புதன், ஜனவரி 27, 2010

சித்த மருத்துவம் -part 2


மருத்துவம்
மருத்துவம் போற்றுதலுக்குரிய அருந்தொழில். தன்னலம் கருதாததுபொதுநலம் கருதிச் செய்கின்ற தொண்டிற்கு உரிய தொழில். மருத்துவம்தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் பண்பாட்டு மரபுகளைப் போல் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்தது.
நோயுற்ற துன்பமும் நோயற்ற இன்பமும் பிறரால் தனக்குக் கிடைப்பதில்லை. மனிதன்தானே தனக்குத் தேடிக் கொள்வது என்றறிந்தான்.
மனிதனுக்குப் பிறர் செய்வது என ஒன்றில்லைதனக்கு வந்துற்ற நோய்க்கும் அந்நோய்க்குரிய மருந்தும் தானே அறிந்திடல் வேண்டும் என்னும் தன்னுணர்வுடன் வாழத் தலைப்பட்டான். மனிதன்தன் நோய்க்குத் தானே மருந்து என வாழத் தொடங்கியதால்வாழ்க்கை வளமும் நாகரிகச் செழிப்பும் பண்பாட்டில் உயர்நிலையும் பெறத் தொடங்கினான்.
தமிழ் மருத்துவம்
பண்டைய காலத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் நேர்ந்த பட்டறிவினாலும்முதிர்ச்சியினாலும்தெளிவினாலும் கண்டறிந்துநடைமுறைப் படுத்திபாதுகாத்துக் கொண்டிருந்த மருத்துவ முறை தமிழ் மருத்துவம் என்பதாகும்.
சித்த மருத்துவம்
தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவு முறையாலும் மருந்து முறையாலும், ‘உணவே மருந்துமருந்தே உணவு’ எனக் கண்டறிந்துஅவ்வகையான உணவு முறைகளை உள்ளடக்கியது "சித்த
மருத்துவம்’.
சித்த மருத்துவ நூல்கள் தமிழில் மட்டுமே அதிகமாகக் காணக் கிடைப்பதனாலும்சித்த மருத்துவமுறை பண்டைய நாள் முதல் இன்றுவரை தமிழ் நாட்டிலேயே பயிலப்பட்டு வருவதனாலும் சித்த மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம்’’ என்பர். தமிழ் மொழியிலும் தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கப் படுவதனாலும், ‘சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம்’ என்பதற்குரிய அடிப்படையாகக் கொள்ளலாம்.
சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமே
சித்த மருத்துவம்தமிழ் மருத்துவம் என்பதற்குச் சில அடிப்படை ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழக நிலத்துக்கு உரிமையுடைய மூலிகை வகைகள்மலைப் பகுதிகளிலும்காடுகளிலும்நீர்ப் படுகைகளிலும் காணப்படுகின்ற செடிகொடிமரவகைகள்சித்த மருத்துவத்தின் அடிப்படை மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சித்த மருத்துவத்தின் மூலச் சுவடிகள்’ அனைத்தும் தமிழில் அமைந்திருப்பதுடன் அவை தமிழகத்திலேயே வழங்கியும் வருகின்றன.
தமிழ்நாட்டுதென்னாட்டு மருத்துவமுறை வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் தங்கள் மனத்தின் ஆற்றலை வளர்த்துக் கொண்டுஅந்த ஆற்றலின் பயனால் உருவாக்கம்’ எனும் முறைகளால் மருத்துவத்தை வளர்த்தனர் என்பதனால், ‘சித்த மருத்துவம்’ எனப் பெயர் கொள்ளலாயிற்று.
இயற்கை மருத்துவ முறைகளோடு மூலிகை மருத்துவம்யோகாசன முறை மருத்துவம்வாதமுறை மருத்துவம்கற்பமுறை மருத்துவம்வர்ம முறை மருத்துவம் ஆகிய முறைகள் அனைத்தும் தமிழ் நாட்டவரால் உருவாக்கப்பட்டுத் தமிழ் நாட்டவரால் பாது காக்கப்பட்டு வருகின்றன என்பவைசித்த மருத்துவம்தமிழ் மருத்துவம் என்பதற்கு அடிப்படையான சான்றுகளாகும்.
சித்த மருத்துவம் மூலிகை மருத்துவமா ?
அறுவை முறையால் செய்யப்படும் மருத்துவம் அறுவை மருத்துவம்மகளிர்க்குச் செய்யப்படும் மருத்துவம் மகளிர் மருத்துவம். விலங்களுக்குச் செய்வது விலங்கு மருத்துவம் என வழங்கப் படுவதைப் போலசித்தர்களால் செய்யப்பட்ட மருத்துவம் சித்த மருத்துவம்’ என வழங்கலாயிற்று. சித்த மருத்துவத்தில் மூலிகையின் பங்கு அதிக அளவில் காணப்படுவதனால், ‘மூலிகை மருத்துவமேசித்த மருத்துவம்’ எனவும் வழங்கிவரக் காணலாம்.
மூலிகை மருத்துவம் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியே யன்றி அதுவே முழுமையானதன்று. உணவுப் பழக்கத்தில் உலகின் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியாகுறிப்பாகத் தமிழகம் விளங்குகிறது. காரணம்அன்றாட உணவே (அறுசுவை) மருந்துச் சரக்குகளோடு கூடியவை. நோய் வராமல் தடுக்கும் முறையில் மேற்கொள்ளப்படும் உணவு முறை சித்த மருத்துவத்தில் அடங்குகிறது. கடுகுமிளகுசீரகம்வெந்தயம்கொத்துமல்லிபெருங்காயம்மஞ்சள்இஞ்சிஎலுமிச்சை இவ்வாறான பல பொருள்கள்மருந்தாக அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. நோய் வந்தால் இவற்றையே சூரணம்கசாயம்இரசம்உப்புஉலோகம்பாசாணம் போன்றவை யாகவும்நிறைவாக இரத்தினங்களாகவும் ஆக்கி வழங்குவர்’’ என்னும் கருத்துகளால்மூலிகை மருத்துவம் மட்டுமே சித்த மருத்துவம் என்னும் கருத்து வலுவற்றதாகிறது. சித்த மருத்துவம் ஒரு முழுமையான மருத்துவக் கல்வி என்ற நிலைக்கு வளர்த்துப் போற்றப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவக் கல்வி
சித்த மருத்துவத்தை மேற்கொண்ட சித்தர்கள்தாங்கள் கற்று ஆராய்ந்து அறிந்த உண்மைகளைப் பயனுடையவர்களுக்கும்,
பக்குவ மடைந்த பயனீட்டாளர்களுக்குமே கற்பிக்க வேண்டுமென்று கருதினர்.
சித்த மருத்துவம்குரு சீட பரம்பரையாக அனுபவப் பக்குவத் தினால் கற்றறியப்படுகிறது. மருந்தின் குணம்நோயின் குணம் ஆகிய இவற்றை நன்குணர்ந்து பின் விளைவுகள்முறிப்பான்கள் போன்றவற்றைத் தெளிவாக உணர்ந்தாக வேண்டும். பக்குவமற்ற மருந்துகள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே மருந்து காலையில் உட்கொண்டால் ஒரு பலனும்மாலையில் உட்கொண்டால் வேறொரு பலனும் தரும். ஒரே நேரத்தில் அனுபானத்தை (துணைப்பொருள்) மாற்றிக் கொடுத்தால்மாற்றுப் பலனைத் தரும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் இடம் பெறுகின்றன. சான்றாகதூதுவளைக் கற்பம் நெய்யில் உண்டால் உடல் பெருக்கும். தேனில் உண்டால் உடல் மெலியும். வெண்ணெயில் உண்டால் தாது உற்பத்தியாகும்.
இப்படிச் சாதாரணமாகப் பயன்படும் கீரைமருத்துவப் பண்பினால் சூழல்உட்கொள்வோர் வயதுகாலம்உடன் உண்ணும் துணைப் பொருள் போன்றவற்றால் வேறுபட்ட பலன்களைத் தரும். இது போன்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் இடம் பெற்றுள்ளன. சித்தர்கள் வகுத்துள்ள மருந்துவக் கொள்கை கடினமான முறைகளினால் வகுக்கப் பெற்றது. சித்த மருத்துவ முறைகள் (இரகசிய) மந்தண அளவில் பரிபாஷைசங்கேதம் போன்றவற்றால் காக்கப் பெற்றன. அனுபவ மற்றோர் சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதைத் தடைப் படுத்துவதே இதன் நோக்கமாக இருந்த போதிலும் பின்னாளில் அவை பிறரால் அறிய முடியாமலேயே மறைந்து போவதற்கும் காரணமாக அமைந்து விட்டதுஎன்று கருத்துரைக்கப் பட்டிருப்பதிலிருந்துசித்த மருத்துவக் கல்வி எளிய முறையினால் உருவானதல்ல என்பதும் அதன் முறைகள் எல்லோருக்கும் சென்றடையாத நிலையில் ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடக்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது என அறியலாம்.
சித்த மருத்துவக் கல்விக்குத் தகுதி
சித்த மருத்துவ முறைகள் உணவின் அடிப்படையைக் கொண்டது என்றால்அதன் முறைகள் ஒருசிலரிடமே முடங்கிக் கிடக்கிறது என்னும் கூற்று உடன்பாட்டிற்கு உகந்ததாக அமையவில்லை. என்றாலும்சித்த மருத்துவ நூல்களை எல்லாருக்கும் காட்டக் கூடாது என்றும்மருந்துமுறைகளைக் கூறக்கூடாது என்றும் குறிப்பிடுவது காணப்படுகிறது.
“ மற்றுள்ளோர்க் கிந்நூலை யீந்தா யானால்
மாண்டிடுவாய் மகத்தான சாப மெய்தே’’
என்னும் கடுஞ்சொற் கட்டளையும் சாபமும் இடப்படுவதை அறியலாம். மேற்கண்ட கருத்தைக் கூறும் இந்நூல் ஒரு ரசவாத நூல். ரசவாதம் என்பது உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையுடன் தொடர்புடையது. இக்கலையை எல்லாரும் அறிய நேர்ந்தால் மருத்துவம் செய்வதை விட்டு விட்டு எல்லாரும் தங்கம் செய்யும் தொழிலைச் செய்ய முற்படுவர். அத்தகைய நிலை ஏற்படுவது சரியன்று என்பதை உணர்ந்தே சித்தர்கள்தாங்கள் கூறிய ரசவாத முறைகள் வேறு நோக்கத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்று கருதி இவ்வாறு உரைத்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
“ என்மகனே என் மேலே ஆணை ஆணை
புல்ல ரென்ற புல்லரிடம் நூல் காட்டாதே''
என்று அகத்தியர் தன் மாணாக்கனிடம் கூறுவதைக் காண்கிறோம்.
கை முறைகள் காட்டாதே கருச்சொல் லாதே’’
என்று ரோமரிஷி சூத்திரத்தில் உரைக்கின்றார். மற்ற சித்தர்களைப் போலப் பாடல்களைக் காட்டக் கூடாது என்று கூறாமல்கை முறைகள்,கரு ஆகியவற்றைச் சொல்லாதே என்கிறார்.
சித்த மருத்துவ நூல்கள் பெரும்பாலும் பரிபாஷைச் சொற்களால் இயற்றப் பெற்றிருக்கும் என்பர். பரிபாஷை எல்லாருக்கும் தெரியக் கூடியதல்ல. பாவிகள் எனப்படுவோர்சித்தர்கள் கூறுகின்ற ஒழுக்க முறைகளுக்கு உட்படாமல் இருப்பவர்கள் பாவிகளாவர். அவர் களுக்குத் தெரியக் கூடாது என்பதற்கே பரிபாஷைச் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. அவர்களால்மருந்துப் பொருள்களும்மருத்துவமும்மருத்துவத்துக்குரிய நற்பெயரும் அழியக் கூடாது என்பதைக் கருத்திற் கொண்டே அவ்வாறு உரைத்துள்ளனர்.
சித்த மருத்துவத்தை மறைவாகக் கூறாவிட்டால்அதன் சிறப்பினால் இறந்தவனும் உயிர் பெற்றிடக் கூடும். அவ்வாறுசெத்தவன் எல்லாம் திரும்பி வந்தால்உலகம் இடங்கொள்ளாமல் போகும். சித்த மருத்துவத்தை எவன் முறையாகக் கற்க வேண்டுமென்ற விதி அமைந்திருக்கிறதோ அவன் வந்தால்சித்தர்கள் தாங்களே முன்வந்து அவனுக்கு மருத்துவக் கல்வியைக் கற்றுத் தந்து விடுவார்கள்  என்று சித்த மருத்துவத்தின் இரகசியத்தைக் கூறுகின்றார்.
சித்த மருத்துவத்தைக் கற்கும் தகுதியாளர் யார் எனத் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது. சித்தர்கள் ஒருவருக் கொருவர் செய்முறை களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் இயற்கை. சிவயோகிக்கும்மெய்ஞ்ஞானிக்கும் இந்நூலைச் சொன்னதாகக் கூறினர். சிவயோகியும்மெய்ஞ்ஞானியும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து கிடப்பவர்கள். அவர்களுக்கு மருந்து செய்யவும்பொருள்களைச் சேகரிக்கவும்மருத்துவம் பார்க்கவும் பொழுது வேண்டுமே! பன்னிரண்டு ஆண்டுகள் தொண்டு செய்து பணிந்திருக்கும் மாணவன்கல்வியறிவுள்ள கல்வியாளர் ஆகியோர்களே சித்த மருத்துவக் கல்விக்குத் தகுதியானவர்கள்  என்பது பெறப்படுகிறது. மாணவன்செய்முறைப் பயிற்சியினாலும்பக்குவத்தினாலும் சிறந்தவனாகும் போது மருத்துவ முறை வழுவாது பாதுகாக்கப்படும் எனக் கருதியுள்ளனர்.
சித்த மருத்துவத்தின் இயல்புகள்
மருத்துவ நூலார் மருத்துவ நூல்களை எழுதுங்கால்அவ்வக் காலத்திலும் இடத்திலும் அங்கே வழங்கப்படும் மருத்துவ முறைகளைக் கைக்கொண்டே நூல் எழுதினர்.
"" வண்கால தேசவர்த்த மானமறி பண்டிதர்க்குங்
கண்காண் வழக்கமே கைமுறையாம் பெண்காணி
ஆனாலுஞ் செல்வாக்கே யாதீன மப்படி நீ
நானாலுஞ் சொல்லவறி நாள்.''
காலம்இடம்வழக்கம் ஆகிய மூன்றையும் முறையாக அறிந்த மருத்துவர்க்குஅவ்வவ்விடங்களில் நிகழும் வழக்கமே கைமுறை யாகக் கொண்டு வருவது வழக்கமாக அமையும். அதுவே மருத்து வர்க்குக் கண்ணாகவும் அமையும் என உரைப்பதனால்நிலத்தின் இயல்பினை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ப செய்யப்பட்டதே சித்த மருத்துவம் என்று அறியலாம்.
மருத்துவ இயல்புகள்
மருத்துவ இயல்புகள் என்பதுமுன்னோர் மேற்கொண்ட முறைகளின் வழியே பின்னோரும் பின்பற்றிஅம்முறை தவறாமல் மருத்துவம் செய்வதைக் குறிக்கும். இவைமுறைப்படி வகுக்கப் பெற்ற வழிமுறைகள் என்று கூறலாம். வழிமுறை தவறிய மருத்துவச் செயல்களினால்மருத்துவத்தின் பயனும் தவறக் கூடும் என்பதனால் வழி முறை வகுத்துள்ளனர்.
இயல்புகள்16
1. வியாதி அறிதல், 2. அதன் காரண மறிதல், 3. அது நீங்கும் வழி தேர்தல், 4. பிணிக் காலங்களின் அளவை உணர்தல், 5. நோயாளி அளவு அறிதல், 6. உடலின் தன்மை அறிதல், 7. பருவம் நாடல், 8. வேதனைகளின் அளவு அ றிதல், 9. சாத்தியம் ஆய்தல், 10. அசாத்தியம் ஓர்தல், 11. யாப்பியம் உணர்தல், 12. மருந்து செய்தல், 13. பழைய மருத்துவர் முறையில் தவறாமை, 14. உதிரங்களைதல், 15. அறுத்தல், 16. சுடுதல் என்பன மருத்துவ இயல்புகளாகும்.
நோயாளிக்கு வந்துற்ற நோய் எது எனத் தேர்வு முறையால் அறிந்துஅந்த நோய் வருவதற்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும். வந்துள்ள நோய் நீங்க வேண்டுமானால்மருத்துவத்தில் எந்த முறையைப் பயன்படுத்தினால் நீங்கும் என ஆராய்ந்து தேரவேண்டும். நோய் எத்தனை நாளாக இருக்கிறது என்பதைக் கேட்டுநோயாளியின் உடலின் தன்மையை அறிந்துவந்துற்ற நோய் நோயாளியால் தாங்கக் கூடியதா?ஏற்ற மருந்தைக் கொடுத்தால் உடல் தாங்குமாஎன்பதை அறிந்துநோய் வந்த காலத்தை அறிந்துநோயாளி படுகின்ற துன்பத்தின் அளவைக் கொண்டுநோய் நீங்கும்– நீங்கா தென்று கணித்து மருந்து செய்ய வேண்டும். மருத்துவம் பார்க்கும் போதுமுன்னோர் மேற்கொண்ட முறையின்படி மருத்துவ விதி மேற்கொள்ளப்பட்டது.
மேலே கூறப்பட்ட பதினாறு முறைகளையும் முற்றக்கற்று அதன் வழி மருத்துவம் செய்யத் தக்கவனே முறையான மருத்துவனாகக் கருதத்தக்கவன் என அறியலாம். இவற்றில் காணப்படும் அறுத்தல்சுடுதல்உதிரங்களைதல் என்னும் முறைகள் அறுவை மருத்துவ முறைகளாக இருக்கின்றன. மருந்து முறைகளோடு அறுவை முறைகளும் சேர்ந்து அமைந்தது சித்த மருத்துவ முறை என்பது தெரியவரும்.
சித்த மருத்துவ உறுப்புகள்
மருத்துவ உறுப்புகள் என்பதுஉடல் உறுப்புகளைப் போல இயற்கையாக அமைய வேண்டியவை எனலாம். உடல் உறுப்பில் ஏதேனும் ஒன்று குறைந்தாலே ஊனம் என்றாகும். அதிலும் சில உறுப்புகள் குறைந்தால் உடல்தான் இருக்கும்உயிர் இருக்காது. அதைப் போலவே மருத்துவ உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குறைந்தாலும் மருத்துவம் ஊனம் ஆகிவிடும். ஒரு சில உறுப்புகள் குறைந்தால் மருத்துவமே உயிரற்றுப் போகக் கூடும் என்பது உணர்ந்துமருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கருதி உறுப்புகள் உரைக்கப் பட்டன.
அவ்வாறு கூறுவதுஒரு முழுமை நிலையை உணர்த்தவும்முழுமையான மருத்துவமுறை வளர்ந்தோங்கவும் உறுப்புகள் அமைத்துக் கூறப்பட்டது எனலாம்.
உறுப்புகள்
மூன்று கண்கள்நான்கு தலைகள்ஐந்து முகங்கள்;
ஆறு கைகள்எட்டு உடல்கள்பத்துக் கால்கள் எனும்
முப்பத்தாறும் மருத்துவ உறுப்புகளாகும்
மூன்று கண்கள் : மருந்துமருந்தின் சுத்திமருந்தின் குணம் ஆகிய மூன்றும் மூன்று கண்கள்.
நான்கு தலைகள் : வாதம்பித்தம்ஐயம்தொந்தம் ஆகிய நான்கும் நான்கு தலைகள்.
ஐந்து முகங்கள் : வாந்திபேதிகுடல் சுத்திநசியம்இரத்தத்தை வெளியாக்கல் ஆகிய ஐந்தும் ஐந்து முகங்கள்.
ஆறு கைகள் : இனிப்புபுளிப்புஉவர்ப்புகைப்புகார்ப்புதுவர்ப்பு ஆகிய ஆறும் ஆறு கைகள்.
எட்டு உடல்கள் : எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்கள்.
பத்து கால்கள் : நாடிகள் பத்துவாயுக்கள் பத்து ஆனாலும் அவை பத்துப் பெயர்களால் குறிக்கப்படுவதால் பத்து கால்கள் எனப்படும்.
என்று குணவாகடம் கூறுகிறது.
இவை முப்பத்தாறும் மருத்துவர்க்குரிய செயல்களாகவும்அவை மருத்துவத்துக்கு மிகவும் தேவையான கருவிகளாகவும் கருதிமருத்துவ உறுப்புகளாகக் கொண்டனர். இவற்றில் எவையேனும் குறைந்து மருத்துவம் செய்யப்பட்டால்அது குற்றமுடையதாக இருக்கும் என்பதால்மருத்துவ உறுப்புக் கோட்பாட்டின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ளலாம்.
சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்
நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்பட வில்லை. மாறாகநோயாளியைக் கண்ட மருத்துவன்நோயாளியின் உடல் பருமன்மெலிவு இவற்றின் தன்மைநோயின் தன்மைநோயின் ஆற்றல்நோய் குணமாகுமாகுணமாகாதா என்னும் கணிப்புநோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவுநோயுற்ற பின் நோயாளிக்கு உடல் உறவுக்காகப் பெண்ணிடம் உண்டாகும் மயக்கத்தின் அளவுநான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளியின் வகைஆள்நாள்குணம்நோய்நாடுபேதம்நிலைகோள்களின் ஆட்சிவீழ்ச்சி ஆகிய அனைத்தும் பார்த்தறிந்துஅதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின்னர்வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும்அதன்பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினால் நோயின் குணம் தணியவில்லை என்றால்பற்பம்செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தவும் என்று செயல்முறை விதிகள் கூறப்பட்டுள்ளன.
ஆரப்பா நாலுலட் சணமும் பாரு
ஆள்பாரு நாள்பாரு குணமும் பாரு
நோய்பாரு தேசபேதங்கள் பாரு
நிலைபாரு கிரக வுச்சம் நீச்சம் பாரு
பேர்பாரு இவனைநீ பிறகு பாரு
போதிலே கீர்த்திழின் றன்மன் பாரு
வேர்பாரு தழைபாரு மிஞ்சி னாக்கால்
மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரே.’’
நோயையும் நோயாளனையும் கணித்தறியாமல் செய்யும் மருத்துவம்முறைப்படுத்தப்பட்ட மருத்துவமாகக் கருதப்பட மாட்டாது. நோயின் வன்மைமென்மைகளையும்நோயாளியின் உடல் மன உறுதிகளையும் ஆராய்ந்தே மருத்துவ முயற்சிக்கு மருத்துவன் முயல வேண்டும். அதுவும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான மருந்துகளைத் தந்துவிடாமல்மெள்ள மெள்ளக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விதிகளில் அடுக்கு முறை கையாளப் படுகிறது.
இதனால் மருத்துவத்தின் பக்குவமும் முதிர்ச்சியும் அறியப் படுகிறது.
“ உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''
என்று குறள் கூறும் மருத்துவச் செயல் விதி இதனைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறது.
சித்த மருத்துவ ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது தூய்மையான நடைமுறையைக் குறிக்கும். தூய்மையான நடைமுறைகள் உயிரினும் உயர்ந்ததாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவரும். இது வாழ்க்கை ஒழுக்கத்தைக் குறிப்பிடும். வாழ்க்கையோடு ஒன்றிய மருத்துவ ஒழுக்கமும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது.
மருத்துவம் செய்கின்ற மருத்துவன் சாதாரண மனித குணங்களி லிருந்து மாறுபட்டு உயர்ந்த குணமுடையவனாக இருக்க வேண்டும் என மருத்துவ நூலார் கருதுகின்றனர். அதனால்தான் ஒழுக்கமும் ஒழுக்க முறையையும் வகுத்துக் காட்டினர். அவ்வழிமுறைகளைப் பின் பற்றி மருத்துவம் செய்வதே ஒழுக்கமுடைய மருத்துவமாகக் கருத முடியும் என எண்ணினர்.
மருத்துவனின் பற்றற்ற நிலை
மருத்துவன்பொருளின் மீது ஆசையோ பற்றோ கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவத்தைப் பயன்படுத்தக் கூடியவனாக இல்லாமல்பொருளாசை கொள்ளாத வனாக இருக்க வேண்டும்.
மருத்துவனின் அன்புடைமை
மருத்துவத்தின் மீதும்பிணியாளர் மீதும் ஆர்வமும் இரக்கமும் உடைய அன்புடையவனாக’ இருக்க வேண்டும்.
மருத்துவனின் கல்வி
வன்மையானஒன்பது வகை உலோகங்கள்ஒன்பது வகைப் பாடாணங்கள்இருபத்தைந்து வகை உப்புகள்நூற்றிருபது வகை உபரசங்கள்முன்னூற்றுக்கும் மேற்பட்ட கற்பவகைகள்ஆயிரத்து எட்டுவகை மூலிகைகள் ஆகியஇவற்றின் வழிமுறைகளைக் கண்டறிந்தவனாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட மருந்துப் பொருள்களின் குற்றங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் அறிந்திருக்க வேண்டும்.
மருத்துவக் கல்வியின் முதிர்ச்சி
மருந்துப் பொருள்களில் இயற்கையாக உள்ள மாசுகளான கசடுகளை நீக்கும் சுத்திமுறைகளை அறிந்துபல்வேறு வகையான செய்முறைகளால் – புடமுறைகளால் பக்குவப்படுத்தி மருந்துகளாக உருவாக்க வேண்டும். எந்தெந்த மருந்துகள் எந்தெந்த நோய்க்கு உரியதென்று அறிந்தறியும் ஆராய்ச்சி அறிவுடையவனாக இருந்துமருத்துவ நெறிகளுக்குக் கட்டுப்பட்டுஅதன் வழியில் மருத்துவம் செய்யும் மருத்துவனே மருத்துவ ஒழுக்கமுடைய மருந்துவனாகக் கருதப்படுபவன் ஆவான் என்பர்.
மருத்துவனுக்கு வேண்டிய ஈகைக்குணம்
வாதமுறையில் மருத்துவம் செய்யும் மருத்துவர்கள்உலோக மாற்று முறைகளைப் பயன்படுத்திப் பொருள் தேட முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்ய நேர்ந்தால்தேடிய பொருள்களை ஏழைஎளியோர்க்கும்வறுமையுற்றவர்களுக்கும்நோயாளிகளுக்கும்உதவ வேண்டும். அவர்களுக்குத் தானமாக ஆடைஉணவுபொருள் முதலிய வற்றால் உதவி புரிய வேண்டும் என்று குறிப்பிடுவதிலிருந்துமருத்துவ ஒழுக்கத்தினால் மருத்துவம் சிறந்தோங்குவதுடன் மருத்துவக்கலை தவறான முறையில் பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்கும் பொதுநல நோக்கமும் உள்ளடங்கியிருப்பது தெரியவரும்.
மருத்துவரின் சீருடை
வாழ்க்கை வசதியும் செல்வச் செழிப்பும் மிக்கவர்கள் மிடுக்கான ஆடை அலங்காரங்களையும்பொன்முத்துமணியாரங்களையும் அணிந்துதங்களின் வளத்தையும் செழிப்பையும் மற்றோர்கள் அறியச் செய்ய அலங்கரித்துக் கொள்வர். அத்தகைய ஆடை அலங்காரங்கள் மருத்துவம் செய்யும் மருத்துவர்களுக்கு உரியதாக ஆகாது என்பதால்மருத்துவர்கள் எவ்வாறிருக்க வேண்டுமென்று சீருடை முறை பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவர்கள் சிவப்பு வண்ணத்தை உடைய ஆடைகளையும்புள்ளிகளை உடைய ஆடைகளையும்மணந்தரும் மணப்பூச்சு களையும்பட்டாடை போன்ற உயர்ந்த ஆடைகளையும்துறவிகள் அணியும் மரவுரிகளையும் அணியக் கூடாது. இவை மருத்துவருக்கு ஆகாத உடைகளாகும். வெண்மையானதும் தூய்மையானதுமான துகிலினாலான ஆடைகளை அணிய வேண்டும் என்பர்.
மருத்துவர்கள் அணிகின்ற ஆடைகள்மருத்துவரைக் காணும் நோயாளிகளுக்கு மனத்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சிவப்பு வண்ணம் மனத்தைப் பாதிக்கும் என்பதால்அந்த வண்ணத்தையும் கண்ணில் உறுத்துதலை ஏற்படுத்தும் என்பதால் புள்ளிகளை உடைய ஆடைகளையும்மரவுரி தரிப்பவர் துறவி என்பதால்துறவி எதையும் எதிர்பார்க்காமல் தான் மேற்கொண்ட வழிப்படியே செல்பவர் என்னும் கருத்து நிலவுவதால்அவர் மருத்துவம் முறையாகப் பார்க்கக் கூடியவர் என்னும் நம்பிக்கை தோன்றாது என்பதனால் இவ்வகையான ஆடைகள் வேண்டாமெனக் கூறப்பட்டது.
வெண்மையான தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவ ரானால்அவரைக் காணும் நோயாளர்அவரைச் சார்ந்தோர் அனை வருக்கும்அவரின்பால் நம்பிக்கையும் நன்மதிப்பும் தோன்றும். நோயைத் தீர்ப்பதற்குத் துணைபுரிவது மனமும் நம்பிக்கையும் காரணம் என்பதனால்தூய வெண்ணிற ஆடை மருத்துவர்க்கு உரியதாகக் கூறப்பட்டது.
சித்த மருத்துவ முன்னோர்கள் விருப்பம்
சித்த மருத்துவம் நின்று நிலைத்திருக்க வேண்டுமானால் சித்த மருத்துவப் பரம்பரை நல்லொழுக்கமும் நல்லெண்ணமும் கொண்டிருக்க வேண்டும். மருத்துவ மரபு சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறிருந்தால் தான் மருத்துவம் புகழுடையதாக இருக்குமெனக் கருதினர். அதனை அடிப்படையாகக் கொண்டே மருத்துவம் பயில்வோர்க்கு மருத்துவ விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தான் என்னும் அகந்தையும் செருக்கும் கொண்டவர்கள் மருத்துவத் துறைக்கே இழுக்கானவர்கள் என்பது மருத்துவ முன்னோர்களின் விருப்பமாக இருந்திருக்கிறது.
மருந்துகளைச் செய்யும் போது ஒரு சில தவறுகள் நேர்ந்தால் செய்த மருந்து அனைத்தும் கெட்டுவிடும். அதனைக் கண்டு மனம் கலங்காமல் மீண்டும் தவறு நேராமல் மருந்து செய்யும் பக்குவ மடைந்தவர்களுக்குக் கற்பம்தீட்சை முறைகளைக் கற்பிக்கலாம்.
கற்பம்,தீட்சை முறைகளைக் கற்று அவற்றை முறையாகப் பயன்படுத்திபணிவுடன் மருத்துவம் செய்பவர்களுக்குபூரணத்தின் கருபிரணாயாமத்தின் கரு ஆகியவற்றைக் கற்பிக்கலாம்.
பூரணம்பிரணாயாமத்தைப் பாதுகாக்கின்ற முறையை
அறிந்த பின்பேஇரசமுறைவேதை முறைகளைக் கற்பிக்க
வேண்டும்.
கற்பத்தின் வழியில் ஒழுக்கமுடையவர்களாக இருப்பவர்களுக்கு மூதண்ட இளகம்தைல முறைகளைக் கற்பிக்கலாம். என்றுமருத்துவத்தின் அனைத்து முறைகளையும் ஒரே நேரத்தில் ஒருவருக்குக் கற்றுத்தராமல்அவரவர்கள் தகுதியையும் குணத்தையும் கண்டறிந்த பின்னரே ஒவ்வொன்றையும் கற்றுத்தர வேண்டுமென்றுமருத்துவக் கல்வியில் அடுக்கு முறைகளை வைத்திருப்பது போற்றுதலுக்குரியது எனலாம்.
சித்த மருத்துவ முன்னோர்கள்
பண்டைய காலத் தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறைகள்ஆயுள் வேதம், ‘மருத்துவம்’ என்னும் இரு பெயர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறைகள் தென்மொழிவட மொழிகளைக் கற்றவர்களால் கற்பிக்கப் பட்டு வந்தன. கற்பிக்க வந்த ஒவ்வொருவரும் தத்தமக்குத் தெரிந்த வரையில் மருத்துவ முறைகளை விரித்துரைத்தும் நூல்வடிவில் எழுதியும் வந்தனர். இம்முறையில்ஆயுள் வேதம் கற்பித்தவர்கள் வடமொழியைச் சார்ந்தும்மருத்துவத்தைக் கற்பித்தவர்கள் தென் மொழியைச் சார்ந்தும் இருந்தனர். இந்த இருமுறை கல்வியாளர் களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டன. தமிழ் மொழிச் சார்புடைய மருத்துவர்கள் தங்கள் இடையறாத முயற்சியினால் மருத்துவ முறைகளைச் சிறந்த முறையில் மேம்படுத்தினர். மூலிகைகளினால் ஆன மருந்துகள் நோய்களைத் தீர்க்கப் போதுமானவையாக இல்லை என்பதை அறிந்துஅதற்கும் மேலான வழிகளை ஆராய்ந்து உலோகம்உபரசம்உப்புபாடாணம் என்பவற்றைக் கண்டறிந்துஅவற்றையும் சிறந்த மருந்துகளாகப் பயன்படுத்தினர்.
"" சூத கந்தி தாதுபற்பஞ் சொன்னநாட் டார்சிகிச்ø
ஓதரிய மூலியம்மண் ணோர்சிகிச்சை வேதடரும்
சந்திரசா ராக்கினி நி சாசரச்சி கிச்சை யென்றே
முத்தரத்த தாகும் மொழி''
எனதேரையர் உரைக்கக் காணலாம்.


சித்த மருத்துவத்தின் தோற்றம்
சித்த மருத்துவம் கூறும் நூல்களில் தொண்ணூ<று விழுக்காட்டு அளவு நூல்கள்நூலின் முகப்பிலோ இடையிலோ நூலின் வழிமுறைகளை உரைக்கக் காண்கிறோம். அவ்வாறு உரைக்கப் படுபவை அனைத்தும் மருத்துவத்தின் தோற்றம்இறைவனிடமிருந்து அறிந்தது என்றே உரைக்கக் காண்கிறோம்.
சித்த மருத்துவத்தின் அறிவியல் அடிப்படைகள்
சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியலோடு ஒத்த அமைப்பில் உருவானவை. ஆழ்ந்து நோக்கும் போது அறிவியலின் அளவை இயலிலின்று எந்த விதத்திலும் மாறுபடாதவை. காண்டல் கருதுதல் கருதுகோள் என்னும் மூன்று பிரமாணங்கள் அடிப்படையானவை. ஒப்புறைஎதிருறைகலப்புரை என்னும் மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்க வல்லதாக அமைந்துள்ளது சித்த மருத்துவம் என்று,அறிவியலோடு இயைந்து செல்வது ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மேலும்சித்த மருந்தியல் தத்துவப்படிஉடலானது ஐம்பூதங் களாலும்அப்பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த் தாதுகளாலும் (வாதம்பித்தம்ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும்உணவாதிக் குறைகளாலும்கோள்களின் பேதங் களாலும்தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும். வாதம்பித்தம்ஐயம் என்னும் மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றும். வாதம் இயக்கும் (ண்tச்ணூtஞுணூ)பித்தம் இயங்கும் (அஞிஞிஞுடூஞுணூச்tணிணூ)ஐயம் நிறுத்தும் (ஆணூஞுச்டு)மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை அனுமானமாகக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படும். இந்த அனுமானங்களே இன்ன நோய் என்று தீர்மானிக்க உதவும். மருந்தைத் தீர்மானிக்கும் போதும் இத்தகைய அளவையியல் தத்துவமே பயன்படுத்தப்படுகிறது. மருந்துகளிலும் வாத மருந்துபித்த மருந்துஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர்.
நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி (அஞிஞிணிணடிtதட் ஞூஞுணூணிது) ஒரு பொல்லாத நஞ்சு. அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும்இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன்இதயத்துடிப்பைகுருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது. மாஸ்கர் (Mச்ண்டுஞுணூ)காய்ஸ் (ஞிச்டிதண்) எனபவர்கள், 1937இல் செய்த சோதனையில்நாபியில் அடங்கிய அக்கோனிடின் (அஞிணிணடிtடிணஞு) கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர். வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போதுசித்தர்களின் சுத்திமுறை விஞ்ஞான முறையில் அமைந்த ஒன்றே என்று அறிந்து மகிழலாம்.  பழமையான சித்தர் அறிவியல் இக்கால அறிவியலோடு ஒத்திருக்கிறது என்பது புலப்படுவதுடன்சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவமே என்பதும் விளக்கும்.
வெங்காரம் (ஆணிணூச்து)நவச்சாரம் (அட்ட்ணிணடிதட் ண்தடூணீடச்tஞு) இரண்டும் முறையே நாத பிந்தாக இணையும். அவற்றின் கூட்டுச் சரக்கு ஆற்றல் மிக்கது. வீரத்தோடு வெண்ணெய் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. ஆனால் மிருதார்சிங் பாதிக்கப்படுவதில்லை. மிளகும் சுக்கும் மித்ரு என்பர். சுண்ணம் தயாரிக்கும் போது சத்ருவால் அழித்து மித்ருவால் எழுப்புவர். ஆங்கில முறையிலும் மருந்தின் கலப்பில் ஒவ்வாமை (டிட்ஞிணிட்ணீச்tடிஞடூஞு) பற்றி அறிந்திருக்க வேண்டும். தீயகம் அடங்கிய பொருளோடு தீயகம் ஏற்கும் பொருளைக் கலந்துவிடின் வெடித்து விடலாம். சிலபோது ஒன்றோடு ஒன்று கலந்து நச்சுப் பொருள் தோன்றலாம். இது வேதிநிலையில் ஒவ்வாமை. சாராயத்தில் கலந்து செய்த மருந்தில் தண்ணீர் ஊற்றினால் நீரில் கரையாமல் வண்டலாகப் படியும். மேலும் மணம் குணம் முதலியவற்றாலும் பொருந்தாது போகலாம். அது பௌதீக நிலையில் ஒவ்வாமை. மலமிளக்கியுடன் மலத்தைக் கட்டும் பொருளைச் சேர்த்தால்மருந்தியல் விளைவில் ஒவ்வாமை தோன்றும். சிலபோது ஒவ்வாமையும் தேவைப்படலாம். ஒன்றின்   செயல்திறனைக் குறைப்பதற்கோ மாற்றுவதற்கோ அவை உதவும். இது போன்ற கருத்து சித்தர்களிடம் மிகுதியாக உண்டு.
ஒப்புறை – ஒத்த குண மருந்து
எதிருறை – எதிர் குண மருந்து
கலப்புறை – இருவித மருந்து
என்னும் வகையில் வேறுபடுத்தி விளக்குதல் சித்தர் முறை. 
மனிதருக்கு உண்டாகும் நோய்கள் யாவுமே வாதம்பித்தம்ஐயம் என்ற இம்மூன்றில் அடங்கும். இம்மூன்றும் நோயின் மூன்று முகங்கள். இம்மூன்றினுள்வாத நோய்கள் எண்பது வகைப்படும். பித்தம்
நாற்பது ஐயம்இருபது வாத பித்த ஐய மெனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று கலந்தும்உழன்றும் வேறுவிதமான தொழில்களைச் செய்து பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கின்றன.
உடம்பில் தோன்றும் நோய்களின் எண்ணிக்கை 4448. வகைப்படுத்தப்பட்ட நோய்கள் 360. சுர நோய்கள் 108 ஆகும். கொடிய நோய்களாகச் சுட்டப்படுகின்ற நூற்றியெட்டு சுர நோய்களில் முதன்மைப் பெறுவன முப்பது. இம் முப்பது நோய்களுக்கும் தலைவனாக விளங்குவது வாதபித்தஐயம் என்னும் முத்தோட நோயேயாகும். 
பசியின்மை என்பது (ஈதூண்ணீஞுணீண்டிச்) மிகக் கடும் நோய்களின் ஒன்றென்பது ஆங்கிலேய மருந்துவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கிறது. இந்தக் கொடிய நோயானது பொதுவாகச் சொல்லின்ஆங்கில மருத்துவ முறைப்படி பயன்படுத்தப்படும் பெப்சின் (கஞுணீண்டிண)பிஸ்மத் (ஆடிண்ட்தtட) முதலிய பல மருந்துகளுக்கு முற்றும் கட்டுப் படாமலே இருக்கிறது. வைத்தியத் திருப்புகழ் கூறும் இஞ்சி இளகம் என்னும்   மருந்தினாலோ பெரும்பான்மையும் பயனுண்டாகி வருகிறது. இந்தச் செரியாமை நோயே குன்ம நோயை உண்டாக்குவது. உண்மையில் இதனைத் தொடக்கக் குன்ம நோயெனச் சொல்லலாம். ஆகையால் தான்இந்தக் கடும் நோயின் சிகிச்சையைத் தொடக்கமாக (வைத்தியத் திருப்புகழ்) எடுத்துச் சொல்கிறது66 என்பதிலிருந்துநோயின் ஆரம்ப நிலையை அறிந்து அதற்குரிய முறையில் மருத்துவம் செய்வது சித்த மருத்துவம் என அறியலாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக