இந்த ரோகமானது புகைவெய்யில், பனி, நித்தியசையோகம்
அதிநித்திரை, நித்திரை பங்கம், சதாசலத்தில் நனைதல், கீழ் காற்று கண்ணிரை யடக்குதல், ஓயாத அழுகை, மிகுந்த சலபானம், கிரிமிசேருதல் பதினான்கு வேதத்தை யடக்குதல், சகிக்கக்கூடாத உஸ்ண வாசனையை முகருதல், வெகுவார்த்தை ஆகிய இச்செய்கை
களினால் வாதபித்த கபங்கள் அதிகரித்து சிரசில் வியாபித்து சிரோரோகத்தை யுண்டாக்கும்.
இந்தரோகமானது பத்து வகைப்படும்.
1. வாதசிரஸ்தாபம் :- வாதாதிக்கத்தினால் நெறிகளில் கட
வாத்தியம் வாசிப்பதுபோல் அதிரல், கண் புருவம் நெற்றி இவைகள் தெரிந்து விழுவதுபோல் நோதல், வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை, தலை சுழற்றலுடன் நோதல், காதிரைச்சல், கீல்கள் தளரல், நரம்புகள் புடைத்து உப்புதல், நாசியில் சலம் வடிதல் என்னும் குணங்களை உண்டாக்கும். இக்குணங்கள் காரணமில்ல
மல் அதிகரிப்பதும் குறைவதுமாக இருக்கும். இதுவே வாதத்தலைவலியாம்.
2. பித்த சிரஸ்தாபம் :- தலையில் புகை கம்மியது போலி
ருத்தல், சுரம், வியர்வை, கண்ணெரிச்சல், மூர்ச்சை முதலிய குணங்கள் நடு இரவில் உண்டாகும்.
3. சிலேஷ்மசிரஸ்தாபம் :- சிரோபாரம், குத்தல், சரீரம்
முழுவதும் கடுத்தல், மூர்ச்சை அரோசகம், வாந்தி, கண்கள்
உப்பலோடு நோதல், காதுக்குள் நமைச்சல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
4. திரிதோஷசிரஸ்தாபம் :- வாதம் முதலிய மூன்று சிரஸ்
தாபரோக குணங்களை யெல்லாம் ஒரே காலத்தில் உண்டாக்கும்.
5. ரத்தசிரஸ்தாபம் :- இது பித்தசிரஸ் தாபரோக குணங்
களைப் பார்க்கிலும் அதிதுர்க்குணங்களை உண்டாக்கிவேதனையைச்செய்யும்.
6. அர்த்தபேதம் :- இது ஒரு பக்கத்திலுண்டாகி வாதசிரஸ்
தாபரோக குணங்களைப் போல் வேதனையைச்செய்வதுந் தவிர, பதினைந்து நாளுக்கொருதரம் அல்லது மாதத்திற்கொருதரம் அதிகரிப்பதும் தானே சாந்தி யடைவதுமாயிருக்கும். இந்த ரோகம் எப்பக்கத்தில் அதிகரிக்கின்றதோ அப்பக்கத்து நேத்திரம் கெடுதல் அல்லது அப்பக்கத்து காதாவது செவிடாதல் என்னும் குணங்களை உண்டாக்கும். இதை ஒற்றைத்தலை நோய் என்றும் கூறுவர்.
7. கிருமிச்சிரம் :- இதில் திரிதோஷம் அதிகரித்து சிரசில்
இருக்கும் ரத்த மாமிசம் கரைந்து கிருமிகள் உண்டாகும். அக்கிருமிகள் உதிரத்தை பானம்பண்ணும் போது சிரசில் கோரமான வேதனை யுண்டாகும். இதனால் மண்டை வறளல், மரத்தல், வீக்கம், பிளந்து போவது போலிருத்தல், மிகுந்த எர்ச்சல், துர்க்கந்தம், நாசியில் சலம் வடிதல், தாடையில் சிவந்த நிறத்துடன் நமைச்சல் உண்டாகி பின்பு அது வெளுத்து வீக்கமாக எழும்புதல், காதிரைச்சல் சுரம், இருமல், துர்ப்பலம், மனக்கலக்கம் என்னும் இக் குணங்களை உண்டாக்கும்
8. சிரக்கம்பம் :- புசிக்கின்ற ரசாதி வஸ்துகளால் திரிதோ
ஷங்கள் சிரசில் இருக்கும் நரம்பு முதலியவைகளை அனுசரிக்கும் போது பிறக்கும். இதனால் தலை நடுக்க உண்டாகும்.
9. சிரசங்கம் :- பித்தத்தில் கூடிய வாத சிலேத்துமங்களி
னால் இரண்டு நெறிகளிலும் சிவந்த வீக்கத்தைப் பிறப்பிக்கும். அப்போது அதில் எரிச்சல், தாகம், சுரம், வீக்கம், சோர்வு, பிரமை, பிரலாபம், முகத்தில் மஞ்சள் நிறம், வாய் கசத்தல் என்னும் குணங்களுண்டாகும். இது பழுத்து உடைந்தால் மூன்று தினங்களுக்குள்
மரணத்தைத்தரும்.
10. சூரியாவர்த்தம் :- வாயுவானது பித்தத்தில் கூடி இரண்டு நெறி, புருவம், நெற்றி ஆகிய இடங்களில் வியாபிக்கும் போது பிறக்கும். இதனால் சூரிய உதய காலத்தில் சிரசில் மிகுந்த உபத்திரவம் உண்டாகும். அது வெயில் ஏற ஏற பிரபலப்படுவதும், சூரியன் அஸ்த்தமிக்கச் சாந்தி அடைவதுமாயிருக்கும். இது தினந் தினமும்
போரடும், இவ்வண்ணம் உண்டாவது ஏழு ஞாயிறு என்றும், இதில் சஞ்சரிக்கின்ற வாயு கபத்துடன் சேர்ந்து மாலை காலத்தில் உபத்திரவம் உண்டாகி பாதி இரவுக்குப் பின்பு சாந்தி அடைவது படுஞாயிறு என்றுங் கூறுவர். இந்தப் படுஞாயிறே சந்திராவர்த்தம் எனப்படும்.
0 comments:
கருத்துரையிடுக