புதன், ஜனவரி 13, 2010

குன்ம ரோகத்திற்கு சிகிச்சைகள்



வாதகுன்மத்திற்கு விடங்க கற்கம் :- வாய்விளங்கம் மாதுழம்பழத்தோல், பெருங்காயம், ஏலக்காய், சவ்வர்ச்சலவணம், இவைகள் யாவையும் கொடிமாதுழம்பழ ரசத்தில் அரைத்து, கற்கஞ்செய்து சாப்பிட்டால் வாதகுன்மம் நிவர்த்தியாகும்.

தொந்த குன்மத்திற்கு திராக்ஷ¡தி கற்கம் :- திரா¨க்ஷ, சந்தனம், அதிமதூரம், தாமரைத்தண்டு, நிலப்பூசினிக்கிழங்கு இவைகளை அரிசி கழுநீரில் அரைத்து கற்கஞ்செய்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு சுயமாக்கினி செந்தூரத்தை சேவித்தால் கபவாத குன்மம் நிவர்த்தியாகும்.

சந்நிபாத குன்மத்திற்கு வருணாதி கியாழம் :- வருணாதி கியாழத்தை சாப்பிட்டால் சந்நிபாத குன்மம், இதயசூலை, பாரிசசூலை புஜசூலை இவைகள் நிவர்த்தியாகும்.

வருணாதி கியாழம் :- வருணாவில்வம், நாயுருவி, சித்திரமூலம், அருநெல்லி, பெருநெல்லி, ருங்கைப்பட்டை, முள்ளங்கத்திரி, கண்டங்கத்திரி, வெள்ளை அழவணை, கருப்பு அழவணை, பச்சை அழவணை பெருங்குரும்பைவேர், கடுக்காய்ப்பூ, சீமை நிலவேம்பு, கற்கடகசிங்கி கசப்பு, கோவைவேர், புங்கன், தண்ணீர்விட்டான்கிழங்கு, இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால் கபமேதோசூலை, மந்தசூலை குன்மம் இவைகள் நீங்கும்.

ரத்தகுன்மத்திற்கு தில கியாழம் :- சுக்கு, திப்பிலி, மிளகு கண்டுபாரங்கி, இவைகளை சூரணித்து எள்ளு கியாழத்தில் கலந்து நெய் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் ரத்தகுன்மம் நிவர்த்தியாகும்.

சதாவரியாதி கல்கம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு, புங்கம் பட்டை, மரமஞ்சள், கண்டுபாரங்கி, திப்பிலி, எள்ளு இவைகளை அரைத்து கல்கம் செய்து சாப்பிட்டால் ரத்தகுன்மம் நிவர்த்தியாகும்.


சித்திரகாதி கியாழம் :- சித்திரமூலம், திப்பிபிலிமூலம், ஆமணக்குவேர், சுக்கு இவைகளை கியாழம் வைத்து அதில் பெருங்காயம், பீடாலவணம், இந்தும்பு இவைகளை கலந்து சாப்பிட்டால் மலபந்தம் இவைகளை நீக்கும்.

வாதகுன்மத்திற்கு சிகிபாடவ ரசம் :- ரசபஸ்பம், தாம்பிர பஸ்பம், அப்பிரகபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, சுவர்ணமாஷிகபற்பம், யவக்ஷ¡ரம் இவைகள் யாவையும் சமஎடை கல்வத்திலிட்டு  சித்திரமூல ரசத்தினால் அரைத்து 1, 2 குன்றி எடை வெற்றிலை ரசத்தில் சாப்பிட்டால் வாதகுன்மம் நிவர்த்தியாகும்.

பித்தகுன்மத்திற்கு தண்டாமல ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, தாம்பிரபஸ்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு பூசினி தேக்கு இவைகள் சாமூலரசத்தினால் மூன்று நாள் அரைத்து பிறகு உத்தாமனி ரசத்தினால் ஒரு நாள் அரைத்து பூகாயந்திரத்தில் ஒரு நாள் லகுபுடமிட வேண்டியது இந்தப்பிரகாரம் மறுபடியும் 5 தடவை லகு
புடமிட்டு மறுபடியுஞ்சேர்த்து சூரணத்திற்கு சமம் சுத்தி செய்த நேர்வாள விதைகள் சேர்த்து அரைத்து குன்றி எடை நெய்யுடனாவது திரா¨க்ஷ கடுக்காய்ப்பிஞ்சி இவைகளின் கியாழத்துடனாவது  சாப்பிட்டால் பித்தகுன்மம் நிவர்த்தியாகும்.

சிலேஷ்மகுன்மத்திற்கு வித்தியாதர ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, தாளகபற்பம், தாம்பிரபற்பம், சுவர்ணமாஷிகபற்பம், துத்தபற்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு திப்பிலி கியாழம், சதுரக்கள்ளிபால், ஆட்டுமூத்திரம் இவைகளினால் தனித்தனி யாக அரைத்து 2 குன்றி எடை தேனுடன் சாப்பிட்டு யுக்தமான பத்தியமாயிருந்தால் சிலேஷ்மகுன்மம் நிவர்த்தியாகும்.

குல்மோதரகஜாராதி ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, திப்பிலி, கடுக்காய்த்தோல், கொன்னைச்சதை, இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சதுரக்கள்ளி பாலினால் ஒரு நாள் அரைத்து  2 குன்றி எடை சாப்பிட்டால், குன்மம், உதரரோகம், மாதருக்கு உண்டாகும் ஜலோதரம், இவைகள் நிவர்த்தியாகும். இதற்குப்பத்தியம் சம்பா அரிசிச்சாதம், தயிர், சாப்பிட்டப்பிறகு புளிரசம் சாப்பிட வேண்டியது.

பித்தகுன்மத்திற்கு உத்தாமாக்கிய ரசம் :- சுத்திசெய்த ரசம்,  1/2 பலம், கலவத்திலிட்டு சங்குபுஷ்பி, நாககண்ணி, இவைகளின் ரசத்தினால் ஒரு நாள் அரைத்து ரசத்திற்கு சமபாகம் சுத்திசெய்த  நேர்வாள சூரணத்தை சேர்த்து பூ புடமிட்டு ஆறிய பிறகு எடுத்து மறுபடியும் மேற்கூறிய படி அரைத்து புடமிடவேண்டியது , இம்மாதிரி 5 புடமிடவேண்டியது. இதில் குன்றி எடை நெய் அல்லது திரா¨க்ஷ கடுக்காய் இவைகளின் கியாழத்திலாவது கலந்து சாப்பிட்டால் பித்தஹாரி, உஸ்ணகாரி யாகிய பதார்த்தங்கள் முதலியவைகளை நிவர்த்திசெய்தால் பித்த குன்மம் நிவர்த்தியாகும்.

குல்மாவர ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, நேர்வாளம் சுக்கு. மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் சமஎடையாக கல்வத்திலிட்டு தேன் விட்டு அரைத்து குன்றியளவு மாத்திரைகளாக செய்து சாப்பிட்டு குன்றி அளவு சாப்பிட்டு வெந்நீர்  குடித்தால் குன்மரோகம் நிவர்த்தியாகும்.

குல்மகுடாரம் :- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்த கெந்தி, திரிபலை, திரிகடுகு, சுத்திசெய்ததாளகம், சுத்தி
செய்தநாபி, தாம்பிரபஸ்பம் இவைகள் சமஎடை இந்த தினுசுகள் எடை மொத்தத்தில் பேர்பாதிபாகம் நேர்வாளம் இவைகள் யாவையும் கலவத்திலிட்டு கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து சிமிழி யில் வைத்துக்கொள்ளவும். கடலையளவு அனுபானத்தில் கொடுத்தால் சகலவித குன்மம் நிவர்த்தியாகும்.

வாத குன்மத்திற்கு ஹிங்குவாதி சூரணம் :- பெருங்காயம், இந்துப்பு, ஓமம், கடுகு, சுக்கு இவைகள் சமஎடை சூரணித்து சாப்பிட்டால் வாதகுன்மம் நிவர்த்தியாகும்.

பித்த குன்மத்திற்கு திராக்ஷ¡தி சூரணம் :- கடுக்காய்த் தோல், இவைகளின் ரசத்தில் வெல்லத்தை கலந்து சாப்பிட் டாலும், திரிபலாதி சூரணத்தில் கலந்து சாப்பிட்டாலும், பித்த குன்மம் நிவர்த்தியாகும்.

சிலேஷ்மகுன்மத்திற்குயவானீ சூரணம் :- ஓமம், பீடாலவணம், இவைகளை சூரணித்து மோரில் கலந்து சாப்பிட்டால் சிலேஷ்ம குன்மம் நிவர்த்தியாகும். மலமூத்திரங்களையுந் தள்ளும்.

மஹாஹிங்குவாதி சூரணம் :- பெருங்காயம், திப்பிலிமூலம் கொத்தமல்லி, சீரகம், வசம்பு, செவ்வியம், சித்திரமூலம், வட்டத்திரிப்பி, கிச்சிலிக்கிழங்கு, நெல்லிவற்றல், மூன்று வித உப்புகள் திரிகடுகு, யவக்ஷ¡ரம், வெண்காரம், மாதுழம்பழத்தோல், கடுக்காய்ப் பிஞ்சு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, சிவகரந்தை, கருஞ்சீரகம்,
இவைகள் சமஎடை சூரணீத்து இஞ்சிரசம், கொடிமாதுழம் பழரசம், இவைகளால் பானை செய்து வெந்நீரில் சாப்பிட்டால் குன்மம், மூலவியாதி, கிறாணி, உதாவர்த்தம், உதரம், அஸ்மரீ, துணி, பிரதுணி, அருசி, உருதம்பவாதம், மனோவிப்பிரமம், செவிடு அஷ்டில், பிரதி அஷ்டில், இருதயசூலை, குஷிசூலை, சந்துக்களில் இருக்கும் சூலைகள், இடிப்பு சூலை, ஜடசூலை, வஸ்திசூலை, ஸ்தன சூலை, அம்சசூலை, பாரிசசூலை, வாதபலரசம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
 
ரத்தகுன்மத்திற்கு பரங்கியாதி சூரணம் :- கண்டுபாரங்கி, திப்பிலி, புங்கம்பட்டை, திப்பிலிமூலம், தேவதாரு, இவைகளை சமஎடையாகச் சூரணித்து எள்ளுகியாழத்தில் கலந்து சாப்பிட்டால் ரத்தகுன்மம் நிவர்த்தியாகும்.

திலமூலாதி சூரணம் :- எள்ளுவேர், முருங்கன்வேர், பிரமதண்டிவேர், அதிமதுரம், திரிகடுகௌ இவைகளைச் சூரணித்து சாப்பிட்டால் வாதகுன்மம் இவைகள் நிவர்த்தியாகும்.

அக்கினிமுக சூரணம் :- பெருங்காயம்-1, வசம்பு-2, திப்பிலி-3, சுக்கு-4, ஓமம்-5, கடுக்காய்த்தோல்-6, சித்திரமூலம்-7, கோஷ்டம்- 8, இவைகள் யாவையுஞ் சூரணித்து மோர் வெந்நீர் இவைகளில் எத்துடனாவது சாப்பிட்டால் உதாவர்த்தம், அசீரணம், பீலிகை,விஷபக்ஷணங்களினால் உண்டாகிய தோஷங்கள், மூலவியாதி, சூலை, குன்மம், இருமல், மேல்மூச்சு இவைகள் நிவர்த்தியாகும். தீபனம் உண்டாகும்.


சித்திரகாதி சூரணம் :- சித்திரமூலம், சுக்கு, பெருங்காயம், திப்பிலி, திப்ப்லி மூலம், செவ்வியம், ஓமம், மிளகு, இவைகள்  வகைகு 1/2 பலம் கல்லுப்பு, வளையலுப்பு, இந்துப்பு, சவ்வர்ச்சல வணம், பீடாலவணம், சோற்றுப்பு, கந்தியுப்பு, பூநீரு, இவைகள் தனித்தனி வராகனெடை இவைகள் யாவையுஞ் சூரணித்து
கொடிமாதுழம்பழத்தில் பாவனை செய்து, உலர்த்தி சாப்பிட்டால் குன்மம், கிறாணிஆமரோகம், கபரோகம், இவைகளை நிவர்த்திசெய்யும், அக்கினிதீபனம் ருசி இவைகளை உண்டாக்கும்.

பூதிகாதி சூரணம் :- புங்கன் இலை, செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் சமஎடையாய் சூரணித்து  தயிர், தயிர் மீது தேட்டை இவைகளுடன் சாப்பிட்டால் குன்மம் உதிரம், பாண்டு, வீக்கம் முதலியன நிவர்த்தியாகும்.

யஷ்டிமதுகாதி சூரணம் :- பிரமதண்டிவேர், யஷ்டிவேர்,திரிகடுகு இவைகளை சூரணித்து எள்ளுவேர் கியாழத்தில் கொடுத்தால் குன்மம் நிவர்த்தியாகும்.

க்ஷ¡ராதி சூரணம் :- வெங்காரம், யவக்ஷ¡ரம், சித்திரமூலம்,சுக்கு, திப்பிலி, அவுரிவேர், பஞ்சலவணங்கள் இவைகள் யாவையுஞ் சூரணித்து நெய் அனுபானத்தில் கொடுத்தால் சகல குன்மரோகங்கள் நிவர்த்தியாகும்.

சட்டியாதிகங்காயன குடிகைகள் :- கிச்சிலிக்கிழங்கு, புஷ்கர மூலம், நேர்வாளம், சித்திரமூலம் இவைகள் வகைக்கு 64 பலம் சுக்கு, வசம்பு, சிவதைவேர் இவைகள் வகைக்கு 1 பலம் லிங்கம் 3 தோலா யவக்ஷ¡ரம், கொன்னைப்புளி, இவைகள் வகைக்கு 2 பலம்ஓமம், சீரகம், மிளகு, கொத்தமல்லி இவைகள் வகைக்கு 1/4 பலம் திப்பிலிசூரணம், குரோசோணியோமச் சூரணம் இவைகள் வகைக்கு 8-பலம் இவை யாவையும் கொடிமாதுள பழரசத்தினால் அரைத்து மாத்திரைகள் செய்து அதில் ஒரு மாத்திரை அல்லது இரண்டு மாத்
திரை தேகபலானுசாரியாக இன்னும் அதிகமாவாவது வெந்நீரில் அல்லது நெல்லிக்கியாழத்திலாவது கள்ளுடனாவது நெய், பால் இவைகளுடனாவது சாப்பிட்டால் குன்மங்கள் நிவர்த்தியாகும்.

யவணியாதி குடிகைகள் :- ஓமம், சீரகம், கொத்தமல்லி,மிளகு, வெள்ளைக்காட்டான், குரோசோணியோம், சிறிய ஏலக்காய், இவைகள் வகைக்கு 1/2-பலம், பெருங்காயம் 3/4-பலம், பஞ்சல வணங்கள் வகைக்கு 1/8-பலம், வெள்ளைசிவதைவேர் 1-பலம், நேர்வாளம், கிச்சிலிக்கிழங்கு, புஷ்க்கரமூலம், வாய்விளங்கம், மாதுளம்
பழத்தோல், நெல்லிவற்றல், திப்பிலி, கொண்ணைப்புளி, சுக்கு இவைகள் வகைக்கு பலம்-2 இவை யாவையும் ஒன்றாய் கலந்து சூரணித்து கொடிமாதுள பழரசத்தினால் அரைத்து மாத்திரைகள் செய்து ஒரு மாத்திரையை நெய், பால், வெந்நீர், நெல்லிரசம் இவைகளில் எத்துடனாவது சாப்பிட்டால் குன்மங்கள் நிவர்த்தியாகும்.
கள்ளுடன் சாப்பிட்டால் வாதகுன்மம் நீங்கும். நெரிஞ்சல்வேர் கியாழத்துடம் சாப்பிட்டால் பித்தகுன்மம், கோமூத்திரத்துடன் சாப்பிட்டால் கபகுன்மம், தசமூலக்கியாழத்துடன் சாப்பிட்டால் சந்நிபாதகுன்மம், ஒட்டகப்பாலுடன் சாப்பிட்டால் மாதரின் ரத்தகுன்மம், விருத்ரோகம், கிறாணி, சூலை, கிருமி, மூலவியாதி இவைகள் நிவர்த்தியாகும்.

நாகாதி மாத்திரைகள் :- நாகபற்பம், வங்கபற்பம், அப்பிரக பற்பம், காந்தபற்பம் இவைகள் வகைக்கு பலம்-1, தாம்பிரபற்பம் 4-பலம், இவைகளை கல்வத்திலிட்டு எலிமிச்சம்பழ சாற்றினால் அரைத்து குன்றிஎடை அளவு மாத்திரைகள் செய்து கொள்ளவும். அதில் ஒரு மாத்திரையை வெங்காரம், யவக்ஷ¡ரம், இவைகளை சூர
ணித்து இஞ்சிரசம், தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் அஜீரணம், ஆமலபித்தம், இருதயசூலை, பாரிசசூலை, உதரசூலை, சகல குன்மங்கள் இவையாவும் நிவர்த்தியாகும்.

சின்சாசங்கு மாத்திரரைகள் :- புளியன்கொட்டை க்ஷ¡ரம், சதுரகள்ளி க்ஷ¡ரம், எருக்கன் க்ஷ¡ரம் இவைகள் வகைக்கு பலம்-1, சங்குபஸ்பம் 2-பலம், பெருங்காயம் 1/2-பலம், பஞ்சலவணங்கள் வகைக்கு 1-பலம், யவக்ஷ¡ரம், சத்திக்ஷ¡ரம் இவைகள் வகைக்கு  1/2-பலம், இவைகளை கல்வத்திலிட்டு சூரணித்து எலிமிச்சம்பழ ரசத்தினால் அரைத்து பிறகு சித்திரமூல கியாழத்தினால் மூன்று நாள் அரைத்து கரசனாங்கண்ணி, நொச்சி, நிலபனங்கிழங்கு இஞ்சி இவைகளின் ரசத்தினால் பிரத்தியேகம் ஒவ்வொரு நாள் அரைத்து இலந்தம்பழத்தளவு மாத்திரைகள் செய்து ஒவ்வொரு மாத்திரை வீதம் காலையில் சாப்பிட்டால் ஐந்துவித குன்மங்கள், சகல சூலைவியாதிகள், அஜீரணம், பேதி, மந்தாக்கினி, கிறாணி இவைகள் நிவர்த்தியாகும். இதற்கு பத்தியம் எண்ணெய் கடுகு இவைக
ளை நிவர்த்திக்கவேண்டியது.

சங்குதிராவகம் :- படிகை 1 பலம், இந்துப்பு 1பலம், யவ க்ஷ¡ரம் 2 பலம், 2 நவாக்ஷ¡ரம் 2 பலம், சுரகாரம் 4 பலம், அன்ன பேதி 1/2 பலம், இவைகளை தீநிர் யந்திரத்தில் போட்டு அடுப்பேற்றி இலந்தைக் கொம்புகளினால் எரியவிட்டு பக்குவமாக திராவகத்தை இறக்கிக்கொண்டு 5 துளி வீதம் நீரில் கலந்து சாப்பிட்டால்
குன்மம் முதலிய சகலரோகங்கள் நிவர்த்தியாகும்.

வேறு வீதம் :- இந்துப்பு, யவக்ஷ¡ரம், நவாக்ஷ¡ரம், இவைகள் வகைக்கு 2 பலம், சுராகாரம் 4 பலம், படிகாரம் 1 பலம், அன்ன பேதி 1/2 பலம், இவைகளையொன்றாக சேர்த்து தீநிர் கருவியில் வைத்து அடுப்பேற்றி கருங்காலி விறகுகளீனால் எரித்து திராவகம் இறக்கிக்கொள்ளவும், இது ஜலத்தைப்போலிருக்கும். இது சகலதாது வர்க்கங்களையும், பலகறை முதலியவைகளையும் திரவிக்கச்செய்யும். இதில் வேளைக்கு இரண்டு மூன்றுதுளி வீதம் சங்களவு ஜலத்தில் கலந்து சாப்பிட்டுவர குன்மோதரம் நிவர்த்தியாகும்.

வாதகுன்மத்திற்கு ஹபுஷாதி கிருதம் :- சிவகரந்தை, சீரகம் ஏலக்காய், மோடி, சித்திரமூலம், இவைகளின் கியாழம், பலையிலை இலந்தை இலை, இவைகளின் ரசங்கள், நெய், இவைகளை கலந்து கிருதபக்குவமாக செய்து உபயோகித்தால் வாதகுன்மம், அருசி,மேல்மூச்சு, சூலை, அநாகம், சுரம், மூலவியாதி, கிறாணி, யோனிதோஷம், இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

ஹிங்குவாதி கிருதம் :- பெருங்காயம், சவ்வர்ச்சலவணம் சுக்கு, திப்பிலி, இந்துப்பு, மாதுழம்பழ விரை, புஷ்கர
மூலம், சீரகம், கொத்தமல்லி, கொண்ணைப்புளி, சித்திரமூலம், அமுக்கிறாக்கிழங்கு, வசம்பு, நொச்சி, கோரைக்கிழங்கு, இவைகள் யாவும் பிரத்தியேகம் கால்பலஞ்சூரணித்து 16 பலம் நெய்யில் போட்டு நெய் பதமாக நெய்பதமாகச்சமைத்து 1/2 பலம் வீதம்  சாப்பிட்டால் வாதகுன்மம், சூலை இவைகள் நிவர்த்தியாகும்.

பித்தகுன்மத்திற்கு திராக்ஷ¡தி கிருதம் :- திரா¨க்ஷ, அதிமதூரம், கர்ஜீரம், நிலப்புசனி, தண்ணீர்விட்டான்கிழங்கு, திரிபலை இவைகள் யாவையும் தனித்தனி 1 பலம், வீதம் 64 பலம் பிரமாணம் ஜலத்தில் போட்டு, காலில் ஒரு பாகம் மீறும்படியாக கியாழத்தை சுண்டக்காய்ச்சி அதில் நெல்லிக்காய் பழரசம், நெய் கரும்புரசம், பால் கடுக்காய், கல்கம், சர்க்கரை இவைகளை மேற்கூறிய கியாழத்தில் நாலில் ஒரு பாகம் சேர்த்து கிருதபக்குவமாக சமைத்து இதற்கு நாலாவது பாகம் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தகுன்மம், சகல குன்மம் நிவர்த்தியாகும்.


திராயமான கிருதம் :- கொத்துபுங்கன் 4-பலம், 40-பலம்ஜலத்தில் போட்டி ஐந்தில் ஒரு பாகம் மீறும்படியாக கியாழஞ்சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதில் கடுக்காய்பிஞ்சி, கடுகு ரோகணி, கோரைக்கிழங்கு, கொத்துபுங்கன், பூனைகாஞ்சொரி, திரா¨க்ஷ, கீழாநெல்லி, கற்றாழை, சீந்தில்கொடி, சந்தனம், அல்லிக்கிழங்கு இவைகள் வகைக்கு 1-தோலா விகிதஞ் சேர்த்து கல்கஞ்செய்து, இஞ்சிரசம், நெய், பால் இவைகள் வகைக்கு 8-பலஞ்சேர்த்து கிருதபக்குவமாக காய்ச்சவும். இதை 1/4-பலம் விகிதஞ் சாப்பிட்டால் பித்தகுன்மம், ரக்தகுன்மம், விசர்பி, பித்தசுரம் ஹிருத்ரோகம், காமாலை இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

கபகுன்மத்திற்கு பிப்பலீ கிருதம் :- திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், சுக்கு இவைகள் வகைக்கு பலம்-1 எட்டில் ஒருபலமாகக் கியாழஞ்சுண்டக் காய்ச்சி அதில் நெய், யவக்ஷ¡ரம்,  பால் இவைகள் வகைக்கு 16-பலம் கலந்து நெய் பதமாகக்காய்ச்சி கொடுத்தால், கபகுன்மம், கிறாணி, பாண்டுரோகம்,
பிலீகை, காசங்கள், சுரங்கள் இவைகள் நீங்கும்.

குன்மோதரத்திற்கு ஷட்பல கிருதம் :- திப்பிலி, திப்பிலி மூலம்,செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, யவக்ஷ¡ரம் இவைகள் பிரத்தியேகம் 1-பலம், விகிதஞ் சேர்த்து கல்கஞ்செய்து இந்த கல்கத்துடன் நெய் 16-பலம், தசமூலங்கள், ஆமணக்குவேர், கண்டு பாரங்கி, இவைகளின் கியாழம், பால், தயிர் இவைகள் வகைக்கு
6-பலம், இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி கொடுத்தால் குன்மம் அருசி, அக்கினிமந்தம், இருமல், சுரம், தலைநோய், கபவாதத்தினால் உண்டாகிய வியாதிகள் இவை
கள் நிவர்த்தியாகும்.

தசமூலாதி தைலம் :- தசமூலங்கள், திப்பிலி, திரா¨க்ஷ,கடுக்காய், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு 1-பலஞ் சேர்த்து கியாழஞ் காய்ச்சி, அதில் ஆமணக்கு எண்ணெய் 16-பலம், பசும் பால் 96-பலஞ் சேர்த்து தைலபக்குவமாக காய்ச்சி சாப்பிட்டால் கபகுன்மம் நிவர்த்தியாகும்.

உள்ளிக் கிருதம் :- 20-பலம் வெள்ளைபூண்டை தோலுரித்து அரைத்து சீலையில் தடவி நெருப்பனலில் வாட்டிப் பிழிந்தெடுத்த சாற்றுடன் இஞ்சிச்சாறு, உத்தாமணி இலைச்சாறு, பசும்பால்  வகைக்குப் படி-1/2 கூட்டி அடுப்பிலேற்றி ஒருபடியாய்ச் சுண்டக்காய்ச்சி அதில் ஆவின் நெய் படி-1, திப்பிலி, இலவங்கம், இலவங்
கப்ப்டடை, ஏலரிசி, சிறுநாகப்பூ, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கோஷ்டம், கொத்தமல்லிவிதை, சீரகம் வகைக்குப் பலம்-1 வீதம் பால்விட்டரைத்துக் கலக்கி கிருதபக்குவமாய்க் காய்ச்சி வடித்துவைத்துக்  கொள்ளவும். இதில் வேளைக்கு ஒரு கரண்டி வீதம் அருந்திவர குன்மரோகங்கள் யாவும் குணமாகும்.

ஓமச்சூரணம் :- ஓமம், இந்துப்பு, வகைக்கு பலம் 2, பெருங்காயம் பலம் 1/2, திப்பிலி பலம் 1/4 இவைகளை ஒர் பாண்டத்திலிட்டு அதில் உத்தாமணி இலை சாறு உழக்கு, இஞ்சிச்சாறு உழக்கு விட்டு அடுப்பிலேற்றி சிறிது காய்ச்சி பாதி பாகத்திற்கு சுண்டினதும் எடுத்து பேசினில் போட்டு வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும். திரிகடிப்பிரமாணம் அந்தசந்நி வெந்நீரில் அருந்திவர குன்மம் தீரும்.

இஞ்சி ரசாயனம் :- தோல்சீவிய இஞ்சி பலம் 10, சீரகம் பலம் 5, சர்க்கரை பலம் 15, இவற்றுள் இஞ்சியை மெல்லிய துண்டுகளாய் நறுக்கி சிறிது நெய் சேர்த்து வறுத்து ஆறின பின்பு இத்துடன் சீரகத்தை சேர்த்து இடித்துச் சூரணித்து பின்பு சர்கரையைக் கலந்து வைத்துக்கொள்ளவும்.இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் அந்நிசந்நி அருந்திவர மந்தம், அசீரணம், பசியின்மை வயிற்றுவலி, வயிற்றுப்புசம் முதலியண குணமாகும்.

இஞ்சிச்சூரணம் :- இஞ்சி, மிளகு, திப்பிலி வகைக்கு 2 பலம்,  சித்திரமூலம், சுக்கு, ஏலம், சீரகம், சாதிக்காய், சடமாஞ்சி, கருஞ் சீரகம், கோஷ்டம், சிறுநாகப்பு, இலவங்கப்பத்திரி, வெட்டிவேர் கிராம்பு, தாளிசபத்திரி, சாதிப்பத்திரி வகைக்குப்பலம் 1, நாட்டு சர்க்கரை பலம் 10, இஞ்சியை மேல்தோல் சீவி மெல்லிய சிறு
துண்டுகளாய் நறுக்கி சிறிது நெய் விட்டு வறுத்து மற்ற சரக்கு களுடன் கூட்டி இளவறுப்பாய் வறுத்திடித்து ச் சூரணித்து கடைசியில் இதில் வேளைக்கு 1/2 முதல் 2 வாராகனெடை வீதம், தினமிருவேளையாக நீருடன் அருந்திவர அரோசகம், அன்னத்துவேசம் வாந்தி, அசீரணம், வயிற்றுப்பசி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.

கொடிவேலிச்சூரணம் :- கொடிவேலிவேர்ப்பட்டை பலம் 1, சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சிறுதேக்கு, யானைத்திப்பிலி, கோஷ்டம், கடுகு வகைக்குப்பலம் 1/2 பொரித்த வெங்காரம், சுட்டவசம்பு வகைக்கு 1/2 பலம், இவைகளை இளவறுப்பாய் வருத்திடித்து சூரணித்து வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் வெந்நீருடன் அருந்திவர மூலவாயு, உதரவாயு, குன்மம், சூலை முதலியன குணமாகும்.

பெருங்காயச்சூர்ணம் :- பொரித்த காயம், மிளகு, சுக்கு திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம்,இந்துப்பு, ஓமம் வைகக்கு பலம் 1 இவைகளை இளவறுப்பாய் வருத்திடித்து சூரணித்து வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு திரிகடிப்பிரமாணம் தினம் இருவேளையாக வெந்நீருடன் அருந்திவர மந்தம், அஜீரணம், வயிற்றுப்புசம், வயிற்றுவலி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.

ஆற்றுத்தும்மட்டிக்காய் சூரணம் :- ஆற்றுத்தும்மட்டிக்காய்கள் இருபது கொண்டுவந்து மேல்தோலையும் உள்ளிருக்கும் விதையையும் நீக்கி நிழலில் நன்கு உலர்த்தி எடுத்த சதையுடன் வளையலுப்பு பலம்-5, பூநீறு பலம்-1 1/4, சோற்றுப்பு படி-1, சேர்த்திடித்து ஒர் பாண்டத்திலிட்டு அதில் பசும்பால் படி-1 ஊற்றி
அடுப்பிலேற்றி வேகவைத்து சுண்டி குழம்பு பதமானதும் கீழிறக்கி கடைந்து இரண்டு மூன்று நாட்கள் வெய்யலில் வைத்து நன்கு உலர்த்தி பின்பு ஒர் சட்டியிலிட்டு மேல்மூடிச் சீலைசெய்து 40-நாள் வரையில் பூமியில் புதைத்து வைத்து எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடை வீதம் தேகத்திடத்திற்கும் நோயின் வகைக்கும் தக்கபடி தினம் ஒருவேளை யாய்க் காலையில் மட்டும் கொத்துவர குன்மம், சூலை, வயிற்றுவலி முதலியன குணமாகும்.

பிரண்டை வடகம் :- பிரண்டையை தோல் சீவி கனுக்களை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கியது பலம்-6, சுக்கு, மிளகு, சீரகம், சோற்றுப்பு, ஓமம், கடுக்காய்த்தோல் வகைக்கு பலம்-1, பிரண்டையை நெய் விட்டு வறுத்து வதக்கி எடுத்து மற்ற சரக்குகளை இடித்து வஸ்திகாரஞ்செய்த சூரணத்துடன்கூட்டி, தயிரை வடி
கட்டி எடுத்த நீர்விட்டு அரைத்து 1/2 தோலா எடையுள்ள உருண்டைகளாய்ச் செய்து நிழலில் உலர்த்தி பத்திரபடுத்தவும். இதில் வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமிருவேளையாக உண்டுவர வாதகுன்மம், சூலை, பசிமந்தம், மலக்கிருமி முதலியன யாவும் குணமாகும்.

இஞ்சி வடகம் :- தோல் சீவி சிறு துண்டுகளாய் நறுக்கிய இஞ்சி பலம்-5, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், இலவங்கம், கொத்தமல்லிவிதை, கடுக்காய்த்தோல், பொரித்தகாயம், சோற்றுப்பு வகைக்கு பலம்-1/2, இவற்றுள் இஞ்சியை நெய்விட்டு வறுத்தெடுத்து பிறகு மற்றச் சரக்குகளுடன் சேர்த்திடித்து தயிர்நீர் விட்டரைத்து 1/4-1/2 தோலா எடையுள்ள மாத்திரைகளாய் உருட்டி நிழலிலுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளையாக அருந்திவர குன்மம், வயிற்றுவலி, சூலை, மந்தம், அஜீரணம் முதலியன குணமாகும்.

ஹரிதக்யாதி வடகம் :- வரிகடுக்காய் 50-காய்கள் சேகரித்து விதையைநீக்கி அரைபடி யளவு ஆறுமாதத்துக் காடியில் ஓர் நாள் ஊறவைத்து எடுத்து உலர்த்தி எடுக்கவும். இம்மாதிரியே இதை இஞ்சிச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, புளித்தமோர் முதலியவை களிலும் தனித்தனியே ஊறவைத்து உலர்த்தி எடுத்து வைத்துக்
கொள்க. பின்பு இத்துடன் பாலில் பிட்டவியலாக வேகவைத்து நடுநரம்பு நீக்கி சுத்திசெய்து எடுத்து சிவதை வேர் பலம் 1, சுக்கு மிளகு, சிவதைவேர், ஏலரிசி, இந்துப்பு, சோற்றுப்பு, வளையலுப்பு சவுட்டுப்பு, கல்லுப்பு, கடுகுரோகணி, வகைக்குப்பலம் 1, சேர்த்து இடித்து இஞ்சிச்சாறு விட்டு இரண்டு ஜாமமும்  குன்றிப்பிரமாணம் மாத்திரைகளாக உருட்டி நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்துக. ஒரு மாத்திரை வீதம் 1 அல்லது 2 வேளை
யாக நோயின் வன்மைக்குத் தக்கபடி அருந்திவர பித்தகுன்மம் எரிகுன்மம், வாயுகுன்மம், சூலை, மலச்சிக்கல், முதலியன குணமாகும்.

குன்ம குடோரி :- இந்துப்பு, சோற்றுப்பு, வளையலுப்பு கல்லுப்பு, பூநீரு, நவாச்சாரம், பொரித்தவெங்காரம், அப்பளகாரம் மிளகு, சுக்கு, திப்பிலி, சீரகம், ஓமம், திப்பிலிமூலம், செவ்விய வட்டத்திருப்பி, கண்டுபாரங்கி வகைக்கு பலம்1, சித்திரமூலவேர் பட்டை பலம் 2, சீரகம் பலம் 2, இவற்றுள் உப்பு தினுசுகள்நீங்க அத்துடன் உப்பு தினுசுகளை பொடித்து கலந்து ஓர் பீங்கான் பேசினி லிட்டு, அதில் சுமார் 20- 25 எலுமிச்சம்பழத்தின் சாற்றை
விட்டுப் பிசறி வெய்யிலில் நாலைந்து நாட்கள் எடுத்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு சுண்டைக்காயளவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர குன்மம் சூலை முதலியன குணமாகும்.

இஞ்சிலேகியம் :- இஞ்சிச்சாறு படி 1, கண்டங்கத்திரிச்சாறு  படி 1, நெரிஞ்சில்ச்சாறு படி 1,முள்ளங்கிச்சாறு படி 1, எலுமிச்சம் பழச்சாறு படி 1, பசும்பால் படி 2, இவைகளை ஓர் பாண்டத்திலிட்டு பனைவெல்லம் 10 பலம், சேர்த்து கரைத்து வடிகட்டி அடுப்பிலேற்றி எரித்து பாகுபதம் வரும்போது அதில் மிளகு, சுக்கு, திப்பிலி, சீரகம், ஏலம், வாய்விளங்கம், தாளிசபத்திரி,  வகைக்குப் பலம் 1, சூரணித்து சேர்த்து ஆவின் நெய் படி 1/2 தேன் படி 1/4 கூட்டி லேகிய பதமாக வைத்துக்கொள்க.

இதில்வேளைக்கு பாக்களவு தினம் இருவேளையாக அருந்திவர வயிற்றுவலி, வாந்தி, அரோசகம், குன்மம், அசீரணம், சூலை முதலியன குணமாகும்.

பஞ்சதீபாக்கினிலேகியம் :- மிளகு, சுக்கு, திப்பிலி, ஏலம், சீரகம்,வகைக்குப்பலம் 1, பசும்பால் படி 2, பனைவெல்லம்பலம் 8, தேன் படி 1/4, நெய் படி 1/2 இவற்றுள் பசும்பாலில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி அடுப்பிலேற்றி எரித்து பாகுபதமானதும் பஞ்சதீபாக்கினியால் சரக்குகளை இளவருப்பாய் வறுத்திடித்துச்சூரணித்ததை தூவிக் கிண்டி நெய் தேன் சேர்த்த.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக