புதன், ஜனவரி 13, 2010

மூத்திர க்ருச்ற ரோக சிகிச்சைகள்

மூத்திர கிருச்சர சிகிச்சை

கியாழம் :- சீந்தில்கொடி, சுக்கு, நெல்லிவற்றல், அமுக்கிறாக் கிழங்கு, நெரிஞ்சல், இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டால் வாதமூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

குசகாசாதி கியாழம் :- தருப்பைப்புல், குசதர்ப்பை, அறுகம் புல், கரும்பு இவைகளின் வேர்களை கியாழம்வைத்து சாப்பிட்டால் பித்தமூத்திர கிரிச்சிரம் நிவர்த்தியாகும். இவைகளை பாலில் போட்டு காய்ச்சி அந்தக் பாளைக் குடித்தால் ஆண்குறியிலிருந்து ஒழுகுங் கெட்ட ரத்தமானது நிவர்த்தியாகும்.

திரிகண்டகாதி கியாழம் :- நெல்லிவற்றல், சிறுபீளை, கடிக்காய்த்தோல் இவைகளை கியாழம்வைத்து அதில் தேன்கலந்து சாப்பிட்டால் அஸ்மரி, மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

சதாவரீ கியாழம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு, குசதர்ப்பை, நெரிஞ்சில் நிலப்பூசினி, கரும்பு, பேயாவரை இவைகளை கியாழம் வைத்து ஆறவைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.
 

பாஷாணபேதி கியாழம் :- சிறுபீளை, நீர்முள்ளி, கொன்னை, பூனைக்காஞ்சொரி, கடுக்காய்பிஞ்சு, நெரிஞ்சில் இவைகளை கியாழம் வைத்து தேன்கலந்து குடித்தால் ஆண்குறியில் இருக்கும் எரிச்சல், பாதை இவைகளுடன்கூடிய மூத்திர அடைப்பு, சொட்டுமூத்திரம் நிவர்த்தியாகும்.

கோக்ஷ¢ராதி கியாழம் :- நெரிஞ்சில், சிறுபீளை இவைகளின் சமூலங்களைக் கியாழம்வைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

ஹரீதக்யாதி கியாழம் :- கடுக்காய்பிஞ்சு, பூனைக்காஞ்சொரி,  சிறுபீளை, கொன்னைச்சதை, நெரிஞ்சல் இவைகளை கியாழம்வைத்து தேன்கலந்து சாப்பிட்டால் மலபந்தம், எரிச்சல், நோய் இவைகளுடன் கூடியிருக்கும் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

யவாதி கியாழம் :- யவதானியம், ஆமணக்குவேர், தருப்பைப்புல், நாணல், கரும்பு இவைகளின் வேர்கள், சிறுபீளை, தண்ணீர் விட்டான்கிழங்கு, கடுக்காய்தோல் இவைகளை கியாழம்வைத்து அத்துடன் வெல்லத்தைக் கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம், குன்மம் இவைகள் நிவர்த்தியாகும்.

ஏலாதி சூரணம் :- ஏலக்காய் மிருதுவாய்ச் சூரணித்து மோர் அல்லது கள் அல்லது வாழைப்பழரசம் இவைகளுடன் கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

ஏலாதி சூரணம் :- ஏலக்காய், சிறுபீளை, சிலாசத்து, நெரிஞ்சல், வெள்ளிரிவிரை, இந்துப்பு, குங்குமப்பூ இவைகள் சமஎடை யாய்ச் சூரணித்து அரிசி கழுநீரில் கலந்து சாப்பிட்டால் மூத்திர கிருச்சிரம் சாந்தமாகும்.

வஸ்தியாமயாந்தக சூரணம் :- ஏலக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, கிரம்பு, சந்தனத்தூள், வெட்டிவேர், குறுவேர், பச்சைகற்பூரம், சிலாசத்து, கற்பூரம், தேத்தான்கொட்டை, அல்லிகிழங்கு, பற்பாடகம், கரும்வாழைக்கிழங்கு, கொத்தமல்லி, சீந்தில்கொடி, நெரிஞ்சில்வேர், தாமரைத்தண்டு, தாமரைக்கிழங்கு
தாமரை இதழ்கள் இவைகள் சமஎடையாகச் சூரணித்து இதற்கு சமம் திரா¨க்ஷ, திரிபலை இவைகளின் சூரணம் அத்துடன் சமஎடை யாகச் சர்க்கரையை கலந்து தேன் நெய் இவைகளுடன் சாப்பிட்டால் சகல பிரமேகங்கள், மூத்திரரோகம், மூத்திரகிருச்சிரம் சோமரோகங்கள் இவைகள் நீங்கும்.

திரிபலாதி சூரணம் :- திரிபலை, இந்துப்பு, கோஷ்டம், சந்தனத்தூள், தேவதாரு, கோரைக்கிழங்கு, பற்பாடகம், வெட்டிவேர், இவைகளை சமஎடையாகச் சூரணித்து நெய்கலந்து மூன்றுநாள் சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

கர்ஜீராதி சூரணம் :- கர்ஜீரம், நெல்லிவற்றல், திப்பிலி,சிலாசத்து, ஏலக்காய், அதிமதுரம், சிறுபீளை, சந்தனம், வெள்ளிரி விரை, கொத்தமல்ல்லி இவைகளைச் சூரணித்து சர்க்கரை கலந்து அதிமதுர கியாழத்துடன் சாப்பிட்டால் தேக எரிச்சல், இந்திரிய எரிச்சல், மூலம், மூத்திர அடைப்பு, சூலை, இவைகள் நிவர்த்தியாகும். பலத்தை உண்டாக்கும்.

சந்திரகளா ரசம் :- இரசபற்பம், தாம்பிரபற்பம், அப்பிரகபற்பம் இவைகள் வகைக்கு 1/4 பலம், சுத்திசெய்த கெந்தி 1/2 பலம், இவைகளை யொன்றாகக் கலந்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து அதில் கோரைக்கிழங்கு, மாதுளம்பூ, அறுகண்வேர், தாழம்பூ, சகதேவி, கற்றாழை, பற்பாடகம், தண்ணீர்விட்டான்கிழங்கு, இவைகளின் சாறு அல்லது குடிநீர் ஒவ்வொன்றினால் ஒவ்வொரு நாள் அரைத்து, கடுகுரோகணி, சீந்தில் சர்க்கரை, பற்பாடகம்,
வெட்டிவேர், குன்றிவேர், சந்தனத்தூள், நன்னாரிவேர் இவைகளை சமஎடையாகச் சூரணித்து முன் மருந்துக்குச் சமனாகச் சேர்த்து, திரா¨க்ஷ கியாழத்தினால் 7-நாள் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் சகல பித்தரோகங்கள் சகல வாதபித்தங்கள், உள்வெளி எரிச்சல்கள், தாபசுரம், பிரமை, மூர்ச்சை, மாதர்களுக்கு உண்டாகும் ரக்தசிராவம், ஊர்த்துவ அதோ ரக்த பித்தம், இரத்தவாந்தி சகல மூத்திரகிருச்சிரங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

பிருஹகோக்ஷ£ராதி லேகியம் :- நெரிஞ்சில் 100-பலம், குசதற்பை வேர் 100-பலம், சிறுபீளை 8-பலம், சீந்தில்கொடி 5-பலம், ஆமணக்கு வேர் 8-பலம், தண்ணீர்விட்டான்கிழங்கு 10-பலம், தாமரைகிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு இவைகள் வகைக்கு 20- பலம், இவைகளை ஒன்றாகசேர்த்து இடித்து 256-பலம் ஜலத்தில் கொட்டி நாலில் ஒரு பாகம் மீறுபடியாக கியாழத்தை சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் பசுநெய் 20-பலம், சிலாசத்து பற்பம் 16-பலம் இவைகளை சேர்த்து லேகிய பதமாகக் கிளறி நிலப்பனக்கிழங்கு, தண்ணீர்விட்டான்கிழங்கு, திரிகடுகு, திரிபலை, சிறிய ஏலக்காய், ஜடாமாஞ்சி, குறுவேர், நாககேசரம், தாமரைத்தண்டு,
ஜாபத்திரி, இலவங்கபட்டை, அதிமதுரம், மூங்கிலுப்பு, ஜாதிக்காய், வெட்டிவேர், சிவதை, ரத்தசந்தனம், கொத்தமல்லி, கடுகு ரோகணி, யவக்ஷ¡ரம், வெங்காரம், நாகமல்லி, கடுக்காய்பூ, புஷ்க்கர மூலம், கிச்சிலிக்கிழங்கு, மரமஞ்சள் இவைகள் வகைக்கு 1-பலம்விகிதஞ் சூரணித்து அத்துடன் நாகபற்பம், வங்கபற்பம், லோஹ பற்பம் இவைகள் வகைக்கு 1-பலஞ்சேர்த்து லேகியபதத்தில் கிளறி பழகிய பானையில் வைத்து வேளைக்கு 1-பலம் விகிதம் சாப்பிட்டால் அஸ்மரீ, மூத்திரகிருச்சிரம், மூத்திரகாதம், மூத்திரபந்தம், 20

மேகங்கள், சுக்கிலதோஷம், வீரியநஷ்டம், ஆமலபித்தம், தாதுக்ஷயம்,  உஷ்ணவாதம் இவைகள் நீங்கும்.

நாரிகேள கிருதம் :- தேங்காய்நீர், பசும்பால், பூசனி பழரசம், தண்ணீர்விட்டான்கிழங்கு ரசம், இவைகள் வகைக்கு 64-பலம், நெய் 20-பலம், நன்னாரிவேர், அதிமதுரம், திரா¨க்ஷ, வெட்டிவேர், சர்க்கரை இவைகளை சமஎடையாக அரைத்து கல்கஞ்செய்து நெய் எட்டிலொரு பாகஞ் சேர்த்து மிருது அக்கினியால் கிருத பக்குவ மாக சமைத்து சாப்பிட்டால் எட்டுவித மூத்திரகிருச்சிரங்கள், தேகஎரிச்சல், தலை எரிச்சல், பித்தம், யோனிரோகம், க்ஷயம் இவைகள் நாசமாகும்.

சதாவரியாதி கிருதம் :- நெய் 20-பலம், தண்ணீர்விட்டான் கிழங்கு ரசம் 32-பலம், ஆட்டுப்பால் 64-பலம், சிறுநெரிஞ்சல், யானை நெரிஞ்சில், சீந்தில்கொடி, பூனைகாஞ்சொரி, குசதர்பை, முள்ளங்கத்திரி இவைகளின் ரசங்கள் வகைக்கு 2-பலம் இவைகள் யாவையும் ஒன்றாய்கலந்து அதில் அதிமதுரம், திரிகடுகு, நெரிஞ்
சல்காய், சிறுபீளை, சிலாசத்து, தால்சின்னி, ஏலக்காய், இலவங்க பத்திரி இவைகளை வகைக்கு 1/2-பலம் விகிதஞ் சூரணித்துப்போட்டு சர்க்கரை 2-பலஞ் சேர்த்து கிருதபக்குவமாக காய்ச்சி பிறகு தேன் கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம், மூத்திரதோஷம் இவைகள்நீங்கும்.

திரிகண்ட காக்கிய குக்குலு :- எட்டொன்றாய்க் காய்ச்சியநெரிஞ்சில் கியாழத்தில் குங்கிலிய சூரணத்தைக் கலந்து அதில் திரி கடுகு, திரிபலை, கோரைக்கிழங்கு இவைகளை சூரணித்து குங்கிலி யத்திற்கு சமமாகச்சேர்த்து கலந்து லேகிய பக்குவமாக சமைத்து ஆறியபிறகு எடுத்து மாத்திரகள்செய்து சாப்பிட்டால் பிரமேகம் மூத்திரகிருச்சிரம், மூத்திர அடைப்பு, சுக்கிலதோஷம், சகலவாதங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

தாடி மாதி ரசபானம் :- புளித்த மாதுளம்பழ ரசம், ஏலக்காய், சீரகம், இந்துப்பு இவைகளின் சூரணத்தை கள்ளில்சேர்த்து கொடுத்தால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

யவக்ஷ¡ரபானம் :- யவக்ஷ¡ரத்தைச் சூரணித்து மோருடன்கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் அஸ்மரீ நிவர்த்தியாகும்.

1-பலம் கலியாணபூசனிக்காய் ரசத்தில் 7-குன்றிஎடை யவக்ஷ¡ரம் 1/4-பலம் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

ஏலக்காய், சிறுபீளை, சிலாஜித்து பற்பம், திப்பிலி இவைகளைச்சூரணித்து அரிசிகழுநீரில் கலக்கி குடித்தாலும் அல்லது வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் மூத்திரகிருச்சிரம் நிவர்த்தியாகும்.

உசீராதி சூரணம் :- வெட்டிவேர், குறுவேர், இலவங்கப்பத்திரி, கோஷ்டம், நெல்லிவற்றல், நிலபனங்கிழங்கு, ஏலக்காய், காட்டுமிளகு, திரா¨க்ஷ, குங்குமப்பூ, நாககேசரம், தாமரைப்பூ இதழ்கள், பச்சைகற்பூரம், சந்தனம், ரத்தசந்தனம், திரிகடுகு, அதிமதுரம், நெல்பொரி, அமுக்கிறாக்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, நெரிஞ்சல், கடுக்காய்பூ, ஜாதிக்காய், கிச்சிலிகிழங்குஇவைகளைச் சமஎடையாகச் சூரணித்து இந்த சூரணத்திற்கு இரண்டு பாகம் அதிகமாய் சீந்தில் சர்க்கரை கலந்து, கற்கண்டு, தேன் இந்த அனுபானத்துடன் காலையில் சாப்பிட்டுவந்தால் க்ஷயம், ரத்தபித்தம்,உடல் எரிச்சல், மூத்திரகாதம், மூத்திரகிருச்சிரம், இரக்தசிராவம், 84-வாதரோகம், மேகரோகம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

கோக்ஷ£ராதி வடூகம் :- திரிகடுகு, திரிபலை இவைகள் சம எடை, இவைகளுக்கு சமம் குங்கிலியம் இவைகளை யொன்றாகக் கலந்து நெரிஞ்சில் கியாழத்தினால் அரைத்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து தேகதிடத்திற்கு தக்கபடி 1-2 மாத்திரை வீதம் கொடுத்துவர பிரமேகம், வாதரோகம், வாதரக்தம், மூத்திரகாதம் மூத்திரதோஷம், பெரும்பாடு, மூத்திரகிரிச்சரம் இவைகள்நிவர்த்தியாகும். (இதற்கு இச்சாபத்தியம்.)

மூத்திர கிருச்சிரத்திற்கு பத்தியங்கள் :- வாதமூத்திர கிருச்சிரத்தில் அப்பியங்கனம், ஒத்தடம்போடுதல், சிலாக்குவிடுதல், க்ஷத்திரச்சேதம் இவைகளை செய்யவேண்டியது. பித்த மூத்திரகிருச்சரத்
தில் ஸ்நானம், சீதளபதார்த்தம் முதலியவைகளினால் வஸ்தி, விரேசனம் இவைகளை செய்யவேண்டியது. கபமூத்திர கிருச்சரத்தில் வியர்வை வாங்குதல், விரேசனம், யவக்ஷ¡ரம், யவான்னம், தீக்ஷண லேபனம் இவைகளை செய்யவேண்டியது. திரிதோஷ மூத்திரகிரிச்சிரத்தில் மேற்கூறிய எல்லாவற்றையும் அந்தந்த தோஷ தொந்தத்திற்கேற்றபடி செய்யவேண்டியது. பழைய சிகப்பு அரிசி, பசுமோர் பசுநெய், பசும்பால், பச்சைபயறு, சர்க்கரை, கலியாண பூசினிக்காய், புடலங்காய், சுக்கு, நெரிஞ்சில், கற்றாழை, முள்ளு வெள்ளரிக்காய், கர்ஜீரம், தேங்காய், நுங்கு, தர்பூசிணிப்பழம், ஏலக்காய், சீதள்மான அன்னபானங்கள், ஆற்றுஜலம், பச்சைகற்பூரம் இவை
கள் மூர்த்திரகிருச்சிரத்திற்கு பத்தியங்கள்.

மூத்திர கிருச்சிரத்திற்கு அபத்தியங்கள் :- கள் குடித்தல்அதிக உழைப்பு, மாதரின் புணர்ச்சி, ஆணை, குதிரை இவைகளின் மீது சவாரி செய்தல், விருத்தமான அன்னம், விஷ்மமான அன்னங்கள், தாம்பூலம், மீன், உப்பு, இஞ்சி, எண்ணையில் செய்த பக்ஷணங்கள், எள்ளு, கடுகு, மூத்திரத்தை அடக்குதல், உளுந்து, அதிதீக்ஷ
ணம், ரூக்ஷம், புளிப்பு இவைகள் கலந்த பதார்த்தங்கள் இவைகள்யாவையும் மூத்திர கிருச்சிரரோகி நிவர்த்திக்க வேண்டியது.

நீரடைப்பு கிகிச்சை

நீர்முள்ளி கியாழம் :- நீர்முள்ளி, நெருஞ்சில், சிறுபீளை, சுரைக்கொடி, இவைகளை கியாழமிட்டு சாப்பிட்டாலும், அல்லது முருங்கன் வேர்கியாழம் கொஞ்சம் உஷ்ணமாக சாப்பிட்டாலும் மூத்திர அஸ்மரி நிவர்த்தியாகும்.

பித்தாஸ்மரீ பாஷாணபேதி கியாழம் :- கல்லுருவி கியாழத்தில் சிலாசித்து சூரணஞ் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பித்தாஸ் மரீ நிவர்த்தியாகும்.

கபாஸ்மரிக்கு சிக்ரு கியாழம் :- முருங்கன்வேர்பட்டை, உலி மிடிவேர்பட்டை, இவைகளை கியாழம்வைத்து அதில் யவக்ஷ¡ரம் கலந்து சாப்பிட்டால் கபாஸ்மரி நிவர்த்தியாகும்.

நெரிஞ்சில் கியாழம் :- மாவிலங்கப்பட்டை, சுக்கு, நெரிஞ்சில், இவைகளை கியாழம்வைத்து அதில் யசக்ஷ¡ரம், வெல்லங் கலந்து சாப்பிட்டால் சர்க்ராஸ்மரி மூத்திர கிருச்சிரம் இவைகள் நீங்கும்.

ஏலாதி கியாழம் :- ஏலக்காய் 1-பாகம், அதிமதுரம் 2-பாகம், நெரிஞ்சில் 3-பாகம், காட்டுமிளகு 4-பாகம், ஆமணக்குவேர் 5-பாகம், ஆடாதோடை 6-பாகம், திப்பிலி 7-பாகம், சிறுபீளை 8-பாகம், இவைகளை கியாழம்வைத்து சிலாசத்து பற்பத்தைகலந்து சாப்பிட்டால் சர்க்கராஸ்மரி நிவர்த்தியாகும்.

சுண்டியாதி க்ஷ¡யம் :- சுக்கு, நெல்லி, நாயுருவி, முருங்கை வேர்பட்டை, நெரிஞ்சில், கடுக்காய்தோல், கொன்னைசதை இவைகளை சமஎடையாக கியாழம்வைத்து அதில் பெருங்காயம், யவா
க்ஷ¡ரம், இந்துப்பு இவைகளை கலந்து கொடுத்தால் அஸ்மரி, மூத்திர கிருச்சிரம் இவைகள் நாசமாகும். தீபனமுண்டாகும்.

பாஷாணபேதி கியாழம் :- சிறுபீளை நெரிஞ்சில், ஆமணக்குவேர், கண்டங்கத்திரிவேர், முள்ளங்கத்திரிவேர், ஆனைநெரிஞ்சில் வேர், இவைகளை கியாழம்வைத்து தயிர் கலந்து சாப்பிட்டால் மூத்திரகாதம், சுக்கிலதோஷம், பயங்கரமாகிய நீர் அடைப்பு, சர்க்கராஸ்மரி இவைகள் நிவர்த்தியாகும்.

குலித்த கியாழம் 
:- 2-பலம் கொள்ளை கியாழம் வைத்துஅதில் சைந்தலவணம், கொள்ளுக்காய் வேளைவேர்சூரணம் இவைகளை 14-குன்றிஎடை கலக்கி குடித்தால் மூத்திர கிருச்சிரம், கல்லடைப்பு, சதையடைப்பு இவைகள் நீங்கும்.

மஞ்சிஷ்ட்டாதி சூரணம் :- மஞ்சிஷ்டி, முள்ளுவெள்ளிரிக்காய்விரை, சீரகம், சதாப்பிலை, நெல்லிவற்றல், இலந்தைபழ கண்டைச்சதை, சுத்திசெய்த வெடியுப்பு இவைகள் யாவையுஞ் சமஎடையாகச் சூரணித்து மூன்று விரற்கடை பிரமாணம்நீரில் சாப்பிட்டால் அஸ்மரி கல் வெளியில் விழுந்துவிடும்.

திரிகண்டகாதி சூரணம் :- நெருஞ்சிமுள் சூரணத்தில் தேன் ஆட்டுப்பால் கலந்து 7-நாள் சாப்பிட்டால் கல்லடைப்பு நோய் நிவர்த்தியாகும்.

நீர்முள்ளி எண்ணெய் :- நீர்முள்ளி இலைச்சாறு 1/4 படி, சிற்றா மணக்கெண்ணெய் 1/4-படி, நாட்டுநவாச்சாரம் 1-பலம், நவச்சாரத்தைப் பொடித்து நீர்முள்ளி இலைச்சாற்றில் கரைத்து சிற்றாமணக்கெண்ணெய் சேர்த்துக் கலந்து ஓர் தைலபாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாயெரித்து பதமுறகாய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.

தேக திடத்திற்கும் நோயின் வன்மைக்கும் தக்கபடி இதில்வேளைக்கு 1/2-முதல் 1-அவுன்சு வீதம் தினம் ஒரு வேளை காலையில் வெரும் வயிற்றில் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். நீரும் நன்றாக வெளிப்படும். இப்படி மூன்று நாள் கொடுக்கவும். இப்படி மாதத்திற்கு ஒரு முறையாக இரண்டொரு முறைகன் வழங்கலாம்.

இதனால் கைகால் பிடிப்பு, குன்மம், சூலை, கிருமிநோய்நீரடைப்பு, சதையடப்பு, கல்லடைப்பு, ஜீரக்கட்டி, சோபை,
மகோதரம், அதிஸ்தூலரோகம் முதலியன குணமாகும்.

வெடியுப்புச் சுண்ணம் :- வெடியுப்பு பலம்-5, ஆமையோடு பலம்-10, ஆமை ஒட்டைப் பொடித்து பாதி பாகத்தை ஓர் மண் அகலில் போட்டு அதன்மீது வெடியுப்பை வைத்து, மேலும் ஆமை ஓடுத் தூளைப் போட்டு மேலகல் மூடிச் சீலைமண்செய்து 50-வறட்டியில் புடமிட்டு ஆறினபின் பிரித்துப் பார்க்க வெடியுப்பு உருகி வெளுத்து இருக்கும். இதை மட்டும் எடுத்துக் கல்வத்திலிட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இதில் வேளைக்கு 1-2 குன்றிஎடை வீதம் தினம் இருவேளையாய்ச் சோம்புக்குடிநீர், நீர்முள்ளிக்குடிநீர் முதலிய அனுபானங்களில் வழங்க நீரடைப்பு, கல்லடைப்பு, சோபை, மகோதரம் முதலியன குணமாகும்.

நவாச்சாரப் பதங்கம் :- சுமார் இரண்டு மூன்று பலம் எடை யுள்ள நவாச்சாரத்தைப் பொடித்துக் கல்வத்திலிட்டு குப்பைமேனி இலைச்சாறுவிட்டு அரைத்து வில்லைசெய்துலர்த்தி வைத்துக்கொள்ள
வும். பிறகு வாய் பொருத்தமான இரண்டு மண்பானைகளைத் தயார் செய்து, ஒரு பானையின் உட்புறத்தில் குப்பைமேனிசாற்றை தடவி உலர்த்தவும். மூலிகைச்சாறு தடவாத பானையில் உட்புறத்தில்  நவாச்சார வில்லையை வைத்து, மூலிகைச்சாறு தடவிய பானையைக்கொண்டு வாயை மூடி சீலை மண்செய்து அடுப்பிலேற்றி ஒரு ஜாமம் எரித்து ஆறவிட்டு, மறு நாள் பிரித்துமேற்பானையின் உட்புறத்தில் பார்க்க பதங்கம் பற்றியிருக்கும். இதைச் சுரண்டி பத்திரப்படுத்தவும். இதில் வேளைக்கு குன்றி எடை வீதம் தக்க அனுபானங்களில் கொடுத்து வர நீர்சுருக்கு, கல்லடைப்பு, நீரடைப்பு, சோபை காமாலை, மகோதரம் முதலியன குணமாகும்.

அஸ்மரீரோகம் பத்தியம் : - கொள்ளு, பச்சைப்பயறு, கோதுமை பழையரிசி, யவதானியம், சிறுகீரை, பூசினிப்பழம், இஞ்சி, யவ க்ஷ¡ரை, அஸ்மரீரோகத்தில் பத்தியம், மற்றும் விரேசன சிகிச்சை வமன சிகிச்சை, இலங்கணம், வியர்வை வாங்கல், சலாகை விடல், பீச்சுதல், பற்று, ஒற்றடம் முதலியவற்றை சந்தர்ப்பத்திற்கு தக்கபடி செய்யலாம்.

அபத்தியங்கள் :- மூத்திரம், சுக்கிலம், இவைகளின் வேகத்தைத்தடுத்தல், மலத்தை பந்திக்கும் படியான அன்னம், அழைய அன்னம், குளிர்ந்த அன்னம், இதுகள் யாவும் அபத்தியமென்று அறியவேண்டியது.

Post Comment

1 comments:

Mahesh Kumar சொன்னது…

முருங்கை வேர்பட்டை - இது முருங்க தண்டின் பட்டையா? அல்லது வேரில் இருந்து எடுக்கப்படும் பட்டையா? படம் பதிவு செய்ய முடியுமா?

கருத்துரையிடுக