வியாழன், ஜனவரி 14, 2010

அபஸ்மார ரோக (வலிப்பு நோய் ) சிகிச்சைகள்

அபஸ்மாரரோக சிகிச்சை

அபஸ்மார ரோகமென்றால் கண்களுக்கு இருள் கம்மியதுபோல் தோணுதல், விகாரமாக கண்களை உருட்டிக்கொண்டு கைகால்களை நெட்டி ஒடித்தல், தோஷம் அதிகரிப்பதினால் அறிவில்லாமல் போகுதல் இக்குணங்களை யுடையது. மற்றும் இதில் மயக்கம், மூர்ச்சை, ஸ்வர்ணையற்றிருத்தல், இசிவு முதலிய குணங்களும் ஏற்படும்.

அபஸ்மாரத்திற்கு பிரமதண்டு கிருதம் :- பிரமதண்டி, சுவகரந்தை, வசம்பு, கோஷ்டம், கரும அக்குக்கிழங்கு, திப்பிலி, இந்துப்பு இவைகளை சமஎடையாய் சூரணித்து பிரமதண்டி ரசத்தினால் 21 முறை அரைத்து உருண்டைகள் செய்து அதற்கு நான்கு பங்கு நெய், நெய்க்கு நாம்கு பங்கு பிரமதண்டிரசத்தை கலந்து கிருதபதமாய் காய்ச்சி கொடுத்தால் அபஸ்மாரம் உன்மாதம் முதலிய சகலரோகமும் சீக்கிரமாய் நிவர்த்தியாகும்.

பித்த அபஸ்மாரத்திற்கு மதுக்கிருதம் :- அதிமதுர சூரணம் 2-பலம், 256-பலம் நெல்லிக்காய் ரசத்தில்கொட்டி, நெய் 32-பலம் கலந்து நெய்பதமாய் காய்ச்சி கொடுத்தால் பித்தத்தினாக் உண்டாகிய அபஸ்மாரரோகம் நிவர்த்தியாகும்.

வாதபித்த அபஸ்மாரங்களுக்கு காசகிருதம் :- காசதருப்பை, கரும்பு இவைகளின் இரசங்களுக்கு எட்டுபங்கு அதிகமாய் நிலப்பூசினி ரசத்தை கலந்து அதில் 32-பலம் நெய், வாசனை திரவியங்கள் வகைக்கு 1/4-பலம் விகிதஞ் சூரணித்து சேர்த்து நெய்ப்பதமாய் காய்ச்சி கொடுத்தால் வாதபித்த அபஸ்மார ரோகங்கள் நீங்கும்.

கபாஸ்மாரத்திற்கு வாசாதி கிருதம் :- வசம்பு, கொன்னை, கரி வேப்பிலை, நெல்லிவற்றல், பெருங்காயம், கோஷ்டம், நெரிஞ்சல் இவைகளின் கற்கத்திற்கு சமம் நெய் கலந்து நெய்ப் பதமாய் காய்ச்சி கொடுத்தால் வாதசிலேத்தும அபஸ்மாரங்கள் நிவர்த்தியாகும்.

கல்யாண சூரணம் :- சுக்கு, திப்பிலி. மிளகு, செவ்வியம்,சித்திரமூலம், திரிபலை, பிடாலவணம், இந்துப்பு, வாய்விளங்கம், புங்கன், ஓமம், கொத்தமல்லி, சீரகம் இவைகளை சமஎடையாய் சேர்த்துச் சூரணித்து திரிகடிபிரமாணம் வெந்நீருடன் சாப்பிட்டால் வாதசிலேஷ்மரோகம், அபஸ்மாரம், உன்மாதம் இவைகள்
நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.

அபஸ்மாரத்திற்கு நசியங்கள் :- திரிகடுகு, சித்திரமூலம், கார்த்திகைகிழங்கு, தும்மட்டிவேர், வசம்பு, இலுப்பைவிரை, வட்டத்திருப்பி, சுத்திசெய்த தாளகம், நாபி, அழிஞ்சல், சர்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம் இந்த பதினைந்து தினுசுகளை சமஎடையாய் சூரணித்து கல்வத்திலிட்டு நொச்சிஇலைரசம், புளிஇலைரசம், இஞ்சிரசம் இவை
களுடனாவது அல்லது எருக்கன்வேர் ரசத்தினாலாவது அரைத்து தலை தொங்கும்படியாய் கட்டிலின்மீது படுக்கப்போட்டு 4-நாள் இதை நசியஞ்செய்தால் அபஸ்மாரம், ஹிருதயரோகம், வாதரோகம் தனுர்வாதம், கிரஹணி தோஷம், உன்மாதம், சந்நிபாதம், காக்கைவலி, முயல் வலி, முதலியநோய்கள் தீரும்.
தும்மட்டிவேரை காடியால் அரைத்து நசியஞ்செய்தால், அயன்மாதம், உன்மாதம், பூதபிரேதங்கள் நிவர்த்தியாகும்.

இந்த நசியத்தை ஆறு தடவை போடவேண்டியது. அபஸ்மாரம் உன்மாதம் இவைகளின் சாத்தியம் அசாத்தியத்தை அறிந்து சாத்தியமானதற்கு சிகிச்சைகள் செய்யவேண்டியது.

மேற்கூறிய அவுஷங்கள் கஷ்டசாத்தியமான அபஸ்மார உன்மாத ரோகங்களையும் நிவர்த்தியாகும்.

அபஸ்மாரம் உன்மாதம் இவைகள் நிவர்த்திக்க பஞ்சகவியம், கலியாண கிருதம், இவைகளை கொடுக்கவேண்டியது.

புத்திசாலியாகிய வைத்தியன் அபஸ்மார ரோகிக்கு வாந்தியாகும் படியான சிகிச்சை முதலில் செய்து பிறகு வாதமாயின் வஸ்தி கருமம் முதலியதும் பித்தமாகில் விரேசனங்களையும் கபமாகில் வமனம் முதலியவைகளையும் செய்யவேண்டியது.

அபஸ்மாரபத்தியங்கள் :- பழைய சிகப்புநெல் அரிசி, பச்சைப்பயறு, கோதுமை, பழையநெய், ஆமைகரி, போயாவரை ரசம் பால், பிரமதண்டி, குறுவேர், வசம்பு, பேய்புடல், கலியாண பூசினிக்காய், தித்திப்பு, மாதுழம், முருங்கைக்காய், திரா¨க்ஷ, நெல்லி வற்றல், இவைகள் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- சிந்தை, சோகம், பயம், குரோதம், கள், மீன், விருத்த அன்னம், காரம், உஷ்ணம், ஜடம், இந்த பதார்த்தங்கள் சாப்பிட்டுதல், அதிமைதுனம், ஆயாசம், சகல கீரைகள் கோவைப்பழம், உளுந்து, துவரை, தாகம், தூக்கம், பசி, இவைகளின் வேகத்தை அடக்கல் இவைகள் அபஸ்மாரரோகிக்கு அபத்தியங்கள்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக