புதன், ஜனவரி 13, 2010

அம்ல பித்த ரோக (வயிற்றுப்புண் நோய்க்கு ) சிகிச்சைகள்

ஆமலபித்தசிகிச்சை 

சீந்தில்கொடி, சித்திரமூலம், வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல் இவைகளைசமஎடையாய் கியாழம் வைத்து அதில் தேன் கலந்து குடித்தால், பித்த ஆமலத்தினால் உண்டாகிய வாந்தி நிவர்த்தியாகும்.

ஆமலபித்தத்திற்கு முதலில் வாந்திக்கு கொடுத்து பிறகுஇரண்டு முறை பேதியாகும்படிக்கு விரேசனங் கொடுக்க வேணடியது.

கொஞ்சநாளாகயிருக்கும் ஆமலபித்தத்திற்கு நிரூஹவஸ்தி கருமத்தைச்செய்து தோஷத்தின் பலாபலத்தை அறிந்து ஒளஷதம் ஆகாரம் முதலியவைகளைச் செய்தல் வேண்டும்.

ஊர்த்துவாங்கத்தில் இருக்கும் ஆமலபித்தத்தை வாந்திகளினாலும், அதோபாகத்திலிருக்கும் ஆமலபித்தத்தை விரேசனங்களினாலும் சமனஞ்செய்து துவர்ப்பாயிருக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டியது. பத்தியமும் அப்படியே செய்யவேண்டியது.

ஆமலபித்தத்தில் கபபித்த நிவர்த்தகரமான கிரியைகளைசெய்யவேண்டியது.

ஆமலபித்தமானது வமலவிரேசனாதிகளால் சமனமாகவிட்டால், ரத்தத்தை வெளியாக்கவேண்டும். பிறகு சீதளமான மருந்துகளினால் லேபனஞ்செய்து ஆமலபித்த நாசங்களான பக்ஷண பதார்ததங்கள் அன்னம் முதலியவைகளினால் திருப்தி செய்தல்வேண்டும்.

படோலாதி கியாழம் :- பேய்ப்புடல், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், வேப்பன் ஈர்க்கு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து தேன்கலந்து குடித்தால் ஆமலபித்தம், சுரம், வாந்தி, தாபம், சூலை, கபம் இவைகள் நிவர்த்தியாகும்.

பாடாதி கியாழம் :- வட்டத்திருப்பி, வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல், திரிபலை, வேங்கைப்பட்டை, பூனைகாஞ்சொரி இவைகள் சமஎடையாய் கியாழம் போட்டு அதில் குங்கிலிய சூரணங் கலந்து பானஞ்செய்தால் அதிக கபத்துடன் கலந்த ஆமலபித்தம் சமனமாகும்.

ஹிம்சிராதி கியாழம் :- ஜடாமாஞ்சி, சீந்தில்கொடி, பெரியமுள்ளங்கத்திரி இவைகளை கியாழம் வைத்து அதில் தேன்கலந்து சாப்பிட்டால் கொடூரமான ஆமலபித்தம், மேல்மூச்சு, இருமல், சுரம், வாந்தி இவைகள் நிவர்த்தியாகும்.

யவாதி கியாழம
் :- பொட்டு நீக்கிய யவதானியம், ஆடாதோடை, நெல்லிவற்றல், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகளை கியாழம் போட்டு அதில் தேன்கலந்து சாப்பிட்டால் ஆமலபித்தம் நிவர்த்தியாகும். மேலும் கஞ்சி சாப்பிடும்படி செய்யவேண்டியது.

பூநிம்பாதி கியாழம் :- சீமைநிலவேம்பு, வேப்பன் ஈர்க்கு, திரிபலை, பேய்ப்புடல், ஆடாதோடை, சீந்தில்கொடி, பற்பாடகம், கரசாலை இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் தேனகலந்து கொடுத்துவர ஆமலபித்தத்தை நிவர்த்தியாகும்.

கண்டகாரியாதி கியாழம் :- கண்டங்கத்திரி, சீந்திகொடி,ஆடாதோடை இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் தேன்கலந்து சாப்பிட்டால் ஆமலபித்தம், மேல்மூச்சு, காசம், வாந்தி, சுரம் இவைகள் நிவர்த்தியாகும்.

சித்திரகாதி கியாழம் :- சித்திரமூலம், ஆமணக்குவேர், யவதானியம், பூனைக்காஞ்சொரி இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தால் கோஷ்டதாகத்துடன் கூடிய ஆமலபித்தம் நிவர்த்தியாகும்.

அவிபத்தியகசூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய்தானிக்காய், நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், ஏலக்காய், இலவங்கப்பத்திரி, இவைகள் சமஎடையாகவும், இவைகளின் மொத்தஎடைக்கு கிராம்பும், கிராம்பின் எடைக்கு நான்கு பங்குசுத்திசெய்த சிவதையையும் கூட்டி இடித்து சூரணித்து இந்தச்  சூரணத்திற்குச் சமமாக சர்க்கரைகலந்து பாண்டத்தில் வைத்துக் கொள்ளவேண்டியது.

இந்த சூரணத்தை 1/2 பலம் வீதம் குளிர்ந்த ஜலத்துடனாவது அல் லது தேங்காய் ஜலத்துடனாவது சாப்பிட்டு இச்சாபத்தியமாய், பால்சாதம் சாப்பிட்டால் ஆமலபித்தம், சூலை, இருபது மேகங்கள், மூத்திரகிரிச்சரம் இவைகள் சமனமாகு.

ஏலாதி சூரணம் :- ஏலக்காய், மூங்கிலுப்பு, இலவங்கப்பட்டை, நெல்லிவற்றல், கடுக்காய், தாளிசபத்திரி, மோடி
சந்தனம், கொத்தமல்லி இவைகளை சமஎடையாய் சூரணித்து இந்தச்சூரணத்திற்கு சமஎடை சர்க்கரைக்லந்து சாப்பிட்டால் ஆமல பித்தம் நிவர்த்தியாகும்.

அதோகர ஆமலபித்தத்திற்கு திரிகடு சூரணம் :- திரிகடுகு கண்டங்கத்திரி, பற்பாடகம், வெட்டிவேர், வெட்பாலைவிரை பேரரத்தை, பேய்ப்புடல், கொத்துப்புங்கன், தேவதாரு, கடுகுரோகணி தாமரைத்தண்டு, சந்தனத்தூள். வெட்பாலை, ஏலக்காய், சிறுநாகப்ப ஓமம், அதிவிடயம், முருங்கன்விரை இவை யாவையும் சமஎடையாய்ச் சூரணித்துவஸ்திரகாயஞ்செய்து காலையில் குளிர்ந்தஜலம் கம்பீரபானகளில் அல்லது தேன் இவைகளில் சாப்பிட்டால் அதோபித்தம் சமனமாகும். சகலவித ஆமலபித்தங்கள் நிவர்த்தியாகும்.

ஜம்பீராதி ரசாயனம் :- எலுமிச்சம்பழச்சாறு 16 பலம், நிலப்பனங்கிழங்கு ரசம், தண்ணீர்விட்டான்கிழங்குரசம், முதிர்ந்தபுளியிலைரசம், இஞ்சிரசம், கலியாணபூசினிகாய் ரசம், தேங்காய்ஜலம் ஆடாதோடை இலை ரசம், நெல்லிக்காய்ரசம், வாழைப்பழரசம் சுக்குரசம், கொடிமாதுழம்பழரசம், இவைகள் வகைக்கு 8 பலம்
சர்க்கரை 1 வீசை, பசு நெய் 20 பலம், இவைகள் யாவையும் ஒன்றாய் கலந்து ரசாயனபாகமாய் காய்ச்சி அதில் கிராம்பு சுக்குநன்னாரிவேர் கடுகாய், சீரகம், கருஞ்சீரகம், ஏலக்காய், திப்பிலி, போரரத்தை, வாய்விளங்

கம், பேரீச்சம்பழம், சிறுநாகப்பூ, வெட்டிவேர், அல்லிக்கிழங்கு, திரா¨க்ஷ, சந்தனம், இலவங்கம் இவைகள யாவும் வகைக்கு ஒரபலம் விகிதஞ் சூரணித்து கலந்து அதில் கொட்டி ரசாயன பாகமாகச் செய்து 16-பலம் தேன்கலந்து வைத்துகொண்டு சாப்பிட்டுவர பித்த உன்மாதம், ரக்தபித்தம், இளைத்தல், க்ஷயங்கள்,
அசஸ்மாரம், பாண்டுரோகம், பித்தாதிக்கம், காமாலை, நேத்திர ரோகம், மேகவியாதி ஆமலபித்தம் இவைகள் நிவர்த்தியாகும்.  மூளை, புத்தி, சுக்கிலம் இவைகளை விருத்தி செய்யும்.

மஹாகண்டார்த் திரகம் :- தோல் நீக்கிய இஞ்சி 100-பலம், பசும்நெய் 40-பலம் இவைகளை ஓர் பாண்டத்திலில் போட்டு பொன்னிறம் ஆகிறவரையிலும் வறுத்து பிறகு கற்கண்டு அல்லது பழையவெல்லம் அல்லது சர்க்கரை இம்மூன்றில் ஏதாவது 70-பலம் அதில்போட்டு அத்துடன் அதிமதுரம், திப்பிலி, மோடி, மிளகு இவைகள் வகைக்கு 5-பலம், மூங்கில் உப்பு, தாளிசப்பத்திரி, கொத்தமல்லி, சீரகம் இவைகள் வகைக்கு பலம்-4, இலவங்கம், இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, ஜாதிக்காய் இவைகள் தனித்தனி 3-பலம், ஏலக்காய், சுக்கு, ஜடாமாஞ்சி, கருங்காலிவேர்இவைகள் வகைக்கு பலம்-2, சந்தனத்தூள், சித்திரமூலம், வெட்டவேர், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு பலம்-1, இவைகள் யாவையும் சூரணித்துபோட்டு கலந்து இரசாயனமாக செய்துக்கொள்ளவும்.

இது நெய்யுடன் கலந்த சூரணரூபமாக தோணும். இதைகாலை மாலை 1-தோலா பிரமாணம் பிரயோகித்தால், ஆமம், பாண்ட சூலை, சுரம், வீக்கம், காமாலை, இருமல், உப்பல், பீனசம், குன்மம், பித்தங்கள் இவைகள் நிவர்த்தியாகும். அக்கினி தீபனத்தை உண்டுபண்ணும்.


கண்டபிப்பலிகாதி லேகியம் :- திப்பிலி சூரணம் 4-பலம், நெய் 5-பலம், கற்கண்டு 16-பலம், தண்ணீர்விட்டான்கிழங்கு சூரணம் 8-பலம், நெல்லிக்காய்ரசம் 16-பலம், பசும்பால் 40-பலம், இவை
கள் யாவையும் ஒன்றாகச் சேர்த்து லேகிய பக்குவமாக கிளறி, அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி, கடுக்காய், சீரகம், கொத்தமல்லி, கோரைகிழங்கு, நெல்லிவற்றல், மூங்கில் உப்பு இவைகள் வகைக்கு பலம்-1/4, கருஞ்சீரகம், சுக்கு, சிறு நாகப்பூ, ஜாதிக்காய், மிளகு, கற்பூரம் இவைகள் வகைக்கு 1/8-
பலம் இவைகள் யாவையும் சூரணித்து அதில்போட்டு சகலமும் ஒன்றாகும்படி கிளறி தேன் 4-பலம் கலந்து வலிவான பாண்டத்தில் வைத்து காலை மாத்திரம் தேகபலத்தை அனுசரித்து உபயோகிக்கவும். ஆமலபித்தம், அரிசி, வாந்தி, தாகம் இவைகள் நீங்கும்.

திராக்ஷ¡தி மாத்திரைகள் :- திரா¨க்ஷ, கடுக்காய் இவைகள் சமஎடை. இவைகளுக்குச் சமஎடையாய் சர்க்கரை கலந்து அரைத்து 1/4 பலம், விகிதம் மாத்திரை செய்து அதில் ஒரு மாத்திரை விகிதம்  உபயோகித்தால், ஆமலபித்தம், ஹிருதயம், கண்டம் இவைகளில் எரிச்சல், தாகம், மூர்ச்சை, பிரமை, மந்தாக்கினி, ஆமவாதம்
இவைகள் நிவர்த்தியாகும்.

சதாவரீ கிருதம் :- தண்ணீர்விட்டான்கிழங்குகற்கம் 16 பலம் பசுநெய் 16 பலம், பசும்பால் 64 பலம், இவைகளை ஒன்றாக கலந்து நெய்பதமாகக் காய்ச்சி காலையில் சாப்பிட்டால், ஆமல பித்தம், வாதபித்தரோகங்கள், ரத்தபித்தம், தாகம், மூர்ச்சை சுவாசம் இவைகள் நிவர்த்தியாகும்.

திராக்ஷ¡தி கிருதம் :- திரா¨க்ஷ, கடுக்காய், வெட்பாலை, பேய்புடல், வெட்டிவேர், நெல்லிவற்றல், யவதானியம், சந்தனம்,  கொத்துப்புங்கன், தாமரைத்தண்டு, சீமைநிலவேம்பு, கொத்தமல்லி இவைகளை கல்கஞ்செய்து அதில் நெய் கலந்து கிருதபக்குவமாககாய்ச்சி போஜனகால மத்தியில் சாப்பிட்டால் அமிருத்துலியாமாக இருப்பதுடன் ஆமலபித்தம் நிவர்த்தியாகும்.

ஆமலபித்தபத்தியங்கள் :- யவதானியம், கோதுமை, பச்சைப் பயறு, பழையசிகப்புநெல் அரிசி, காய்ச்சி ஆறவைத்து, ஜலம் சர்க்கரை தேன், பொரிமாவு, வெள்ளரிக்காய், பாவற்காய், வாழைப்பூ,
காய்கரிபேதங்கள், மூங்கில்முனை, புடலங்காய், கலியாணபூசினிக்காய், மாதுழம்பழம் கபபித்தத்தை நிவர்த்திகின்ற அன்ன பானதிகள் இவைகள் ஆமல்பித்த ரோகத்திற்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- வாந்திவேகமாகவருதல், எள்ளு, புளிப்பு, க்ஷ¡ரம், கடினமனான்னம், தானியாம்மலம், ஆட்டுப்பால், தயிர் இவைகள் ஆமலபித்தத்திற்கு ஆகாது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக