்தில் வைத்து அதில் ஏலக்காய், இலவங்கம், பச்சை கற்பூரம், மிளகு இவைகளை சூரானித்து சறிதளவு கலந்து சாப்பிட்
டால் அருசியை போக்கி ருசியை உண்டாக்கும்.

அமுருதபிரபாவ வடுகங்கள் :- மிளகு, திப்பிலிமூலம், இல வங்கம், கடுக்காய், ஓமம், புளியிலை, மாதுளம்பழம், இந்துப்பு, பிடால வணம், காய்ச்சுலவணம் இவை வகைக்கு 4-தோலா, திப்பிலி, யவ க்ஷ¡ரம், சித்திரமூலம், சீரகம், கருஞ்சீரகம், சுக்கு கொத்தமல்லி, ஏலக்காய், நெல்லித்தோல், இவைகள் வகைக்கு 8-தோலா, இவைகள் யாவையும் சூரணித்து கொடிமாதுளம்பழ ரசத்தில் மூன்றுசாமம் அரைத்து மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி சாப்பிட்டால் அஜீர ணத்தைப்போக்கி அக்கினி தீபனத்தை உண்டாக்கும்.

லவணார்த்தரக யோகம் :- சாப்பிடுகிறதற்கு முன்பாக உப்பும் இஞ்சையும் கலந்து சாப்பிட்டால் அருசியைப்போக்கி கண்டம், நாக்கு இவைகளை சுத்திசெய்து அக்கினி தீபனத்தை உண்டாக்கும்.

ஜீரகாதி கிருதம் :- 64-தோலா நெய்யில் சீரகம், கொத்தமல்லி, இவைகள் வகைக்கு 4-தோலா வீதம் பால்விட்டரைத்துப் போட்டு பக்குவமாக காய்ச்சி கொடுத்தால் கபபித்தத்தினால் உண்டான அருசி, மந்தாக்கினி, வாந்தி, இவைகள் யாவும் நீங்கும்.

அருசிரோகத்திற்கு பத்தியங்கள் :- ரோகியின் பலாபலத்தை அறிந்து வஸ்திகர்மம், விரேசனம், வாந்தி, இவைகளை செய்விக்க வேண்டியது. சுருட்டு முதலியது பிடித்தல், ஒளஷதத்தை வாய்நிறம்ப வைத்துக்கொள்ளல், வேப்பன்குச்சியால்பல் துலக்கல், நாளுவிதமான ஹிதமான அன்னம், கோதுமை, பச்சைப்பயறு, துவரை, 60 நாள் பயிராகும் பழைய சம்பா அரிசி, பன்றி, முயல்
இவைகளின் இறைச்சிகள், மாதுழம்பழம், எலுமிச்சம்பழம் இந்துப்பு, பாகற்காய், இளநூங்கு, இளமுள்ளங்கி, கத்தரிக்காய், முருங்கைக்காய், நெய், வெள்ளைப்பூண்டு, திரா¨க்ஷ, மாம்பழம், ஓடும்ச்லம், தயிர், தேன், மோர், இஞ்சி, பேரிச்சம் பழம், சாரைப்பருப்பு, விழாம்பழம், இலந்தைப்பழம்,  சர்க்கரை, ஓமம், மிளகு, பெருங்காயம், தித்திப்பு, புளிப்பு, கசப்பு இந்தரசங்கள், நீராடுதல், அப்பியங்கனம், இதுகள் அருசரோகத்திற்கு பத்தியங்கள் என்று அறியவேண்டியது.

அபத்தியங்கள் :- தாகம், ஒக்காளம், பசி, கண், சலம் இவைகளின் வேதத்தை தடுத்தல், விருப்பமில்லாத அன்னம், இரத்தம் வாங்குதல், கோபம், லோபம், சோபம், துர்க்கந்தம், விகாரங்கள் வகைகளைப்பார்த்தல் இவைகள் அருசியின் அபத்தியங்கள்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக