ஞாயிறு, ஜனவரி 10, 2010

கிரந்தி ரோகம் - ரோக நிதானம்

கிரந்தி

உணவாதி பேதம், தகாத நடைத்தை முதலியா காரணங்களினால் வாதாதி தோஷங்கள் கெட்டு அதனால் விரை ஸ்தானங்களிலாவது மற்றைய ஸ்தானங்களிலாவது நரம்புகளில் முடிச்சு உண்டாகும்.
இதனை கிரந்தி ரோக மென்பர். இது ஒன்பது வகைப்படும்.

1. வாத கிரந்தி :- இது கருத்தும் காரணமில்லாமலே விருத்தி யடைந்தும் அப்படியே குறைந்தும் குத்தலையும் அதிர்தலையும் உடையதாக இருக்கும். இது பழுத்து உடைந்தால் மிகு சிவப்புள்ள சுத்த ரத்தம் ஒழுகுவதும் அவ்விரணம் மிருதுவை அடைவதுமாக இருக்கும்.

2. பித்த கிரந்தி :- இது மஞ்சள் நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் பெற்று சதா எரிச்சலுடன் இருக்கும். பழுத்துடைந்தால் சுடுகையான ரத்தமும் சீழும் ஒழுகும்.

3.சிலேஷ்மகிரந்தி :- இது வெளுத்தும் கனத்தும் நமைச்ச
லுடன் அதிக நோவில்லாமல் வீக்கத்தை தருவதாயிருக்கும். பழுத்து உடைந்தால் இதினின்று குழம்பான சீழ் ஒழுகிக்கொண்டே இருக்கும்.

4. ரத்தகிரந்தி :- திரிதோஷங்களினால் ரத்த தாதுவானது
கெடுதியை அடைந்து மிகவும் பொங்கி கொதிக்கும் போது அதில் உண்டாகின்ற நூரைகளினால் சனித்த கிருமிகளினால் பிறக்கும். இக்கிரந்தி மாமிசத்தையும் நரம்பையும் அனுசரித்து பித்த கிரந்திக்குள்ள குணங்களுடன் உதிரத்தை வடியச்செய்யும்.

5. மாமிச கிரந்தி :- இது மாமிசத்தைவிருத்தி பண்ணுகின்ற இரைச்சி முதலிய திண்டுகளினால் பிறந்து மினுமினுத்தும் பருத்து கெட்டியாய் நரம்புகளிலும் சுற்றப்பட்டும் இருக்கும். இது பழுத்து
உடைந்தால் கபக்கிரந்தி குணங்களைத்தரும்.

6. மேதோ கிரந்தி :- இது மேதோ தாது¨வாதிகரிக்கச் செய்கின்ற ரசாதி வஸ்துகளை மிகவும் புசித்தலால்விருத்தியடைந்து வாயுவின் கோபத்தினால் மாமிசத்திலாவது, சருமத்திலாவது பிறந்து
வெளுப்பதும் வழுவழுப்பதும் மினுமினுப்பதும் குலுங்குவதுமாக இருக்கும். இது பழுத்து உடைந்தால் சீழானது பிசினைப்போல் குழம்பாக கருத்தும் சிவந்தும் வெளுத்தும் ஒழுகும்.

7. அஸ்திகிரந்தி :- இது எலும்புகள் நொறுங்களாலும் அபி
காதத்தினாலும் உண்டாகி பருத்து உயருவதும் கொஞ்சம் அமுக்குவதுமாக இருக்கும்.

8. நரம்புகிரந்தி :- நரம்புகள் வெகு சஞ்சாரத்தினால் உப்பி
உட்புறத்தில் தடிக்க ரத்த தாது ஓட்டமில்லாமல் தேங்கும் போது பிறக்கும். தேங்கிய ரத்தத்தோடு கூடிய நரம்புகளை வாயுலர்த்தி வக்கிரமாக முடங்கச்செய்து கெட்டிப்பட்ட நோயில்லாத நரம்புகளை வெளியில் வரப்பண்ணும்.

9. விரண கிரந்தி :- ஆறு ரசவர்க்கங்கள் புசித்தலினால்
பிறக்கும். தேகத்தில் அற்ப விரணம் உண்டா யிருந்தாலும்
அதைப் பலப்படுத்தும், அல்லது இல்லாதிருந்தாலும் சில நாளைக்குள் மாமிசஸ்தானங்களில் அம்மாமிசத்தை கண்டு கண்டாக எழுப்பும். அப்போது வாயுவானது நிரேதுவாக கறுத்த ரத்தத்தை வெளிப்படுத்தாமல் அவ்விடத்தில் சேர்ந்து உலர்த்துதலால் விரணங்
கள் உண்டாகும். இதனால் எரிச்சலும் தினவும் அதிகரிக்கும். இது மிகவும் பருத்து உயர்ந்தால் அற்புத கிரந்தி எனவும் கூறுவர்.

கிரந்தி நோயில் சாத்தியாசாத்தியம் :- வாதம் பித்தம் சிலேத்துமம், ரத்தம் இவைகளினால் உண்டாகும் கிரந்திகள் சாத்தியம். பருத்து கெட்டிபட்டு அதிர்ந்து குலுங்குகின்ற கிரந்திகளும் மர்மஸ்தானம், வயிறு, கண்டம் இவ்விடத்தில் பிறக்கின்ற  கிரந்திகளும் அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக