தந்தரோகத்தில் இரத்தத்தை முதலில் வடியும்படி செய்து திரிபலை கியாழத்தில் வாய்கொப்பளிக்கும் படி செய்யவேண்டியது.
ஆல், அத்தி, அரசு, வேல், இத்தி இவைகளை சமஎடையாகசூரணித்து இத்துடன் தேன் நெய் கலந்து கண்டூஷ் செய்தால், தந்த ரோகம் நிவர்த்தியாகும்.
ஜீரகாதிசூரணம் :- சீரகம், உப்பு, கடுக்காய், இலவன்முற்கள் இவைகளை சமஎடையாக சூரணித்து இந்த சூரணத்தில் பிரதிதினம் பற்களை தேய்த்து வந்தால் தந்தவிரணம், ஈறுகட்டி, பல்குத்தல், இரத்தம் வடிதல், வீக்கம், அசைவு, நிவர்த்தியாகும்.
கருணாதி சூரணம் :- திப்பிலி, இந்துப்பு, சீரகம் இவைகளை சமஎடையாக சூரணித்து பஸ்கிலவங்கத்தால் பலாட்டம், குத்தல்,வீக்கம் இரத்தம் வடிதல், இவைகள் நிவர்த்தியாகும்.
பத்திரமுஸ்தாதி வடுகங்கள் :- கோரைக்கிழங்கு, கடுக்காய் சுக்கு, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், வேப்பன் இலை இவைகளை சமஎடையாக கோமூத்திரத்தில் அரைத்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி இம்மாத்திரை யிலொன்றைவாயில் போட்டு அடக்கிவர பற்கள் கெட்டியாகும், பல்லாட்டம் நீங்கும்.
0 comments:
கருத்துரையிடுக