பித்த அண்டவிருத்திக்கு பஞ்சவல்கலாதி கல்கம் :- நாவல், அரசு, அத்தி, இத்தி, ஆல் இவைகளின் பட்டை, கொன்னைப்புளி, இவைகளை கல்கஞ்செய்து நெய் கலந்து அண்டத்தின் மீது தடவினால் அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
மேற்படிச் சரக்குகளை கியாழம் வைத்து குடித்தாலும், பித்தத்தினால் உண்டாகிய அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
கபஅண்டவிருத்திக்கு திரிகட்வாதி கியாழம் :- திரிகடுகு, திரிபலை இவைகளை கியாழம் வைத்து அதில் யவக்ஷ¡ரம், இந்துப்பு இவைகளை கலந்து பானஞ்செய்தால் கபவாத அண்டவிருத்தி பேதியாவதால் குறைந்துவிடும்.
ரக்த அண்டவிருத்திக்கு திரிவிருத்தாதி கியாழம் :- சிவதைவேர் கியாழத்தில் சர்க்கரை, தேன் கலந்து அடிக்கடி குடித்துவந்தால் ரக்த அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
ஆமம், கிரந்தி இவைகளினால் உண்டான அண்டவிருத்திக்கு பித்த அண்டவிருத்திக்கு செய்யும் உபசாரங்களை செய்யவேண்டியது.
ராஸ்னாதி கியாழம் :- சித்தரத்தை, அதிமதுரம், சீந்தில்கொடி, ஆமணக்குவேர், பேய்ப்புடல், காட்டுமிளகு, சிற்றாமுட்டி, ஆடாதோடை இவைகளை கியாழம் வைத்து அதில் எண்ணெய் கலந்து சாப்பிட்டால் அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
வாதசிலேஷ்ம அண்டவிருத்திக்கு திரிபலாதி கியாழம்:-
திரிபலையை கோமூத்திரத்தில் நறுக்கிப்போட்டு கியாழம் காய்ச்சி சாப்பிட்டால் வாதசிலேஷ்மத்தால் உண்டாகிய அண்டவீக்கம் நிவர்த்தியாகும்.
ஆந்திரவிருத்திக்கு ராஸ்னாதி கியாழம் :- சிற்றரத்தை சீந்தில் கொடி, சிற்றாமுட்டி, அதிமதுரம் நெரிஞ்சில் ஆமணக்குவேர், இவைகள் சமஎடையாக கியாழம் வைத்து அதில் ஆமணக்கெண்ணை யைக் கலந்து குடித்தால் குடலண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
வர்த்மரோகத்திற்கு கல்கம் :- கடுக்காய் சூரணம், திப்பிலி சூரணம், இந்துப்பு இவைகளை ஆமணக்கெண்ணெயில் போட்டு கலக்கி சாப்பிட்டால் வாத அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
குரண்டரோகத்திற்கு ஹரீதகீ சூரணம் :- கடுக்காயைகோமூத்திரத்தில் வேகவைத்து உலர்த்திபிறகு ஆமணக்கெண்ணெ யில் வறுத்து சூரணித்து இந்துப்பு சேர்த்து வெந்நீருடன் உட்கொண்டால் நிவர்த்தியாகும்.
வர்த்தமரோகத்திற்கு பில்வாதி சூரணம் :- விலவமூலம், விலாம் வேர், பெருவாகை வேர், சித்திரமூலம், முள்ளங்கத்திரிவேர், கண்டங்கத்திரிவேர், சிவதை வேர், செருப்படை வேர், முருங்கன் வேர்,
சுக்கு, கரும்சேராங்கொட்டை வேர், திப்பிலி, மோடி, மிளகு,பஞ்சலவணங்கள், யவக்ஷ¡ரம், குரோசோணியோமம், கிச்சிலிக்கிழங்கு, இவைகளை சமஎடையாகச் சூரணித்து அல்லது வெந்நீர் இவைகளுடன் சாப்பிட்டால் வர்த்தமரோகம் நீங்கும்.
சுவதம்ஷ்ட்டிராதி சூரணம் :- நெரிஞ்சில், இந்துப்பு, சுக்கு,கோரைக்கிழங்கு, தேவதாரு, வாய்விளங்கம், பாஷாணபேதி, லோஹபற்பம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் வாதவர்த்தமரோகம் நீங்கும்.
விருத்திநாசன ரசம் :- சுத்திசெய்த இரசம், கெந்தி இவைகள் வகைக்கு பலம்-1, இவைகளுக்கு சமஎடை சுத்திசெய்த ஹேமமாக்ஷ¢ கம் இவைகளை கல்வத்திலிட்டு கடுக்காய் கியாழத்தினால் மூன்று நாள் அரைத்து பிறகு ஆமணக்கெண்ணெயில் ஒரு நாள் அரைத்துஅளவாக கொடுத்தால் அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
பித்த அண்டவிருத்திக்கு சந்தனாதி லேபனம் :- சந்தனம், அதிமதுரம், தாமரைவளையம் வெட்டிவேர், கரும் அல்லி இவைகளை பாலால் அரைத்து லேபனஞ் செய்தால் பித்த அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
வசாதி லேபனம் :- வசம்பு, கடுகு இவைகளை அரைத்து கல்வஞ்செய்து தடவினால் அண்டசோபை நிவர்த்தியாகும்.
அஜாஜியாதி லேபனம் :- சீரகம், சிவகரந்தை அல்லது சோம்பு கோஷ்டம், கோமலம், இலந்தைவேர் இவைகளை நீர்விட்டரைத்து லேபனஞ் செய்தால் வர்த்தமரோகம் நிவர்த்தியாகும்.
லாக்ஷ¡தி லேபனம் :- அரக்கு, புங்கன்கொட்டை, சுக்கு,தேவதாரு, காவிக்கல் இவைகளை சமஎடை நீர்விட்டரைத்து லேபனஞ் செய்தால் அண்டவீக்கம் நிவர்த்தியாகும்.
பிப்பல்யாதி லேபனம் :- திப்பிலி, சீரகம், கோஷ்டம், இலந்தை கொட்டை பருப்பு, உலர்ந்த கோமளம் இவைகளை நீர்விட்டரைத்து லேபனஞ் செய்தால் ஆந்திரவிருத்தி நிவர்த்தியாகும்.
ஆந்திரவிருத்திக்கு தேவதரிவாதி லேபனம் :- தேவதாரு, ஆடாதோடை, இந்துப்பு இவைகளை தேனுடன் அரைத்து அண்டத்தின் மீது தடவினால் மேற்படி நிவர்த்தியாகும்.
லேபனம் :- இந்துப்பு சூரணத்தை பசுநெய்யில் கலந்து உள்ளுக்கு சாப்பிட்டு இதையே சிறிது வெதுப்பி அண்டத்திற்கும் தடவினால் குடலண்டம் நிவர்த்தியாகும்.
கோமயத்தை சுண்டக்காய்ச்சி அதில் கோஷ்டம், இலந்தைகொட்டைபருப்பு இவைகளை அரைத்து பற்றிட அண்டவீக்கம் நிவர்த்தியாகும்.
கழற்சிபரிப்பை சூரணித்து வெந்நீரில் அருந்தி கழற்சிபருப்பை நீர்விட்டு அரைத்து அண்டத்திற்கும் பூசிவர அண்ட வீக்கம் குணமாகும்.
ஏரண்டதைல யோகம் :- பால், விளக்கெண்ணெய் இவைகளை கலக்கி ஒரு மாதம் சாப்பிட்டாலும், குங்குலிய சூரணம் ஆமணக்கெண்ணெய் இவைகளை கோமூத்திரத்தில் கலந்து சாப்பிட்டாலும் வெகுநாளாயிருக்கும் வாதவிருத்தி, குடலண்டம் நிவர்த்தியாகும்.
சாமானிய சிகிச்சை :- உஷ்ணவிரீயங்களான ஔஷதங்களை கோமூத்திரத்தில் அரைத்து லேபனஞ் செய்தாலும் அல்லது மரமஞ்சள் கியாழத்தில் கோமூத்திரத்தை கலந்து குடித்தாலும் கப அண்ட
விருத்தி நிவர்த்தியாகும்.
சிராவேதை :- கழுத்து பக்கங்களிலாவது, காதுமூலங்களிலும் சேவநீயமென்கிற நாடியைவிட்டு வித்தியாசாமாய் கழுத்தை ஒடித்தால் ஆந்திரவிருத்தி நிவர்த்தியாகும்.
கர்ண சிராவேதை :- கர்ண மத்தியில் இருக்கும் ரத்தமூலநரம்பை துவாரம்செய்தால் அண்டவிருத்தி நிவர்த்தியாகி சுகமாயிருப்பா.
கோமூத்திர யோகம் :- குங்கிலியம் அல்லது ஆமணக்கெண்ணெய் கோமூத்திரத்தில் கலந்து குடித்தால் கொஞ்சகாலமாயிருக்கும் அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
நாராயண தைலம் :- ஆமணக்கெண்ணெயில் பாலைக் கலந்தாவது அல்லது ஆமணக்குவிரையிலுள்ள பருப்பை அரைத்து கலந்தாவது ஒருமாத காலம் குடித்தாலும் அல்லது தலைக்கு தேய்த்துக் கொண்டு குளித்தாலும் வஸ்திகர்மத்தை செய்தாலும் அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
அங்குஷ்டாவர யோகம் :- பாதங்களிலிருக்கும் அங்குஷ்ட மத்தியத்தில் உள்ள தோலைகீறி நரம்பைசுட்டால் அண்டவிருத்தி நிவர்த்தியாகும்.
அண்டரோக சிகிச்சை :- பெருங்காயம் கழற்சி பருப்பு,கொள்ளு, வெள்ளைப்பூண்டு இவைகளை சமஎடையாகக் கியாழம் காய்ச்சி, அதில் நெய் கலந்து சாப்பிட்டுவர அண்டவிருத்திகள் நிவர்த்தியாகும்.
முடக்கற்றான் எண்ணெய் :- முடக்கற்றான் சாறு படி-1/2, கள்ளியை நெருப்பனலில் வாட்டிப் பிழிந்த சாறு படி-1/2, சிற்றாமணக் கெண்ணெய் படி-1, இவைகளைக் கலந்து ஓர் தைல பாண்டத்தி லிட்டு, அதில் சித்திரமூல வேர்ப்பட்டை, வெள்ளைக்காட்டான் வேர், சிற்றரத்தை, இந்துப்பு, பெருங்காயம், கழற்சி வேர்பட்டை, கழற்சி பருப்பு வகைக்கு பலம்-1/2, தோலுரித்த வெள்ளைபூண்டு பலம் 1 1/2 வீதம் எடுத்து அரைத்து சேர்த்துக்கலந்து அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து பதமுற காய்ச்சிவடித்து வைத்துகொள்க. இதில் வேளைக்கு 1/4 முதல் 1/2 அவுன்ஸ் வீதம் தேகத்திடத்திற்கும் நோயின் வன்மைக்கும் தக்கபடி அறிந்துதினம் ஒருவேளை காலையில் மட்டும் கொடுக்கவேண்டும். இதனால் பேதியாகும். பேதி அதிகமானால் மறுமுறை அளவைச் சிறிது குறைத்துகொள்க. சரிவர பேதியாகாவிடில் சிறிது அளவை அதிகப்படுத்திக்கொள்க. இப்படி 2-3 நாள் கடும்பத்தியத்துடன் கொடுத்து வருதல் நன்று. இதனால்அண்டவாதம், குடல்வாதம், வாதசூலை முதலியன் குணமாகும்.
சுழற்ச்சிச்சூரணம் :- சுழற்சிப்பருப்பு, சித்திரமூலவேர்ப்பட்டை வகைக்கு பலம் ஒன்றாக நிறுத்து பொடித்துச்
சூரணித்து இதில் வேளைக்கு 1/2 வராகனெடை வீதம், தினம் இருவேளையாய் வெந்நீரில் அருந்திவர குமுறலண்டம், அண்டத்தில் வீக்கம் வலி முதலியன குணமாகும்.
அண்டநோய்க்கு புறசிகிச்சைகள் :- சுழற்ச்சிப்பருப்பை முட்டை வெண்கரு விட்டரைத்து நோயுள்ள அண்டத்தின் மீது பற்றிட்டு வரலாம். சுழற்சி இலையை அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி தாளக்கூடிய சூட்டில் ஒற்றடமிட்டு அதையே அண்டத்தின் மீது வைத்துக் கட்டிவரலாம் .
சிற்றாமணக்கிலையை சிற்றாமணக்கெண்ணெய் விட்டு வதக்கி பீஜத்தின் மீது வைத்து கட்டலாம். தைவேளை இலையையும், மணத்தக்காளி இலையையும் ஒன்றுசேர்த்து வதக்கி, பீஜத்தின் மீது வைத்து கட்டலாம்.
இத்தகைய சிகிச்சைகளினால் அண்டத்தில், ஏற்பட்ட வீக்கம்வலி, குத்தல் முதலியன குணமாகும்.
சுழற்ச்சித்தைலம் :- சுழற்ச்சிக்கொடிவேர்ப்பட்டை பலம் 20இடித்து ஓர் பாண்டத்திலிட்டு 6 படி நீர்விட்டு ஒரு படியாய் சுண்டக் காய்ச்சி அதில் சுழற்ச்சிக்கொடியின் கொழுந்து பலம் 5, சுழற்ச்சிப்பருப்பு பலம் 2, அரைத்து சேர்த்து சிற்றாமணக்கு நெய் வீசை1, கூட்டி, ஏலம், பரங்கிச்சக்கை, வால்மிளகு, சன்னலவங்கப்பட்டை
வகைக்குப்பலம் 1/2 வீதம், இளவருப்பாய் வருத்திடித்து வஸ்திரகாயஞ்செய்துப் போட்டு அடுப்பிலேற்றி சிறு தீயெரித்து தைலபத்தத்தில் வடித்து வைத்துக்கொள்க. பின்பு சுத்திசெய்தபூரம், சுத்தி செய்த நேர்வாளப்பருப்பு, வகைக்கு பலம் 1/2 வீதம் தனித்தனியே கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பிறகு ஒன்று கூட்டி அதில் காய்ச்சி
வைத்துள்ள தைலத்தில் சிறிது விட்டு நன்கு அரைத்து மிகுதியுள்ள தைலத்தில் கலக்கி வைத்துக்கொள்ளவும்.
இதில் 1/2 முதல் 1/2 பலம் வீதம், தினம் ஒரு வேளையாககாலையில் மட்டும் தேகதிடத்தையும் நோயின் வன்மையையும்கண்டு கொடுத்து வரவும், இதனால் நாலைந்து முறை பேதியாகும். இப்படி 3 முதல் 5 நாள் வரையில் கொடுக்கவும், தேவையாயின் சிலநாள்விட்டு வைத்து மீண்டும் முன்போல் ஒரு முறை கொடுக்கலாம். இப்படி விட்டுவிட்டு சிலமுறைகள் கொடுப்பதற்குள் அண்டரோகங்கள் யாவும் குணமாகும். இதனால் அடிகுடலில் சஞ்சரிக்கின்ற வாயு, பீஜவீக்கம், பீஜவாயு, சப்த தாதுக்களைப்பற்றி யெழாகின்ற
வீக்கங்கள், வாதரோகங்கள் முதலியன யாவும் குணமாகும். மருந்து சாப்பிடும் போது மட்டும் இச்சாபத்தியாமாக இருந்து வருதல்நன்று.
அண்டவிருத்திற்கு பத்தியங்கள் :- விரேசன சிகிச்சை, வமன சிகிச்சை, வஸ்திகர்மம், பற்று ஒற்றடம், பூச்சு, ரத்தம் வாங்குதல் வியர்வை வாங்குதல், கார் அரிசி, விளக்கெண்ணெய், கோமூத்திரம் முருங்கைக்காய், புடலங்காய், சாரணை, நெரிஞ்சல், நெல்லிக்காய்தாம்பூலம், கடுக்காய், சிற்றரத்தை, வெள்ளைப்பூண்டு, இவைகளை சாப்பிடுதல், தேன், நெய், இளநீர், மோர், சூடு போடுதல், இவைகள் பத்தியங்கள்.
அபத்தியங்கள்: - ஜலமுள்ள பிரதேசங்களில் ஜந்துமாமிசம், தயிர், உளுந்து, விருந்து அன்னம், துஷ்ட அன்னம், கடின பதார்த் தங்கள் சாப்பிடுதல், சுக்கிலத்தை தடுத்தல், மூத்திரவேகத்தை தடுத்தல், குதிரை, முதலியவைகளின் மீது சவாரிசெய்தல், அதிகஅலுப்பு, அதிக புணர்ச்சி, அதிக திண்டி, நடை, உபவாசம் இவைகள் அபத்தியங்கள்.
0 comments:
கருத்துரையிடுக