செவ்வாய், ஜனவரி 12, 2010

சர்தி ரோகத்திற்கு( வாந்திக்கு ) சிகிச்சைகள்

சர்த்திரோக சிகிச்சை 

பித்த சர்த்திக்கு பர்படாதிகியாழம் :- பற்படாகத்தை கியாழம் வைத்து ஆறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் பித்தசர்த்தி, தலைஎரிச்சல், கண்கள் எரிவு இவைகள் நிவர்த்தியாகும்.

குடூச்யாதி கியாழம் :- சீந்தில்கொடி, திரிபலை, நிலவேம்பு பேய்ப்புடல், இவைகளை கியாழம் வைத்து தேன் கலந்து சாப்பிட்டால்  பித்தசர்த்தி, நீங்கும்.

பில்வாதிகியாழம் :- வில்வப்பட்டை கியாழத்திலாவது அல் லது சீந்தில்கொடி கியாழத்திலாவது தேன் கலந்து கொடுத்தால் திரிதோஷசர்த்தி நாசமாகும்.

முத்க கியாழம் :- பச்சைப்பயிரை வருத்து கியாழம் காய்ச்சி நெல்பொரி, தேன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாந்தி, தாகம், சுரம் இவைகள் நீங்கும்.

ஆமராஸ்திகியாழம் :- மாங்கொட்டைபருப்பு, வில்வம்பழச்சதை, இவைகளை கியாழம் வைத்து அத்துடன் தேன் கலந்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வாந்தி, அதிசாரம், இவைகள் நிவர்த்தி யாகும்.

ஜம்பூபல்லவாதி கியாழம் :- நாவல், மா இவைகள் தனிதனி 50-கொழுந்துக்களை எடுத்து கியாழம் காய்ச்சி அதில் நெல்பொரி சூரணம் தேன்கலந்து சாப்பிட்டால் வாந்தி, அதிசாரம், இவைகளை நிவர்த்திக்கும்.

லாஜாதியூஷம் :- நெல்பொரி, யவதானியம், பச்சைபயறு,இவைகளின் கஞ்சியில் தேன்கலந்து சாப்பிட்டாலும், சுகந்தமான பதார்த்தம், இனிப்பு பதார்த்தம், கசப்புப் பதார்த்தம், இவைகள் கலந்த பண்டத்தை சாப்பிட்டாலும் மிகவும் பித்தத்தினால் உண்டாகிய வாந்தி நிவர்த்தியாகும். மண்கட்டியை நெருப்பில் நன்றாக சுட்டு ஜலத்தில்போட்டு ஆறியபிற்கு அந்த ஜலத்தைக் குடிக்க வாந்தி நிற்கும்.

விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம், திரிபலை, திரிகடுகு இவைகளைச் சூரணித்து தேன்கலந்து சாப்பிட்டால் உபத்திரவத்துடன் கலந்திருக்குங் கபசர்த்தி சாந்தமாகும்.

ஏலாதி சூரணம் :- ஏலக்காய், இலவங்கபத்திரி, சிறுநாகப்பூ இலந்தைப்பழம், நெல்பொரி, ஞாழல்பூ, கோரைக்கிழங்கு, சந்தனம், திப்பிலி இவைகள் யாவௌயுஞ் சமஎடையாக இடித்துச் சூரணித்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் கபவாத பித்தத்தினால் பிறந்த சர்த்தி நிவர்த்தியாகும்.

ஹரீதகீ சூரணம் :- கடுக்காய் சூரணத்தில் தேன்கலந்து சாப்பிட்டால் தோஷம் அதோபாகத்தில் சேர்ந்த சர்த்தி நிவர்த்தியாகும்.

ஜாதீபத்திர சூரணம் :- ஜாதிபத்திரி இலைரசத்தில், திப்பிலி, மிளகு இவைகளை சூரணித்து அத்துடன் சர்க்கரை தேன்கலந்து சாப்பிட்டால் வெகுநாளாயிருக்குஞ் சர்த்தி ரோகம் நீங்கும்.

பாரதாதி சூரணம் :- பாதரசம், கெந்தி, பச்சைக்கற்பூரம்,இலந்தைகொட்டைப்பருப்பு, கிறாம்பு, கோரைக்கிழங்கு, ஞாழல் நெல் பொரி, அகரு, திப்பிலி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்க பத்திரி இவைகளை சமஎடையாக சூரணித்து அந்த சூரணத்தை சந்தனகியாழத்தில் பாவனைச்செய்து தேன், மிளகுபொடி கலந்து 2-குன்றிஎடை சாப்பிட்டால் பிரபலமான வாந்திகள் நிவர்த்தியாகும்.

சந்தனாதி சூரணம் :- சர்க்கரை, சந்தனம், தேன் இவைகளைக் கலந்து சாப்பிட்டால் உபத்திரவத்துடன் கூடிய பித்தசர்த்தி நிவர்த்தயாகும்.

பிப்பிலியாதி சூரணம் :- இலந்தைப்பருப்பு, நெல்லிப்பருப்பு திப்பிலி இவைகள் சம எடையாக சூரணித்த சூரணத்தை சர்க்கரை தேன் கலந்து கழுநீரில் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிவர்த்தியாகும்.

மயிலிறகு சூரணம் :- மயிலிறகுகளை சுட்டு சாம்பலாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

திப்பிலியாதிசூரணம் :- விழாம்பழரசத்தில் திப்பிலியாதிசூரணம் தேன் கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி நாவில் தடவிவர சர்த்தி ரோகம் நிவர்த்தியாகும்.

பில்வாதிலேகியம் :- தோல்கழற்றிய வில்வேர் 30 பலம் இதை ஒரு மரக்கால் சலத்தில் போட்டு எட்டில் ஒரு பாகம் மீறும் படிக்குச் சுண்டக்காய்ச்சி அதில் 36 பலம் வெல்லத்தைப் போட்டு கலக்கி வடிகட்டி பக்குவமாக பாகுபதத்தில் அதில் சுக்கு 3 பலம், மிளகு 4 பலம், திப்பிலி 6 பலம், சவ்வியம் 1பலம், தாளிசபத்திரி 1 பலம், சிறு நாகப்பு 1/2 பலம், மோடி2 பலம், சித்திர மூலம் 1 பலம், இலவங்கப்பத்திரி 2 1/2 தோலா, இலவங்கப்
பட்டை 1 1/2 தோலா, சீரகம் 4 பலம் இவைகளை சூரணித்து  வஸ்திரகாயஞ்செய்து அதில் கலக்கி லேகிய பக்குவமாக கிளறி ஆறிய பிறகு தேன் 20 பலம் கலந்து வைத்துக்கொண்டு முறைப்படி சாப்பிட்டால் சகலவிதமான வாந்தி, இருதயரோகம் காமாலை, குன்மம், மூலவியாதி, பாண்டுரோகங்கள் இவைகள் யாவும் உடனே நிவர்த்தியாகும்.

பத்மகாதி கிருதம் :- தாமரைத்தண்டு, சீந்தில்கொடி, வேப்பம் பட்டை, கொத்தமல்லி, சந்தனம் இவைகளின் கியாழத்திலாவது அல்லது இவைகளின் கல்கத்திலாவது நெய் 64-தோலா எடை சேர்த்து நெய்பதமாகக் காய்ச்சி முறைப்படி அருந்திவர வாந்திகள் நிவர்த்தியாகும்.

படோலாத்திய கிருதம் :- பேய்ப்புடல், சுக்கு இவைகளின் கல்கத்திலாவது அல்லது பேய்ப்புடல் கல்கத்திலாவது நெய் 64-தோலா சேர்த்து நெய்பதமாகக் காய்ச்சி முறைப்படி சாப்பிட்டால்கப பித்தத்தினால் உண்டாகிய சர்த்திகள் நிவர்த்தியாகும்.

ஐந்துவித வாந்திகளுக்கு பூரணசந்திரோதய சிந்தூரம் :- சுத்தி செய்த ரசம், சுத்திசெய்த கெந்தி சமஎடை கல்வத்தில்ட்டு விலாம் வேர் ரசத்தினால் மூன்று நாள் அரைத்து மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி, காசிகுப்பியில் வைத்து பாண்டத்தில் மணல்கொட்டி, அதில் குப்பியைவைத்து 12-சாமங்கள் தீபாக்கினியாக எரித்து, ஆறியபிறகு எடுத்து சூரணித்து மறுபடியும் விலாம்வேர் ரசத்தினால் மூன்றுநாள், வில்வவேர் கியாழத்தினால் 3-நாள் அரைத்து சிந்தூரத்திற்கு சமஎடை ஏலக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி
சிறுநாகப்பூ, பச்சைகற்பூரம், கிறாம்பு இவைகள் யாவுஞ் சூரனித்து அத்துடன் கலந்து மைப்போல் அரைத்து அதில் 2-குன்றி எடை பிரமாணம் ஔஷதத்தை பொரிமாவு, சர்க்கரை, தேன் இவைகளுடன் கொடுத்தால் வாந்தி, காசம், சுவாசம், ஐந்திவித வாந்திகள், அருசி, ஹிருத்ரோகம், குரற்கம்மல், மந்தாக்கினி இவைகள் யாவும் நீங்கும்.

லாஜாதி கல்பம் :- பொரிமாவு, சர்க்கரை, ஏலரிசி இவை களுடன் தேன்கலந்து சாப்பிட்டால் சகல பித்தங்கள், வாந்திகள்நீங்கும்

கிருஷ்ணாதி கல்பம் :- ஆடாதோடைப்பூ ரசத்திலாவது அலலது சீந்தில்கொடி ரசத்திலாவது திப்பிலிசூரணம், பொரி மாவு, விளாம்பழசதை, இலந்தைவிதை பருப்பு, ஏலக்காய், இல வங்கப்பட்டை, இலவங்கபத்திரி இவைகளின் சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டால் சகல வாந்திகள் நிவர்த்தியாகும்.

பருத்திவிதை சூரணம் :- பருத்திவிதை பருப்பு, ஏலக்காய், வறுத்த திப்பிலி, பொரிமாவு இவைகள் யாவுஞ் சமஎடையாகச்சூரணித்துச் சர்க்கரை கலந்து அருந்த எத்தகைய வாந்திகளும் நீங்கும்.

வாந்திகளில் அனுபானங்கள் :- சாதிக்காய், கிராம்பு, நெல் பொரி, அதிமதுரம், சர்க்கரை, தேன், கடுக்காய், சீந்தில்சர்க்கரை, ஏலக்காய், கழுநீர், வில்வபழம், விலாம்பழம் கொடிமாதுளம் பழம், புங்கன் இவைகளை வாந்தியை நிறுத்தும் மருந்துகள் கொடுக்கும்போது அனுபானமாய் சேர்க்கவேண்டியது.

பித்தசர்திகளுக்கு உபசாரங்கள் :- நெல்லிகாய் ரசத்தில்1/4-பலம் சந்தனஞ் சேர்த்து தேன் கலந்து சேவித்தால் பித்தசர்தி நிவர்த்தியாகும்.

வாதசர்திகளுக்கு உபசாரங்கள் :- மஞ்சள் நிறமாக வாந்தி யானால் இது வாதர்தி என்று பெயர். இதற்கு நெய் இந்துப்பு கலக்கி கொடுக்கவேண்டியது.

வமனாமிருத யோகம் :- கெந்தி, தாமரைவிரை, அதிமதுரம், சிலாசத்துபஸ்பம், ருத்திராக்ஷம், பொரித்த வெங்காரம், சிருங்கி பஸ்பம், சந்தனம், மூங்கிலுப்பு, கோரோசனம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு வில்வவேர் கியாழத்தில் ஒருஜாமம் அரைத்து2-குன்றிஎடை மாத்திரைகள்செய்து அனுபான பேதத்தினால்
கொடுத்துவர திரிதோஷசர்திகளும் குணமாகும்.

சர்திரோகத்திற்கு பத்தியங்கள் :- பேதி, வாந்தி, லங்கணம், குளித்தல், ஜபம், பொரிகஞ்சி, 60-நாள் பழகிய அரிசி, பச்சைப்பயறு, பட்டாணி, கோதுமை, யவதானியம், முயல், மயில், காடை இவைகள் மாமிசங்கள், நல்லரசங்கள், ஆல்பகோடா, பழம் கொத்தமல்லி, தேங்காய், எலுமிச்சம்பழம், நெல்லி, மா, இலந்தை
திர¨க்ஷ, உளுந்து, கடுக்காய், மாதுழம்பழம், கொடிமாதுழம் பழம், ஜாதிக்காய், வெட்டிவேர், வேம்பு, ஆடாதோடைசர்க்கரை இதாபதார்த்தங்கள், சாப்பிடுவதற்கு முன்பாக குளிர்ந்த சலம் கொண்டு வாய் உமிழ்தல், கஸ்தூரி,சந்தனம், நிலவு, மனதிற்கு அனுகூலம் செய்யும் பானம், புஷ்பங்கள், முதுகு தண்டுக்கு கீழ்பாகம் பக்கங்கள் முதுகு இவைகளிடத்தில் சூடு போடுதல். இவைகள் வாந்தி ரோகத்திற்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- நசியஞ்செய்தல், வஸ்திகர்மம் செய்தல் வியர்வை வாங்குதல், புகைபிடித்தல், இரத்தம்வாங்குதல், கொம் பினால் பல் துலக்கல், கெட்ட அன்னம், பயம், சோபம், உஸ்ணம் அரிசி இவைகளை உண்டாக்கும் சாப்பாடு இவைகள் வாந்திரோகத்தில் அபத்தியங்கள்.

 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக