பித்தவிஸ்போடகத்திற்கு திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷபூசினி, பேய்புடல், பேரிச்சம்பழம், வேப்பன், ஆடாதோடை, பொரி, நெல்லிவற்றல், பூனைக்காஞ்சொரிவேர் இவைகளை சமஎடையாய்க் கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நோயுடன் கூடியிருக்கும் பித்தவிஸ்போடகம் நிவர்த்தியாகும்.
கபவிஸ்போடகத்திற்கு பூநிம்பாதி கியாழம் :- சீமைநிலவேம்பு, வேப்பன், பூனைகாஞ்சொரி, திரிபலை, வெட்பாலைவிரை, ஆடாதோடை, பேய்ப்புடல இவைகளைக் கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால கபத்தினால் உண்டாகும் விஸ்போடகம் நிவர்த்தியாகும்.
கபபித்த விஸ்போடகத்திற்கு துவாதசாங்க கியாழம் :- நிலவேம்பு, வேப்பன், அதிமதுரம், கோரைக்கிழங்கு, பற்பாடகம்,பேய்ப்புடல், ஆடாதோடை, வெட்டிவேர், திரிபலை, வெட்பாலவிரை இவைகளைக் கியாழம்வைத்து சாப்பிட்டால் விஸ்போடகங்கள் தொந்தம் திரிதோஷம் ரத்ததோஷம் இவைகளினால் உண்டான விஸ்போடகங்கள் நிவர்த்தியாகும். மேலும் இலகுகர பதார்த்தங்கள் பத்தியம் செய்யவேண்டியது.
வாதவிஸ்போடகத்திற்கு அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி, பேய்ப்புடல், ஆடாதோடை, கோரைக்கிழங்கு, எழிலைவாழை, கருங்காலி, மூங்கில் இலை, வேப்பன் இலை, மஞ்சள், மரமஞ்சள், இவைகளைக் கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் சகலவிசர்ப்பிகள், குஷ்டங்கள், விஸ்போடகம், கண்டு, மசூரி, சீதபித்தசுரம் இவைகள் நீங்கும்.
விஸ்போடக சுரத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்ப்புடல், சீந்தில்கொடி, நிலவேம்பு, ஆடாதோடை, வேப்பன், பற்பாடகம், கருங்காலி, திரிபலை, இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து குடித்தால் விஸ்போடக சுரம் நிவர்த்தியாகும்.
நிம்பாதி கியாழம் :- வேப்பன்பட்டை, கதிரசாரம், சீந்தில்கொடி, வெட்பாலை இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் விஸ்போடக சுரம் நிவர்த்தியாகும்.
பத்மகாதி கிருதம் :- தாமரைத்தண்டு, அதிமதுரம், லோத்திரம், சிறுநாகப்பூ, மஞ்சள், மரமஞ்சள், வாய்விளங்கம், சிறியஏலக்காய் கிரந்திதகரம், கோஷ்டம், அரக்கு, இலவங்கப்பத்திரி, மடல்துத்தம்,
நருவிலிப்பட்டை, காட்டுவாழைப்பட்டை, விளாம்பழம் இவைகளை சமஎடையாய்ச் சூரணித்து ஜலம்கொட்டி அதில் நெய் 16-பலம் சேர்த்து நெய் மீறும்படி நெய்ப்பதமாக காய்ச்சி குடித்தால் சகல கீடக தோஷங்கள், எலிகடிதோஷம், நாடீவிரணம் துஷ்ட விசர்ப்பி, சகல விஸ்போடகங்கள், லூதவிரணம், மூத்திரக்ஷதம்,
உடைந்த கண்டமாலைகள் இவை யாவும் நிவர்த்தியாகும்.
விஸ்போடக பத்தியங்கள் :- யவதானியம், பச்சைபயறு, துவரை, சிறுகடலை, சிறுகீரை, பாவற்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு, பற்பாடகம், கசப்பான பானகம் இவைகள் விஸ்போடகத்தில் பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- எள்ளு, உளுந்து, கொள்ளு, உப்பு, புளிப்பு,காரம், உஷ்ணமுள்ள பதார்த்தங்கள் இவைகளை விஸ்போடகரோகி விடவேண்டியது.
0 comments:
கருத்துரையிடுக