ஞாயிறு, ஜனவரி 10, 2010

தந்த ரோகம் -ரோக நிதானம்

தந்த ரோகம்

தந்த என்னும் பற்களில் ஏற்படும் நோய்கட்கு தந்த நோய்
எனப் பெயர். இது 10 வகைப்படும்.

1. தந்த தாளனம் :- உண்ணுகின்ற ரசாதி வஸ்துகளின்
பேதத்தால், வாயினிடத்தில் சீதளவாயு வியாபிப்பதால் பிறந்து பல்லில் உஸ்ணவஸ்த்துகள் அல்லது சீதள வஸ்த்துகள் பட்டால் வேதனை, குத்தலினால் அப்பற்கள் பிளந்து போவது போல் இருத்தல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

2. தந்தஹரிஷம் :- பற்களில் புளிப்பு வஸ்த்துவாவது சீதள வஸ்த்துவாவது காற்றாவது பட்டால், சகிக்கக்கூடாத கூச்சல், சில வேளை அவ்வஸ்த்துகளை புசிக்கில் மிகுந்த உபத்திரவம் அப்பற்கள் அசைவது போலிருத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. தந்த பேதம் 
:- பற்களில் குத்தலும் நோயும் உண்டாகும்
படிச்செய்யும். இதனால் தந்தங்கள் விழுந்து போவது போலவே இருக்கும்.

4. தந்தசலனம் :- வாயுவைக் கொண்டு தந்தங்களை அசையும் படிச்செய்வதுடன் எவ்விதமான மிருதுவஸ்த்துகளைப் புசித்தப்போதலும் அதிக நோயை யுண்டாக்கும்.

5. தந்தகராளம் :- ஈறுகளை தேயும்படிக்குச்செய்து தந்தங்
களை வெளிப்புறத்தில் சாய்த்துவிடும்.

6. அதிதந்தம் 
:- பற்களில் உபத்திரவத்தை உண்டாக்கி அப்
பற்களின் சந்தில் ஒரு சிறிய பல்லை முளைப்பிக்கும். அது நன்றாக முளைந்து வெளியில் வந்தால் முன்பு இருக்கும் உபத்திரவம் நீங்குவதாயும் மற்றைப் பற்களுக்கெல்லாம் வன்மை வருவதாயும் இருக்கும்.

7. தந்தசருக்காரம் :- தந்தங்களை துலக்கமுற விளக்காமை யால் அச்சந்துகளில் துர்க்கந்தத்தோடு சிலேஷ்மத்தைச் சேர்ப்பிக்கும். அம்மலமானது வாயுவால் உலரப்பட்டு மணற்போல் உதிர்த்துக் கொண்டே யிருக்கும்.

8. தந்தகபாலிகம் :- பற்களின் முனைகளைத் தேயப்பண்ணுவ துந்தவிர அவைகள் வெடித்து பொடிப்பொடியாக உதிரும்படிச்செய்யும். இது பற்களின் சிரசை கெடுப்பதால் தந்தகபாலிகரோகம்
எனப் பேர் பெற்றது.

9. தந்தசியாவம் :- இரத்தபித்த ரோகத்தைக் கொண்டும்
வாததோஷத்தைக் கொண்டும், சிற் சில தந்தங்கள் நீல நிறத்தைப்போலவும், கரிநிறத்தப்போலவுஞ் செய்விக்கும்.

10. தந்தபிரலூனம் :- வாதாதிகள் அதிகரித்து தந்தங்களிலும் அவைகளின் வேர்களிலும் வியாபித்து அங்குள்ள தசையை சுட்கித்து உலர்த்தும் போது பிறக்கும். அப்போது அச்சந்துகளில் அன்னரசம் அடைந்து கெடுவதால் துர்க்கந்தம் வீசுதல், சிறு சிறு
கொப்புளங்கள் எழும்புதல், காரணமின்றி நோய் அதிகரித்தல் கிரிமிகள் நெளிதல், அக்கிரிமிகள் நெளியாத காலத்தில் நோய் தினவுண்டாதல், ஈறு வீங்குதல், பற்கள் அசைதல் என்னும் குணங்களை உண்டாக்கும். பற்கள் விழாமல் நிறுத்தி உபத்திரவத்தையும் கிரிமிகளையும் பிறப்பித்து ஈறுகளில் சீழும் ரத்தமும் வடியச்
செய்யும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக