இது தாள் அல்லது தாடையைப்பற்றிய நோயைக் குறிக்கும். இது எண் வகைப்படும்.
1. தாளுபிடகம் :- வாதாதிக்கத்தைக்கொண்டு தாடைக்கு உட்புற மாமிசத்தில் சுற சுறப்பான தடிப்பையும், வெளியில் கடினத்துவமான வீக்கத்தையும் உண்டாக்கும். இதனால் வாயில் சொள்ளு சலம் வடிதலும், அவ்விடத்தில் கொப்புளம் எழும்புதலும் தாளின் அடியில் நோதலும் உண்டாகும்.
2. தாளுகளசுண்டிகம் :- தாடையில் உட்புற மூலத்தில் உண்ணாக்கைப்போல் தடித்தலை உண்டாக்கி புலால் நாற்றக்கோழையை விழச்செய்யும். இதனால் தாடை மீது மினுமினுப்புடன் மிருதுவான வீக்கம் எழும்பித் தொங்குதல் புசித்த அன்னபானாதிகள் நாசியால் விழுதல், கண்டத்தின் மார்கம் அடைபடல், தாகம்
வாந்தி, இருமல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.
3. தாளுசம்ஹதி :- தாடையினது உட்புற நடுவில் நோயில் லாமல் துர்மாமிசம் வளரும். இது தாடையின் உட்புறத்தையெல்லாம் துர்மாமிசத்தை கொண்டு நிறப்பும்.
4. தாளார்புதம் :- தாடைக்கு உட்புறத்தில், விரிந்த தாமரைப்பூவைப்போல் வட்டவடிவமான சிவந்த வீக்கத்தை உண்டாக்கும்.
5. தாளுகச்சபம் :- சிலேஷ்மத்தைக் கொண்டு தாடையின் நடுவில் ஆமையினது உருவத்தைப்போல் தடிப்பை உண்டாக்கும். அது
நாளுக்கு நாள் கபத்தினால் அதிகரிப்பதும் நோவதுமா யிருக்கும்.
6. தாளுபுப்புடம் :- தாடையின் உட்புற நடுவில் சிலேஷ்மத்தினாலும் மதோதாதுவினாலும் இலந்தைப்பழ பிரமாண ரூபங்களை
ஒத்தைத்தாய் நோவின்மையான வீக்கத்தை உண்டாக்கி நிலைக்கச்செய்யும்.
7. தாளு பாகம் :- இது பித்தத்தைக் கொண்டு தாடையின் உட்புறத்தை விரணமாக்கி அதில் சீழும் நோயும் உண்டாகும்.
8. தாளுசோஷம்:- வாதத்தினாலும், பித்தத்தினாலும்,சுரத்தினாலும், தேகம் மிகவும் மெலிந்தகாலத்தில் பிறந்து ஒரு தாடையாவது இரண்டு தாடையுமாவது உலர்த்தி ஒடுக்கு விழுந்தது போல் செய்யும்.
0 comments:
கருத்துரையிடுக