வியாழன், ஜனவரி 14, 2010

விரண ரோக சிகிச்சைகள்

விரணரோக சிகிச்சை

நிம்பலாதி கல்கம்
 :- வேப்பன் இலை, மரமஞ்சள், அதிமதூரம் இவைகளை தேன் நெய் கலந்து வஸ்த்திரத்திற்கு லேபனம்  செய்து வத்தி செய்தாவது அல்லது எள்ளு கல்கத்திலாவது விரணசோதனம் செய்யவேண்டியது.

புங்கன், வேப்பன், நொச்சி இவைகளின் சாறுகளினால் புண்களைக் கழுவுதல், லேபனம் செய்தல், இவைகளை செய்தால் விரணஙகளிலுள்ள கிருமிகள் நாசமாகும்.

திரிபலாதிகியாழம் :- திரிபலை கியாழத்தில் குங்கிலிய சூரணத்தை கலந்து சாப்பிட்டுவர குத்தல், இரத்தம் சீழ்வடிதல், துர்க்கந்தம் இவைகளுடன் கூடிய விரண வீக்கங்களை நிவர்த்தியாகும்.

ஹஸ்திரந்தாதி லேபனம் :- யானைக்கொம்பை ஜலத்தில் அரைத்து லேபனம் செய்தால் மிகவும் கெட்டியாயிருக்கும் விரணங்கள் உடைந்து விடும்.

துஷ்டவிரண லேபனம் :- வேப்பன் இலை, எள்ளு, சிவதை, இந்துப்பு இவைகளை மைப்போல் அரைத்து தேனுடன் கலந்து லேபனஞ் செய்தால் துஷ்டவிரணங்கள் நிவர்த்தியாகும்.

அயோரஜாதி லேபனம் :- அன்னபேதி, திரிபலை, இலவங்கம், மரமஞ்சள் இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ் செய்தால் விரணங்கள் ஆறி புதியதோல் உண்டாகும்.

விரணசோபைக்கு லேபனம் :- அசுவகந்தி, கடுக்காய்த்தோல், தேவதாரு, சுக்கு, சிற்றரத்தை, இவைகளை சமஎடையாக அரைத்து விரணத்திற்கு லேபனஞ் செய்தால் விரணசோபை நிவர்த்தியாகும்.

ஜாத்தியாதி கிருதம் :- ஜாதிப்பத்திரி, பேய்ப்புடல், வேப்பம்பட்டை, கடுகுரோகணி, மரமஞ்சள், நன்னாரிவேர், மஞ்சிஷ்டி, வெட்டிவேர், அதிமதுரம், மயில்துத்தம், புங்கன்விரை இவைகளை  சமஎடையாக சேர்த்து கியாழம் வைத்து அதில் நெய் கலந்து கிருதப்பக்குவமாக காய்ச்சி மேலுக்குப் போட சூக்ஷ்ம முகத்தோடு மருமத்தைச்சேர்த்து ஒழுவிக் கொண்டு கம்பீரமான நோய்களையுடைய விரனங்கள் சுத்தமாகி நிவர்த்தியாகும்.

பாரதாதி மலஹர கிருதம்
 :- ரசம், கெந்தி இவைகளைசமஎடையாக கல்வத்திலிட்டு மைப்போல் அரைத்து அதற்கு சமமாக மிருதார்சிங்கியைக் கலந்து அரைத்து இவைகள் யாவற்றிற்கும் சமம் கடுக்காய், காசிக்கட்டி சேர்ந்த சூரணத்தை கலந்து செவ்வையாக அரைத்து இந்த எடைக்கு நான்கு பாகம் அதிகமாக நெய்யைக்
கலந்து அதில் வத்தியை நனைத்து விரணத்தின்மீது போட்டால் துஷ்டமான விரணம் சுத்தமாவதுடன் நாடீவிரணம் சகல விரணங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

அமுருதாதி குக்குலு
 :- சீந்தில்கொடி, பேய்ப்புடல், சுக்கு,திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், திரிபலை, இவைகளை சமஎடையாகச் சேர்த்து சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎடை குங்கிலிய சூரணத்தை கலந்து பிரதிதினம் 1/4 முதல் 1/2 பலம் விகிதம் சாப்பிட்டுக் கொண்டுவர விர்ணங்கள், வாதரத்தம், குன்மம், உதரரோகம்,
பாண்டுரோகம், வீக்கம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

குக்குலு வடுகங்கள் :- திரிபலை சூரணத்துடன் குங்கிலியஞ் சேர்த்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் மலபந்தம் நிவர்த்தியாகி விரணங்கள் ஆறும்.

விடங்காதி குக்குலு வடுகங்கள
் :- வாய்விளங்கம், திரிபலை, திரிகடுகு, இவைகளை சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎட குங்கிலிய சூரணம் சேர்த்து நெய்விட்டு அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டு பத்தியத்துடன் இருந்தால் துஷ்டவிரணங்கள் அபசி, மேகம், குஷ்டம், நாடி விரணம் இவைகள் சுத்தமாகும்.

விரணசோதண ரோபன விதி :- எள்ளு, இந்துப்பு, அதிமதூரம் வேப்பிலை, மஞ்சள், மரமஞ்சள், சிவதை வேர், இவைகளை சூரணித்து தேனுடன் அரைத்து லேபனம் செய்தால் துஷ்டமான விரணங்கள்  சுத்தமாகும்.

பிரக்ஷ¡ளனம் :- வேப்பன் இலை க்ஷ¡யத்தினால் விரணங்களை  கழுவவேண்டியது. மற்றும் ஆல், அத்தி, ஒதியன் முதலிய பட்டைகளின் கியாழம் கடுக்காய் கியாழம் முதலியவற்றிலும் விரணங்களைகழுவலாம்.

தாதகீ சூரணம் :- காட்டாத்திப்பூவை சூரணித்து வெள்ளை அகத்திவிரை தயிலத்தில் கலந்து சாப்பிட்டால் அக்கினிமந்த விரணம், விசர்ப்பி, கீடவிரணம், லூதவிரணம், வெகுகாலமாயிருக்கும் துஷ்டவிரணம், நாடீ மர்மம், இவைகளை அனுசரித்துள்ள ரணங்கள் இவை நிவர்த்தியாகும்.

திரிபலா சூரணம் :- திரிபலை சூரணத்தை தேங்காய்யெண்ணெய் யுடன் கலந்து லேபனம் செய்தால் அக்கினிதக்க விரணம் நிவர்த்தியாகும்.

மதூசிஷ்டாதி தைலம் :- மொழுக்கு, அதிமதூரம், லோத்திரம், குங்கிலியம், பெருங்கடம்பை, சந்தனம், மஞ்சிஷ்டி இவைகளை  கற்கஞ்செய்து அதில் நெய்விட்டு காய்ச்சி லேபனம் செய்தால் அக்கினிபுத்த விரணம் பக்குகட்டி நிவர்த்தியாகும்.

ஆகந்துக விரண சிகிச்சை :-
 ஆகந்துக விரணத்தில் அதிமதூர சூரணத்தை நெய்யுடன் கலந்து காய்ச்சி சிறிது உஸ்ணமாயிருக்கும் போது லேபனம் செய்ய வேண்டியது.

பித்தகரமான பதார்த்தங்கள் ரக்தசோதனகரங்களான பதார்த்தங்கள், உஸ்ணகரபதார்த்தங்கள் இவைகளை சக்தியளவு தேன், நெய்இவைகளுடன் கலந்து ராத்திரி காலத்தில் உபயோகித்தால் ஆகந்துக விரணங்கள் நிவர்த்தியாகும்.

மருத்துவன் ஆகந்துக விரணத்தை செவ்வையாக அறிந்து ரத்த பித்த உஸ்ண நாசனகர சீதகரங்களான திரவியங்களை நெய் தேன்  இவைகளுடன் கலந்து சிகிச்சை செய்யவேண்டியது. ஆகந்துகவிரணம்  அதிகமாகயிருக்கும் போது ரோகியின் பலாபலத்தையறிந்து nவமனம், விரேசனம், லங்கனம், போஜனம் குறுதிவாங்கல் இவைகளை செய்யவேண்டியது.

ஓமம், உப்பு, இவைகளை மைபோல் அரைத்து உலோகபாததிரத்தில் வேகவைத்து அடிக்கடி லேபனம் செய்து கெட்ட ரத்தத்தை கொம்பு, ஊசி, அலகு, சிலாக்கு முதலியவைகளினால் விமோசனம் செய்யவேண்டியது.

சத்யோவிரண சிகிச்சை :- பக்குடன் கூடியிருக்கும் சத்யோ க்ஷ¡ர விரணங்களுக்கு அதிமதுர சூரணத்தை நெய்யில்பொட்டு காய்ச்சி ஆற்றி, ஏழுநாள் லேபனம் செய்து பிறகு துவர்ப்பு, மதுரம், சீதளம் ஆகிய சகல சிச்சைகளை செய்தால் சாமானிய விரணம் நிவர்த்தியாகும்.

சர்வ விரணங்களுக்கு பத்தியங்கள் :- யவதானியம், 60-நாளில் பயிராகும் அரிசி, கோதுமை, பழையவெல்லம், பழையவெள்ளை நெல் அரிசி, சிறுகடலை, துவரை, பச்சைபயறு இவைகளது கூட்டு கஞ்சி, ரசம், தேன், பொரிகஞ்சி, காட்டுஜந்து பக்ஷ¢ மாமிசம், நெய், எண்ணெய், புடலங்காய், இளமுள்ளங்கி, கத்திரிக்காய், பாவக்காய், முள்ளுவெள்ளரிக்காய், சிறிகீரை இவை யாவும்பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- புணர்ச்சி, ஆயாசம், அதிகமாய் பேசுதல், பகல் நித்திரை, எப்பொழுதும் பெண்களைப் பார்க்குதல், இரவில் விழித்திருத்தல், அதிக சஞ்சாரம், சோகம், விருத்த போஜனம், சலபானம், தாம்பூலம், கீரைகள், மீன்வகைகள், தேகத்திற்கு பிடிக்காத அன்னம் இவை யாவும் அபத்தியங்கள்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக