புதன், ஜனவரி 13, 2010

சூலை நோய்க்கு சிகிச்சைகள்

சூலைசிகிச்சை

தசமூலாதிகியாழம் :- தசமூலக் கியாழத்தில் ஆமணக்கு எண்ணெய், பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், இவைகளை கலந்து சாப்பிட்டால் கோரமான சூலைகள் நீங்கும்.

விசுவாதிகியாழம் 
:- சுக்கு, ஆமணக்கு வேர் இவைகளை கியாழம் வைத்து அதில் பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், கலந்து குடித்தால் சூலைகள் நிவர்த்தியாகும்.

பலாதிகியாழம் :- சிற்றாமுட்டி, வெள்ளைச்சாரணைவேர்,ஆமணக்குவேர், முள்ளங்கத்திரி, கண்டங்கத்திரி, இவைகளை கியாழம் வைத்து அதில் பெருங்காயம், உப்பு கலந்து சாப்பிட்டால் வாதசூலை நிவர்த்தியாகும்.

பித்தசூலைகளுக்கு சலாவரியாதி கியாழம் :- தண்ணீர்விட்டான் கிழங்கு, அதிமதூரம், சிற்றாமுட்டி, தருப்பைவேர், நெருஞ்சல் இவைகளை கியாழம் வைத்து அதில் வெல்லம், தேன், சர்க்கரை கலந்து கொடுத்தால் பித்தரத்தம், எரிச்சல், சூலை இவைகள் நிவர்த்தியாகும்.

பிருகத்யாதி கியாழம் :- கண்டங்கத்திரிவேர், நெரிஞ்சல்ஆமணக்குவேர், குசதர்ப்பை, காசதர்ப்பை, கரும்பு இவைகளின் கியாழம் போட்டு சாப்பிட்டால் கொடூரமான பித்தசூலை கள் நிவர்த்தியாகும்.


திரிபலாதி கியாழம் :- கடுக்காய் 1 பாகம், தானிக்காய் 2 பாகம், நெல்லிவற்றல் 3 பாகம், சரக்கொன்றைப்புளி 4 பாகம் இவைகளை கியாழம் வைத்து அதில் சர்க்கரை, தேன், சாப்பிட்டால் ரத்தபித்தம், எரிச்சல், பித்தசூலைகள் நிவர்த்தியாகும்.

கபசூலைகளுக்கு ஏறண்ட மூலாதிகியாழம் :- ஆமணக்குவேர், 2 பலம் 16 பலம் சலத்தில் கொட்டி, கியாழம் காய்ச்சி அதில் யவாக்ஷ¡ரம் கலந்து சாப்பிட்டால் பாரிசத்திலிருக்கும் கபசூ¨லாகள் நிவர்த்தியாகும்.

ஆமசூலைகளுக்கு சித்திரகாரி கியாழம் :- சித்திரமூலம், மோடி ஆமணக்குவேர், சுக்கு, கொத்தமல்லி இவைகளை கியாழம் வைத்து அதில் பெருங்காயம், இந்துப்பு, பீடாலவணம், கலந்து கொடுத்தால்
ஆமல சூலை நிவர்த்தியாகும்.

தொந்தசூலைகளுக்கு கியாழம் :- கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, குசதர்ப்பை, காசதர்ப்பை, கரும்பு இவைகளின் வேர்கள் நெரிஞ்சல்,ஆமணக்குவேர், இவைகளின் கியாழம் வைத்து சர்க்கரை,
தேன் கலந்து சாப்பிட்டால் பித்தவாதசூலை நிவர்த்தியாகும்.

பித்தசிலேஷ்ம சூலைகளுக்கு படோலாதி கியாழம் :- பேய்ப் புடல், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், வேப்பன் ஈர்க்கு இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால்  பித்தசிலேத்துமசுரம், வாந்தி, எரிச்சல், சூலை இவைகள் நிவர்த்தியாகும்.

திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷ, திப்பிலி, ஆடாதோடைஈர்க்கு, இவைகளை கியாழம் வைத்து குடித்தால் சிலேஷ்ம சூலை நிவர்த்தியாகும்.

விரேசனம், வமனம், முதலிய சிகிச்சைகளை செய்தால் பித்த சிலேஷ்ம சூலை நிவர்த்தியாகும்.

ஏரண்டமூலாதி கியாழம் :- ஆமணக்குகாய், ஆமணக்குவேர் கண்டங்கத்திரிவேர், முள்ளங்கத்திரிவேர், நெரிஞ்சல்வேர், நிலக்கடம்பு, சிற்றாமல்லி, போராமுட்டி, சகதேவி, ஆடாதோடை ஈர்க்கு, சுக்கு இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து அதில் யவக்ஷ¡ரம் கலந்து சாப்பிட்டால் தொந்தசூலைகள் நிவர்த்தியாகும்.

ஏலாதி கியாழம் :- ஏலக்காய், பெருங்காயம், யவக்ஷ¡ரம்,இந்துப்பு, இவைகளை கியாழம் வைத்து ஆமணக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் இதய சூலை, குன்மசூலை முதலியன குணமாகும்.

மாதுலிங்காதி கியாழம் :- மாதுழம்பழ ரசத்திலாவது அல்லது முருங்கைவேர் ரசத்திலாவது யவக்ஷ¡ரம் தேன் கலந்து சாப்பிட்டால் பாரிச சூலை இதயசூலை, அடிவயிற்றில்நோய் இவைகள் நீங்கும்.

ஓமக்கியாழம் :- ஓமம், பெருங்காயம், பீடாலவணம், சுக்குசவ்வர்ச்சலவணம், திப்பிலி,கண்டங்கத்திரி, மாதுழம்பழவிரை இவைகளை சமஎடையாக சேர்த்து கியாழம் வைத்து சாப்பிட்டால் சகல சூலைகளும் நீங்கும்.

ஏரண்டகாதி கியாழம் :- கண்டங்கத்திரிவேர், வில்வவேர்,ஆமணக்குவேர், முள்ளங்கத்திரிவேர், மாதுழம்பழவேர், சிறுபீழை இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து அதில் யவக்ஷ¡ரம் பெருங்காயம், ஆமணக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால்  இடுப்புசூலை, தொடைசூலை, இதய சூலை,ஸ்தனியசூலை இவைகள் நிவர்த்தியாகும்.

பரிணாமசூலைக்கு திரிபலாதிகியாழம் :- திரிபலை, கொத்து புங்கன் பட்டை, இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து அதில்  தேன் சர்க்கரை கலந்து குடித்தால் தேகதாபம், ரத்தபித்தம், பித்தசூலை, பெரும்பாடு இவைகள் நீங்கும்.

பரிணாமசூலைக்கு கல்கம் :- விஷ்ணுகிரந்திவேர், கல்கத்தில் சர்க்கரை தேன் இவைகளை சேர்த்து ஏழு நாள் சாப்பிட்டால் பரிணாமசூலை நிவர்த்தியாகும்.

சகலசூலைகளுக்கு சூலகுடார ரசம் :- சுட்டவெங்காரம், சுத்தி செய்தரசம், சுத்திசெய்த கெந்தி, திரிபலை, திரிகடுகு, சுத்திசெய்த தாளகம், சுத்திசெய்தநாபி, தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த நேர்வாளம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டுகரிசனாங்கண்ணி சாற்றில் ஒரு நாள் அரைத்து 2 குன்றி எடை மாத்திரைகள் செய்து
அதில் ஒரு மாத்திரை மிளகு சூரணம் அல்லது இஞ்சி ரசம் இந்த அனுபானத்துடன் சாப்பிட்டால் சகல சூலைகள் நீங்கும்.

அகினிகுமார ரசம் :- சுத்தி செய்தரசம், சுத்திசெய்த கெந்தி,பொரித்த வெங்காரம், இவைகள் வகைக்கு 1- பாகம் சுத்திசெய்த வசநாபி 3 பாகம், பலகறை பஸ்பம் 2 பாகம், சங்குபற்பம் 2 பாகம், மிளகு 8 பாகம், இவை யாவையுஞ் சூரணித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழரசத்தினால் அரைக்கவும், பிறகு அம்மருந்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். இதை 2 குன்றி எடை தக்க அனுபானத்துடன் கொடுத்தால் திரிதோஷசூலைகள் நிவர்த்தியாகும்.

சகலசூலைகளுக்கு தாம்பிர க்ஷ¡ர ரசம் :
- தாம்பிரபஸ்பம் 1 பலம் கெந்தி 1 பலம், புளிசாரம் 2 பலம், இந்த மூன்றை யொன்றாய்க்கலந்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இதை 1/2 முதல் 1
குன்றிஎடை வெந்நீரில் சாப்பிட்டால் சகல சூலைகள் நிவர்த்தியாகும்.

பீடாரி ராசம் :- அப்பிரகபஸ்பம் 3 பலம், இரசபஸ்பம் 1 பலம் சுத்திசெய்த கெந்தி 1 பலம்,நேர்வாளம் 2பலம், பொரித்தவெங்காரம் 3பலம், இவைகளை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழரசத்தினால்  3 நாள் அரைத்து கடலை அளவு மாத்திரை செய்து வெல்லத்தில் சாப்பிட்டால் ஆமசூலை, கிருமிசூலை இவைகள் நிவர்த்தியாகும். இதற்கு பத்தியம் மோர்ச்சாதம்.

சகலசூலைகளுக்கு சண்முக ரசம் :- சுத்தி செய்தரசம், சுத்தி செய்த கெந்தி, தாம்பிரபஸ்பம், சவ்வர்ச்சலவணம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் 1 நாள் அரைத்து வெய்யிலில் உலர்த்தி மடக்குகளில் வைத்து 3 லகு புடமிட்டு ஆறிய பிறகு எடுத்து சூரணித்து இதற்கு சமஎடை திரிகடுகு
சூரணம் சேர்த்து கொடுத்தால் சகலசூலைகள் நிவர்த்தியாகும்.


மகாசூலகர ரசம் :- சுத்தி செய்தரசம், கெந்தி, வெங்காரம்,வெள்ளை காசு கட்டி, கற்பூரம், களை மான்கொம்பு, தாம்பிர பஸ்பம், சிறிய பலகறை பற்பம், பீடாலவணம், பெரிய பலகறை பஸ்பம், புள்ளிமான் கொம்பு பஸ்பம், சங்குபஸ்பம், இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு எருக்கன் பால், சதுரக்கள்ளி பால் இவைகளை தனித்தனி 1 நாள் அரைத்து உலர்த்தி பிறகு திரிகடு கைச் சூரணித்து 2, 3 குன்றி எடை சூரணம் மிளகுச்சூரணம், நெய்

இவைகளுடன் கொடுத்தால் மகாசூலைகள், க்ஷயங்கள், கிறாணிகள் பாண்டுரோகம், அக்கினிமந்தம், இவைகள் நிவர்த்தியாகும்.

சூலகஜ கேசர் :- சுத்தி செய்தரசம், கெந்தி, நாபி, பலகறைபஸ்பம், வெங்காரம், இந்துப்பு சுக்கு, திப்பிலி இவைகள் சமஎடை வெற்றிலை சாற்றினால் அரைத்து 2 குன்றி எடை சாப்பிட்டால் சகலசூலைகள் நிவர்த்தியாகும்.

கஜகேசரி ரசம் :- பலகறைபஸ்பம், சுத்தி செய்தநாபி, இந்துப்பு, திரிகடுகு இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு வெற்றிலை சாற்றினால் அரைக்கவும். இதில் குன்றி எடை கொடுத்தால், வாத சூலை, ஆமசூலை நீங்கும்.

பத்தியாதி ரசம் :- கடுக்காய்த்தோல், சுட்டவெங்காரம், சுக்கு பெருங்காயம், மிளகு, சித்திரமூலவேர்ப்பட்டை, பீடாலவணம், சுத்தி செய்தகெந்தி, இந்துப்பு இவைகள் சமஎடை இவைகளுக்கு சமஎடை எட்டிக்கொட்டை சூரணம் கலந்து வெற்றிலை சாற்றினால் அரைத்து குன்றி அளவு மாத்திரைகள் செய்து கொடுத்தால் சூலை
வயிறுப்பல், மலபந்தம், குன்மம், இருமல், கபம், ஆமவாதம், அஜீரணம், உதரரோகம், அருசி இவைகள் நீங்கும்.

ஹரீதக்யாதி சூரணம்
 :- கடுக்காய்த்தோல், அதிவிடயம், பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், வசம்பு, வெட்பாலைப்பட்டை இவைகளை சமஎடையாய் சூரணித்து 1/2 தோலா வெந்நீரில் சாப்பிட்டால் வாத சூலை நிவர்த்தியாகும்.

சவ்வர்ச்சலாதிசூரணம் :- சவ்வர்ச்சலவணம், சரக்கொன்றைப்புளி, பீடாலவணம், அதிவிடயம், திரிகடுகு, இந்துப்பு இவைகளை சமஎடையாய் சூரணித்து மாதுழம்பழ ரசத்தில் சாப்பிட்டால் குன்மம் சூலைகள் நீங்கும்.

உசீராதி சூரணம் :- வெட்டிவேர், இந்துப்பு, பெருங்காயம்ஆமணக்குவேர், இவைகளை சமஎடையாய் சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் வாத சூலை நிவர்த்தியாகும்

சுவேத ஏரண்டாதி சூரணம் :- வெள்ளை ஆமணக்குவேர்,இந்துப்பு, பெருங்காயம் இவைகளை சமஎடையாய் சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால் வாதசூலை நிவர்த்தியாகும்.

மந்தார மூலிகாதி சூரணம் :- மந்தாரவேர் சூரணம் பாலில் கலந்து சாப்பிட்டால் சகதேவியர் அல்லது பெருங்குரும்பை வேர் இவைகளின் சூரணத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் வாதசூலை நிவர்த்தியாகும்.

வாதசூலைக்கு சூரணம் :- ஓமம், இந்துப்பு, பெருங்காயம்சுக்கு, சவ்வர்ச்சலவணம், கடுக்காய்த்தோல் இவைகளை சமஎடையாய் சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால் வாதசூலை நிவர்த்தியாகும்.


கரஞ்சாதி சூரணம் :- புங்கப்பட்டை, சவ்வர்ச்சலவணம், சுக்கு, பெருங்காயம் இவைகளை சமஎடையாய் சூரணித்து கொஞ்சம் உஸ்ணமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாதசூலை அப்பொழுதே நிவர்த்தியாகும்.

ஹிருதய சூலைகளுக்கு உசீராதி சூரணம் :- வெட்டிவேர், மோடி இவைகளை சமஎடையாய் சூரணித்து பசுநெய்யில் கலந்து  சாப்பிட்டால் இருதயசூலை நிவர்த்தியாகும்.

பித்தசூலைக்கு சூரணம் :- நெல்லிவற்றல் சூரணத்துடன்தேன் கலந்து அல்லது கடுக்காய்த்தோல் சூரணத்தில் வெல்லம் நெய் கலந்தாவது சாப்பிட்டால் பித்தசூலை நிவர்த்தியாகும்.

கபசூலைக்கு சூரணம் :- காயம், கோஷ்டம், கடுக்காய்ப்பூகோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, திரிகடுகு இவைகள் சமஎடை சூரணம் செய்து இஞ்சி ரசம், தேன் இவைகளுடன் சாப்பிட்டால் கபசூலை நீங்கும்.

பிருஹத்கட்பலாதி சூரணம் :- காயம், புஷ்சுரமூலம், திப்பிலி கடுக்காய்ப்பூ, இவைகளை சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டால் சகல சூலைகள் நீங்கும்.

திரிபலாதி சூரணம் :- எழுகுபற்பம், திரிபலை சூரணம் இவைகளை ஒன்றாய் கலந்து தேன் நெய் இவைகளுடன் சாப்பிட்டால் சகல சூலைகள் நிவர்த்தியாகும்.

மந்தாக்கினிசூலைக்கு திப்பிலியாதி சூரணம் :- திப்பிலி, ஓமம் கடுக்காய்த்தோல், இந்துப்பு, சுக்கு இவைகள் வகைக்கு 4 தோலா சூரணித்து இதில் 1/2 தோலா வீதம் சாப்பிட்டால் சூலை, மந்தாக்கினி இவைகள் நீங்கும்.

பில்வமூலாதி சூரணம் :- வில்வவேர், ஆமணக்குவேர், சித்திர மூலம், சுக்கு, இந்துப்பு, பெருங்காயம் இவைகளை சூரணித்து 1/2 தோலா வீதம் கொடுத்தால் சூலை அந்த க்ஷணமே நீங்கும்.

குபேராதி சூரணம் :- தானிக்காய்த்தோல் 1, சுக்கு 1, பெருங்காயம் 1, கடுக்காய்த்தோல் 1, சுழற்ச்சிக்காய்ப் பருப்பு 3, இவைகளை சூரணித்து வெருடியளவு கொடுத்தால் சகல சூலைகள் நிவர்த்தியாகும்.

ஆதமான சூலைக்கு ஹிங்குவாதிசூரணம் :- பெருங்காயம், கொடிமாதுழை, திரிலவணம், வசம்பு, திரிகடுகு, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், கிச்சிலிக்கிழங்கு, ஓமம், கங்கோலம், வட்டத்
திரிப்பி, சீரகம், அமுக்கிறாக்கிழங்கு, சிவகரந்தை, யவக்ஷ¡ரம் வெண்காரம், மாதுழம்பழதோல், கடுக்காய்த்தோல், இவைகளை சமஎடையாய் சூரணித்து 1/4, 1/2 தோலாவீதம் சாப்பிட்டால்  விக்கல், வயிறுப்பல், மலபந்தம், மேல்மூச்சு, அக்கினிமந்தம் அரிசி, பீலிகை, மூலம், சகல சூலைகள், குன்மம், இருதய ரோகம், மூத்திர அடைப்பு, பாண்டு இவைகள் நீங்கும்.

பரிணாமசூலைக்கு சாமுத்திராதி சூரணம் :- உப்பு, இந்துப்பு யவக்ஷ¡ரம், வெண்காரம், சவ்வர்ச்சலவணம், சவுட்டு உப்பு, பீடாலவணம், லோஹபற்பம், மண்டூரபற்பம், சிவதைவேர் கருணைக்கிழங்கு இவைகளை சமஎடையாய் சூரணித்து கோமூத்திரம் பால் இவைகளால் மந்தாக்கினியாய் பாகமாக சமைத்து தனது சக்தியளவு வெந்நீரில் சாப்பிட்டு அசீரண காலத்தில் நெய்யில்சமைத்து மாமிசத்தையும் பால், தயிர், நெய் முதலியவைகளையும் சாப்பிட்டால் நாபி சூலை, இருதயசூலை, குன்மம், பீலிகசூலை,வித்ருதி, கபசூலை,வாதசூலை, அன்னத்திரவசூலை, அசீரணம், கிறாணி முதலிய சகல சூலைகள் நிவர்த்தியாகும். முக்கியமாக பரிணாமசுலை நிவர்த்தியாகும்.

குடாதி சூரணம் :- இஞ்சி, எள்ளு, வெல்லம் இவைகளை அரைத்து சர்ப்பத்து போல் செய்து சாப்பிட்டாலும் அல்லது பெருங்காயம் கடுக்காய்த்தோல் , வாய்விளக்கம் இவைகளின் சூரணத்தை வெந்நீரில் சாப்பிட்டாலும் அநாகசூலை, இருதயரோகம், பேதி, குன்மம் , வாதம் இவைகள் நிவர்த்தியாகும்.

மிருத்யுசூலைகளுக்கு இந்திரவாருணியாதி சூரணம் :- பெரிய பாப்பரமுள்ளிவேர், திரிகடுகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால் மிருத்யுசூலை நிவர்த்தியாகும்.

வாதசூலைக்கு கோமாக்கினி மாத்திரைகள் :- பஞ்சலவ ணத்தை இஞ்சி ரசத்தில் 15 நாள் பாவனை செய்து கடலை அளவு மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் வாதசூலை, குன்மசூலை முதலியன நிவர்த்தியாகும்.

சகல சூலைகளுக்கு சங்கு வடுகங்கள் :- புளிச்சாரம் 5 பலம், உப்பு 1 பலம், இந்துப்பு 1 பலம், வளையலுப்பு 1 பலம், பீடாலவ ணம் 1 பலம், வெண்காரம் 1 பலம், இவைகளை சூரணித்து 32 பலம் எலுமிச்சம்பழச் சாற்றில் போட்டு 10 சங்குகளை சுட்டு அந்த  ரசத்தில் ஏழுமுறை தேய்த்து பிறகு சகலமும் யேயமாக உலர்த்தி சூரணம் செய்து அதில் சுக்கு, பெருங்காயம், சுக்கு, மிளகு, இவைகள்வகைக்கு 1பலம், கெந்தி 1 பலம், பாதரசம் 1/2 பலம், சுத்தநாபி 1/2 பலம் சூரணித்து சேர்த்து பழச்சாற்றினால் 3 நாள்  காலையில் 1 மாத்திரை சாப்பிட்டு பிறகு வெந்நீரை குடித்தால் சகலசூலைகள் குன்மம், அசீரணம், பரிணாமசூலை, அதிசாரம்,  கிறாணி இவைகள் நிவர்த்தியாகும்.

எட்டுவித சூலைகளுக்கு சூரியபிரபாவ வடுகங்கள் :- திரிகடுகு, மோடி, வசம்பு, பெருங்காயம், சீரகம், கருஞ்சீரகம், நாபி இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழரசம், இஞ்சிரசம்
இவைகளால் பிரத்தியேகமாக அரைத்து மிளகு அளவு மாத்திரை கள் செய்து அதில் ஒரு மாத்திரை காலையில் வெந்நீரில் சாப்பிட்டால் எட்டுவித சூலைகள் நிவர்த்தியாகும்.

சித்திரகாதி வடுகங்கள் :- சித்திரமூலம், உப்பு, வட்டத்திருப்பி, திரிகடுகு, பஞ்சலவணங்கள், சீரகம், கொத்தமல்லி, ஜடாமாஞ்சி ஓமம், மோடி, இவைகளை சமஎடையாக சூரணித்து எலுமிச்சம்பழச் சாற்றினால் அரைத்து சிறுசுண்¨டாளவு மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் இதயசூலை, பாரிசசூலை, ஆமசூலை, அரிசி 80 வாத ரோகங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

ஹரீதக்யாதி வடுகங்கள் :- கடுக்காய்த்தோல், திரிகடுகு, எட்டிக்கொட்டை, கெந்தி, பெருங்காயம், இந்துப்பு இவைகளை சமஎடை யாக அரைத்து கடலையளவு மாத்திரைகள் செய்து அதில் ஒரு மாத்திரை காலையில் சாப்பிட்டுவந்தால் ஜன்மசூலை நிவர்த்தியாகும்.

வசாதி வடுகங்கள் :- வசம்பு, சுக்கு, சீரகம், பெருங்காயம்சித்திரமூலம், இலவங்கப்பட்டை இவைகள் சமஎடயாகச்
சூரணித்து கரிசாலைச்சாற்றினால் அரைத்து கடலையளவு மாத்திரைகள் செய்து கொடுத்தால் சூலை, வாய்வு, அக்கினிமந்தம் இவைகள் நிவர்த்தியாகும்.

கரளாதி வடுகங்கள் :- நாபி, சுக்கு, சித்திரமூலம், சீரகம்வசம்பு, மிளகு, பெருங்காயம், இவைகளை சமஎடையாக
எடுத்துக்கொண்டு கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து மாத்திரை கள் செய்து கொடுத்தால் சூலை, முடவாதம், அக்கினிமந்தம் இவைகள் நிவர்த்தியாகும்.

பரிணாமசூலைக்கு சம்புகாதி மாத்திரைகள் :-சங்குபோலிருக்கும் சிறிய பலகறை பஸ்பம், மிளகு, பஞ்சலவணம், இவைகளை சமஎடை பழச்சாற்றில் அரைத்து கடலையளவு மாத்திரைகள் செய்து காலையிலாவது போஜனகாலத்திலாவது பலத்தை அனுசரித்து சாப்பிட்டால் பரிணாமசூலை நிவர்த்தியாகும்.

திலாதி வடுகங்கள் :- எள்ளு, சுக்கு, கடுக்காய்த்தோல், சங்கு பற்பம் இவைகள் வகைக்கு 1 பாகம், வெல்லம் 2 பாகம், இவைகளை யொன்றாக அரைத்து இலந்தக்காய் அளவு மாத்திரைகள் செய்து  குளிர்ந்தஜலத்தினால் காலையில் சாப்பிட்டால் இதே மாதிரியாகசெய்தால் வெகுநாளாக பாதிக்கும் பரிணாம சூலை நிவர்த்திக்கும்.

கூஷ்மாண்ட க்ஷ¡ரம் :- கலியாணபூசினிக்காயை சிறிய துண்டு களாக உலர்த்தி ஒரு பாண்டத்தில் வைத்து மேல்மூடிய மூடி அடுப்பிலேற்றி கடக்கினியால் நெருப்பு போல் ஆகிறவரையில் வறுத்து பிறகு ஆற்றி சூரணம் செய்து அந்த சூரணத்தை 14 குன்றி எடையை சுக்கு சூரணத்தை கலந்து வ்ந்நீரில் சாப்பிட்டால் மஹா
சூலை, அசாத்தியசூலை, இவைகள் நிவர்த்தியாகும்.

திரிதோஷசூலைக்கு கோமூத்திர மண்டூரம் :- கோமூத்திரத்தில் சுத்தமான மண்டூரத்தில் திரிபலை சூரணத்தில் கலந்து தேன் நெய் இவைகளுடன் சாப்பிட்டால் திரிதோஷசூலை நிவர்த்தியாகும்.

பரிணாமசூலைக்கு தாரமண்டூரம் :- வாய்விளக்கம், சித்திரமூலம், செவ்வியம், திரிகடுகு, திரிபலை, இவைகள் சமஎடை இவைகளுக்கு லோஹசிட்ட சூரணம் இவைகளுக்கு மூன்று பாகம் அதிகமாக கோமூத்திரம், கோமூத்திரத்திற்கு இரண்டு பாகம் அதிகமாக வெல்லம் இவைகள் யாவையும் மந்தாக்கினியால் கெட்டியாகும் வரையிலும் சமைத்து நெய்யில் ஊரிய பானையில்வைத்து கடுக்காயளவு சாப்பிடுகிறபோதாவது அல்லது சாப்பிடும்போது பேர்பாதியிலாவது அல்லது சாப்பிட்டப் பிறகாவது மருந்தைச் சாப்பிட்டால் கொடூரமான சூலை, காமாலை, பாண்டு வீக்கம், மேதோ, ரோகம், மூலரோகம் இவைகள் நீங்கும்.

பீம மண்டூரம் : - யவக்ஷ¡ரம், திப்பிலி, சுக்கு, மிளகு, மோடிசித்திரமூலம் இவைகள் வகைக்கு 1 பலம் மண்டூரபஸ்பம் 16 பலம் இவைகளை இரும்பு பாண்டத்தில் வைத்து இதற்கு எட்டு பாகம் அதிக மாக கோமூத்திரம் கொட்டி கலந்து இவைகள் கட்டிகள் ஆகிற  வரையிலும் கிளறிக்கொண்டு சமைத்து இறக்கி பிறகு கடுக்காய்
அளவு சாப்பிடுகிறதற்கு முந்தியாவது சாப்பிடும்போது ஏழுநாள் சாப்பிட்டால் பரிணாம சூலை நிவர்த்தியாகும்.

அன்னத்திரவ சூலைக்கு குடமண்டூரம் :- வெல்லம், நெல்லிவற்றல், கடுக்காய்த்தோல் இவைகள் வகைக்கு 1 பலம் சூரணித்து 3 பலம் லோஹசிட்ட சூரணத்தைக் கலந்து சகலமும் சேரும்படி அரைத்து சுண்டக்காய் அளவு தேன், நெய் இவைகளுடன் கலந்து போஜனத்திற்கு முன்பாவது சாப்பிடும் மத்தியிலாவது சாப்பிட்டப் பிறகாவது மருந்தை சாப்பிட்டால் அன்னத்திரவ சூலைஆமலபித்தம், ஒரு வருஷத்திற்குள்ளாக யிருக்கும் பரிணாம  சூலை நிவர்த்தியாகும்.

சதாவரீ மண்டூரம் :- மண்டூர பற்பம் 8 பலம், தண்ணீர்விட்டான் கிழங்கு ரசம் 8 பலம், தயிர் 8 பலம், பால் 8 பலம்

பசு நெய் 40 பலம் இவைகள் யாவும் ஒன்றாக கலந்து கெட்டி ஆகிற வரையிலும், சமைத்து கடுக்காய் அளவு சாப்பிடுகிறதற்கு முந்தியாவது அல்லது பிந்தியாவது சாப்பிட்டால் வாத பரிணாம சூலை இவைகள் நீங்கும்.

சகலசூலைகளுக்கு சப்தவிம்சதிருக்குலு :- யவக்ஷ¡ரம், வெங்காரம், திரிகடுகு, திரிபலை, மஞ்சள், ருத்திராக்ஷம், கோரைக்கிழங்கு இந்துப்பு, பீடாலவணம், காசிலவணம், மோடி, சேராங்கொட்டை சிறிய ஏலக்காய், சித்திரமூலம், செவ்வியம், கோஷ்டம், மாஷிக பற்பம், புஷ்கரமூலம், வாய்விளக்கம், அதிவிடயம், ஆளைத்திப்பிலி இவைகளை சமஎடையாகச் சூரணித்து இவைகளுக்கு சமஎடை குங்கிலியம் நெய் கலந்து, சுண்டையளவு மாத்திரைகள் செய்து 1,2 மாத்திரை வீதம் பால், சலம், கஞ்சி இந்த அனுபானங்களில் கொடுத்தால், இருதயம், முதுகு, தொடை, வயிறு, இடுப்பு அக்குள், முடிச்சு உண்டாகிய சூலைகள், குஷ்டம் பாண்டு, க்ஷயங்கள், அபஸ்மாரம், ஊர்த்துவவாதம், உன்மாதம், ஆமவாதம், வீக்கம், பிரமேகம், இவைகள் யாவையும்
நிவர்த்தியாகும்.

ஹிருதய சூலைக்கு பீஜபூரஸ்வரசம் :- பழுத்த மாதுழம்பழரசத்தில் இந்துப்பு சேர்த்து சாப்பிட்டு பத்தியாமாக இருந்தால் இருதய சூலை நிவர்த்தியாகும்.

பித்தசூலைக்கு சதாவரீஸ்வரசம் :- தண்ணீர்விட்டான் கிழங்கு கியாழத்தில் பால், தேன் கல்ந்து காலையில் சாப்பிட்டால் எரிச்சல் சூலை, பித்தசூலை இவைகள் நிவர்த்தியாகும்.

வேறுமுறை :- நெல்லிக்காய் ரசத்திலாவது நிலப்பூசினி ரசத்திலாவது கொத்துப்புங்கன் ரசத்திலாவது, திரா¨க்ஷ ரசத்திலாவது, சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பித்தசூலை நிவர்த்தியாகும்.

திரிதோஷசூலைக்கு விதாரீசுர ரசம் :- நிலப்பூசினிக்கிழங்கு ரசத்திலாவது மாதுழம்பழரசத்திலாவது சுக்கு, திப்பிலி, மிளகு உப்பு இவைகளின் சூரணத்தைக்கலந்து தேன் விட்டு சாப்பிட்டால் திரிதோஷசூலைகள் நிவர்த்தியாகும்.

சிருங்கீ பற்பம் :- கலைமான் கொம்பை நெருப்பில் வைத்து செவ்வையாக பற்பித்து அந்த பற்பத்தை 1/2 வராகனெடை நெய்யில்  கலந்து சாப்பிட்டால், வாதசூலை நிவர்த்தியாகும்.

சகலசூலைகளுக்கு லோஹபற்பம் :- கடுக்காயை கோமூத்திரத்தில் வைத்து உலர்த்தி சூரணித்து லோஹபற்பத்தைக்கலந்து வெல்லத்துடன் சாப்பிட்டால் சகல சூலைகள் நிவர்த்தியாகும்.

பரிணாமசூலைக்கு ஏரண்டாதி பற்பம் :- ஆமணக்குவேர், சித்திரமூலம், வெள்ளைச்சாரணை, சுக்கு, நெரிஞ்சல் இவைகளை சமஎடை பாண்டத்தில் போட்டு பஸ்பித்து எந்நீருடன் சாப்பிட்டால் சூலை
நிவர்த்தியாகும்.

சகலசூலைகளுக்கு கெந்தக ரசாயனம் :
- திரிபலை சூரணம் 1  பலம் கெந்திசூரணம் 1/2 பலம், லோஹபற்பம் 1/2 பலம் இவைகள்  யாவையும் கலக்கி 1/2 பலம் நெய் தேன் கலந்து வைத்துக்கொண்டு அளவாக 3 மாதங்கள் சாப்பிட்டால் சகலசூலைகள் வாதவிஸ்போடகம்
இவைகள் நிவர்த்தியாகும்.

பங்க்திசூலைகளுக்கு கண்டாமலக ரசாயனம் :- செவ்வையாக ரசத்தைப்பூசி நெய்யில் வருத்த கலியாண பூசினித்துண்டுகள் 50 பலம் 8 பலம் நெல்லிக்காய் ரசம், புசினிக்காய் ரசம் 16 பலம், கற்கண்டு 8 பலம்
இவைகள் யாவையும் ஒரு பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி எரித்து கரண்டியால் கிளறிக்கொண்டு அதில் திப்பிலி, சீரகம், சுக்கு, இவைகள் வகைக்கு 2 பலம், மிளகு 1 பலம், தாளிசபத்திரி, கொத்தமல்லி, இலவங்கப்பட்டை, இலவங்கப் பத்திரி, ஏலக்காய், நாககேசரம், கோரைக்கிழங்கு இவைகள் வகைக்கு 1 பலம், இவைகளை சூரணித்து ரசாயனத்தில் போட்டு கிளறி ஆறிய பிறகு நெய்யில் ஊறிய பாண்டத்தில்
வைத்து 1/4 பலம் வீதம் சாப்பிட்டால் திரிதோஷத்தினால் உண்டாகும் சூலை வாந்தி, ஆமலபித்தம், மூர்ச்சை,காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

சூலைக்கு லேபனம் :- கடுகு, முருங்கைவேர்ப்பட்டை இவைகளை பசுமோரில் அரைத்து லேபனஞ்செய்தால்
நாபி சூலை நிவர்த்தியாகும்.

குபேராக்ஷ யோகம் :- சுழற்சிக்காய்ப்பருப்பு, வெள்ளைப்பூண்டு இந்துப்பு, பெருங்காயம், இவைகளை சமஎடையாக அரைத்து இழந்தைப்பழமளவு சாப்பிட்டால் சகல சூலைகளும் குணமாகும்.

சூலைகளூக்கு கண்ட திப்பிலி :- திப்பிலி சூரணம் 16 பலம் நெய் 6 பலம், கற்கண்டு 16 பலம், தண்ணீர்விட்டான்கிழங்கு 8 பலம் பால் 80 பலம், இவைகளை ஒன்றாய் சேர்த்து லேகிய பக்குவமாய்
சமைத்து அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி கோரைக்கிழங்கு, கொத்தமல்லி, சுக்கு, ஜடாமாஞ்சி, சீரகம், கருஞ்சீரகம், கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு 3 பலம்
மிளகு, கருங்காலிப்பட்டை இவைகள் வகைக்கு 1 1/2 பலம் இவைகளை சூரணித்து கலந்து 3 பலம் தேன் கலந்து அக்னிபலத்தை அறிந்து சாப்பிட்டால் சூலை, அருசி, வாந்தி, ஆமலபித்தம் இவைகள் நீங்கும். அக்கினிதீபனம் உண்டாகும்.

குலை ரோகத்திற்கு பத்தியங்கள் :- வாந்தி, வியர்வை, லவங்கனம், வஸ்திகர்மம், இரவில் பேதிக்கொள்ளல், பாசனம், பழைய அரிசி, பால், புடலங்காய், முருங்கைக்காய், பாகற்காய், சர்க்கரைக்கீரை, க்ஷ¡ரங்கள், உப்பு, கருப்புப்பு, பெருங்காயம், சுக்கு சோம்பு, வாய்விளக்கம், வெள்ளைப்பூண்டு, இலவங்கம், ஆமணக் கெண்ணெய், கோமூத்திரம், எலுமிச்சம்பழரசம், வெட்டிவேர்,  கோஷ்டம், லகுவான அன்னங்கள், க்ஷ¡ரமான ரசங்கள் இவை
கள் சூலைரோகிகளுக்கு பத்தியங்கள்.

குலை ரோகத்திற்கு அபத்தியங்கள் :- விருத்தமான அன்ன பானாதிகள், இரவு விழித்தல், விஷம அன்னம், ரூஷமான அன்னம் கசப்பு, துவர்ப்பு, சீதளம், கடினத்துவம் உடைய பதார்த்தங்களைச்சாப்பிடுதல், புணர்ச்சி, கள்ளு, பருப்பு தினுசுகள், காரமானபதார்த்தங்கள், மலமூத்திரகிரோதம், குரோதம், இவைகள் சூலை
ரோகிகள் நிவர்த்திக்க வேண்டியது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக