ஞாயிறு, ஜனவரி 10, 2010

சோம ரோகம் -ஸ்வேத ப்ரதரம்- நோய் நிதானம் & சிகிட்சைகள்

சோம ரோகம் (வெள்ளை)

அதிக சையோகம், சோகம், பிரமை, அதிசாரம், விஷதோஷம் இவைகளினால் மாதர்களின் தேகமுழுதும் வியாபித்த நீரானது மிகவுங் கெட்டு யோனித் துவாரத்தில் சேர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும். இதற்கு சோமரோகம் என்று பெயர்.

சோமரோக லக்ஷணம் :- சோமரோகம் உண்டாகில் ஸ்திரீயானவள் அதன் உபதிரவத்தை சகிக்கமுடியாமல், தலைவலி,முகம் தாடை வாடல், கொட்டாவி, மூர்ச்சை, பிரலாபம், சருமம் வறண்டு உஷ்ணமாயிருத்தல், சாப்பாட்டில் அதிருப்தி, இந்த லக்ஷணங்கள் உடையவளா யிருப்பாள். சரீரத்தில் வியாப்பித்திருக்கும் சலம் சரீரத்தை தாரணை செய்வதினால் சோமரோகமென்று சொல்லப்பட்டது. இந்த நீர் அதிபுணர்ச்சிகளினால் விஷமத்தைப்பெற்று க்ஷயிப்பதினால் சோமரோகமென்று பெயர்.

இப்படி தேகமுழுதும் வியாபித்து சோமக்குறியை யடைந்தரத்தமானது க்ஷ£ணித்ததினால் தேகமானது ஜடம் போலாகும். அந்த சோமரோகம் குத்தலுடன் மூத்திரத்தோடு கலந்து பலதடவை ஒழுகிக்கொண்டிருக்கும். இந்த சோமரோகம் சிலநாள் கழிந்தபிற்கு கஞ்சிபோல் ஆகி அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்
டிருந்தால் அதை மிகவும் துர்லபமான மூத்திராதிசாரமென்று சொல்லுவார்கள்.

மேற்கூறிய மூத்திராதிசாரம் விஸ்தாரமாயும், சீதளமாயும், வாசனையற்றும், உபத்திரவமில்லாமலும், வெண்மைநிறமுடையதாய் மிகவும் ஒழுகிக்கொண்டு மாதர்களுக்கு அதிதுர்பலத்தை உண்டாக்கும்.

பரிகாரம் :- மேற்கூறிய சோமரோகம் வேதனையுடன் அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்டிருந்தால் ஏலக்காய்,இலவங்கப்பத்திரி இவ்விரண்டையும் சூரணித்து கள்ளுடன் கலந்து கொடுத்தால் சோமரோகம் நிவர்த்தியாகும்.

நிலப்பனங்கிழங்கு, கர்ஜீரம், யஷ்டிமதுகம் நிலப்பூசினி இவை களை சமனெடை சூரணித்து, அத்துடன் தேன், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திராதிசாரம் குணமாகும்.

தகரம்வேர், அரிசிகழுநீரில் அறைத்து கல்கம்செய்து காலையில் குடித்து வந்தால் ஜலபிரதரம் குணமாகும்.

கதளீக்கந்த கிருதம் :- வாழைக்கிழங்கு ரசம் 256-பலம் முதிர்ந்த வாழைப்பூ இதழ்கள் 100-பலம் போட்டு அடுப்பேற்றி நாலில் ஒருபாகமாகச் சுண்டக்காய்ச்சிய கியாழம், நெய் 1-படி
பால் 1-படி இவைகளை ஒன்றுசேர்த்து தைலபாண்டத்திலிட்டு அதில் திப்பிலி, ஏலக்காய், இலவங்கம், விலாம்பழம், ஜடாமாஞ்சி,வாழைக்கிழங்கு, சந்தனம், ஆல், மா, இத்தி, அரசு, அத்தி இவை களின் பட்டைகள் தாமரைக்கிழங்கு இவைகளை வகைக்கு 1/4பலம்வீதம் கற்கமாகச் செய்துக் கூட்டிக் கலந்து அடுப்பேற்றி கிருத பக்குவமாக காய்ச்சி, ஆறியபிறகு வடித்து பிரதிதினம் காலையில்1/4பலம் விகிதம் சாப்பிட்டுவந்தால் மாதர்களுக்குண்டாகும் சோம ரோகம் நீங்கும். மேலும் எரிச்சல், மூத்திரக்கிருச்சிரம், நீர் அடை
ப்பு, வெள்ளை, வெட்டை, பெரும்பாடு, பிரமேகங்கள் மூத்திராதி சாரம் முதலியன நீங்கும்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக