அதோவாதஜன்னிய உதாவர்த்த சிகிச்சை :- கஷாயங்கள் சாப்பிடுதல், வியர்வை வாங்கல், அது லோமகர ஒளஷதங்கள் முதலியவற்றால் அதோவாதஜன்னிய உதாவர்த்தம் நீங்கும்.
மலநிரோதஜன்னிய உதாவர்த்த சிகிச்சை :- பேதியை உண்டாக்கும் அன்னம், ஒளஷதம், வாந்தி, அப்பியங்கனம், நீராடுதல் வியர்வை வாங்கல், வஸ்திசோதனம் இவைகளை செய்தால் மலநிரோத ஜன்னிய உதாவர்த்தம் நிவர்த்தியாகும்.
மூத்திரநிரோதஜன்னிய உதாவர்த்த சிகிச்சை :- பால், சலம் இவைகளை கலந்து குடித்தாலும் அல்லது கண்டங்கத்திரிவேர் சுர சத்தையாவது அல்லது மருதம்பட்டை கியாழத்தையாவது குடித்தால் மூத்திரநிரோதஜன்னிய உதாவர்த்தம் நிவர்த்தியாகும்.
ஜிரும்பாநிரோதஜோதாவர்த்த சிகிச்சை :- சினேகம், வியர்வை வாங்கல், இவைகளை செய்தால் கோட்டுவாயை அடக்குவதினால் உண்டான உதாவர்த்தம் நிவர்த்தியாகும். இன்னும் இதரமான வாதகார உபசாரஞ் செய்தால் தீரும்.
பாஷ்பாவறோதஜக்ஷ£த நிரோஜ் உதாவர்த்த சிகிச்சை
தண்ணீரைத்தடுப்பதினாலுண்டான உதாவர்த்தத்தில் கண்களில் ஜலத்தை விடவேண்டியது. சுபமாய் தூங்கிக்கொண்டிருப்பவன் எதிரில் சுபமான கதைகள் சொல்லவேண்டியது. தும்மலை நிரோதித்த
தினால் உண்டான உதாவர்த்தத்தில் தீக்ஷணமான பதார்த்தங்களை முகருதல் அல்லது நசியம் செய்தல், சூரியனை பார்க்குதல் முதலிய உபாயங்களினால் தும்மல் வரச்செய்து வியர்வை வரச்செய்ய வேண்டியது.
உத்காரசர்திநிரோத ஜோதாவர்த்த சிகிச்சை :- ஏப்பத்தை நிரோதித்தலினாலுண்டான உதாவர்த்தத்திற்கு சிநிக்த பதார்த்தல் களை நெருப்பு மீது வைத்து புகைகுடிக்கவேண்டியது. வாந்தி நிரோதித்
தலினாலுண்டான உதாவர்த்தத்தில் வாந்தி செய்தல், விரேசனம் லங்கனம், தைலப்பியங்கனம், வஸ்தி, சுத்திசுரங்களான ஒளஷதிகளின் கியாழத்தில் நான்காவது பாகம் பால் கலந்து கொடுக்கவேண்டியது.
சர்தியாகாத ஜோதாவர்த்த சிகிச்சை :- வாந்தியை நிரோதித்தலினாலுண்டான உதாவர்த்தத்தில் நசியம், சிநேஹம் முதலியவை களை செய்யவேண்டியது. போஜனம் செய்த பிறகு வாந்தியை செய்விக்கவேண்டியது. தூம்பானம், லங்கனம், ரத்தம் வாங்குதல் முதலியவைகளை செய்யவேண்டியது.
க்ஷ£தாதுஷ்ணேந்த உதாவர்த்த சிகிச்சை :- சிநிக்த பதார்த்தங்கள், உஷ்ணபதார்த்தங்கள், லகுபதார்த்தங்கள், ருசிபதார்த்தங்கள், ஹிதசுரபதார்த்தங்கள்,சுகந்தயுக்தமான புஷ்பங்கள் இவைகளை உபயோகித்தால் பசியை அடக்குபவனாலுண்டாகிய உதாவர்த்தம் நீங்கும். சீதோபசாரங்கள், குளிர்ச்சியாயும் லகுவாயும் இருக்கும்
ஜலத்தைக் குடித்தல், தாகத்தை அடக்குவதினாலுண்டாகிய உதாவர்த்தம் நிவர்த்தியாகும்.
அலுப்பு, நித்திரை இவைகளினால் உண்டாகிய உதாவர்த்த சிகிச்சை :- சுகமாய் உட்கார்ந்திருத்தல், ரசயுக்தமான அன்னத்தை சாப்பிடுதல் இவைகளின் அலுப்பினாலுண்டாகிய உதாவர்த்தம் நீங்கும். சுகமான படுக்கையில் தூங்குதல். பிரியாமான கோஷ்டி இவைகளினால் நித்திரை அடக்குவதினாலுண்டாகும் உதாவர்த்தம் நீங்கும்.
நாராச சூரணம் :- கற்கண்டு 1 பலம், சிவதைவேர் 1/4 பலம், திப்பிலி 1/2 பலம் இவைகளை சூரணித்து தேனுடன் 1 பலம் சாப்பிடுவதற்கு முன்பு அருந்தினால் மலபந்தம், உதாவர்த்தம் இவைகள் நிவர்த்தியாகும்.
ஹிங்குவாதி சூரணம் :- பெருங்காயம் 1 பாகம், வசம்பு 2 பாகம், கோஷ்டம் 5 பாகம், சத்திக்ஷ¡ரம் 7 பாகம், வாய்விளங்கம் 9 பாகம் இவைகளை சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் அநாகரோகம், பேதி, ஹிருதயரோகம், குன்மம், அர்த்தாங்க வாதம் இவைகள் நீங்கும்.
பலசூரணம் :- சிவதை, நிலாவரை, சுக்கு, சுழற்ச்சி, பெருங்காயம், எருக்கன்வேர், தசமூலங்கள், சித்திரமூலம், கள்ளி,திரிபலை வெள்ளைச்சாரணை இவைகள் சமஎடை இவைகளுக்குச் சமஎடை பஞ்சலவணங்கள் இவை யாவும் சூரணித்து சங்கில் வைத்து அதன் வாய்க்கு உப்பு, நெற்பொரி இவைகளை நெயிலரைத்து லேபனஞ்செய்து புடமிட்டு ஆறிய பிறகு எடுத்து கல்வத்திலிட்டுசூரணித்து சாப்பாட்டுடனாவது அல்லது ஜலத்துடனாவது சாப்பிட்டால் அநாகரோகம் நிவர்த்தியாகும்.
தும்புரு சூரணம் :- கொத்தமல்லி, கடுக்காய்த்தோல், பெருங்காயம், புஷ்கரமூலம், பஞ்சலவணம், ஓமம், யவக்ஷ¡ரம், வாவிளங்கம் இவைகள் சமஎடை சிவதை 3 பாகம், இவை யாவையுஞ்சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால் அநாஹம், அஷ்டோரதரோகம், மலபந்தம் இவைகள் நிவர்த்தியாகும்.
வசாதி சூரணம் :- வசம்பு, கடுக்காய்த்தோல், சித்திரமூலம், யவக்ஷ¡ரம், திப்பிலி அதிவிடயம், கோஷ்டம், இவைகளைச் சூரணித்து, வெந்நீரில் கொடுத்து தண்ணீர் சாதம் சாப்பிடசெய்தால் அநாகம், மூடவாதம் இவைகள் நிவர்த்தியாகும்.
உதாவர்த்தத்திற்கு பத்தியம் :- பாசனம், லகுபோஜனம் இவைகளைச்செய்தால் ஹிதமாயிருக்கும்.
அபத்தியங்கள் :- உதாவர்த்தத்தில் மலபந்த பதார்த்தங்கள் விருத்தமான பதார்த்தங்கள், துவர்ப்பான பதார்த்தங்கள், கடினமான பதார்த்தங்கள் இவைகளை விடவேண்டியது.
0 comments:
கருத்துரையிடுக