ஞாயிறு, ஜனவரி 10, 2010

தந்த மூல ரோகம் -ரோக நிதானம்

தந்தமூலரோகம

தந்த மூலமென்ற பற்களின் வேரினின்று பிறக்கும் நோய்கட்கு
தந்தமூலம் என்று பெயர். இது 13 வகைப்படும்.

1. சிதாதம் :- இது சிலேஷ்மமும் ரத்தமும் பல்லின் வேரில் சேரும் போது பிறந்து அவ்வேர் வழியாக துர்க்கந்தத்தை ஒழுகச்செய்யும். இதனால் அங்குள்ள மாமிசம் கரைவதன்றி அவ்வேர்கள் வெளுத்து வெளியில் பிரகாசமாக தெரியும்.

2. உபகிருசம் :- ரத்தபித்தங்கள் பல்லின் வேரில் சேர்ந்து
அங்குள்ள மாமிசத்தை சுடுகையாக்கும் போது பிறக்கும். இதனால் அவ்விடத்தில் நமையுடன் ரத்தங்கசிதல், அந்த ரத்தம் வெளியில் பிரகாசமாக தெரியும்.

3. தந்தபுப்புடம் :- இரண்டு பல்லின் நடுவிலாவது, மூன்று
பல்லின் நடுவிலாவது இலந்தைக்கொட்டை பிரமாணமாக ஈறை வளர்ப்பித்து, அதை வெந்த மாமிசத்தைப்போற் செய்து நோயையு முண்டாக்கும்.

4. தந்தவித்திரதி :- ரத்தத்தினாலும் திரிதோஷத்தினாலும்
பிறந்து தந்தங்களின் உட்புறச்சதையிலாவது வெளிப்புறச் சதையிலாவது வீக்கமான கட்டிகள் பிறக்கும். அவைகள் நோவதும் எரிவதும், பழுத்து உடைவதும் சீழ் ரத்தம் ஒழுகுவதுமாயிருக்கும்.

5. தந்தசுஷீரம் :- ரத்தபித்தத்தினால் பிறந்து ஈறுகளை வீங்கச் செய்து அவைகளில் சிறு சிறு துவாரங்களை உண்டாக்கும். அப்போது அந்த இடத்தில் சொள்ளு சலம் வடிதலும், அம்மாமிசத்தில் கெடுதியும் உண்டாகும்.

6. தந்தமகாகஷீரம் :- மேற்கூறிய ரோககுணங்கள் உண்டாவதும் தவிர உடம்பில், சுரம், பல்லின் மாமிசம் நைதல், அந்த இடத்தில் நின்று சீழும் ரத்தமும் வடிதல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

7. அதிமாமிசம் :- பல்லின் வேர் சந்துகளில் ஆணியை யொத்த கட்டிகளை பிறப்பிக்கும். இதனால் காதிலும் தாடைகளிலும் நோயுண்டாகும். பின்பு சுரமும் பிறக்கும். அது உடைந்தால் மரணமே.

8. தந்தவிதர்பம் :- தந்தமூல சதையை கரையச்செய்யும்.
இதனால் பற்கள் அசைவதும் நோவதுமா யிருக்கும்.

9. வாததந்தமூலம் :
- பல்லின் வேர்களையும் அங்குள்ள தசை ரத்தங்களை சுருங்கச்செய்யும். இதனால் அந்த இடத்தில் காற்றுப்பட்டால் கூச்சம் ஏற்படும்.

10. பித்ததந்தமூலம் :- பித்தமானது தந்தங்களின் வேரில்
பிரவேசிக்கும் போது பிறந்து அவ்வேர்களையும் அதில் உள்ள ரத்தத்தையும் மஞ்சள் நிறமாக்குவதுந் தவிர எரிச்சலையும் உண்டாக்கும்.

11. சிலேஷ்மதந்தமூலம் :- பல்லின் வேர்களை வெளுப்பாக்கி அந்த இடத்தில் மாறாது சீழ் வடியச்செய்யும். இதனால் சிலி சிலிர்ப்பும் வேதனையும் உண்டாகும்.

12. திரிதோஷதந்தமூலம் :
- இது வாத முதலிய மூன்று
தந்த மூல நோய்களின் குணங்களையும் அவைகளால் பிறக்கும் உபத்திரவத்தையும் உண்டாக்கும்.

13. க்ஷததந்தமூலம் :-
 பற்களை பிடுங்குதல் அவைகள் வேறு முகாந்தரமாக அடியுண்டு முறிதல், முதலியவற்றினால் அவ்வேர்க ளறுபட்டு காயமுண்டாகும் போது பிறக்கும். அப்போது ஈறிலும் தாடையிலும் நோயுடன் வீக்கம், நரம்புகளின் வழிகளில் சீலை
யோடல் முதலிய குணங்களை உண்டாக்கும்.

தந்தமூலநோயின்சாத்தியா சாத்தியம் :- எவ்வித தந்தமூல
நோயிலாவது வேரின் நுனிகளில் விரணம் உண்டானாலும், சீழ் வடிந்தாலும், சீலையோடினாலும் சர்மமும் மாமிசமும் அழுகி விழுந்தாலும் அசாத்தியம். இக்குணங்கள் இல்லாதது சாத்தியமாம்.

 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக