திங்கள், ஜனவரி 11, 2010

க்ஷய ரோக சிகிச்சைகள்

க்ஷயரோகசிகிச்சை

க்ஷயமிருகாங்க ரசம் :- ரசபஸ்பம் 3 பாகம், ஸ்வர்ணபஸ்பம் 1பாகம், தாம்பிரபஸ்பம் 1 பாகம், மனோசிலை 2 பாகம், கெந்திபஸ்பம் 2 பாகம், தாளகபஸ்பம் 2 பாகம் இவைகள் யாவையும் பொடித்து
பாலகரையில் வைத்து மேல்பலகறையால் மூடி வெங்காரத்தை ஆட்டுப்பாலில் கரைத்து சீலை செய்து அந்தப்பலகறையை பரண்டத்தில் வைத்து மேல்மூடி சீலைமண் செய்து காட்டு விறட்டியால் கஜ
புடமிட்டு ஆறிய பிறகு எடுத்து பலகறையிலுள்ள மருந்தை மறுபடியும்அரைத்து சிமிழியில் வைத்து குன்றி எடை மருந்தை 10 திப்பிலி, 10 மிளகு இவைகளை சூரணித்து தேன் கலந்து இந்த அனுபானத்திலாவது அல்லது பசும் நெய்யுடனாவது சாப்பிட்டால் க்ஷயரோகம் நிவர்த்தியாகும். இதற்கு இராஜயோக்கியமாய் பத்தியம் செய்யவேண்டியது.

சுவர்ணபூபதி ரசம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி 1 பாகம்,தாம்பிரபஸ்பம் 2 பாகம், அப்பிரகபஸ்பம் 1 பாகம், லோகபஸ்பம் 1 பாகம், காந்தபஸ்பம் 1 பாகம், ஸ்வர்ணபஸ்பம் 1 பாகம், வெள்ளை பஸ்பம் 1 பாகம், வசநாபி 1 பாகம், இவைகளை ஒன்றாக சேர்த்துகல்வத்திலிட்டு செருப்படையிலைச்சாற்றினால் ஒரு நாளரைத்து மாத்திரைகள் செய்து நாசிகுப்பியில் வைத்து சுற்றி சீலை மண் செய்து உலர்த்தி வாலுகாயந்திரத்தில் மந்தாக்னியால் மிருதுவாய் எரித்து ஆறிய பிறகு எடுத்து குன்றி எடை இஞ்சிரசத்தில் திப்பிலிச்சூரணம்
கலந்து இந்த அனுபானத்தில் கொடுத்தால் மூன்று வித க்ஷய ரோக ங்கள், பதின்மூன்று சந்நிகள், ஆமவாதம், தனூர்வாதம், பங்குவாதம், கபவாதம், அக்கினிமந்தம், கடிவாதம், சகலசூலைகள், குன்ம உதரரோகம், அஸ்மரீரோகம், மூத்திரக்கிரிச்சரம், மலபந்தம், பந்தரணங்கள், எட்டு விதசுரங்கள், காமாலை, பாண்டுரோகங்கள் இன்னும்பல ரோகங்கள் போம்.

ஹோமாப்பிரகாசசிந்தூரம் :- அப்பிரகபஸ்பம், ரசசிந்தூரம் ஸ்வர்ணபஸ்பம் இவைகள் சமஎடையாக எடுத்து ஒன்றாய்யரைத்து குன்றி எடை இஞ்சி ரசத்தில் ஒரு மண்டலம் கொடுத்தால் க்ஷய பாண்டு, க்ஷயகாசரோகம், குன்மகாமாலை இவைகள் குணமாகும்.

ராஜமிருகாங்கரசம் :- பாதரசம் 1 பாகம், ஸ்வர்ணபஸ்பம் 1 பாகம், முத்துப்ஸ்பம் 2 பாகம், கெந்தி 1 பாகம், வெண்காரம் 3-பாகம் இவைகளை ஒன்றாக சேர்த்து கல்வத்திலிட்டு தானிக்காய் கியாழத்தில் அரைத்து மாத்திரைசெய்து துணியில் சுருட்டி உப்புபாண்ட மத்தியில் வைத்து எரித்தெடுக்க இதை இராஜமிருகாங்க ரசமென்பார்கள். இதை குன்றிஎடை மிளகு, திப்பிலிஇவைகள் சூரணத்துடன் தேன் அல்லது நெய் இந்த அனுபானத்துடன் கொடுத்தால் க்ஷயரோகம், அக்கினிமந்தம், கிறாணி, இவைகளைப் போக்கும்.

சீதளமான பதார்த்தங்கள் கொடுக்கவேண்டியது; பித்தாதிக்கத்தை யுண்டுபண்ணுமாகையினால் உஷ்ண பதார்த்தங்கள் கொடுக்கக்கூடாது.

பஞ்சாமிருத ரசம் :- இரசபஸ்பம், அப்பிரகபஸ்பம், லோஹபஸ்பம், சிலாசத்து பஸ்பம், நாபி, குங்கிலிய பஸ்பம், சுத்திசெய்த நேர்வாளம், தாம்பிரபஸ்பம், இவைகளை சமஎடை எடுத்து சீந்தில் கொடி, திரிபலை இவைகளின் கியாழத்தில் அரைத்து சிமிழியில்வைத்து ஒரு குன்றி எடை இராஜ மிருகாங்கத்திற்குச் சொன்ன அனுபானத்தில் கொடுத்தால் ராஜயக்ஷ்மரோகம் நிவர்த்தியாகும். இதுதான் பஞ்சாமிருத ரசமெனப்படும்.

வசந்த குசுமாகரம் :- பவழபஸ்பம் 4-பாகம், ரசபஸ்பம்4-பாகம், முத்து பஸ்பம் 4-பாகம், அப்பிரகபஸ்பம் 4-பாகம்,
வெள்ளி பஸ்பம் 2-பாகம், சுவர்ணபஸ்பம் 2-பாகம், லோஹபஸ்பம் 3-பாகம், நாகபஸ்பம் 3-பாகம், வங்கபஸ்பம் 3-பாகம், இவைகளை யொன்றாக கல்வத்திலிட்டு ஆடாதோடை, மரமஞ்சள், கரும்பு,தாமரைப்புஷ்பம், ஜாஜிப்பூ, வாழைக்கிழங்கு, கிருஷ்ணாகரு, சந்த னம் இவைகளின் ரசங்களினாலாவது அல்லது கஷாயத்தினாலாவது தனித்தனியாக ஒவ்வொரு கியாழத்தினால் ஏழுநாள் அரைத்து சிமிழியில் வைத்துக்கொண்டு குன்றி எடை அனுபான விசேஷத்தி னால் கொடுத்தால் க்ஷயம்முதல் சகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.

மேலும் மிளகு சூரணம், தேன், இவைகளுடன் கலந்துகொடுத் தால் க்ஷயரோகங்கள் நீங்கும்.
மரமஞ்சள் சூரணம், தேன், சர்க்கரை இவைகளுடன் கலந்துகொடுத்தால் சகல மேகங்கள் பிரமேகங்கள் நீங்கும்.

சந்தனத்தூள் கியாழம், சர்க்கரை இவைகளுடன் கலந்து கொடுத்தால் ரத்தபித்தம் நீங்கும்.

சர்க்கரை, தேன், ஆடாதோடை இலைச்சாறு, அல்லது ஏலக்காய், அகரு, சந்தன்ம் இவைகளின் சூரணத்தில் கொடுத்தால் புஷ்டி, தாதுவிருத்தி இவைகளை யுண்டாக்கும்.

சங்கபுஷ்பீரசத்தில் கொடுத்தால் வாந்திகள் நிற்கும். தண்ணீர் விட்டான்கிழங்கு ரசம், சர்க்கரை தேன் கலந்துகொடுத்தால் ஆமலபித்தம் நிவர்த்தியாகும், இன்னும் அனுபானவிஷெசங்களில் கொடுத்தால் சகல ரோகங்களும் நீங்கும்.

ஹரருத்திரரசம் :- எழுகுபஸ்பம் 1 பாகம், தாம்பிரபஸ்பம் 2 பாகம், நாகபஸ்பம் 2 பாகம், வெள்ளிபஸ்பம் 4 பாகம், ஸ்வர்ண பஸ்பம் 5 பாகம், சுத்திசெய்தரசம் 6 பாகம், இவைகளை சேர்த்து கல்வத்திலிட்டு, புளியிலை ரசத்தில் ஒரு நாள் அரைத்து புடமிட்டு காங்கரசத்தில் சொல்லியபிரகாரம், வாலுகாயந்திரத்தில் எரித்து
ஆறிய பிறகு எடுத்து சூரணஞ்செய்து சிமிழியில் வைத்துக்கொண்டு மிருகாங்கரசத்தில் சொல்லியிருக்கும் பிரமாணம் அனுபானயுக்த மாக கொடுத்தால் க்ஷயரோகம் நிவர்த்தியாகும்.

ஹேமஹர்ப்பரசம் :- ரசபஸ்பம் இரண்டரை விராகனெடை ஸ்வர்ணபஸ்பம் ஒண்ணேகால் விராகனெடை, சுத்திசெய்தகெந்தி இரண்டரை விராகனெடை, இவைகளை சித்திரமூல ரசத்தில்
இரண்டு ஜாமங்கள் அரைத்து பிறகு அதை உலர்த்தி பலகறையில் மூடி, வெங்காரத்தை பசும்பாலில் அரைத்து சீலை செய்து பாண்டத்தில் வைத்து மூடியால் மூடிசீலைசெய்து கஜபுடமிட்டு ஆறிய பிறகு
எடுத்து இதில் குன்றி எடைபிரமாணம் அனுபானயுக்தமாக கொடுத்தால் க்ஷயரோகங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கும்.

சுயமக்கினி குமார ரசம் :- சுத்திசெய்தரசம் 1 பாகம், கெந்தி 2 பாகம், இந்த இரண்டு தினுசுகளை கல்வத்திலிட்டு, நன்கு அரைத்து மடிந்தபின்பு இவைகளுக்கு சமஎடை லோகபஸ்பம் சேர்த்து கற்றாழை ரசத்தில் இரண்டு ஜாமம் அரைத்து உருண்டையாக்கி செம்பு பாத்திரத்தில் வைத்து அதற்குமேல் ஆமணக்கு இலைகள் மூடி ஒரு ஜாமம் வரையிலும் வெய்யிலில் உலர்த்தி பிறகு தானியராசியில் ஒரு இரவும் பகலும் வைத்து பிறகு சூரணித்து வஸ்திராயஞ்செய்து கற்றாழைச்சாறு , கரசனாங்கண்ணிச்சாறு மணத்தக்காளி இலைரசம், முள்ளு அழவணை இலைரசம், சிவகரந்தை இலை ரசம்வெள்ளைச்சாரணை இலைரசம், சகதேவிரசம், சீந்தில்கொடிரசம் அவுரி இலைரசம், நொச்சி இலைரசம், சித்திரமூலவேர்ரசம் இந்த ரசங்களினால் தனித்தனி ஏழுநாள் அரைத்து வெய்யலில் உலர்த்தி அரைத்து வைத்துக்கொள்க.

பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லி வற்றல், ஏலக்காய், சாதிக்காய், இலவங்கம் இவைகளை சமஎடை சூரணித்து சூரணத்தின் எடையில் அரைபாகம் முன் முடிந்த மருந்தைச் சேர்த்து மறுபடியும் அரைத்து அதில் இரண்டு மூன்று குன்றிஎடை அனுபான விசேஷத்தில் கொடுத்தால் க்ஷயரோகம், காசரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

ஹேமகர்ப்ப போடலீ ரசம் :- சுவர்ணபஸ்பம் 1-பாகம்,சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கந்தகம் 2 1/2-பாகம், இவைகளை ஒன்றாய் சேர்த்து மந்தாரப்பட்டை ரசத்தால் அரைத்து மாத்திரைசெய்து மூசையில் வைத்து மேல்மூடி சீலைசெய்து வாலுகாயந்திரத்தில் மூன்றுநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து அதற்கு சம எடை சுத்திசெய்த கெந்தியைச் சேர்த்து தனித்தனியாக இஞ்சி சாற்றிலும், சித்திர மூலச்சாற்றிலும் அரைத்து பிறகு இந்த மருந்
தின் எடையில் எட்டிலொன்று வெங்காரமும் அதில்பாதி நாபியும் சேர்த்து கள்ளிப்பாலினால் அரைத்து அகலிடக்கி சீலைமண்செய்து ஓர் சட்டியில் மணல்கொட்டி நடுவில் இதை வைத்து மேலும் மணல் கொட்டி வாய்மூடி சீலைசெய்து கஜபுடம் இட்டு ஆறியபிறகு எடுத்து1/2-1 குன்றி வீதம் அனுபான யுக்தமாக கொடுக்கவேண்டியது.
இது காசம், க்ஷயம், சுவாசம், கிறாணி, அரிசி, கபம், வாந்தி,இவைகளை நிவர்த்திசெய்யும். அக்கினிதீபத்தை யுண்டாக்கும்.

சகல க்ஷயரோகத்திற்கு காந்தவல்லப ரசம் :- காந்தச் செந்தூரம் 16-பாகம், எ·குச் செந்தூரம் 14-பாகம், மண்டூரச் செந்தூரம் 12-பாகம், பொரித்த வெங்காரம் 10-பாகம், மனோசிலை 8-பாகம், கற்பூர சிலாசத்து 6-பாகம், வாலைரசம் 66-பாகம், சுத்தி செய்த கந்தகம் 66-பாகம், இவைகள் யாவையுங் கல்வத்திலிட்டு பழச்சாற்றினால் அரைத்து காசிக்குப்பியில்வைத்து வாலுகாயந்தி ரத்தில் ஏழு ராத்திரி எரித்து ஆறியபிறகு எடுத்து அரைத்துவைத்துக்கொண்டு குன்றிஎடை தேனுடன் காலை மாலை கொடித்தால் பாண்டுரோகம், க்ஷயம், குன்மம், கிறாணி காசங்கள், சுவாசங்கள், சுரங்கள், வாந்திகள், பீலீஹோதரம், அரிசி, அக்கினிமாந்தம் குஷ்டம், மூலவியாதி, பகந்தரம், வாதசூலை இவைகளை நிவர்த்திக்கும். வீரியம், அக்கினிதீபனம், மனதுக்கு சந்தோஷம், தேகபுஷ்டி, தேககாந்தி, பலம் இவைகளை யுண்டாக்கும்.

பூரண சந்திரோதயம் 
:- சுத்தி செய்த தங்கரேக்கு 1 பலம்,சுத்தி செய்த ரசம் 8 பலம், சுத்தி செய்த கெந்தி 16 பலம், இவைகளை கல்வத்திலிட்டு செம்பருத்தி புஸ்பச்சாற்றினால் ஒரு நாள் அரைத்து, கற்றாழை சாற்றினால் ஒரு நாள் அரைத்து அரசக்கொழுந்து ரசத்தால் ஒரு நாள் அரைத்து காசிக்குப்பியில் வைத்து மேல்மூடி காசிக்குப்பிக்கு செவ்வையாய் வஸ்திரத்தை சுற்றி அதன் மீது சீலை செய்து உலர்த்தி நல்ல சுபமுகூர்த்தத்தில் வாலுகாயந்திரத்தில் வைத்துதீபாக்கினியாக ஒரு நாள் கமலாக்கினியாக ஒரு நாள் கடாக்கினி யாக ஒரு நாள் ஆக மூன்று நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்துக்கொண்டு பச்சைக்கற்பூரம் 4 பலம் அத்துடன் சேர்த்து பிறகு ஜாதிக்காய், சுக்கு, திப்பிலி, மிளகு, இலவங்கம், கஸ்தூரி இந்த தினுசுக்கள் தனித்தனி ஒரு வராகனெடையாகச்சேர்த்து சூரணித்து இவைகளை மருந்துடன் கலந்து செவ்வையாக அரைத்து சிமிழியில்வைத்துக்கொண்டு 2 குன்றி எடை வெற்றிலை அனுபானத்தில் கொடுத்தால் சகல ரோகங்களும் நீங்கும்.

பிப்பிலியாதி ரசாயனம் 
:- திப்பிலி 16 பலம், மிளகு 4 பலம், கண்டுபாரங்கி 4 பலம், வாய்விளக்கம் 4 பலம், சுக்கு 4 பலம்,  சீரகம் 4 பலம், சித்தி¨ரைமூலம் 2 பலம், கரிசாலைச்சூரணம் 2 பலம் மரமஞ்சள் 2 பலம், செவ்வியம் 2 பலம், மோடி 2 பலம், அயச்செந்தூரம் 2 பலம், திப்பிலிமூலம் 2 பலம், சர்க்கரை பலம் 2 பலம், தேன்
32 பலம், இவைகள் யாவையும் ரசாயனபாகமாய்ச் சமைத்டு தானியபுடமிட்டு உட்கொண்டால் காசங்கள், சுவாசங்கள், அக்கினிமாந்தம், க்ஷயங்கள், பாண்டுரோகம், அருசி, உடற்சோற்வு, விஷங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

அஸ்வகெந்தி ரசாயனம் :- அமுக்கிறாக்கிழங்கு 20 பலம் மிருதுவாக சூரணித்து பசும்பால் 4 படி, பசு நெய் 16 பலம் இவைகளை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் சூரணத்தைப்போடு சிறு தீயாக சுண்டக்காய்ச்சி அதில் 10 பலம் சர்க்கரையைப்போட்டு இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, ஏலக்காய், கொத்தமல்லி,
திரா¨க்ஷ, கர்சூரக்காய், சந்தனம், ஜாதிக்காய், கிச்சிலிக்கிழங்கு மூங்கிலுப்பு, திரிகடுகு, குருவேர், இலவங்கம், மோடி, செவ்வியம் சித்திரமூலம் இவைகளை தினுசுக்கு கால்பலம் விகிதம் சூரணம் எடுத்துக்கொண்டு மேற்சொல்லிய ரசாயனத்தில் கலக்கி லேகியபக்குவமாக கிளறி 8 பலம் தேன் சேர்த்து பிசைந்து ஆறிய பிறகு எடுத்து 15 நாட்கள் தானிய புடமிட்டு காலை மாலை நெல்லிக்காய் அளவு அருந்திவர, சகல க்ஷயங்கள், ரத்தபித்தங்கள், ஆமலபித்தம் காமாலை, பாண்டு, அஸ்திகதசுரம், புராணசுரங்கள் இவைகளை
நாசஞ்செய்யும். அக்கினிதீபனம், தேஜசு, பலம், (கர்ப்பிணிஸ்திரிகள் கிழவர், பாலர்கள் இவர்களுக்கு) சுகுமாரத்துவம் அக்கினிபுஷ்டி க்ஷ£ணித்த வீரியவிரித்தி இவைகளை உண்டாக்கும்.

க்ஷயங்களுக்கு தாளகசிந்தூரம் :- சுத்திசெய்த தாளகச்சூரணம் சிலாச்சத்துச்சூரணம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு செம்பருத்தியிலை சாற்றினால் மூன்று நாள் அரைத்து மூசையில் வைத்துமூடி சீலை
மண் செய்து புடமிடவும். இப்படி 1 முறை புடமிட்டால் தாளக மானது ரத்தம்போல் சிகப்பான சிந்தூரமாகும்.

ஆடாதோடை இலை சுரசத்தில் கொடுத்தால் சிலேஷ்ம கஷயங்கள் போம். நெரிஞ்சல் வேர் ரசத்தில் கொடுத்தால் ரத்த கஷயங்கள் நீங்கும். இளநீரில் கொடுத்தால் வாதசிலேஷ்ம கஷயங்கள் நீங்கும்.

கடுக்காய் சூரணத்தில் கொடுத்தால் சுவாசகஷயங்கள் போம். திப்பிலி சூரணத்தில் கொடுத்தால் காசகஷயங்கள், சர்க்கரை தேன் இவைகளுடன் கொடுத்தால் பித்தகஷயங்கள் நொச்சியிலை சூரணத்தில்
கொடுத்தால் கபத்தினால் உண்டான சுவாசம் நாசமாகும்.வெண்ணெய்யுடன் சாப்பிட்டால் முறைக்காய்ச்சல்கள் போம். மருதம் பட்டை சூரணத்தில் கொடுத்தால் சுக்கிலமேகம் நீங்கும்.

பருத்திவிதை சூரணத்துடன் கொடுத்தால் வெகு மூத்திர ரோகங்கள் நீங்கும். சங்கு பற்பத்துடன் கொடுத்தால் கிருமி, குட்டம் நீங்கும். நாயுருவியிலைச்சாற்றில் கொடுத்தால் குதரோகம் நீங்கும். மாதுளம்பூச்சாற்றில் கொடுத்தால் விக்கல் கிரஹணி இவைகள் நீங்கும்.

கஷ்யங்களுக்கு வராளாதி லேகியம் :- இலவங்கம் 20 பலம், பஞ்சலோகங்கள் 20 பலம், மிளகு 20 பலம், வாளுலவை அரிசி 4 பலம், இவைகளை ஒன்றிரண்டாக இடித்துக்கொண்டு 8 படி ஜலம் விட்டு, அதில் இரண்டு படியாகக் கியாழம் காய்ச்சி வடிகட்டி அதில் 25 பலம் பழய வெல்லம் கலந்து மறுபடியும் வடிகட்டி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பாகுபதம் வரும்போது 121/2பலம் அஸ்வகந்திக்கிழங்கை பாலில் வேகவைத்து உலர்த்தி இடித்து வஸ்திராயஞ்செய்த சூரணத்தைப் போட்டு கிளறி ஆறிய பிறகு தேன் 16 பலம் கலந்து தானியபுடமிட்டு நெல்லிக்காய் அளவு காலைமாலைகொடுத்து வந்தால் காசங்கள் சுவாசங்கள், கஷயங்கள், இருமல் வியாதிகள் சுரங்கள், பூதகிரஹங்கள் நீங்கும். 15 நாள் கொடுத்தால் ராஜயஷமரோகம், உதரரோகம், அக்கினிமாந்தம் இவைகள் நீங்கும். வீரியம் பல ஆயுசு முதலியது விரித்தியாகும்.

க்ஷயங்களுக்கு ஷீந்திரா ஹரிதகிலேகியம் :-கண்டங்கத்திரி வேர், சீந்தில்கொடி, ஆடாதோடை, தசமூலங்கள், சித்திரமூலம் பேயாவரைவேர், ஆமணக்குவேர், சிற்றாமுட்டி, நொச்சிவேர்,
முன்னைவேர், கண்டுபாரங்கி, செவ்வியம், சுக்கு இவைகள் தினுசு 1-க்கு 25 பலமாகச்சேர்த்து இடித்து அதில் 5 படி ஜலம் விட்டு 8-ல் ஒரு பாகமாக சுண்டக்காய்ச்சி பழையவெல்லம் ஒண்ணேகால் வீசை கலந்து வடிகட்டி வைத்துக்கொள்க. பிறகு நூறு கடுக்காயை கோமூத்திரத்தில் வேகவைத்து அதில் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு அந்த தோல்களை கியாழத்தில் போட்டு நொச்சியிலை கரிசனாங்கண்ணி யிலை, மஞ்சள், அடாதோடை, இஞ்சி, நெல்லிக்காய், பிரமியிலை, சீந்தில்கொடி, எருக்கன், கண்டங்கத்திரி, சாரணை
இலை, இவைகளின் சாறுகள் ஒவ்வொன்றும் 2 படி சேர்த்து வேறு பாண்டத்தில் போட்டு காய்ச்சி அந்த கியாழத்திலிருக்குந் திப்பியை எடுத்து இவைகளை எல்லாம் ஒன்றாகச்சேர்த்து அதில் ஏலக்காய், இலவங்கப்பத்திரி, இலவங்கம், இலவங்கப்பட்டை,மிளகுகோரைக்கிழங்கு, வாய்விளக்கம், ஓமம், சீரகம், கருஞ்சீரகம், சுக்கு சித்திரமூலம், பெருங்காயம், கோஷ்டம், திரிபலை, இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், பீடாலவணம், செவ்வியம், கர்க்கடகசிங்கி கண்டுபாரங்கி, தேவதாறு, வசம்பு இவைகள் தினுசுக்கு 2 பலம் விகிதஞ்சூரணித்ததையும், ஒரு படி நெய்யையும் சேர்த்து லேகிய பாகமாய் செய்து ஆறிய பிறகு பூபதிரசம் 2 பலமும் தேவையான அளவு தேனும் கலந்து பாண்டத்தில் வைத்து தானியபுடமிட்டு ஒரு மாதமாகிலும் அல்லது ஒரு பஷமாவது கொடுத்தால் ஊர்த்து வசுவகாசரோகங்கள், இருதயரோகங்கள், பலக்ஷயம், கஷயங்கள்
பன்னிரண்டு விதங்கள் நாசிகாதிமுரோகங்கள், குன்மங்கள், பீலிகம், மஹொதரங்கள், பாண்டு, கிருமிரோகங்கள், வாந்தி, விக்கல் சுரங்கள், அக்கினிமாந்தம், வாததிமிர்கள், நானாவிதசூலைபகந்தரம்
அருசி இவைகள் நீங்கும்.

க்ஷயங்களுக்கு பர்பூராதி லேகியம் :- கருவேலன்பட்டைஆடாதோடை, முள்ளங்கத்திரிவேர், முள்ளுஅழவணம்வேர்நொச்சிவேர், முன்னைவேர், தண்ணீர்விட்டான்கிழங்கு இவைகளை தினுசுக்கு 20 பலம் சேர்த்து இடித்து 4 படி ஜலம் விட்டு, எட்டில் ஒரு பாகமாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அந்த கியாழத்தில் 1 வீசை பழைய வெல்லம் சேர்த்து அடுப்பேற்றி இதில் வேலங்கொழுந்துச்சாறு ஆடாதோடை யிலைரசம், முள்ளங்கியிலை சாறு அழவனை யிலை ரசம், முன்னையிலை ரசம், தண்ணீர் விட்டான்ரசம் கரிசனாங்கண்ணிச்சாறு, வல்லாரையிலைச்சாறு, சாரணையிலைரசம்
பாவல்யிலைச்சாறு இந்த இலைச்சாறுகள் பிரத்தியேகம் 2 படி விகிதஞ்சேர்த்து காய்ச்சி அதில் சக்திசாரம், யாவாஷாரம், வெண்காரம், திரிகடுகு, திரிசாதங்கள், சிறுநாகப்பூ, தும்பராஷ்டம், திரிபலை தேவதாருவேர், அல்லது ஆமணக்குவேர், சித்திரமூலம், மஞ்சள் கண்டுபாரங்கி, கடுகு, வசம்பு, கரிசனாங்கண்ணிவேர், மரமஞ்சள், அதிவிடயம், திப்பிலிமூலம், மாதுளம்பழம், பஞ்சலவணங்கள் இவை கள் எல்லாம் தனித்தனி கால்பலம் எடைச்சூரணம் கலந்து லேகியபதமாகக்கிளரி, ஆறிய பிறகு ஒரு படி தேன் கலந்து தானியபுடமிட்டு கழற்சியளவு சாப்பிட்டு வந்தால் மகாஷயங்கள், பஞ்ச விதங்க ளான சுவாசங்கள், கபங்கள், தாபம், விக்கல், சொள்ளு வடிதல், வாந்தி, பாண்டு, மேகம், மஹொதரம், பித்தம், நாபியில் நோய், மூர்ச்சை, நடுக்கல் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

க்ஷயங்களுக்கு வாசாதி லேகியம் :- ஆடாதோடை சமூலம் உத்தாமனி சமூலம், கோரைசமூலம், முள்ளங்கத்திரி வேர்,  நெரிஞ்சிவேர், கண்டங்கத்திரிவேர், இவைகள் தினுசுக்கு 20 பலம் சேர்த்து 4 படி ஜலத்தில் போட்டு, எட்டில் ஒரு பாகமாக காய்ச்சி வடிகட்டி அதில் 50 பலம் பழையவெல்லம் கலந்து மீண்டும் வடிகட்டி அதில் ஆடாதோடைச்சாறு உழக்கு,  உத்தாமனி யிலைரசம்உழக்கு, எருக்கன் சமூலம்யிலைரசம்உழக்கு,
சீந்தில்கொடிச்சாறு உழக்கு, பேயாவரையிலை ரசம் உழக்கு, நொச்சிவளை யிலை ரசம் உழக்கு, பசும்நெய் உழக்கு, எண்ணெய் உழக்கு, இவைகள் யாவையுஞ்சேர்த்து லேகியபாகமாக கிண்டி, கர்க்கடகசிங்கி, கண்டுபாரங்கி, இவைகள் இரண்டும் 2 பலங்கள், திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சுக்கு, வசம்பு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, இலவங்கம் சிறுநாகப்பூ,தாளிசபத்திரி, மிளகு, தேவதாறு, திரிபலை, இவைகள்தினுசு 1 க்கு 1 பலம் விகிதம் சூரணத்தை இந்த லேகியத்தில் போட்டு தேன் 16 பலஞ்சேர்த்து கலந்து எண்ணெய் பாண்டத்தில் வைத்து தானியபுடமிட்டு, தான்றிக்காய் அளவு சாப்பிட்டால் மகா
க்ஷயங்கள், காசங்கள், சுவாசங்கள், ஹிருத்துரோகம், குன்மம், விக்கல், மூலரோகம், பீலிகம் இவைகள் நீங்கும்.

க்ஷயங்களுக்கு கூழ்மாண்ட கிருதம் :- கலியாணபூசினிக்காய் ரசம் 16 பலம், பழுத்தநெல்லிக்காய் ரசம் 16 பலம், ஆடாதோடை யிலைரசம் 16 பலம், தண்ணீர்விட்டான்கிழங்குரசம் 16 பலம், நிலப்பூசனிக்கிழங்குரசம் 16 பலம், கரும்புரசம் 16 பலம், பால்16 பலம், நெய் 16 பலம் இவைகளைக் கலந்து அதில் திரிகடுகு ஜாதிக்காய், மூங்கிலுப்பு, அதிமதூரம், கருஞ்சீரகம், ஏலக்காய், இலவங்கம் இலவங்கப்பத்திரி, ஜடமாஞ்சி, கோஷ்டம், கோரைக்கிழங்கு, சிகப்புசந்தனம், சந்தனத்தூள், வேட்டிவேர், சித்தரத்தை, சதாப்பூ, சிற்றாமுட்டி, போராமுட்டி, நாகமுட்டி இவைகளை வகைக்கு 1/2 தோலா எடை சூரணித்து அந்த சூரணத்தை மேற்சொல்லிய கிருதத்தில் கலந்து தீபாக்கினியால் கிருதபாகமாகச்சமைத்து ஆறிய பிறகு 8 பாகம் தேன் கலந்து தினம் 1/2 பலம் சாப்பிட்டால் க்ஷயங்கள், இருமல்கள், சுரங்கள், மூர்ச்சைகள், ரத்தபித்தம், மூத்திர காதங்கள் வெகுமூத்திரம், இருதயரோகங்கள், ரத்தகுன்மம், யோனிதோஷம் ரஜோதோஷம் இவைகள் நிவர்த்தியாகும்.

தேகபுஷ்டி, பலம், காந்தி, வீரியவிருத்தி, முதலியவைகள் விருத் தியாகும். மேலும் மலடு நீங்கி பிள்ளைப்பேரு உண்டாகும்.

க்ஷயங்களுக்கு சுவாசா கிருதம் :- ஆடாதோடைரசம், சீந்திலி கொடிரசம், பேயாவரைரசம், கரிசனாங்கண்ணிரசம், கண்டங்கத்திரி இலைரசம் இவைகள் ஒவ்வொன்றும் 16 பலம் எடையாகச்சேர்த்து  அதில் 32 பலம் நெய் கலந்து இவைகளுடன் கண்டுபாரங்கி, வாய்விளங்கம், திரிபலை, சன்னரஷ்டம், திரிகடுகு, யாவக்ஷ¡ரம், கர்க்கடகசிங்கி, இவைகள் யாவும் சம எடையாகச் சூரணித்து  4 பலஞ்சூரணஞ்சேர்த்து பக்குவமாக நெய் பதமாக காய்ச்சிஅருந்த க்ஷயங்கள், காசங்கள், சுவாசங்கள், ஹிருத்துரோகம், பஞ்சாசுரங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

அசுவகந்நாதி கிருகம் :- அமுக்கிறாக்கிழங்கு 100 பலம், சிற்றா முட்டி, நெரிஞ்சில், வெள்ளைச்சாரணை, இவைகள் தனித்தனி 10 பலம் தண்ணீர் விட்டான் கிழங்கு, வெள்லைநிலப்பூசினி, சீந்தில் கொடி, யாவாதானி, மொச்சை, இவைகள் தனித்தனி 6 பலம் இவைகள் யாவையும் சேர்த்து 7 படி ஜலம் விட்டு ஆறிலொன்றாக
கியாழம் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 24 பலம் நெய், 48 பலம் பால் சேர்த்து கிருதபக்குவமாக அதில் திரிசாதம், திரிகடுகு சிற்றரத்தை, அதிமதூரம், கருங்காலி, வெட்டிவேர், வெள்ளை நிலப்புசினி, திரா¨க்ஷ, ஓமம், மஞ்சிஷ்டி, வருத்தப் பெருங்காயம் இவைகளை அரை பலம் பிரமாணம் சூரணித்து சேர்த்து மிருது
அக்கினியால் சமைத்து அந்த நெய்யின் எடைக்கு பேர்பாதி வெல்லத்தைச்சேர்த்தால் சித்தமாகும். பிறகு தானியபுடத்தில் ஒரு மாதம் வைத்துக்கொடுத்தால் மகாவியாதிகள் 11 வித க்ஷயங்கள், ஊருஸ்தம்பவாதம், ரத்தபித்தம், புராணசுரம், தாகம் முதலியவைகள் நீங்கும்.

க்ஷயங்களுக்கு ஆர்த்திரத கிருதம் :- 64 பலம் இஞ்சி ரசம், 64 பலம் பால், 64 பலம் நெய், ஓமம், இந்துப்பூ, கருஞ்சீரகம், சீரகம், பெருங்காயம் இவைகள் வகைக்கு 1 பலம் வீதம் சூரணித்து அதில் போட்டு கிருதப்பக்குவமாக சமைத்துக் கொடுத்தால் க்ஷயங்கள், வீக்கம், மூலம், கிராணி இவைகள் நிவர்த்தியாகும்.

பராசர கிருதம் :- அதிமாதூரம், சிற்றாமுட்டி, சீந்தில்கொடி, பஞ்சமூலம் இவைகள் வகைக்கு பலம் 10 வீதம் 2 படி நீர்விட்டு எட்டொன்றாய் குநீரிட்டு அதில் நெல்லிச்சாறு, கரும்புரசம் நிலபனங்கிழங்கு ரசம், நெய், பால், வெண்ணெய் இவைகள் தனித்தனி கியாழத்திற்கு சமமாகச் சேர்த்து திரா¨க்ஷ தாளிசப்பத்திரி கடுக்காய் இவைகள் 1 பலம் வீதம் சூரணித்துச்சேர்த்து கிருதபக்குவமாக சமைத்து இதை நசியம், பானம்,
வஸ்திகர்மம் இவைகள் செய்தால் ராஜயக்ஷமம், பாண்டு ரோகம் ஹலீமகம் ரத்தபித்தம் இவைகள் நீங்கும். லேபனம் செய்வதால் துஷ்ட விஷங்கள், எரியுபடியான விரணங்கள் இவை நிவர்த்தியாகும்.

ஜாலாத்திய கிருதம் :- 1024-தோலா ஜலத்தில் திப்பிலி,சிகப்பு சந்தனம். ஒதியன்பட்டை, குறுவேர், வெட்டிவேர், பற்பாட கம் சுக்கு நிலவேம்பு. அதிமதுரம், கொத்துபுங்கன், நீலோத்பலம் கோரைக்கிழங்கு, வெட்பாலை, சுக்கு, கடுகுரோகணி, தராசுக்கொடி, தால்சிந்தி, ஆடாதோடை வேர், இவைகளை தனித்தனி 2-தோலா இடித்துப்போட்டு ஜலத்தில் 4-ல் ஒன்றாகக் கியாழமிட்டு அந்தகியாழத்திற்கு சமமாக ஆட்டுப்பால், 16-பலம் நெய் சேர்த்து
கிருதபக்குவமாக காய்ச்சிக் கொடுத்தால் க்ஷயங்கள் திரிதோஷ ஜந்தி ரத்தபித்தம், சுவாசசகாங்கள், க்ஷதக்ஷயங்கள், தாகம், சோகம், இவைகளை நாசஞ் செய்யும்.

க்ஷயங்களுக்கு பிப்பல்யாசவம் :- திப்பிலி, மிளகு, செவ்வி யம், மஞ்சள், சித்திரமூலம், கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், கொட்டைப்பாக்கு, லோத்திரம், சுக்கு, நெல்லித்தோல், முசுமுசுக்கை, வெட்டிவேர், சந்தனம், கோஷ்டம், இலவங்கம், ஜடாமாஞ்சி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி, கொன்னைவேர், சிறுநாகப்பூ இவைகள் தனித்தனி அரைபலம் எடைவிகிதஞ்சேர்த்து மிருதுவாகச் சூரணித்து 512-பலம் சலத்தில் போட்டு அதில் 300-பலம் வெல்லம் போட்டு காட்டாத்திபூ 20-பலம், திரா¨க்ஷ 60-பலம் சேர்த்து மண்பாடத்தில் வைத்து அந்த பானை வாயைமூடி ஒருமாதமாகிலும் அல்லது ஒரு பக்ஷமாகிலும் வைத்து பிறகு தேகபலத்தைக் கண்டு அருந்திவர க்ஷயங்கள், குன் மோதரம், காசம், பாண்டு, மூலவியாதி, இவைகளை சீக்கிரமாய் நாசஞ் செய்யும்.

திராக்ஷ¡சவம் :- திரா¨க்ஷ 50-பலம், 512 பலம் சலத்தில்போட்டு, நாலிலொன்றாய் கியாழம் வைத்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 200 பலம் பழயவெல்லம், 20-பலம் காட்டாத்திப்பூ சூரணம் போட்டு, நெய்யில் ஊறிய பழயமண்பாண்டத்தில் வைத்து அதில் வாய்விளங்கம், புங்கன், திப்பிலி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, மிளகு இவைகள் தனித்தனி ஒருபலம் சூரணம்போட்டு ஒருநாள் சூரியப்புடமிட்டு பிறகு தேக தத்டுவத்தை அறிந்துகொடித்தால், காசசுவாசங்கள், களரோகங்கள், ராஜயக்ஷ£மம், உரக்ஷதம் இவைகளை நாசமாக்கும்.

க்ஷயங்களுக்கு சூரியபிரபாவ மாத்திரைகள் 
:- மரமஞ்சள், சுக்கு, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், சித்திரமூலம், வசம்பு, மஞ்சள், மருததோன்றி, புங்கன், சீந்திகொடி, தேவதாரு, அதிவிடயம், சிவதை, கடுகுரோகணி, கொத்தமல்லி, ஓமம், யவக்ஷ¡ரம், வெண்காரம், இந்துப்பு, பிடாலவணம், காசலவணம், ஆனைதிப்பிலி, செவ்வியம், தாளிசப்பத்திரி, திப்பிலிமூலம், ஜடாமாஞ்சி, நிலவேம்பு, கண்டுபாரங்கி, தாமரைத்தண்டு, சீரகம், சாதிக்காய், வெட்பாலை, பட்டை இவைகள் தனித்தனி ஒரு தோலா, திரிப்பலை 20-தோலாசிலாஜித்து 20-தோலா குங்கிலியம் 8-தோலா, உலோகச் செந்தூரம் 28-தோலா, சுவர்ணமாக்ஷ¢கம் 8-தோலா, சர்க்கரை 20--தோலா இலவங்கப்பட்டை, மூங்கிலுப்பு, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், இவைகள் தனித்தனி 4-பலம் இவைகளை சன்னமாக சூரணித்து, அதில் தேன், நெய் கலந்து லேகியபாகம் செய்து அதில் தோலா
எடை உருண்டைகள் செய்யவும். இதை யுட்கொண்டால் க்ஷயங்கள், காசங்கள், உரக்ஷதரோகம், சுவாசரோகம், பாண்டுரோகம், காமாலை, குன்மரோகம், கட்டிகள், சூலைகள், உதிரரோகங்கள், பெண்களின் க்ஷயரோகங்கள், கிருமிரோகங்கள், குட்டரோகங்கள் மூலங்கள், விஷசுரங்கள், கிராணிகள், மூத்திரபந்தம் இவைகளைப்
போக்கும்.

லகுசிவ மாத்திரைகள் :- சுத்திசெய்த சிலாஜித்து 8-பலம்,வெட்பாலைப்பட்டை, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், வேப்பன்பட்டை, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு இவைகளின் கியாழத்தில் சிலாஜித்தை 10-நாள் அரைத்து அதில் கற்கண்டுபலம் 8, திப்பிலி, நெல்லிதோல், மூங்கிலுப்பு, கர்கடகசிங்கி இவைகள் தனித்தனி 1-பலம், கண்டங்கதிரிசமூலன் 1-பலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, இவைகள் தனித்தனி 2-பலம்,  இவைகளை சேர்த்து சூரணித்து தேன் கலந்து சிறு கடுக்காயளவு மாத்திரைகள் செய்து அதில் 1 மாத்திரை கொடுத்து பிறகு பால் அருந்தவும். இதனால் க்ஷயம், பாண்டு, குட்டம், பிலீயம், தமரகம், மூலம், பகந்தரம், மூத்திரகிருச்சிரம் இவைகள் நீங்கும்.

திராக்ஷ¡தி சூரணம் :- திரா¨க்ஷ, வெள்ளை அல்லிக்கிழங்கு, அதிமதுரம், பேரீச்சம்பழம், மூங்கிலுப்பு, நெல்லிவற்றல், கோரைக் கிழங்கு, சகதேவி, திப்பிலி, ஏலக்காய், இலவங்கம், சிறுநாகப்பூ, இலவங்கப்பத்திரி, வாய்விளங்கம், கொத்தமல்லி, நெரிஞ்சல்காய் கள், சுக்கு, அதிவிடயம், கர்ப்பூரம், தாளிசப்பத்திரி இவைகள் சம எடையாக யெடுத்து சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து இதற்கு சமமாக சர்க்கரை கலந்து காய்ச்சிய நெய்யில் கொடுத்தால் க்ஷய ரோகங்கள் நீங்கும்.

ஏலாதி சூரணம் :- ஏலக்காய், இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, இலவங்கம், இவைகள் தனித்தனி 1-பாகம், கர்ச்சூரக்காய் 2-பாகம், திரா¨க்ஷ, அதிமதுரம், திப்பிலி இவைகள் தனித்தனி 4-பாகம், இவைகள் யாவையும் சூரணித்து 4-பாகம் சர்க்கரை சேர்த்து தேனுடன் கலந்து அருந்திவர சகலவித க்ஷயரோகங்களும் நீங்கும்.

அசுவகந்தி சூரணம் :
- அமுக்குறாகிழங்கு 10-பலம், சுக்கு 5-பலம், திப்பிலி 2 1/2-பலம், மிளகு 1 1/4-பலம், ஏலக்காய், இலவங்கம், இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, கண்டுபாரங்கி, தாளிசப்பத்திரி, கிச்சிலிக்கிழங்கு, சாதிக்காய், ஜடாமாஞ்சி, கோரைக்கிழங்கு, சிற்றரத்தை, கடுகுரோகணி, கோஷ்டம், இவைகளை 1/2 பலம் சூரணித்து சேர்த்து சூரணங்கள் யாவுக்கும் சமமாக சர்க்கரை கலந்து காலையில் வெந்நீரில் சாப்பிடவேண்டியது. வாதபித்தக்ஷயங்களில் ஆட்டுநெய் அல்லது பசும் நெய்யில் சாப்பிடவேண்டியது. சிலேஷ்ம க்ஷயத்தில் தேனுடன் சாப்பிடவேண்டியது. மேகரோகத்தில் வெண்ணெய்யுடன் சாப்பிடவேண்டியது. மற்றும் இது மேதோரோகம், அக்கினிமந்தம், சூலை, உதரரோகங்கள்இவைகளையும் நசிக்கும்.

கர்ப்பூராதி சூரணம் :- பச்சைகர்ப்பூரம், தால்சின்னி, சாதிக்காய், சாதிபத்திரி இவைகள் தனித்தனி ஒருபாகம், இலவங்கம் 1-பாகம், ஜடாமாஞ்சி 2-பாகம், மிளகு 3-பாகம், திப்பிலி 4-பாகம், சுக்கு 5-பாகம், இவைகளை யொன்றாக சூரணித்து சூரணத்திற்கு சமமாக சர்க்கரை கலந்து கொடுத்தால் தாகம், க்ஷயங்கள், காசங்கள், பீநசம், வாந்தி, கண்டரோகம் முதலியவைகளும் மற்றும் அனுபான பேதங்களில் கொடுத்தால் சகலரோகங்கலும் நிவர்த்தியாகும்.

திரிகடுகு சூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய்,தானிக்காய், நெல்லிவற்றல், ஏலக்காய், ஜாதிக்காய், இலவங்கம், இவைகள் சமெடையாக சூரணித்து அந்த சூரணித்திற்கு சமமாக எ·கு பஸ்பத்தை கலந்து தேனுடன் கொடுத்தால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயங்கள், மேகங்கள், பாண்டு, சுரங்கள், மந்தாக்கினி, வீக்கம், கிறாணி இவைகள் யாவையும் நாசஞ்செய்யும்.

ராஸ்னாதி சூரணம் :- சிற்றரத்தை, பச்சைகர்ப்பூரம், தாளிசப்பத்திரி, மஞ்சிஷ்டி, சிலாஜத்து, சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், சித்திரமூலம் இவைகள் சமஎடையாக சூரணித்து வஸ்திரகாயம்செய்துசூரணித்திற்கு சமமாக லோகபஸ்பம் கலந்து தேன், நெய் இவைகளுடன் கொடுத்தால் இருமல், சுரம், உப்பிசம், ராஜயக்ஷ்மம், தோஷங்கள் இவைகளை நாசமாக்கும். பலம் காந்தி அக்கினி தீப னம் இவைகளை யுண்டாக்கும்.

ஜாதிபலாதி சூரணம் :- ஜாதிக்காய், வாய்விளங்கம், சித்திர மூலம், வங்கபஸ்பம், எள்ளு, தாளிசப்பத்திரி, சந்தனத்தூள், சுக்கு, இலவங்கம், ஏலரிசி, பச்சைகர்ப்பூரம், கடுக்காய், நெல்லித்தோல், மிளகு, திப்பிலி, மூங்கிலுப்பு இவைகள் வகைக்கு கால் பலம், ஏலக்காய், இலவங்கம், இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, இவைகள் தினு
சுக்கு 1-பலம் இவைகள் யாவையும் சேர்த்து சூரணித்து சூரணத்திற்கு சமஎடை சர்க்கரை கலந்து விராகனெடை பிரமானம் கொடுத்தால் க்ஷயங்கள், இருமல், உப்பிசம், கிரகணி, அருசி, பீனிசம், அக்கினிமந்தம் இவைகளை இடியானது பெரியமரங்களை நாசஞ்செய்வதுப்போல் இந்த திவ்விய ஔடதம் நாசஞ்செய்யும்.

லாக்ஷ¡தி தைலம் :- அரக்கு 17 பலம் இடித்து 40-சேர் ஜலத்தில் போட்டு நாலிலொன்றாகக் காய்ச்சிய கியாழத்துடன் தயிர் தேட்டை 16-சேர், என்ணெய் 4-சேர் கூட்டி காட்டுமிளகு, கோஷ்டம், மஞ்சள், தேவதாரு, அமுக்கிறாங்கிழங்கு, கோரைக்கிழங்கு, சந்தனத்தூள், சிற்றரத்தை கடுகுரோகணி பெருங்குரும்பை, முள்ளங்கிவேர், தண்ணீர்விட்டான்கிழங்கு, பேராமுட்டிவேர், அதிமதுரம் இவைகளை இடித்து வஸ்திரகாயஞ்ச்செய்து 1-சேர் சூரணம் சேர்த்து அடுப்பிலேற்றி தைலபக்குவமாக காய்ச்சி அப்பியங்கன்ம் செய்துவந்தால் க்ஷயரோகங்களில் நல்லபலனைத் தரும்.

தில தைலம் :- 512 தோலா பால், 128-தோலா எள்ளெண்ணெய் 4-தோலா அதிமதுரம் இவைகளை சேர்த்து தயிலபக்குவமாக காய்ச்ச திலதைல மென்றுபெயர். இதை குடித்தாலும் நசியஞ்செய்தாலும் தலைக்கு இட்டுக்கொண்டு குளித்தாலும் ராஜயக்ஷ்மாபாண்டுரோகம், ஊர்த்துவஜ ரோகங்கள், உன்மாதாரோகம், ரக்த பித்த ரோகம், விசர்ப்பி இவைகளைப்போக்கும்.

சந்தனாதி தைலம் :- ரக்த சந்தனம், குறுவேர், நகமென்கிற சுகந்ததிரவியம், சந்தனசூரணம், அதிமதுரம், சிலாஜித்து, தாமரை தண்டுகள், மஞ்சிஷ்ட்டி, சரள தேவதாரு, வெட்டிவேர், சவ்வாது, மஞ்சள், நன்னாரிவேர், கடுகுரோகணி, இலவங்கம், அகரு, குங்குமப்பூ, தால்சின்னி, காட்டுமிளகு, அவுரிவேர் வகைக்குப்பலம்-1 இவைகளை இடித்து சூரணித்து 4-படி எள் எண்ணெய், 16 படி தயிர் தேட்டை சேர்த்து தயிலபக்குவமாய் காய்ச்சி ஸ்னானம்செய்து வரவும். இதனால் கிரகபீடை, அபஸ்மாரம், சுரங்கள், உன்மாதங்கள், க்ஷயங்கள், ரக்தபித்தம் இவைகள் நீங்கும். பலம், ஆயுசுவிருத்தி, தேகபுஷ்டி இவைகளை யுண்டாக்கும்.

ரசதாதுவிருத்தி சிகிச்சை :- சீந்தில்கொடி, இஞ்சி, நவதானி யம் இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டாலும் அல்லது பசும் பாலைக் காய்ச்சி அதில் மிளகு சூரணம் போட்டு இரவில் சாப்பிட்டாலும் சீக்கிரம் க்ஷயரோகம் நிவர்த்தியாவதன்றி இரசதாதுவும் விருத்தியாகும்.

க்ஷய நிவாரண மாத்திரை :- நஞ்சு முறிச்சான் கல் தோலா-3/4, காரூபா தோலா-1, முத்துசிப்பி தோலா-3/4, நற்பவளம் தோலா-3/4, மூங்கிலுப்பு தோலா-1 1/2, அசல் சீந்தில் சர்க்கரை தோலா-1 1/2 இவை களைக் கல்வத்திலிட்டு 10-பலம் அப்பட்டமான பன்னீரைச் சிறிதுசிறிதாக விட்டு நன்கு அரைத்து மெழுகு பதத்தில் கடலைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்துக.வேண்டும் போது வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளையாகப் பொடித்து காய்ச்சிய பசுவின் பாலில் போட்டு அருந்திவர க்ஷயநோயில் காணும் சுரம், இருமல் முதலியன குணமாகும்.

சிலாசத்து மாத்திரை :- கற்பூர சிலாசத்தை சிறு துண்டுகளாக உடைத்து கோவையிலை சாற்றில் ஊற வைத்து மூன்று நாள் தினந்தோறும் புதிய சாற்றில் ஊறவைத்து, பிறகு கோவையிலையை அரைத்து விளக்காய் பிரமாணம் கற்கஞ்செய்து அதில் சிலாசத்து துண்டுகளை பிசறி சீலையில் சுற்றி அதன் மீது மண் சிலை செய்து 50 விறட்டியில் புடமிடவும். ஆறின பின் சிலையை உடைத்துப் பார்க்க சிலாசத்து துண்டுகள் வெளுத்து நீறியிருக்கும். இதைக் கல்வத்திலிட்டு பொடித்து இதன் எடைக்குச் சமன் திரிகடுகுச் சூரணம் சேர்த்து கோவையிலைச் சாறு விட்டு 2 ஜாமம் அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்துக.


இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை பொடித்து சிறிது பாலில் இட்டு அருந்திவர உடல் வெட்டை க்ஷயத்தில் காணும் காங்கை பித்தசுரம் முதலியன குணமாகும்.

தாளகசிப்பி பற்பம் :- சுத்திசெய்த தாளகபற்பம் 1 பலம், சுத்தி செய்த முத்துச்சிப்பி 1 பலம், சுத்திசெய்த கோழிமுட்டை ஓடு பலம் 1, இவைகளை பொடித்து கல்வத்திலிட்டு குப்பை மேனிஇலைச்சாறு விட்டு, 4 ஜாமம் நன்கு அரைத்து வில்லை செய்துலர்த்திஅகலிலடக்கி சீலைமண்செய்து 30 வறட்டியில் புடமிட பற்பமாகும். சரிவர பற்பமாகாவிடில் மீண்டும் குப்பை மேனிஇலைச்சாற விட்டு அரைத்து இரண்டொரு பற்பமிட நல்ல பற்பமாகும். அரைத்துபத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு 1/2 குன்றி எடை தினம் இருவேளையாக தனியாகவாவது அல்லது பவள பஸ்பம் கூட்டியாவது நெய் வெண்ணெய், பால் முதலிய அனுபானங்களில் கொடுத்து வர இருமல், ஈளை, காசம், க்ஷயம் முதலியவைகள் குணமாகும்.

சுவர்ண அயச்செந்தூரம் 
:- சுத்திசெய்த அயத்தூள் பலம் 5,தங்கசுருள்ரேக் வராகனெடை 1, சுத்திசெய்த சங்கு பாஷாணம் வராகனெடை 1/4, சுத்திசெய்த வாலைரசம் வராகனெடை 6, சுத்தி செய்த நெல்லிக்காய் கந்தக வராகனெடை 10 இவைகளை முறைப்படி பொடித்து கல்வத்திலிட்டு பழச்சாறு விட்டு ஏழுநாள் அரைத்து
மெழுகுபதத்தில் பட்டாணியளவு மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி குப்பியில் செய்து சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் வைத்து எரித்து எடுக்க செந்தூரமாகும். அதைப்பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு 1/4 1/2 குன்றி பிரமாணம் தினம் 2 வேளை வீதம் தேன் அல்லது அஸ்வகந்நாதி லேகியம், சாலாமிசிரி லேகியம்
முதலியவற்றுடன் 1/2 அல்லது 1 மண்டலத்துடன் அருந்த பாண்டு சோபை க்ஷயம், மதுமேகம் முதலிய நோய்கள் குணமாவதுடன் ரத்தவிரித்தி தாதுவிரித்தி, நரம்பு பலம் முதலியன ஏற்படும்.

வெள்ளி பற்பம் :
- சுத்திசெய்த ரசம் பலம் 1, சுத்திசெய்தவெள்வங்கம் ரசம் பலம் 1, இவையிரண்டையும் தொந்தித்து, இத்துடன் 2 பலம் குஞ்சு பொரித்த கோழிமுட்டை யோட்டை கூட்டில் கல்வத்தி
லிட்டு * படிகார திராவகம் விட்டு 4 ஜாமம் அரைத்து வில்லை செய்துலர்த்தி மூசையிலிட்டு ஊதியாகிலும் அல்லது அகலிலடக்கி பெரும்புடமாகிலும், போட்டெடுக்கச் சுன்னமாகும், இந்தச் சுன்னத்திற்கு சமஎடை சுத்திசெய்த வெள்ளிச்சரிகையை சிறு துண்டுகளாகக்கத்தரித்துப் போட்டு கலந்து கல்வத்திலிட்டு படிகாரத்
திராவகம் விட்டு 4 ஜாமம் நன்கு அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண் செய்தூலர்த்தி 50- 60 வறட்டியில் புடமிடவும். இப்படி படிகாரத்திராவகம் விட்டு அரைத்து 3 புடமிட நல்ல பற்பமாகும். இதில் வேளைக்கு 1/2 குன்றி எடை செய்யிலாவது அல்லது சலமிசிரி லேகியத்துடனாவது ஒரு மண்டலம் சாப்பிட தாது நஷ்டம் இந்தீரியம் நீர்த்துப்போதல், கைகால் அசதி பலயீனம், எலும்புரிக்கி, க்ஷயம், பெரும்பாடு வெள்ளை வெட்டை முதலியன நீங்கி நல்ல பலம் ஏற்படும்.

க்ஷயகுலாந்தக பற்பகம் :- சுத்திசெய்து பொடியாக கத்தரித்த தங்கச்சுருள் ரேக் வராகனெடை 11/2, சுத்திசெய்த பூரம் தோலா 1/2 கெட்டிமுத்து வராகனெடை 1, பவளம் வராகனெடை 1, அப்பிரகச்செந்தூரம் வராகனெடை 11/2, இவைகளை வரிசைக்கிரமாக ஒன்றன் பின் ஒன்றனாக சேர்த்து நன்கு அரைத்து பின்பு சித்திரமூலம் இவைகளைச்
சாறு விட்டு 4 ஜாமம் நன்கு அரைத்து விலலை செய்து உலர்த்தி அகலில டக்கி, சீலைமண் செய்து 40 வறட்டியில் புடமிட பற்பமாகும். இதில் வேளைக்கு 1-2 அரிசிப்பிரமாணம் தினம் 2 வேளை தேன் நெய் அல்லது
தக்க அனுபானங்களில் கொடுத்து வர எலும்புருக்கி க்ஷயம், மதுமேகம், காசம், கஷயத்தில் காணும் சுரம், முதலியவைகளை குணமாக்கும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக